குட்டித்தூக்கம் நல்லது!

 

“நேற்று என்ன பண்ணினீங்க?”

“ஓ! அதை ஏன் கேட்கறீங்க? தூக்கமோ தூக்கம்! மத்தியானம் நல்லா தூங்கினேன்; மறுபடி ராத்திரியும் நல்ல தூக்கம்! Sleepy Sunday!……”  என்று சொல்லிவிட்டு சிரித்தேன்.

“ஸ்லீப் டெட் (Sleep Debt) நிறைய சேர்த்து வைத்து இருப்பீங்க….. அதான் அவ்வளவு தூக்கம்” என்று சிரித்தார் என்னுடன் வேலை செய்யும் அர்ச்சனா.

“அதென்ன ஸ்லீப் டெட்? புதுசா இருக்கு?”

“ரொம்ப நாளா சரியா தூங்கலன்னா, அல்லது தூக்கம் வரும்போது தூங்காம தள்ளி போட்டீங்கன்னா நீங்க தூங்கவேண்டிய தூக்கம் சேர்ந்து சேர்ந்து ‘ஸ்லீப் டெட்’ ஆயிடும்….. கொஞ்ச நாள் கழித்து உங்கள் உடல் அந்தக் கடனை தூங்கித் தூங்கி சரி பண்ணிக்கும்…”

தமாஷ் செய்கிறாரோ என்று பார்த்தால் “நிஜம் மேடம், நம்புங்க..” என்றார்.

அன்றிலிருந்து எப்போது அதிகப்படியாக தூங்கினாலும் ‘சரி தூக்கக்கடனை அடைக்கிறேன்’ என்று நினைத்து என் குற்ற உணர்ச்சியை குறைத்துக் கொள்ளுவேன்.

எனக்கு நேர் எதிர் என் கணவர். இரவு மிகக்குறைந்த அளவே தூங்குவார். நடுவில் எழுந்து விடுவார். ‘ரெண்டு மணிக்கு எழுந்துட்டேன்; திருப்பி மூன்று மணிக்குத்தான் தூங்கினேன்’ என்பார். தினமும் இப்படித்தான். என்ன இவர் ‘இரவு எல்லோரும் தூங்கும் சமயத்தில் தூக்கம் வரவில்லை என்கிறாரே?’ என்று நினைத்துக் கொள்ளுவேன்.

இன்று ஒரு கட்டுரை படித்தேன். அதில் மேற்கண்ட என் கேள்விக்கு விடை கிடைத்தது. இதோ உங்களுக்கும் சில செய்திகள்:

குட்டிக்குட்டியாகத் தூங்குவது நல்லது. தினமும் இரவு 8 மணி நேரத் தூக்கம் என்பது கட்டுக்கதை. கொஞ்சநேரம் தூங்கிவிட்டு எழுந்து கொண்டு பிறகு மறுபடி தூங்குவது இயல்பான ஒன்று.

பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது தொழில்மயமாக்கலுக்கு முன் தூங்கும் நேரம் என்பது ஒருமுறை தூங்கி பின் சிறிது நேரம் விழித்துக் கொண்டு மறுபடியும் தூங்க செல்லுவது என்பது தான். அதாவது ஒரேயடியாகத் தூங்காமல் முதல் முறை இரண்டாம் முறை என்று ‘பிரித்துத் தூங்குவது’ (Segmented Sleep).

“முதல், இரண்டாம் தூக்கம் என்பது ஹோமர், விர்ஜில் ஆகியோரின் புத்தகங்களிலும் இடைக்கால கிறிஸ்தவ இலக்கியங்களிலும் விளக்கப்பட்டுள்ளது” என்று தனது ‘ஈவினிங் எம்பயர்: எ ஹிஸ்டரி ஆப் த நைட் இன் யர்லி மாடர்ன் யூரோப்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் திரு கொச்லோப்ச்கி.

செயற்கை விளக்குகள் வருவதற்கு முன் இரவில் விழித்துக் கொள்வது இயல்பான ஒன்றாக இருந்தது. செயற்கை விளக்குகளைத் தொடர்ந்து காப்பி முதலிய பானங்கள் குடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதனால் மாலைவேளை என்பது காபி குடித்துக்கொண்டு அரட்டை அடிக்கும் நேரமாக மாறிப்போனது. தூங்கும் நேரமும் ஒத்திப்போடப் பட்டது. 8 மணிநேரத் தூக்கம் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

1800 ஆண்டு வரை மேற்கத்திய ஐரோப்பியர்கள் இரண்டு பிரதான தூக்க நிலையை – நடுவில் ஒரு மணிநேரம் அல்லது சற்று அதிகப்படியான நேரம் விழிப்பு நிலை – அனுபவித்து வந்தனர். இந்த இடைவெளியை ‘watch’ அல்லது ‘watching’ என்று குறிப்பிட்டனர்.

