விருது வந்தது!

பைவ்  ஸ்டார் பதிவர்

எப்போதெல்லாம் மனம் சோர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்த எனது நண்பர்கள் யாராவது ஒரு விருதினைக் கொடுப்பார்கள். இது எதேச்சையாக அமைகிறது என்பதுதான் ரொம்பவும் வியப்பான செய்தி.

இந்த முறை அவர்கள் உண்மைகள் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு மதுரைத் தமிழன் எனக்கு இந்த பைவ் ஸ்டார் விருதைக் கொடுத்திருக்கிறார். இவரது பதிவுகளுக்கு நான் அதிகம் போனதில்லை. ஆனால் என் எழுத்துக்கள் இவரைக் கவர்ந்திருக்கின்றன என்பதை இவர் எனது பதிவுகள் சிலவற்றிற்குப் போடும் கருத்துரைகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

அவர் நவம்பர் 16 ஆம் தேதியே இதை அறிவித்திருக்கிறார். ஆனால் சென்னையில் இருப்பதால் முகநூல் பக்கம் வரமுடியவில்லை. இன்று தான் பார்த்தேன். விருது என்பது நானும் ஏதோ சில விஷயங்களை பலருக்கும் பயன்படும் வகையில் சொல்லிவருகிறேன் என்பதைப் புரிய வைக்கும் ஒரு மிகப்பெரிய விஷயம். (அதாவது நான் ஒன்றுக்கும் உதவாதவள் இல்லை என்பதை நான் உணரவைக்கிறது)

நன்றி மதுரைத் தமிழன்! அவரது பதிவில் என்னைப் பாராட்டி கருத்துரை இட்ட எல்லோருக்கும் எனது அன்பும், நல்வாழ்த்துகளும்.

 

பதிவுலகத் தோழி!

friends

 

இப்போதெல்லாம் சென்னை போனால் நிறைய பேர்கள் எனது வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். (பதிவுலகத் தோழி என்று போட்டுவிட்டு உன்னை பற்றி ‘டாம், டாம்’ பண்ணுகிறாயே என்று அடிக்க வராதீர்கள்.) எனது ஓர்ப்படி சொன்னாள்: உங்கள் ‘முப்பதும் தப்பாமே’ படித்ததிலிருந்து தினமும் திருப்பாவை சேவிக்கிறேன்’ என்று. எத்தனை நல்ல விஷயம்!

 

அதேபோல எனது இன்னொரு ஓர்ப்படியின் அக்கா – அதிகம் யாரிடமும் பேசாதவர் – என்னிடம் சொன்னார்: ‘நல்ல பொழுதுபோக்கை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். என் மனதில் சில விஷயங்கள் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. உங்களிடம் சொல்லுகிறேன். நீங்கள் எழுதுங்கள்’ என்றார்.

 

அவர் அன்று என்னிடம் சொன்னதை நான் இன்னும் எழுதவில்லை. அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் கனமானவை. நிதானமாக யோசித்து எழுதவேண்டும். நிச்சயம் ஒரு நாள் எழுதுவேன்.

 

எனது மகளின் நாத்தனாருக்கும் கன்னட மொழியில் பதிவுகள் எழுத வேண்டுமென்று ஆசை. அவருக்கும் எப்படி வலைத்தளம் ஆரம்பிப்பது, எப்படி கன்னட மொழியில் எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தேன். (என் பிள்ளை சிரிப்பது காதில் விழுகிறதா?)

 

எல்லோரும் என் பதிவுகளைப் பற்றிப் பேசும் போது நான் அவர்களிடம் நீங்களும் எழுதலாம் என்று தவறாமல் சொல்லுகிறேன். எழுதுவதால் என்ன நன்மை என்றும் சொல்லுகிறேன். நான் சொல்வதை  மிகவும் ‘லைட்’ டாக எடுத்துக் கொண்டு ‘அதெல்லாம் எங்களுக்கு வராது; நீ எழுது, படிக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

 

எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு வாசகியிடமிருந்து  ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘நான் ஆசிரியை ஆகி இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவள். எனக்கும் உங்களைப் போல எழுத வேண்டும். எப்படி வலைத்தளம் ஆரம்பிப்பது, எப்படி தமிழில் எழுதுவது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு எழுதியிருந்தார்.

 

பலருக்கும் சொல்லி யாரும்  எழுத முன் வராத நிலையில் இந்தக் கடிதம் எனக்கு ரொம்பவும் உற்சாகம் கொடுத்தது. வேர்ட்ப்ரஸ் தளத்தில் எப்படி ஆரம்பிப்பது என்று நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ண்ட கடிதம் எழுதினேன்.

