ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?

 

 

 

 

 

 

 

Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது 

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.

எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.

என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் –  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்

இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.

இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.

யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan

 

மின்தமிழ் மேடை என்ற தளத்தில் இந்தக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

22 thoughts on “ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?

  1. சிந்தனை, செயல், உணவு யாவையுமே நல்ல ஸந்ததிகள் உருவாகக்
    காரணமாக அமைகிறது. சீக்கிரம் மனதில் அர்த்தமாகக்கூடிய சுருக்கமான வார்த்தைகளிவை. நல்ல ஆர்ட்டிகல்.முக்கியமாக வளரும்.
    பெண்கள் ஸமுதாயம், தெறிந்து, நடைமுறைப் படுத்தினால் எவ்வளவு
    அழகாக இருக்கும்? உபயோகமான விவரங்கள்.

    1. மிக ஆழமாகப் படித்து அழகான விமர்சனம் கொடுத்ததற்கு நன்றி, காமாட்சி அம்மா!

  2. These comments were received when this article was published in ooooor.com:

    KARUNA ANTON wrote: 2012/04/03 at 3:30 pm
    this is gods greace geneseis:15:1 After these thinks happened, the LORD spork his word to abram(Jews man) in a vision:”abram, don’t be afraid. i will defend you,and i will give you a great reward.”
    GOD bless you. please contin’ue and read the bible you have lots of answer thank you.

    Sam Thiruchelvam wrote: 2012/04/03 at 4:19 pm
    Hi Ooooor,
    Thank you for thew article please try to provide this type of informative news/article rather then the politics…
    thanks again,

    பெருமாள் தேவன் wrote: 2012/04/03 at 10:45 pm
    அருமையான கட்டுரை. மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி.

    HM,SADHIQ wrote: 2012/04/05 at 12:46 am
    மிக தெளிவான கட்டுரை, நன்பா !!

    Hiran wrote: 2012/04/09 at 9:22 pm
    Good job guys. keep up.

    kandasamy wrote: 2012/04/10 at 3:33 am
    A very good job. It motivates to think and act. Readers please do something to change your life style.

    Fathima wrote: 2012/04/10 at 7:48 am
    This article hels me a lot… I am going to follow this. I wish to read this type of article in the future.

    1. மேற்காணும் விமர்சனங்கள் என்னுடைய இந்தக் கட்டுரை ooooor.com இல் வெளியானபோது வந்தவை.

  3. சுவாரசியமான கட்டுரை. மொழிபெயர்ப்பு நன்று. இதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறீர்களா?

    merchant of venice படித்திருப்பீர்கள் யூதர்கள் வெற்றியின் ரகசியம். அதில் புதைந்திருக்கிறது. அபார உழைப்பும், அதிகமான சுயநலமும் காரணம் என்று நினைக்கிறேன்.

    யூதர்கள் பொதுவாக யாரையும் நம்புவதில்லை. mostly self centered. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் யூதர்கள் – எனினும் எப்பொழுதும் ஒரு ரகசிய/பதுக்கல் தன்னுணர்வோடே பழகுவார்கள். கோபம் வந்து திட்டுவேன். சிரித்துக் கொண்டே ‘என்னுடைய dna’ என்பார்கள்.

    okay..அவ்வளவு சிறப்பான யூதர்கள் ஏன் முஸ்லிம்களை வெறுக்கிறார்கள்? புத்தகம் எழுதியவர் பெயரை வைத்துப் பார்க்கும் பொழுது – இந்தப் புத்தகம் ஒரு propaganda போல் படுகிறது. அதுவும் குறிப்பாக இந்தோனேசியாவைப் பற்றிய கருத்து… இந்தோனேசியாவின் மக்கட்தொகை பெரும்பாலும் முஸ்லிம்கள். இந்தோனேசியா வளம் குறைந்த பிரதேசம். அதனால் இஸ்ரேலைப் போல பெரும் உற்பத்தி ஏதுமில்லை. அந்தமான் நிகோபார் தீவுகளில் உற்பத்தி இல்லை, காரணம் அங்கே எல்லாரும் இறைச்சி சாப்பிடுகிறார்கள், சிகரெட் பிடிக்கிறார்கள் என்று சொல்லலாமோ?

    யூதரைப் பார்க்கிலும் அவர்கள் அப்படியொன்றும் முட்டாள்களல்ல. என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் இன்று ஜகார்த்தாவில் பெரிய சிஈஓ. என் வகுப்பில் அவன் தான் கோல்ட் மெடல் வாங்கினான். என் வகுப்பில் 30% யூதர்கள் 🙂

    மனிதர்களின் வெற்றி, அவர்கள் உழைப்பிலும் ஒழுக்கத்திலும் உருவாகிறது என்பதை நம்புகிறேன்.

  4. மனிதர்களின் வெற்றி, அவர்கள் உழைப்பிலும் ஒழுக்கத்திலும் உருவாகிறது என்பதை நம்புகிறேன்.

    அதற்காக குழந்தை கருவிலிருக்கும்போதே தாயாராவது ஆச்சரியம் தான்..

    1. அவர்களது வெற்றியின் ரகசியமே அதுதான் என்கிறார் ஒரிஜினல் கட்டுரையாளர்.

      திரு அப்பாத்துரையும் அதையே வழி மொழிந்திருக்கிறார், பாருங்கள்!

  5. அன்பின் ரஞ்ஜனி – மொழி பெயர்ப்பு அருமை – பகிர்வினிற்கு நன்றி – அப்பாதுரையின் மறுமொழியும் பார்த்தேன் – சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். இருவருக்கும் நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  6. // எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன.//

    நல்ல ஆய்வு. தங்களின் மொழிபெயர்ப்பு இயல்பாக குழப்பம் இல்லாமல் இருந்தது.