அப்படியானால் இரண்டு நிலையில் தூங்குவதுதான் சரியா? பரிணாம வளர்ச்சி நமக்கு இரண்டு தூக்கத்தை 4 – 4 மணிநேரம் என்றுதான் வடிவமைத்ததா? எது சரி? நீண்ட நேரத் தூக்கம் என்பது கிடையாதா?

“இது ஒரு நியாயமான கேட்கப்படவேண்டிய கேள்வி” என்கிறார் தூக்கமும், மனிதனின் செயல்பாடுகளும் என்ற மையத்தின் மருத்துவ இயக்குனர் திரு சார்லஸ் சாமுவேல்.

1990 களில் உளவியலாளர் திரு தாமஸ் வேர் ஒரு ஆய்வு நடத்தினார். பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நபர்கள் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு இரவும் 14 மணிநேரம் ஆழ்ந்த இருட்டில் வைக்கப்பட்டனர். நாளடைவில் அவர்கள் ‘பிரிக்கப்பட்ட தூக்கத்திற்கு’ ஆளானார்கள்.

“ஆனால் இப்போது 2012 ஆண்டில் இது சாத்தியமா? உலகம் அப்போதுபோல இப்போது இயங்கவில்லை. அப்போது அவர்கள் அப்படித் தூங்கினார்கள் என்று நாமும் அதேபோல் செய்யமுடியுமா? காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீடு திரும்புவது என்று வாழ்க்கை அமைந்திருக்கும் போது நமக்கு வேறு வழிகள் இல்லை – இரவு முழுக்கத் தூங்குவதை தவிர” என்கிறார் திரு சாமுவேல்.

முதலில் தூங்கிவிட்டு நடுவில் விழித்துக்கொண்டு மறுபடி தூக்கம் வராமல் தவிப்பவர்கள் என்ன செய்ய? பிரித்துத் தூங்கலாமா? முதலில் 4 மணிநேரம் தூங்கிவிட்டு சிறிது நேரம் கழித்து மறுபடி தூக்கம் வரும்போது ‘இரண்டாம் முறை’ தூக்கம் போடலாமா?

இப்படித் தூங்குவதில் தவறில்லை; முன்னொரு காலத்தில் இப்படித்தான் என் கொள்ளு தாத்தா, எள்ளு தாத்தா குட்டித்தூக்கம் போடுவாராம் என்று நினைத்துக்கொண்டு நிம்மதிப்பெருமூச்சு சாரி, சாரி,  நிம்மதித் தூக்கம் போடலாம் இல்லையா?

இப்போது இன்னொரு வகைத் தூக்கம் பற்றியும் சொல்லுகிறார்கள் – அதாவது ‘Power Nap’ என்று. இதை ‘கோழித் தூக்கம்’ என்றும் சொல்லுவார்கள். ஒரு ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ – தூக்கம் கண்ணை சுற்றும்போது தூங்கி விடுவது. அசந்திருக்கும் உடல் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி பெறும். பேருந்தில் பயணம் செய்யும்போது பலதடவை இதை நான் அனுபவித்திருக்கிறேன்.

தூக்கத்தைப் பற்றி எழுதி நல்லா தூக்கம் வந்துவிட்டது, ஆ……….வ்…….!

லண்டன் – 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கின!

லண்டன் – 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் துவங்கின!

பிரிட்டிஷ்காரர்களுக்கே உரித்தான பாணியில் லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நேற்று துவங்கின.

இங்கிலாந்து நாட்டின் அரசியார், தனது  கணவர் இளவரசர் ஃபிலிப்புடன் வருகை தந்து இந்த விளையாட்டுக்களைத் துவங்கி வைத்தார்.

இந்த ஆரம்ப விழாவின் தனித்துவம் என்னவென்றால் இங்கிலாந்து அரசி அந்த நாட்டின் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் 007 உடன் பாராசூட்டில் வந்து மைதானத்தில் இறங்குவது போல காண்பித்து இருந்ததுதான்.