 

அந்த சமயத்தில் தொழிற்களம் வலைத் தளத்திலும் இதே விஷயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரைகளையும் படிக்கச் சொல்லி எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன்.

 

எல்லோரையும்போல இவரும் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தில் மண் விழுந்தது. நிஜமாகவே வலைத்தளம் ஆரம்பித்து எழுதவும் தொடங்கி விட்டார்! தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுத ஆரம்பித்தார். இரடிற்கும் தனித்தனியாக வேறு வேறு வலைத்தளம் ஆரம்பிக்கச் சொன்னேன்.

 

சின்னுஆதித்யா என்று தனது பேரனின் பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து இப்போது 200 பதிவுகளை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டார் எனது பதிவுலகத் தோழி விஜயா.

 

இவரை எனது வலைச்சர வாரத்திலும் அறிமுகப் படுத்தினேன்.

 

நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவர். அதனால் தினமும் புது புது தகவல்கள் தனது பதிவில் கொடுத்துக் கொண்டே இருப்பார்.

 

பெங்களூருக்கு அவரது தோழியைப் பார்க்க வந்தவர் எனது வீட்டிற்கும் வந்தார். முதல்முறை சந்திப்புப் போலவே இல்லை. சாயங்காலம் மறுபடி வீட்டின் அருகில் உள்ள பார்க்கில் சந்தித்தோம். இரவு டின்னர் இவரது பிள்ளையின் செலவில்!

 

‘அம்மா, ரொம்ப காரம் சாப்பிடாதே; ஐஸ்க்ரீம் வேண்டாம் சுகர் அதிகமாயிடும்’ என்று பார்த்து பார்த்து சொல்லி அம்மாவை பார்த்துக் கொள்ளும் பிள்ளை.

 

அவ்வப்போது பண்டிகைகளுக்கு, என் பிறந்த நாளுக்கு தவறாமல் தொலைபேசி விடுவார். நான் தான் இந்த தவறாமையை இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

 

குரு பூர்ணிமா அன்று எழுதிய பதிவில் ‘நீங்கள் தான் என் பதிவுலக குரு. உங்களுக்கு என் நன்றியை செலுத்தவே தொலைபேசினேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

சிலசமயம் இருவருமே ஒரே விஷயத்தைப் பற்றி எழுதுவோம். எங்கள் இருவரின் அம்மாக்களின் பெயரும் கமலம். இருவரும் (அம்மாக்கள்) பிறந்தது திருவாரூர். இதுபோல இன்னும் நிறைய ஒற்றுமைகள்.

 

எனது பதிவுலகத் தோழி விஜயா தனது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழவும், பதிவுலகம் தாண்டிய எங்கள் நட்பு இப்படியே நீடித்து நிலைக்கவும்  இறைவனிடம் வேண்டுகிறேன்.

 

Happy blogging Vijaya!

 

 

 

 

 

 

85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

கீழே இருக்கும் ஆண்டு அறிக்கை வேர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டில் என் வலைதளத்தின் நிலை பற்றியது.

இது என்னுடைய முதல் ஆண்டாகையாலே பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.

என் ரசிகர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 34,000 views in 2012. If each view were a film, this blog would power 8 Film Festivals

Click here to see the complete report.

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! பாகம் ஒன்று

first anniversary

எனது வலைத்தளம் இன்று முதலாண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது.

இந்த ஓராண்டில் நான் படித்து மகிழ்ந்த தளங்களையும், அதனால் ஏற்பட்ட தோழமைகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும், பாராட்டுக்களையும்,  பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புப் பதிவு.

(உஸ்……அப்பாடா!)

***********

ஒரு வாரத்திற்கு முன்னால் வேர்ட்ப்ரஸ் இலிருந்து ஒரு வாழ்த்து செய்தி: போன வருடம் இந்த நாள் தான் நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டீர்கள், வாழ்த்துக்கள் என்று! முதல் வாழ்த்து!

ஆனால் முதல் பதிவு போட்டது 24.12.2012

அதனால் இந்த நாளையே என் வலைதளத்தின் முதல் பிறந்தநாள் என்று கொண்டாடலாம்!

வலைப்பூ ஆரம்பித்ததன் நோக்கம் எனது படைப்புக்களை ஒரே இடத்தில் தொகுப்பதுதான்  என்றாலும், வேறு வேறு படைப்புக்களைப் படிக்க ஆரம்பித்த பின் என் வலைப்பூவிற்காகவே எழுத ஆரம்பித்தேன்.