  7. அப்பாத்துரையின் கருத்தும் விமர்சனமும் யோசிக்க வைத்தன.

  8. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரையை வாசித்துப் பிரமித்தேன். யூதர்களை நான் முதலில் அறிந்தது, லைப் இஸ் ப்யூட்டி புல் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

    அது வரை யூதர்கள் பற்றி அவ்வளவாக எனக்குத் தெரியாது. அதன் பிறகும், இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் மேல் நடந்த வன்முறைகளின் மூலமே அவர்களைப் பற்றி அறிய முடிந்தது.
    எனக்குத் தெரிந்து இது அவர்களின் மேல் காலம் காலமாக நடந்த தாக்குதலால் உண்டான குணம் என்பது என்னுடைய கருத்து. அது யூதர்களுக்கு பிறவியிலேயே வருவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்படும் எதிர்ப்பே…
    எதிர்ப்பில்லாத எந்த செயலிலும் நம்முடைய புத்திக் கூர்மையை நாம் வெளிப்படுத்த வாய்ப்பே இல்லை.
    தன் இனத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு உணர்வு எல்லோருக்குமே இயல்பாகவே உள்ளது. அது யூதர்களைப் பொறுத்த வரை அதீதமாக இருக்கிறது.
    அருமையான பதிவு

    1. மிகவும் ஆழ்ந்துப் படித்து பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள்.
      நன்றி தமிழ் ராஜா!

  9. அபிம‌ன்யுவை க‌ருக் கொண்டடிருந்த போது
    த‌னைய‌ன் தேரோட்டிக் கொண்டே க‌தை சொல்லி வ‌ர‌‌
    ப‌த்ம‌ வியூக‌ நுழைவுக்குப் பின் விஜ‌ய‌னின் துணைவி
    ச‌ய‌னித்து விட, பின் அபிம‌ன்யு பார‌த‌ப் போரில்,
    ப‌த்ம‌ வியூக‌த்துள் சிக்கி மீள விய‌லாது மாண்ட‌
    ம‌கா பார‌தக் க‌தை நினைவில் வ‌ருகிற‌து.

    இள‌மையில் க‌ல்.

  10. Great Translation, Ranjani! I have read – they converted their problems into opportunities.
    Useful info.
    Jayanthi.

  11. விரிவான விளக்கமான பகிர்வு அம்மா… நன்றி…

    உணவு பழக்க முறை இருந்தாலும், அவர்களின் சுயநலமில்லாத ஒற்றுமை அதிகம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது… அது போலே தன்னைப் போலே பிறரை நேசிப்பதும் ஊக்குவிப்பதும், அதன் மூலம் சந்தோசப்படுவதும் இருக்கலாம்…

    1. நன்றி தனபாலன். இந்தப் பதிவு நான் எப்போதோ எழுதியது. நீங்கள் இன்றைக்கு மறுமொழி கொடுத்திருக்கிறீர்களே!
      இன்று மாலை வேறு ஒரு கட்டுரைக்காக இதை திறந்தேன். தப்பாக ஏதாவது செய்து எல்லோருக்கும் மெயிலில் போய்விட்டதோ என்று கேட்கிறேன்.

  12. கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது . எனக்கு . யூதர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அத்தனையும் வியப்புக்குரிய செய்திகள்.
    நன்றாக தெளிவாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள்.
    நன்றி ரஞ்சனி யூதர்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு.

    1. வாருங்கள் ராஜி!
      திரு தனபாலனிடம் கேட்ட கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன். எப்படி இந்தப் பதிவுக்கு வந்தீர்கள்?

      Anyway, படித்து கருத்துரை சொன்னதற்கு நன்றி!

  13. இன்று தான் இந்த கட்டுரை என் கண்ணில் பட்டது. அப்பாதுரை தெளிவாக எழுதியுள்ளதே உங்கள் பதிவுக்கு கிடைத்த அங்கீகாரம். ஒன்று மட்டும் விட்டு விட்டீங்க. அவர்களின் மூன்று மொழிக் கொள்கைகள் என்றாலும் அவர்களின் தாய்மொழிப்பற்றி எழுதவில்லை. திருப்பூரில் நானும் ஒரு யூதரை சந்தித்துள்ளேன். நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம் பணத்தை அவர்கள் பணமாக நினைத்துக் கொண்டு நம் உழைப்பை உறிஞ்சு அவர்கள் முன்னேறும் அழகு குறித்து நிறைய எழுதலாம்.

    என்னைப் பொறுத்தவரையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவர்கள் இனம் என்று தெரிந்தால் உதவ ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் அல்லவா? அது தான் இங்கே முக்கியம். திருப்பூரில் இதே மார்வாடி சங்கம் இருக்கின்றது. எளிதாக ஒரு பாதையை காட்டி விடுகின்றார்கள்.

    போர்னோ தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள் யூதர்கள் தான். பணம் தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்பதை அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறில் உள்ள ரகசியத்தைச் சொல்லாமல் ஆங்கில கட்டுரையாளர் மற்ற அத்தனையும் ஆராய்ச்சி செய்து உள்ளார்.

  14. மிகவும் அருமையான பதிவு சார். நமது நாடும் இதே வழிமுறைகளை பின்பற்றியவர்கள் தான். சில கார்ப்ரேட் சமூகம் தனது சுய லாபத்திற்காக நம்மவரை முட்டாளாக்கிகொண்டு இருக்கிறது. அவர்கள் நாட்டில் சிகிரேடடை தடை செய்துவிட்டு நமது நாட்டில் அதை ஆண்மையின் அடயாளமக்கினர். இருப்பினும் உங்கள் கட்டுரை மிகவும் பயனாக இருந்தது. நன்றி

Leave a comment