இதற்கு முன்னால் ஜேம்ஸ்பாண்ட் 007 ஒரு கறுப்பு நிற லண்டன் வாடகை வண்டியில் பக்கிங்ஹாம் மாளிகைக்கு வந்து  ராணியாரின் அன்பு நாய்கள் மான்டி, வில்லோ, ஹாலி தொடர ராணியை சந்திக்கிறார். அவர்கள் ஒரு ஹெலிகாப்டரில் லண்டன் வான்வெளியில் அந்நகரின் மிக முக்கியமான இடங்களைக் கடந்து வருகிறார்கள். ராணிக்கு தலை அசைத்து வணக்கம் சொல்லுகிறது வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை!

மைதானத்தின் மேலிருந்து ராணியும் ஜேம்ஸ்பாண்டும் பாராசூட்டில் குதிக்கிறார்கள். அதே சமயம் வான்வெளியில் உண்மையான ஸ்கைடைவர்கள் தோன்றுகிறார்கள். மெல்ல மெல்ல மிதந்து மைதானத்தில் இறங்குகிறார்கள்; பின்னணியில் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் இசை முழங்குகிறது. ராணியும் மைதானத்திற்குள் வருகிறார்.

குழந்தைகள் இசைக்குழு ‘God save the Queen’ என்று பாட யூனியன் ஜாக் கொடி ஏற்றப்படுகிறது.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள்  இந்த சிறிய படத்தில் நடிக்க ராணியார் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்; இதுவே அவர் முதல் முதலில் நடித்த படம் என்றும் கூறுகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டின் இசை வரலாறு, சினிமா துணுக்குகள், கிரிக்கெட் விளையாட்டு, லண்டன் நகர ட்யூப் ரெயில், லண்டன் மாநகரை சுற்றி ஒரு மாலை போல ஓடும தேம்ஸ் நதி, இங்கிலாந்து நாட்டைச் சுற்றியுள்ள கடல்கள் என்று இங்கிலாந்து நாட்டின் சிறப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தனர்.

இங்கிலாந்து நாட்டின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் காட்டப்பட்டன. தொழிற்புரட்சி, யுத்தம் காட்டப்பட்டபோது ஒரு சில நொடிகள் எல்லோரும் போரில் உயிர் துறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.

மிஸ்டர் பீன் தொடரின் கதாநாயகன் திரு. ரோவன் அட்கின்சன் இசைக்குழுவின் இடையில் தோன்றி நிகழ்ச்சிக்கு கலகலப்பு மூட்டினார்.

இங்கிலாந்து நாட்டின் குழந்தைகளுக்கான கதைகளிலிருந்து சில சில கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றினர்.

அடுத்தாற்போல் 204 நாடுகளைச் சேர்ந்த  சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் தங்களது நாட்டின் கொடிகளைச் சுமந்து நடந்து வந்தனர். கிரீஸ் நாடு முதலிலும் – அங்குதான் இப்போட்டிகள் ஆரம்பமாயின என்பதால் – இங்கிலாந்து நாடு புரவலன் (Host) என்பதால் கடைசியிலும் வந்தன.

பெண்களுக்கான ஒலிம்பிக் வருடம் இது என்பதால் பெஹ்ரைன், ப்ருனேய் நாடுகளின் பெண் வீராங்கனைகள் கொடி ஏந்தி வந்தனர்.

“பீஜிங் அளவு பிரம்மாண்டமான விழா இல்லையென்றாலும், ‘ஓகே! கிரேட்! பரவாயில்லை!’ என்று சொல்லும்படியாக இதனை வடிவமைத்து இருக்கிறோம்” என்று நிகழ்ச்சி வடிவமைப்பாளர் திரு. டேனி பாயல் கூறினார்.

 

 

 

பேஸ்புக்கில் புகைப்படங்கள் இணைப்பவர்கள் கவனத்திற்கு:

பேஸ்புக்கில் புகைப்படங்கள் இணைப்பவர்கள் கவனத்திற்கு:

முறையற்ற புகைப்படங்கள் உங்கள் வேலையை பறிக்ககூடும்!

முதலாளிகள் தங்கள் அலுவலகத்தில் வேலைக்கு சேர விரும்புபவர்களின் வாழ்க்கைமுறை, மனப்பான்மை, தோற்றம் பற்றி அறிய பேஸ் புக்கை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று நார்த் மியாமியில் இருக்கும் ப்ளோரிடா சர்வதேச பல்கலைக் கழக ஆய்வு கூறுகிறது.

முதலாளிகள் தகுதி இல்லாதவர்களை ஒதுக்கி தள்ள பேஸ் புக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் வேலை தேடுபவர்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் சுய விவரங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பேஸ்புக்கை நாடும் முதலாளிகள், தங்களுக்கு வேண்டிய தகுதி இருப்பவர்களைக் கண்டு பிடிக்கவும் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள்.