சுய தம்பட்டம்:

வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி – நினைத்து நினைத்து மகிழும் ஒரு நிகழ்வு!

மூன்று முறை வலைச்சரத்தில் தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தப் பட்டேன்.

தமிழ் மணம் 205 ரேங்க். (சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றாலும் ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் என்றே தோன்றுகிறது.) தமிழ்மணம் 2 வது 5 வது ரேங்க் பெற்றவர்களுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பூஜ்யம் – அவ்வளவே வித்தியாசம்!

மேலும் இரண்டு வலைத்தளங்கள் ஆரம்பித்தது.

http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in

புதிதாக இவற்றில் எழுதுவது இல்லை. முதல் தளத்தில் இருப்பதையே இங்கும் போடுகிறேன். சில புதிய பதிவுகளும் இருக்கின்றன.

எதிர்காலம்:

எனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன.

ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பிறவிப் பயன் இது.

***********

என்னிடம் ஒரு குணம். நல்லது என்று மனதிற்கு படுபவற்றை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். இது நான் படிக்கும்  புத்தகங்கள்  என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்காது. சிலசில உணவகங்களும்,ஊர்களும், உறவுகளும்  இந்தப் பட்டியலில் அடங்கும்!

இவற்றைத் தவிர

எனது ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்;

யோகா பயிற்சியாளர் திருமதி ரேகா ஸ்வரூப்;

துணைவரின் மருத்துவர் டாக்டர் சிவராமையா;

எங்கள் ஜோசியர் திரு. உமேஷ் ஜோயிஸ், திரு அருளாளன்

என்னிடம் தங்களதுஆரோக்கியத்தை பற்றி பேசுபவர்கள் எல்லோருக்கும் இவர்களை பரிந்துரைப்பேன். விளைவு: நான் பார்த்தே இராத பலர் என் பெயரைச் சொல்லிக் கொண்டு  இவர்களை நாடுவார்கள்!

சிலர் சில சமயங்களில் இதற்காக கோபப் பட்டதும் உண்டு! ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல?’ என்று!

சமீபத்திய உதாரணம்: வலைச்சரத்தில் பலரை அடையாளம் காட்டியிருந்தும், சிலர் மட்டுமே நன்றி பாராட்டி இருந்தார்கள்.

‘இவள் யார் நம்மை அடையாளம் காட்ட?’ என்று நினைத்திருப்பார்களோ, என்னவோ?

அப்போது எனக்குள் நான் நல்லவளா கெட்டவளா என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் இந்த குணம்  மாறவில்லை. இப்போது பதிவுலகத்திலும் எனக்குப் பிடித்த தளங்களை தொடருவதுடன், பின்னூட்டமிட்டு, என் வலைபதிவில் இணைப்பு கொடுத்து…. அவர்களது பதிவை ரீ-ப்ளாக் செய்து…. எனது சமூகம் என்று அவர்களை அடையாளம் காட்டி…

தொட்டில் பழக்கம்…..மாறாது இல்லையா?

எனது வலைதளத்தின் மூலம் பலரின் நட்பு கி டைத்திருக்கிறது.

வலைப்பதிவுக்கு அப்பால் என்னுடன் நட்பாக இருக்கும் ஒருவர் திருமதி காமாட்சி. 

அவ்வப்போது தொலைபேசவும் செய்கிறோம். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எங்கள் நட்பு இதேபோல வரும் வருடங்களிலும் தொடர வேண்டும்!

ஒரு முறை நான் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் போது இவரும் அறிமுகம் ஆகியிருந்தார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்கிறாய் என்று நெகிழ்ந்து போனார் இவர்.

எனக்கு எங்கு போனாலும் ஒரு ராசி. என்னைவிட வயது குறைந்தவர்கள் என்னுடன் மிக எளிதில் நட்பு கொள்ளுவது. பதிவுலகத்திலும் இது தொடர்வது அதிசயமே!

எனக்குப் பிடித்த இரண்டு இளைய தலைமுறை:

ஆடி பதினெட்டாம் நாள். காலையில் கலந்த சாதங்கள் செய்துவிட்டு கணணி முன் உட்கார்ந்து பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் என்னும் பெயரில் எழுதும் திரு தமிழ் ‘ஆடித் திருநாள் என்னும் பதிவு எழுதியிருந்தார். படித்து விட்டு

‘பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு! காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!

கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.

இந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல!’

என்று ஒரு பின்னூட்டம் போட்டேன்.

