About

என்னைப் பற்றி…….

சாதாரண இல்லத்தரசி……….2000 மாவது ஆண்டு வரை! 1997 ல் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை கன்னடக்காரர். பெண்ணைக் கொடுக்கிறோம் என்று அவர்களது சம்பிரதாயம் ஒன்று கூட விடாமல் ஒரு கன்னடத் தோழியைக் கேட்டுக் கேட்டு எல்லாம் செய்தேன்.

வாழைக் காய் கூடாது என்றார்கள்; உளுந்து வடைக்கும் ஒரு பெரிய NO! (நம்ம வீட்டில் நீதான் வாழைக்காய் கறியமுது இல்லாமல், வடை இல்லாமல் இப்படி ஓரு கல்யாணம் செய்திருக்கிறாய் என்று சென்னையில் இருக்கும் என் உறவினர்கள் இன்றும் சொல்லிக் காட்டுகிறார்கள்!) பெண்ணுக்கு இரண்டு தாலிகள் – ஒன்று அம்மாவே கட்ட வேண்டும் என்றார்கள்! இப்படியாக பல பல சம்பிரதாய வித்தியாசங்களை சமாளித்து திருமணத்தை நடத்தி முடித்தோம்.

இதை கருவாக வைத்து ஒரு கதை எழுதினேன். “அத்தையும் ராகி முத்தையும்” என்ற பெயரில். என் முதல் கதை – மங்கையர் மலரில் 2000 மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. என் எழுதும் திறமையில் அப்போதுதான் எனக்கே நம்பிக்கை வந்தது.

‘அவள் விகட’னிலும் ‘மங்கையர் மலரிலும் நிறைய எழுதினேன். என் படைப்புக்கள் அத்தனையும் ஒரு தொகுப்பாக இருக்கட்டும் என்று WordPress இல் எல்லாவற்றையும் பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

படிக்கும் அனைவருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னைப்பற்றி மேலும் அறிய……சொந்தக் கதை

70 thoughts on “About

 1. அன்புடையீர்,

  சொந்தக்கதையை சுருக்கமாகக்கூறி விட்டீர்கள். த்ங்கள் மகளின் திருமண அனுபவங்கள் படிக்க புதுமையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

  பிரபல பத்திரிகைகளில் தங்கள் கதைகள் வெளியாகியிருப்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தையும் பதிவினில் அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கொண்டு வாருங்கள்.

  நானும் என்னுடைய வலைப்பதிவில் 2011 ஆம் ஆண்டு நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் பலவும் வார / மாத இதழ்களிலும், பிரபல பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

  என்னுடைய 50, 100, 101-106, 150, 200, 250, 300 ஆவது ப்திவுகளில் என்னைப்பற்றி நிறைய விபரங்க்ள் எழுதியுள்ளேன். முடிந்தால் படித்துவிட்டு கருத்து கூறுங்கள்..

  பதிவு 104 க்கு இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/07/4.html

  பதிவு 106 க்கு இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/07/6.html

  பதிவு 200 க்கு இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

  தாங்கள் புதிய வெளியீடு கொடுக்கும்போது எனக்கு தயவுசெய்து அதற்கான லிங்க்கை மெயில் மூலம் அனுப்பி வையுங்கள். valambal@gmail.com

  வாழ்த்துகள்.

  அன்புடன்
  vgk

  1. கட்டாயமாக அனுப்புகிறேன். உங்கள் பதிவுகளைப் படித்து விட்டு நிச்சயமாக எழுதுகிறேன். வருகைக்கு நன்றி.

  1. படைப்பாளிக்கு நல்வரவு! வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பரே!

 2. அன்பின் ரஞ்சனி மேடம் – அருமை அருமை – அறிமுகம் அருமை – தங்களின் கதைகள் பிரசுரிக்கப்பட்ட கதைகள் – இங்கு வெளிவந்துள்ளனவா ? இலை எனில் எழுதுக. நல்வாழ்த்துகள் ந்டபுடன் சீனா

 3. தங்களின் எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்தேன்.எனது தளத்திற்கும் சென்று படிதது கருத்திடவும்

  1. நன்றி ருக்மணி அவர்களே! இன்று தான் உங்கள் புதுக் கதையைப் படித்து விட்டு கருத்தும் கூறி விட்டு வந்தேன்.