பணியாளர்களை தேர்ந்தெடுக்க சரியான வழிமுறைகள் இல்லாத நிலையில்  பேஸ்புக்கில் நீங்கள் போடும் புகைப்படங்களை வைத்து உங்களை பற்றிய முடிவுக்கு வருகிறார்கள் இவர்கள்.

“இது ஒரு புதிய போக்கு; ஏனெனில் தரநிலையான வழி முறைகள் இல்லாத நிலையில் விண்ணப்பதாரர்கள் பற்றிய முடிவுகளை உள்ளுணர்வால் மட்டுமே தீர்மானம் செய்ய முடிகிறது” என்று இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திச்செல்லும் திரு. லாமா கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சிக் குழுவினர் தகவல் தொடர்புத்துறை, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, சட்டமுறை செயலாக்கம், உணவு மற்றும் பானம்,  பிரயாணத் துறை விளம்பரத் துறை என பல துறைகளில் இருந்து பிரதிநிதிகளை பேட்டி கண்டதில் இந்தப் புதிய போக்கு கண்டு வந்துள்ளது.

ஒரு தனி மனிதரைப் பற்றிய விவரங்களை இதைப் போல சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டறிவது நன்னெறி சார்ந்த முறைதானா என்பது பற்றி விவாதங்களும் நடத்த இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

பேஸ் புக்கில் ஒருவரது நடவடிக்கைகளை வைத்து, அவரது தனிப்பட்ட ஆளுமையை எடை போடுவது என்ற முறை ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட நெறிமுறை ஆக ஆவதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் சொல்லுகிறார்கள்.

பல அமெரிக்க அலுவலகங்களில் ஊழியர்களின் பேஸ்புக் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படுவது தன்னுடைய விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் மீறுபவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேஸ் புக் ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

 

Dear God……!

 

Jagjit Singh,

 

 

 


                                              Shammi kapoor,


Dev Anand,

 

 

 

 


                                                 Mehdi Hasan,


Dara Singh


 

 

 

 

and now


                                                                                    Rajesh KhannaDear God,

 

I appreciate your keen interest in Indian music and films,,,,,!

 

I hope u will take a little

 

interest in Indian politics

 

as well…..! Similar type of

 

interest please !!!

 

 

Source: email forward

 

JUST A MOM?

Very interesting to read. I got this from an email forwarded to me:

A woman, renewing her driver’s license at the County Clerk ‘s office, was asked by the woman recorder to state her occupation. She hesitated, uncertain how to classify herself.

“What I mean is”, explained the recorder, “do you have a job or are you just a ….?”

“Of course I have a job,” snapped the woman. “I’m a Mom.”

“We don’t list ‘Mom’ as an occupation, ‘housewife’ covers it,” Said the recorder emphatically.

***

I forgot all about her story until one day I found myself in the same situation, this time at our own Town Hall. The Clerk was obviously a career woman, poised, efficient, and possessed of a high sounding title like, “Town Registrar.”

“What is your occupation?” she probed.

What made me say it? I do not know. The words simply popped out.

“I’m a Research Associate in the field of Child Development and Human Relations.”

The clerk paused, ball-point pen frozen in midair and looked up as though she had not heard right. I repeated the title slowly, emphasizing the most significant words. Then I stared with wonder as my pronouncement was written, in bold, black ink on the official questionnaire.

“Might I ask,” said the clerk with new interest, “just what you do in your field?”

Coolly, without any trace of fluster in my voice, I heard myself reply,

“I have a continuing program of research, (what mother doesn’t) in the laboratory and in the field – (normally I would have said indoors and out). I’m working for my Masters, (first the Lord and then the whole family) and already have four credits (all daughters).

Of course, the job is one of the most demanding in the humanities, (any mother care to disagree?) and I often work 14 hours a day, (24 is more like it). But the job is more challenging than most run-of-the-mill careers and the rewards are more of a satisfaction rather than just money.”

There was an increasing note of respect in the clerk’s voice as she completed the form, stood up, and personally ushered me to the door.

As I drove into our driveway, buoyed up by my glamorous new career, I was greeted by my lab assistants — ages 13, 7, and 3. Upstairs I could hear our new experimental model, (a 6 month old baby) in the child development program, testing out a new vocal pattern.

I felt I had scored a beat on bureaucracy! And I had gone on the official records as someone more distinguished and indispensable to mankind than “just another Mom.”

Motherhood! What a glorious career! Especially when there’s a title on the door.