அடுத்த நாள் ஓஜஸ் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல்: எனது நண்பன் தமிழ் அவர்களின் பதிவைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என்னுடைய நாற்சந்தி   வலைத்தளத்தில் வந்தியத்தேவன்  பற்றிய பதிவைப் படித்து கருத்து இருந்தால் சொல்லவும் என்று.

ரொம்பவும் நீளமாகப் போய்விட்டபடியால் அடுத்த பதிவில் தொடருகிறேன்.

விடைபெறுகிறேன் : வணக்கம்!

 

வலைசரம் ஆசிரியராக எனது ஏழாம் நாள்:

 

 

 

இன்றுடன் 7 நாட்கள் முடிவடைந்து விட்டன. இப்போது நினைத்துப்

பார்த்தால் வேகமாகப் போய்விட்டது போலத் தோன்றுகிறது.

 

அறிமுகம் என்று சொல்வதைவிட இந்த 7 நாட்களும் நான்

வலைச்சரத்திற்காக தேடித்தேடி (பி)படித்ததை உங்களுடன் பகிர்ந்து

கொண்டேன் என்பதே சரியாக இருக்கும். தெரிந்த முகங்களுடன், தெரிந்து

கொண்டதை  பகிர்ந்து கொண்டேன்.

 

மேலும் படிக்க:

 

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html

 

ஆறாம்நாள்: அருமை வணக்கம்!

வலைச்சரத்தில் எனது ஆறாவது நாள்:

 

இன்றைக்கு ஒரு நாள், நாளை – இரண்டு தினங்களில் எத்தனை பதிவர்களை அறிமுகப்படுத்தி வைக்க முடியும்? யாரை சொல்வது, யாரை விடுவது? என்னடா இது எனக்கு வந்த சோதனை? என்று திருவிளையாடல் பாலையா மாதிரி சொல்லிக் கொண்டே ஆறாம் நாள் என் வலைபதிவு பயணத்தை தொடங்குகிறேன்.

 

என்னைப் போலவே தஞ்சைக் கவிதை எழுதும் திருமதி கிருஷ்ணப்ரியா வும் முதலில் சற்றுக்  குழம்பித்தான் போனாராம்.

‘எனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை….. அடுத்து

வந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,

இந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல’

முதலில் குழம்பி இப்போது தெளிவாயிட்டேன் என்கிறார்.

குழப்பம் தீர்ந்தபின் ஆனந்தம் தானே? எது ஆனந்தம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது, இல்லையா?

இவரது ஆனந்தத்தை பரிந்துகொண்ட நாம் இவரது ஆதங்கத்தையும் புரிந்து கொள்ளுவோம்

‘பொதுவாகவே அரசு மருத்துவமனைகள் என்றால் கொஞ்சம் அலட்சியமும், அங்கே தவறுகள் தான் நடக்கும் என்றும் தான் மக்களாகிய நாம்  சிந்திக்கிறோம்.’

இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது என்று நாம் யோசிக்கிறோமா? அரசு மருத்துவமனைகளில் நடப்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது, அரசை விமர்சிப்பதற்காக…. என்றால் தனியார் மருத்துவமனைகளில் தவறுகள் நடப்பதில்லையா? ஏன் அது பற்றி எதுவும் வெளியில் வருவதில்லை?

இந்தாப் பாருப்பா, உனக்கு சக்கரை வேற இருக்கு, சரியா புண்ண கவனிக்கலண்ணா கால் போயிடும் ஜாக்கிரதை என்று எடுத்துச் சொன்ன படி காயத்தை சிரத்தையாக சுத்தம் செய்து கட்டி விடும் ஊழியர் என்று அரசு மருத்துவமனைகளிலும் நல்ல இதயங்கள் இருக்கத் தான் செய்கிறது. என்ன செய்வது?

 

 

மேலும் படிக்க:

 

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

ஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்!

 

 

‘நதி பல மாநிலங்களை கடந்து தன் போக்கில் பாயிந்து பல சிற்றாறுகளுடன் சேர்ந்து சிற்சில  கிளையாறுகளாகி செல்லும் இடமெல்லாம் வளங்கொழித்து இறுதியாக கடலில் சங்கமிக்கும்..அதுபோல பல பேராறுகள் சிற்றாறுகளின் துணையுடன் நானும் என் எண்ணகங்ளின் சிதறல்களை முடிந்தவரை கரையேற்றுகிறேன்.. தடைகளற்று பயணிக்கும் இடமெல்லாம் விட்டு செல்கிறேன்.. இந்த நதிக்கரையை நாடி வருவோரில் ஒருவர்க்கேனும் வளம் தருமெனில் அது தன் பிறவி பயனை அடையும்…’

இதைப் படித்தவுடன் பல வருடங்களாக எழுத்து  அனுபவம் உள்ள பிரபலமான பதிவரின் வார்த்தைகள் என்று தோன்றும்.