 4. வணக்கம்
  (ரஞ்சனி.அம்மா )

  உங்களின் சொந்த வாழ்கையை ஒரு கதையாக வடிமைத்து அதை பிரபஞ்சம் எங்கும் நடமாட
  உயிர் கொடுத்து வாசகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளவைத்து விட்டிர்கள் கதையை படித்து பார்த்த பின்பு அதில் நானும் ஒருவன்………..இந்த எழுத்துலகில்.உங்கள் படைப்புக்கள் மேலும் வெளிவரவும்.உங்கள்எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. முதன் முதலாக எனது தளத்திற்கு “வி நாயகி” வருகை புரிந்தமைக்கு நன்றி. உங்க கருத்துக்கு கீழே ஒரு மலர் காத்திருக்கிறது பெற்றுக்கொள்ளவும். அன்புடன் பத்மாசூரி. இணைப்பு:http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/09/blog-post_3075.html

  1. நீங்கள் அனுப்பிய ரோஜா மலர் பெற்றுக் கொண்டேன். மிக அழகு பத்மா. நன்றி!

  1. உங்களை மாதிரி தமிழில் வல்லமை உள்ளவர்களின் நட்பு என் எழுத்துக்கள் மூலம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம், சங்கர்!

   தொடர்வதற்கு நன்றி!

 6. நானொரு குப்பை
  நீ ஒரு குப்பை
  நினைச்சுப்பாத்தா நம்ம‌
  எல்லாரும் குப்பை

  தித்திப்பு புளிப்பு உரைப்பு கசப்பு
  தொப்பைக்குள் போனப்ப எல்லாமே குப்பை
  திங்காத மிச்சம் தீராத சொச்சம்
  மிஞ்சிப்போகின்ற எல்லாமே குப்பை.

  படிச்சவன் முன்னாடி பாமரன் குப்பை.
  பணக்காரன் முன்னாடி பரதேசி குப்பை
  நாலும் தெரிஞ்சா நல்லது சொன்னா
  நடவாது இங்கெ ! ஏன்னா நானொரு குப்பை.

  சுப்பு தாத்தா

  1. பாட்டு பிரமாதம் திரு சுப்பு அவர்களே!

   குப்பைக்கு இப்படி ஓரு வாழ்வா?

 7. நாளை 08.10.2012 திங்கட்கிழமை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க உள்ளீர்கள் என அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளன. தங்களின் இந்தப்பணி வெகு சிறப்பாக அமைய என் இனிய அன்பு வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

 8. வலைச்சரப் பொறுப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
  தேடி வந்து தகவல் சொல்லிப் போகும் உங்கள் தகைமைக்கு தலைவணங்குகிறேன்.

 9. உங்கள் வலை பக்கம் பார்த்தேன்
  வாழ்த்துக்கள்…
  ஈழத்தில் இருந்து
  ரமணன்

 10. மிக்க நன்றி….எனது கடல்பயனங்கள் வலைப்பூவில் நான் எழுதிய நெடுஞ்சாலை ஓர புளிய மரம் பதிவினை நீங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு…மிகுந்த சந்தோசம். என்றென்றும் நன்றிகள் !

 11. படிச்சிட்டேனுங்க சாமீயோவ்.!
  அறிமுகமருமை , மற்றவற்றை அவ்வப்போது படிக்கின்றேன்.

 12. வணக்கம் திருமதி ரஞ்சனி,
  இப்போதுதான் உங்களின் blog பார்க்கிறேன்…
  இன்னும் தொடர்ந்து படித்து என் பின்னூட்டங்களை வழங்குகிறேன்… நன்றி

 13. vanakkam smt.Ranjani madam, i came to know about blogs just a couple of months back thru my friend settaikaran who is also a well known blogger. After that my sister shanthi parthasarathy introduced me yours. I read your Blog only now. Very good start. I will keep continue reading your blog. Thank you. Raju bharathy.