Does this make grandmothers “Senior Research associates in the field of Child Development and Human Relations” and great grandmothers “Executive Senior Research Associates?”
I think so! I also think it makes Aunts “Associate Research Assistants.”

A great way of describing the work of Mothers, instead of just “House-wife” !
***

 

வயதானவர்களுக்கு உடற்பயிற்சி

வலி என்பது இரண்டு வகை: ‘நல்ல வலி’, ‘கெட்ட வலி’

என்ன வலியில் கூட நல்ல, கெட்ட உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டு.

“உடற்பயிற்சி செய்துட்டு வந்தா கால்கை எல்லாம் வலி”

“ஒண்ணும் செய்யாமலே எனக்கு உடம்பு வலி…..!”

முதல் வகை வலி ‘நல்ல வலி’. ஏனென்றால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி பழகப்பழக சரியாகிவிடும். அத்துடன் உடலை வலுவடையச் செய்யும்.

‘சும்மா’ இருப்பதால் வரும் வலி இன்னும் உங்களை நலிவடையச் செய்யும். அதனால் அது கெட்ட வலி.

பொதுவாகவே ‘குண்டாக இருப்பவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; அல்லது ஏதாவது நோய் வந்த பிறகு (உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி) மருத்துவர் சொன்னால் உடற்பயிற்சி செய்யலாம்’ என்று பலர் நினைக்கிறார்கள்.

அதேபோல இளைஞர்கள், சின்ன வயதுக்காரர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; வயதானவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை – மேற்கூறிய ஏதாவது நோய் இருந்தாலொழிய என்று பலர் நினைக்கிறார்கள்.

இல்ல அண்ணாச்சி…அப்படி இல்ல…

சின்ன வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்பவர்கள் பொதுவாக நோய் நொடிக்கு அவ்வளவாக ஆளாவதில்லை. ஆளானாலும் வெகு சீக்கிரம் குணமடைந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் என் உறவுக்கார இளைஞன் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட பதறி விட்டோம் எல்லோரும்; மிகவும் சின்ன வயது; அவன் தவறாமல் ‘ஜிம்’ போவது வழக்கம் ஆதலால், மருத்துவர்கள்  எதிர்பார்த்ததைவிட வெகு விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விட்டான். எப்படி நாம் சின்ன வயதில் படித்த ‘ரைம்ஸ்’ (திருப்பித்திருப்பி சொல்லுவதால்) நமக்கு மறப்பதில்லையோ, நாம் ஏற்கனவே செய்துவந்த வேலைகளையும் நம் உடல் நினைவில் வைத்துக் கொள்ளும். நம் உடலின் இந்த அற்புதமான சக்தியை நாம் மறந்து விடுகிறோம். அதே போல இன்னொன்று: உடல் உறுப்புக்களை பயன்படுத்தப் பயன்படுத்த அவை நமக்கு நல்லதைச் செய்யும். ‘Use it or lose it’ இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நம் உடல் வேலை செய்கிறது.

வயதாக ஆக உடலுழைப்பு நமது அயர்ச்சியைப் போக்கும்; வலிகளை குறைக்கும்; நமது வாழ்க்கைத் தரம் உயரும் அதாவது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

வயதானவர்களுக்கு கடுமையான நோய்களின்பாதிப்பால் வலிகள், தள்ளாமை, சில உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் போவது போன்றவை வழக்கமாக ஏற்படுவதுதான். இதனால் சுதந்திரமாக நடமாட முடியாமல் வாழ்க்கை முடங்கிப் போகும். இவற்றிலிருந்து விடுபட அல்லது இவற்றின் தீவிரத்தைக் குறைக்க உடல் செயல்பாடு மிக மிக அவசியம்.

உடற்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் செய்யும் நன்மைகள்:

  • பலவிதமான புற்றுநோய்கள் வராமல் காக்கிறது. இருதய நோய், சர்க்கரை நோய், அளவுக்கு அதிகமான உடற்பருமன் ஆகியவற்றிலிருந்து காக்கிறது.
  • பசியைத் தூண்டி, நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.
  • உடற்பயிற்சி செய்வதால் என்டார்பின் (endorphin) என்ற  ‘feel good’ ஹார்மோன் சுரப்பது நன்கு தூண்டப்படுவதால் நாள் முழுவதும் உங்கள் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறது. இதுவே உங்களை நோய்கள் அண்டாமல் காக்கும் அருமருந்து.
  • தசைகளும் எலும்புகளும் பலவீனமடைவதைத் தடுக்கிறது.
  • உடல் வலுவடைந்து இளமைத் தோற்றத்துடன் இருக்கிறது. இதுவே உங்களுக்கு தன்னம்பிக்கையையும், மனதில் உற்சாகத்தையும் கொடுக்கும்.
  • எலும்பு மெலிவு அல்லது இழப்பு ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தொடர்ந்த உடற்பயிற்சியும், கால்சியம் மாத்திரைகளும் உங்கள் எலும்புகளை பாதுகாக்கும்.
  • ‘வயதாகிவிட்டது, கீழே உட்கார முடிவதில்லை; கால் கைகளை மடக்கி நீட்ட முடிவதில்லை’ என்று பல வயதானவர்கள் சொல்லுவார்கள். இதற்குக் காரணம் தசைகள் நெகிழ்வுத்தன்மையை இழந்து விடுவதுதான். வயதாக ஆக இதெல்லாம் சகஜம் என்றாலும், இந்த நிலைமையை உடற்பயிற்சி மூலம் ஒத்திப்போடலாம்.

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை, தவறான உணவுப் பழக்கங்கள் இவற்றால் தசைநார்கள் வெகு விரைவில் வலுவிழந்து போகின்றன. இதனால் தசைப்பிடிப்பு, அழற்சி, கீழே விழுதல் ஆகியவற்றுடன் எதிர்பாராத காயங்களும் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி உங்கள்  உடலை பலமாக்குவதுடன் நடமாட்டத்தையும் சீர் செய்கிறது.

விளையாடும்போது மட்டையைப் பிடித்து பந்தை அடித்தல், எட்டிப் பிடித்தல், பௌல் செய்தல் ஆகிய செய்கைகளுக்கு நரம்பு-தசை ஒருங்கிணைப்பு (neuromuscular co-ordination) மிக மிக அவசியம். வயது ஏற ஏற இது  குறைகிறது. சரியான உடற்பயிற்சி மூலம் இதனை சரி செய்யலாம்.

25 வயது முதல் 50 வயது வரை நம் எடை அதிகரிக்கும். இதனால் தசைகளின் நிறையும் அதிகரிக்கும். ஆனால், வயது ஆக ஆக, உடலமைப்பு மாறுகிறது. தசைகள் அடர்த்தி குறைந்து கொழுப்பு சேர்கிறது. இது நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

50 வயது ஆனவர்கள் எல்லோரும்  அவரவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தினமும் செய்வது அவசியம். இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்து, வயதானால் தோன்றும் அலுப்பு, ஆர்வமின்மை முதலிய எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

கடைசியாக – மிக முக்கியமான ஒன்று:

நம் எல்லோருக்குமே ‘கடைசிக் காலத்துல படுக்கையில் விழாமல், இருக்கும்வரை நம் கை கால்களுடன், பிறர் கையை எதிர்பார்க்காமல் இறைவனடி சேர வேண்டும்’ என எண்ணுகிறோம். இல்லையா?

நாம் செய்யும் உடற்பயிற்சி நம் எண்ணத்தை கட்டாயம் நிறைவேற்றும்.

என்னங்க, உடற்பயிற்சி செய்யக் கிளம்பிட்டீங்களா? மிக மிக நன்று! குட்லக்!

 

இது ஒரு ஜென் கதை:

 

 

அந்த நாட்டு ராஜாங்க குதிரை லாயத்தின் பாதுகாவலன்; கண்காணிப்பாளன்; குதிரைகளைப் பராமரிப்பவன் போ லோ.

அந்த லாயத்தின் தலைமைக் குதிரைக்கு முதுமை வந்துவிடவே  அந்த நாட்டுப் படையில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம்.  அரசன் போ லோ வை அழைத்து வேறொரு தலைமைக் குதிரையை கொண்டு வருமாறு பணித்தான்.

 

போ லோ அரசனைப் பார்த்துச் சொன்னான், “ஓர் நல்ல குதிரையை அதன் தோற்றத்தை வைத்துச் சொல்லலாம். திறமை வாய்ந்த குதிரையானது ஓடும் போது தூசியைக் கிளப்பாது; கால் தடங்களை பாதிக்காது; காற்றை விட வேகமாக பாய்ந்து ஓடக் கூடியது. என் நண்பன் சியு – பாங் காவோ மிக சிறந்த குதிரையை தேர்ந்தெடுக்க வல்லவன்.”

 

அரசன் உடனே சியு  பாங் காவோ – வை வரவழைத்து உலகின் தலை சிறந்த குதிரையை கொண்டு வரும்படி சொன்னான்.

