பதிவர் திருவிழா புகைப்படங்கள்

நினைவுப் பரிசு!
மேடை அலங்காரம்!

திண்டுக்கல் திரு தனபாலன், திருமதி ருக்மணி சேஷசாயியுடன் நான்
அழகு சமீாரா…. பின்னால் தூயா
திருமதி ராஜி
வல்லிசிம்ஹனுடன் நான்!
பெருமைக்குரிய நேரம்!
பொன்னாள் இதுபோலே வருமோ…..
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் உரை!
திருமதி லட்சுமி (குறையொன்றுமில்லை)

 

நான் பரிசு வாங்கும்போதும், இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் புகைப்படங்கள் எடுத்த குமாரி சமீராவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!

 

 

 

 

 

 

 

 

41 thoughts on “பதிவர் திருவிழா புகைப்படங்கள்

  1. நீங்கள் பகிர்ந்திருக்கும புகைப்படங்கள் அழகாகவும் தெளிவாகவும் இருக்கின்ற்ன. நீங்கள் பாராட்டுப் பெற்று மகிழ்ந்த அந்நாளில் நானும் உடனிருக்க நேர்ந்ததும் உங்களின் அறிமுகம் பெற்றதும் என் பாக்கியமாகக் கருதுகிறேன். என்னிடமிருந்து எதை எடுத்துக் கொள்ளவும் உங்களுக்கு பூரண உரிமை உண்டு. உங்க வீட்டைப் பார்த்துட்டேன் இப்ப. இனி தவறாம வருவேன். சரியா- மிக்க நன்றிம்மா.

    1. நன்றி திரு கணேஷ்! நான் நினைத்து நினைத்து மகிழும் தருணங்களில் நமது பதிவர் திருவிழாவும் ஒன்றாக அமைந்ததில் – உங்களைப் போன்ற பல நல்ல உள்ளங்களை நண்பர்களாகப் பெற்றதில் – மட்டற்ற மகிழ்ச்சி!

  2. வாழ்த்துகள் ரஜ்ஜனி .படங்களெல்லாம் பார்ப்பதற்கு அழகாகவும். நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதுபோலும் ஸந்தோஷத்தை அளிக்கிறது.பொன்னாடை போற்றிய உன்னைப் பார்த்து மிக்க ஸந்தோஷம். லக்ஷ்மி அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்
    என பலமுறை நினைத்திருக்கிறேன். உன் போட்டோ மூலம் தெரிந்து கொண்டேன். மற்ற எல்லோரையும் பார்த்து பெருமை கொள்கிறேன்.
    எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. தனபாலன் அவர்கள் குணபாலநுமாக இருக்கிறார்.ஸரிதானே.

    1. நிஜம் தான்! தனபாலனைப் பற்றி நீங்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு சரி!

  3. ரஞ்சனி,

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு.நினைவுப்பரிசைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது.படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

  4. அம்மா படங்கள் அனைத்தும் அருமை (ஒரு சில நீங்களே எடுத்தது)… உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா… ஏனோ உங்களை விட்டு பிரியும் போது தாயை பிரியும் சோகம் என்னுள் எழுந்தது.. மீண்டும் சிந்திப்போம்… என்னுடைய படத்தையும் பகிர்ந்ததற்கு நன்றி அம்மா.. பல பதிவர்கள் இருக்கும் பதிவில் நானும் ஒரு சிறு இடம் பிடித்தது என்னுள் சந்தோசம் உற்றேடுக்கிறது…

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா..

    1. அன்பு சமீரா, உன் பின்னூட்டம் வந்தபின்தான் என் எழுத்துக்கள் உயிர் பெற்றன போலத் தோன்றுகிறது.
      வயது கடந்த நம் நட்பு தொடரட்டும்.
      சீக்கிரமே உன் பதிவுகளைப் படிக்க தயாராக இருக்கிறேன்!

  5. தெளிவான புகைப்படங்களுடன் அருமையான பதிவு ரஞ்சனி அம்மா. இப்பொழுதுதான் உங்கள் தளம் பார்க்கிறேன்.இனி தொடருவேன்.

    1. நல்வரவு சாதிகா!
      உங்கள் தொடர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
      நன்றி,
      அன்புடன்,
      ரஞ்ஜனி

  6. கண்டிப்பாக… உங்களின் ஊக்கம் என்னை எழுத உந்துகிறது…
    சொல்ல மறந்துவிட்டேன்.. “மயிலன் கவிதை வாசிக்கும் போது, விசில் அடிக்க முடியலியே என்ற உங்களின் உற்சாகம்” உங்களை 60 -ஆக நினைக்க முடியவில்லை இப்போதும் நீங்கள் 20 தான்.. உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றி கொண்டது… விசில் அடிக்க தெரியவில்லையே என கவலைப்பட்டது தருணம் அது…

    1. எனக்கும் விசில் அடிக்கத் தெரியாது. இல்லாவிட்டால் நானும் மூத்த பதிவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பரிசளித்தபோது பட்டையைக் கிளப்பியிருப்பேன்.

