பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமெடீஸ், அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள்…
‘யுரேகா… யுரேகா’ (கண்டுபிடித்துவிட்டேன்…கண்டுபிடித்துவிட்டேன்).
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னும் அந்தக் குரல் ஓயவில்லை. தினம் தினம் உலகம் முழுக்க புதிது புதிதாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் விஷயத்தில் நிமிடங்களுக்கு ஒன்றாகக் கூட புது விஷயங்கள் முளைக்கின்றன. பலமுனைகளில், பலதரப்பட்டவர்களும் மூளையைக் கசக்கிக் கொண்டு உழைப்பதால் நிகழும் அற்புதம் அது! அப்படிப்பட்ட அற்புதம் மற்றும் அதை உருவாக்கியவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் இதோ எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்… கம்ப்யூட்டர்…!
இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?
‘டிஃபரன்ஸ் இன்ஜின்’ என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம்ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு,அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால்,அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் ‘சார்லஸ் பாப்பேஜ்’. இவரைத்தான், ‘கம்ப்யூட்டரின் தந்தை’ என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால்,பல பரிணாமங்களைக் கண்டு…இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது. இன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்? உலகை ஆளும் ‘இன்டெர்நெட்’டைஉருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.
முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் ‘நெட்வொர்க் வொர்க்கிங் குரூப் என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் ‘யு.சி.எல்.ஏ.’ என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.
மெயில் அனுப்புவது என்றாலே… ஒரு காலத்தில் அது ‘யாஹூ’ என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் ‘கரிகுலம் வீட்டாய்’ எழுதும்போது ‘யாஹூமெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹூ நிறுவனத்தை நிறுவியவர்கள் ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.
‘கூகுள்’ என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத்தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், ‘ஸர்ச்இன்ஜின்’ எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக்கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை.
1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்! ‘ஆர்குட்’ எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது… 2004 ஜனவரியில்.உருவாக்கிய ‘ஆர்குட்’ பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்… பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ… வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.
கண்ணுக்குத் தெரியாத ‘செல்’ தொடங்கிகாணவேமுடியாத ‘அண்டம்’ வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா… ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. ‘ஜிம்போ’ என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ எனும் டெக்னாலஜி… பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது.
‘மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு’ என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே… போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார்.
இந்தக் கம்ப்யூட்டருக்கு…. சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா… இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!
இந்தத் தொடர் இந்தப் பகுதியுடன் முடிவடைகிறது.
இதுவரை :