பல மாதங்களுக்குப் பிறகு காவோ திரும்பி வந்து அரசன் விரும்பியபடியே ஒரு குதிரையை கண்டுபிடித்து விட்டதாகக் கூறினான். அரசன் அவனை குதிரையின் தோற்றத்தை வர்ணிக்கும்படி சொன்னான். காவோ “அது ஒரு பிரவுன் குதிரை” என்றான். உடனே அதனைக் கூட்டி வரும்படி அரசன் அவனுக்குக் கட்டளை பிறப்பித்தான். அப்படியே அவன் குதிரையுடன் திரும்பி வந்த போது அரசன் மிகவும் கோபமடைந்தான். ஏனெனில் அது ஒரு கருப்பு குதிரை!

 

போ லோ வைக் கூப்பிட்டு அனுப்பினான் அரசன். அவனைப் பார்த்து, “உன் நண்பனுக்கு கருப்பு நிறத்துக்கும், பிரவுன் நிறத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவன் கூட்டிக் கொண்டு வந்திருக்கும் குதிரையின் லட்சணம் எப்படி இருக்குமோ?” என்று கோபத்துடன் வினவினான்.

 

அரசன் எதிர்பார்த்ததிற்கு மாறாக, போ லோ  கையைத் தட்டிக் கொண்டு உரக்க சிரித்துக் கொண்டு  பேசினான்: ” ஆஹா! என் நண்பன் ஒரு திறமை வாய்ந்த குதிரையின் தகுதிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டு விட்டான்….!”

 

 

அரசன் குழம்பிப் போனான். போ லோ சொன்னான்: ” அரசே! என் நண்பன் ஒரு ஆன்மீக குரு ஆகிவிட்டான். ஒரு உயர்ந்த தரம் உள்ள குதிரைக்கு என்ன தகுதிகள் வேண்டுமோ அதை பரீட்சை பண்ணி பார்ப்பதில் அவன் நேரத்தை செலவிட்டிருக்கிறான்; அதனால் அவனுக்கு முக்கிய மில்லாத விஷயங்கள் கண்ணில் படவில்லை. அவன் குதிரைகளை மதிப்பீடு செய்வதில் எத்தனை வல்லவன் என்றால், குதிரையின் வெளித் தோற்றத்தைக் காட்டிலும் அதற்கும் மேலாக அதனிடம் இருக்கும் அதன் குணாதிசயங்களை மதிப்பீடு செய்யக் கூடியவன்.”

 

 

போ லோ சொன்னதை நிரூபிக்கும் வகையில் அந்தக் குதிரை அரசன் மிக விரும்பி சவாரி செய்யும் குதிரை ஆயிற்று!

 

 

காரா பூந்தியா? பர்கரா?