  7. இந்த நிகழ்ச்சியில் நீங்களெல்லாம் கவுரவிக்கப்பட்டபோது கரகோஷம் எழுப்பும் வாய்ப்பும், கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

  8. ஆஹா.. இந்த சமீரா பொண்ணு சரியான சமயத்தில என்ன போட்டுக் கொடுத்துட்டாளே…..! சீக்கிரமா விசில் அடிக்கக் கத்துக்கணும்…. யாரங்கே! விசில் அடிக்கச் சொல்லித் தர ஆசிரியரை கூட்டி வா…!
    வரவுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சேட்டைக்காரரே!

  9. படங்கள் பார்த்தது மகிழ்ச்சி சகோதரி. தமிழ்மணத்தில் படங்கள் என்று இருந்தது புகுந்தேன் .மிக்க நன்றி. இன்று தான் வந்தேன் இற்கு படத்தோடு தங்களைக் கண்டேன். மகிழ்ச்சி. உங்களிலும் எனக்கு வயது கூட.
    வேதா. இலங்காதிலகம்.

    1. வாருங்கள் வாருங்கள்! இந்த வலைபதிவு உலகத்தில் வயது என்பது கடைசி பட்சமாக இருக்கிறது என்பதை பதிவர் திருவிழாவில் கண்கூடாகக் கண்டேன்.
      நீங்கள் வந்தது மகிழ்ச்சி! எங்கெங்கோ இருக்கும் நாமெல்லோரும் வலைப் பதிவர் என்னும் நட்புக்குள் ஒன்றிணைவோம் தோழி!
      நன்றியுடனும், அன்புடனும்
      ரஞ்ஜனி

  10. வாழ்த்துக்கள் ரஞ்சனி. படங்களும் அழகாக உள்ளன.
    வல்லியம்மாவை சந்தித்தீர்கள், எத்தனை லக்கி! 😉

    1. நன்றி பட்டு! நிஜமாகவே லக்கி தான்! மிகவும் சகஜமாக பல வருடங்களாக பழகியவரைப் போல, முகம் நிறையச் சிரிப்புடன்…..அபூர்வமான பெண்மணி!

  11. பதிவர் சந்திப்பில் உங்கள் பெயர் கண்டேன். சற்றுமுன் ஒரு ப்ளாக்கில் நீங்கள் கொடுத்திருந்த லிங்க் பிடித்து வந்தேன்! படங்கள் கண்டு மகிழ்ந்தேன். விழாவில் கவுரவிக்கப் பட்டதற்குப் பாராட்டுகள். இளையதலைமுறைக்கு உங்கள் போன்றவர்கள் எல்லாம் நல்ல டானிக்.

    1. நல்வரவு ஸ்ரீராம்! எங்களைப்போன்றவர்களுக்கு வலைப்பதிவு செய்வது ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்கு!
      பாராட்டுக்களுக்கு நன்றி!

  12. அன்பின் ரஞ்சனி மேடம்

    புகைபடங்கள் அருமை- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    1. பின்னூட்டங்கள் முடிந்தன என்ற நினைத்துக்கொண்டேன். மழை வந்து மனதிற்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி திரு கமலக்கண்ணன்!

  13. தாமதமாகவே உங்கள் வலைபதிவைப் பார்க்க முடிந்தது. ப்தியப்பட்டப் புகைப்படங்கள் மீண்டும் அந்த நிகழ்வை மனதில் அசைப் போட வைக்கிறது. நிகழ்ச்சியில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    1. இப்போதுதான் உங்கள் வலைபதிவைப் பார்த்துவிட்டு வருகிறேன். அதற்குள் உங்கள் பின்னூட்டம்! நன்றி தமிழ் ராஜா!

  14. அழகான புகைப்படங்கள் அத்தனையும்… முக்கியமாக புகைப்படம் எடுத்த சமீராவுக்கு என் நன்றி என்று தாங்கள் தெரிவித்து இருப்பது தங்களின் உயர்பண்பையும் நன்றி உணர்வை மேலும் எல்லோருக்கும் எடுத்த்துக்காட்டி இருக்கிறது… நன்றி அம்மா. தங்களின் வருகைக்கும்..தங்களை நான் சந்தித்தற்கும்…

  15. அனைத்துப் படங்களும் அருமை. விழாவில் பங்கெடுக்காத எனைப்போன்ற பதிவர்களுக்கு இதுபோன்ற படங்கள்தான் ஒரு வரப் பிரசாதம். குறிப்பாக பதிவர் தனபாலன் அவர்களுடன் இருக்கும் புகைப்படம் அருமை. அவருடைய தளத்திலுள்ள பதிவுகளைப் போலவே பழுகுவதற்கு இனியவர். பண்பானவர்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா..!

  16. பதிவர் திருவிழாவின் புகைப்படங்கள் அசத்தல். நீங்களும் நானும் நிற்கும் படம் அருமையாக உள்ளது.இப்போது நான் பெங்களூரில் உள்ளேன். எனக்கு மெயிலில் தங்களின் போன் எண் தரவும் நான் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்கிறேன்.

  17. கட்டாயம் நானே உங்களை வந்து பார்க்கிறேன்.வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  18. பொன்னாடையில் என் குரு பார்க்கவே ரொம்ப சந்தோஷமாகவும் நானும் இதில் கலந்து கொள்ள முடியாமல் போனதே என வருத்தமாகவும் உள்ளது உங்களோடு சில பதிவர்களையும் பார்த்ததில் ஒரு திருப்தி அடுத்த முறை முயற்சிக்கலாம்.
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ரஞ்சனி

Leave a comment