2 மாதங்களுக்கு முன் வலைபதிவு செய்ய ஆரம்பித்த (நதிக்கரையில்) – சமீராவின் வார்த்தைகள் இவை என்றால் நம்புவது கடினம்.

பதிவு எழுதுவதற்கு முன் அத்தனை வலைபதிவுகளையும் படித்து கருத்துரை எழுதுவதை தன் பொழுது போக்காக வைத்திருந்தார் இவர். பதிவர் மாநாட்டில் இவரது செல்வாக்கு தெரிந்தது.  இவருக்குத் தெரியாத வலைபதிவர்கள்,  இவர் பின்னூட்டம் போடாத  வலைபதிவுகள் வலைபதிவுலகத்தில் இல்லையென்று சொல்லலாம்.

இவரது தனிமையும் தவிப்பும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு!

 

 

மேலும் வாசிக்க:

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

 

நான்காம் நாள்: நல் வணக்கம்

வலைச்சரத்தில் என் நான்காம் நாள்:

‘அலைகடலும் ஓய்ந்திருக்க

அகக்கடல்தான் பொங்குவதேன்?’

ஆஹா.. எங்கேயோ கேட்ட பாடல்….!

பாடலைப் பாடியபடி  யார் வருவது? பூங்குழலி! அவளைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வருகிறதே! யாரிவர்கள்?

வந்தியத்தேவன், குந்தவை, பொன்னியின் செல்வன், வானதி, ஆதித்த கரிகாலன், நந்தினி, சுந்தர சோழன், சேந்தன் அமுதன், பூங்குழலி…..நடுவில் யார்? மிகவும் தெரிந்த முகமாக இருக்கிறதே!

ஒரு நிமிடம் மூச்சு விடவும் மறந்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவேயில்லை. அவரா? அவரேதான்! சாட்சாத் ‘கல்கி’ அவர்கள்தான்!

வணங்கினேன். “தாங்கள் எப்படி ஐயா இங்கு?” தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

“நீ இன்றைக்கு ‘நாற்சந்தி’ யில் நின்று ‘தமிழ்’ பற்றி எழுதப் போகிறாய் என்று ஒரு பறவை சொல்லிற்று. நான் இல்லாமல் அவர்கள் எங்கே? அதனால் வந்தேன்” என்றார்.

“நல்லது ஐயா, ஒரே ஒரு புகைப்படம்….?”

“எடுத்துக் கொள்…” என்றவாறே அவர் நடுவில் அமர, அவரது கதாபாத்திரங்கள் அவரை சுற்றி அமர்ந்தனர். இதோ அந்தப் புகைப்படம் மேலே:

 

‘நாற்சந்தி’ எழுதும் திரு ஓஜஸ் சொல்லுகிறார்:

‘பொன்னியின் செல்வன்’ படித்து முடித்ததிலிருந்து, பல முறை யோசித்தது உண்டு : “இப்படி ஒரு அழகான பாத்திரத்தை கல்கி அவர்கள் எப்படி படைத்தார்……. வந்தியத்தேவனுக்கு முன்னோடி யார்…. யாரை ‘ரோல்-மாடல்’ஆகக் கொண்டு அவன் படைக்கப்பட்டான்…..”.

 

 

மேலும் படிக்க:http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html

 

 

பதவியேற்பு!

 இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக வலம் வர இருக்கிறேன்.
திரு அன்பின் சீனா அவர்களின் என்னைப்பற்றிய அறிமுகமும் வரவேற்பும்:
இதோ என் முதல் நாள் அறிமுகம்:
உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வலைச்சரம் பல வலைபதிவுலக பிரம்மாக்களால் கோர்க்கப்பட்டு, அவர்களது படைப்புக்களாலும்,  அவர்களது அறிமுகங்களின்  படைப்புகளாலும்  சரம்சரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என்னைப்போல வலைபதிவுலகக் கடைசிப் படியில் நிற்கும் கற்றுக் குட்டிகளும் ஆசிரியர் பொறுப்பேற்பது என்பதை நினைக்கும்போது
‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்…. அம்மா..
என்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
திரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘risk’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.
‘காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே….’ என்ற பாரதியின் பாடல் வரிகள் நிஜமாகியது என் வாழ்வில்…..
மேலும் படிக்க: http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_8.html