பூவா, தலையா? பணமா, பாசமா? என்று கேட்பது போல ‘காராபூந்தியா? பர்கரா? என்று என்ன கேள்வி இது?
இன்றைய செய்தித் தாளில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்திருக்கிறது நமது சுவை மிகுந்த காரா பூந்தி பற்றி. அதாவது ஒரு பர்கரை விட ஒரு கைப்பிடி காரா பூந்தி அதிக கொழுப்புள்ளது என்று. கொழுப்புப் பட்டியலில் பர்கரை தாண்டி பல படிகள் முன்னே இருக்கிறது நமக்குப் பிடித்த காரா பூந்தி. ஆமாம். எது அதிகக் கொழுப்பு என்ற போட்டியில் பர்கரைத் தோற்கடித்து விட்டது நம் காரா பூந்தி. சீஸ் உடனும், மயோனைஸ் உடனும் வறுத்த முட்டையுடனும் வாயில் நீரை ஊறவைக்கும் பர்கர் ஓர் கைப்பிடி காரா பூந்தி இடம் தோற்றுவிட்டது. பர்கர் சாப்பிடும் நவீன யுவ யுவதிகளை விட காரா பூந்தி சாப்பிடுபவர்கள் அதிக அபாயத்தில் உள்ளார்கள் – அதாவது கொழுப்பு அதிகம் உடலில் சேரும் – அபாயத்தில் உள்ளார்கள் என்று கன்ஸ்யுமர்ஸ்  அசோசியஷன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
எப்படி என்றால்:
‘ ஜங்க்’  உணவு வகையாக இருந்தாலும் அவற்றிலுள்ள போஷாக்கு சத்துக்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஆனால் இந்திய சிற்றுண்டி  வகைகளான தட்டை, போளி, நேந்திரங்காய் சிப்ஸ் போன்றவற்றில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது, இவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதைப் பற்றி மூச்சு பேச்சு இல்லை.
நாம் ஆரோக்கியமான சிற்றுண்டி என நினைத்திருக்கும்  மைசூர்பா, அல்வா,அதிரசம் பெயரிடப்படாமல் கிடைக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவைகள் எத்தனை தூரம் ஆரோக்கியமானவை என்று கண்டு பிடிக்க  நடந்த ஆய்வின் முடிவுதான் மேலே சொன்னவை. இந்த ஆய்விலிருந்துதான் காரா பூந்தி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி நம்மை ‘கொழுக்க’ வைப்பதில் முதலிடம் வகிப்பது தெரிய வந்திருக்கிறது.
உப்பும் உரைப்புமாக இருக்கும் கா.பூந்தியில் ஒவ்வொரு 100 கிராமிலும் மொத்தக் கொழுப்பு 48.33%; இதைத் தவிர சாச்சுரேடட் கொழுப்பு 13.5%.
“காரா பூந்தி சில்லறையாகவும், மொத்தமாகவும் கிடைக்கிறது. மக்கள் அதனை கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கைப்பிடி என்ற அளவில் சாப்பிடுவதால் எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கு வைத்துக் கொள்வதும் கடினம்.” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொழுப்பு சத்துள்ள உணவுப் பட்டியலில் 42.5% கொழுப்புடன்  இரண்டாவது இடத்தைப் பிடிப்பது நம் அருமை உருளைக் கிழங்கு சிப்ஸ்! நெய்யில் செய்யப்படும் மைசூர்பா 36.3% கொழுப்புடன் மூன்றாவது இடம். ஒ! சிப்சை விட மைசூர்பா குறைந்த கொழுப்பா? என்றால் இல்லையாம்; அதில் இருக்கும் சர்க்கரை 41.3% !
சர்க்கரை நோய், அதிகமான பருமன், இருதய நோய் என்று பலவித நோய்களுக்கும் இருப்பிடமாகத் திகழும் நம் நாட்டில், மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : என்ன சாப்பிடுகிறோம், அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு, எத்தனை கலோரி என்பது தான். அதனால் தங்கள் உடலுக்கு அவர்கள் எத்தனை நல்லது அல்லது கெடுதல் செய்து கொள்ளுகிறார்கள் என்பது தெரிய வரும்.
சுவையான தின்பண்டங்களைப் பற்றி சில கசப்பான உண்மைகள்:
காராபூந்தியில் இருக்கும் கொழுப்பு: 141.65%
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
மைசூர்பா/ நேந்திரம் வறுவல்: நிஜத்தில் இருக்கும் சாச்சுரேடட் கொழுப்பு : 400% அதிகம்
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
தட்டை/ உருளை வறுவல் :இருக்கும் உயர்ந்த பட்ச கொழுப்பு 6.4% / 7%
மைசூர்பா மற்றும் வீதியோரக் கடைகளில் விற்கப் படும் ஹல்வாக்களில் இருக்கும் கொழுப்பின்  அளவு 175.3%
அதைத்தவிர உயர்ந்த பட்ச சர்க்கரையின் அளவை (15%) விட 90% கூடுதல் சர்க்கரை இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! வெளியில்  சாப்பிடும்போது கவனம் தேவை.
‘நாக்கில் இனிக்கும் பண்டங்கள் வயிற்றுக்கு கெடுதல் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொனார்கள்?

இன்று 5,000……!

என் வலைப்பதிவிற்கு தவறாமல் வருகை தரும்  அன்பர்களுக்கும் படித்துவிட்டு தவறாமல் பின்னூட்டம் கொடுக்கும் அன்பு உள்ளங்களுக்கும்,

போன மாதம் (ஜூன் 16 ஆம் தேதி) ஆரம்பித்த 6 மாதங்களில் 3001 அன்பர்கள் எனது வலைப்பதிவுகளைப் படித்திருக்கிறார்கள் என்று சின்னதாக நன்றி கூறியிருந்தேன்.

இன்று ஜூலை 9 ஆம் நாள் இந்த எண்ணிக்கை 5,000 எட்டியிருக்கிறது. மூன்றே வாரங்களில் 2,000 வருகையாளர்கள்!

நாளுக்கு நாள் பெருகிவரும் இந்த எண்ணிக்கை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.

மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!

சென்னைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்து நிறையப் பேசுகிறேன். ஒரு வாரம் எல்லோருக்கும் என் எழுத்துக்களிலிருந்து ஓய்வு!