  1. வணக்கம் ராஜூ! சாந்தி உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறாள்.
   சேட்டைகாரன் அவர்களின் நண்பர் என் பதிவுகளைப் படிக்க வருவது மிகவும் சந்தோஷமான. பெருமைக்குரிய விஷயம்.

   தொடர்ந்து என் பதிவுகளைப் படிக்க இருப்பது சந்தோஷம்.

   நன்றி!

 14. நன்றிகள் ரஞ்சனி அவர்களே. உங்களின் பிளாக் இப்போதுதான் பார்த்தேன்.

  ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கு.

  உங்களின் பணி மேன்மேலும் தொடர வேண்டுகிறேன்.

  நேரம் கிடைப்பின் எனது தளத்திலும் பார்வையிட வேண்டுகிறேன்…

  http://kamal-stories.blogspot.in/

 15. வணக்கம் அம்மா! உங்களது வலைப்பதிவில் Interface Language என எதைத் தந்திருக்கிறீர்கள். ஒரு முறை பரிசோதியுங்களேன். தமிழ் என்று இருக்காதோ என எனக்கு ஒரு ஐயம்.

 16. வணக்கம் திரு சாக்பீஸ்! (உங்களை இப்படி கூப்பிட ஒரு மாதிரி இருக்கிறதே!)
  தமிழ் என்றுதான் கொடுத்திருக்கிறேன். இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே?
  ஏதாவது தவறிருந்தால் சொல்லிக் கொடுங்கள். மாற்றி விடுகிறேன்.

  1. அன்புள்ள முனைவர் அவர்களுக்கு,

   என் பதிவை தாங்கள் பகிர்ந்துள்ளது எனக்குக் கிடைத்த மகுடம்.

   நன்றி, நன்றி, நன்றி!

  1. உங்கள் எழுத்துக்களை படித்திருக்கிறேன். படித்துக் கொண்டும் இருக்கிறேன்.

   ஒரு பதிவில் ஒரு பெண் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். பலவாறாகப் பெசுகிறது உலகம். அந்தக் காலத்திலும் இதேபோல என்று சங்கப்பாடல் ஒன்றை தந்திருந்தீர்கள்.

   நான் மிகவும் ரசித்த பதிவு இது! பதிவின் தலைப்பு நினைவில்லை. மன்னிக்கவும்.

 17. Dear Ma’am,
  I am typing this from a laptop where I dont have tamil typing.
  We are running a suya munnetra maadha idhazh called Thannambikkai. Your writings are excellent. We would like you to write for us. Please contact us back if you are interested.
  Pongal nalvaazhthukkal!
  Thank you.
  Regards,
  Editor

  1. அன்புள்ள பிருந்தா,
   உங்களுக்கு எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
   மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
   நன்றி!

 18. அன்பு பெரியம்மாவுக்கு,
  வணக்கம்.

  முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  உங்கள் படைப்பும் படிப்பும் கண்டு வியந்தேன்.

  ஏனெனில் இன்று பல பெண்கள் குடும்பச் சுமை என்றோ; வேலைப் பளு என்றோ செவனேன்னு இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், குடும்ப குதர்க்கங்கள் பேச ஆரம்பித்தால் காவிரியோ, இலங்கையோ தோற்றுப் போய்விடும்.

  என் நண்பன் ஒருவன் இணையதளத்தில் எழுதும் படைப்புகளுக்கு எத்தனையோ பாராட்டுப் பின்னூட்டங்கள் வெளியில் இருந்து வரும். ஆனால், அவன் மனைவி வீட்டுக்குள் இருந்து தரும் பாராட்டு, “அத நீங்களே கெட்டி அழுங்க” என்பதுதான்.

  இச்சூழலில் உங்கள் தளம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
  பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும், குடும்பத்தின் மீதும், குடும்ப ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை கொண்ட உங்கள் பதிவுகள்; இசையை, கலையை ரசிக்கச் சொல்லும் பதிவுகள் இன்றைய நவீன காலப் பெண்களுக்கு நல்ல குறிப்புகள். உங்கள் வாழ்க்கையால், எழுத்துக்களால் நீங்கள் ‘நல்ல மாதிரி’யை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  உங்கள் கடைசி மகன்/மகள் வயசுக்காரன்.

 19. வாருங்கள் அசின் ஸார்!
  என்னுடைய பல பதிவுகளைப் படித்துவிட்டு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
  கொஞ்சம் அதிகம் புகழ்ந்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது. எனக்கு ஒரு மிகச்சிறந்த பொழுது போக்காக இருக்கிறது இந்த பதிவு உலகம். என் எழுத்துக்களில் கவரப்பட்டு சிலர் என்னை அவர்கள் தளத்திலும் எழுதச் சொல்லுகிறார்கள். அதனால் எனக்கு மிகப்பெரிய நன்மை – நிறையப் படிக்கிறேன்; விஷயங்களை சேகரிக்கிறேன்.
  உங்களைப் போன்ற சின்ன வயசுக் காரர்களுக்கும் எனது எழுத்துக்கள் போய்ச் சேருவது சந்தோஷமாக இருக்கிறது.
  வருகைக்கு உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் நன்றி!

 20. ranjani madam
  enakku 3 maatha kuzhanthai ullatthu… en kuzhanthaiyai pattri pala santheagangal ullana… antha kelvikalai engu pathivu seiyaa?? magalukku thayy uthavuvathu pol enakku uthavuveergalaa??? pathil podungal pls..

  1. வாங்க ஆர்த்தி!
   உங்களுக்கு அம்மாவாகவும், உங்கள் குழந்தைக்கு பாட்டியாகவும் நிச்சயம் உதவத் தயாராக இருக்கிறேன். என் இமெயில் அனுப்புகிறேன். அதற்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

   அன்புடன்,
   ரஞ்சனி

 21. வணக்கம் அம்மா நலம் நலமறிய ஆவல். தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன் . நேரம் இருப்பின் தென்றலுக்கு வருகை தரவும்.

 22. hello madam, Enjoy reading your blogs and thought of starting one myself. how to write in tamil. can you please help me. I have registered as sarvamsugham.com..If you can bless me i will be honoured. thanks. meenakshi.

  1. ஹலோ மீனா,
   வலைப்பதிவு ஆரம்பித்து இருப்பதற்கு முதலில் நல்வாழ்த்துகள். உங்கள் வலைத்தளத்திற்கு (blog) அழகான பெயர் வைத்துள்ளீர்கள். தமிழ் font டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். word – இல் எழுதி உங்கள் தளத்தில் போட்டுக் கொள்ளலாம்.
   இதைப் பற்றி நான் எழுதிய வலைப்பதிவுகளின் லிங்க் கொடுக்கிறேன். அவற்றை படித்தால் உங்களுக்கு புரியும்.

   https://ranjaninarayanan.wordpress.com/2012/09/04/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/

   https://ranjaninarayanan.wordpress.com/2012/09/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/

   https://ranjaninarayanan.wordpress.com/2012/09/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81/

   உங்களுக்கு எனது மனபூர்வமான ஆசிகள். நிறைய எழுதுங்கள்.

 23. Hi Mam.. I am Aruna.. In June 2016 I read your interview in kungumam thozhi and found interesting.. Yesterday when I was looking through old books I read your interview again .. You have told that “The Alchemist” and ” When breathe becomes air’ were your favourite.. Those books were my personal favorite..It sparked my curiosity and searched you in WordPress and landed here.. Finished reading a few blogs.. Really happy to read Tamil blogs.. And my message was all your writings were nice and you have a wonderful mindset.. Wishing you the best in whatever you do:- Aruna,16.12.2017

  1. அன்புள்ள அருணா,
   வணக்கம். உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சிறிது நாட்களாகவே மனம் சோர்ந்து போயிருந்தேன். உங்கள் கடிதம் எனக்கு என்னுடைய பழைய உற்சாகத்தை மீட்டுத் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. எனக்கு உற்சாகம் அளித்ததற்கும், உங்களது அருமையான வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 24. Thank you so much for your humble reply Mam..Actually I searched for your email ID but I couldn’t get it.. I want to ask certain questions and share my few ideas with you.. Please send me your mail id Mam.. My mail ID is amuaruna@ymail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s