மதுபானங்கள் மூளையைக் கூர்மையாக்குகிறது!

மதுபானங்கள் மூளையைக் கூர்மையாக்குகிறது!

மனதை தளர்த்த உதவும் பானங்களை அருந்தும் ஆண்கள், அவ்வகைப் பானங்களை அருந்தும் பழக்கமில்லாத ஆண்களை விட கடினமான புதிர்களை விடுவிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இவர்கள் அதிகப் புதிர்களை விடுவித்தது மட்டுமில்லாமல், சரியான பதில்களை சீக்கிரமாகவும் கொடுக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஆல்கஹால் அருந்துவது பகுப்பாய்வுத்(analytical) திறனை குறைத்து, ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டுகிறது. இதனால் கற்பனைத்திறன் (creative) மிக்க தீர்வுகள் கண்டுபிடிப்பது சுலபமாகிறது.

எந்த அளவு ஆல்கஹால் உட்கொள்ளலாம்? 2 நடுத்தர அளவு உள்ள டம்ளர் அதாவது 4 யூனிட் அருந்துவது படைப்புத்திறனை தூண்டும்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழக உளவியலாளர்கள் சுமார் 40 ஆரோக்கியமான இளம் ஆண்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்தினர். இவர்களுக்கு 3 வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. இந்த வார்த்தைகளுடன் தொடர்புடைய 4வது வார்த்தையைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். இவர்களில் பாதிப்பேர் பரிசோதனைக்கு முன் 2 பைண்ட்ஸ் பீர் உட்கொண்டனர். பாதிப்பேர் குடிக்காமல் இருந்தனர்.

பீர் குடித்தவர்கள் குடிக்காதவர்களை விட 40% அதிகப் புதிர்களை விடுவித்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட நேரமும் 12 நொடிகள்தான். குடிக்காதவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் 15.5 நொடிகள்.

கான்ஷஸ்னஸ் அண்ட் காக்நிஷன் (Consciousness and Cognition) இதழில் “தற்போதைய ஆராய்ச்சி ஆல்கஹால் அருந்துபவர்களின் படைப்புத்திறன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மையை விளக்கும் முதல் நிரூபணம்.” என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இணை ஆசிரியர் ஜெனிபர் விலே “மக்கள் சிறிது உற்சாகமாக இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். அளவுக்குமீறி குடிக்கும்போது அல்ல!” என்கிறார்.

“ஆழ்ந்த கவனம் உங்களின் புதிய முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடும். கற்பனைத்திறன் கொண்ட தீர்வுகள் மனம் சிறிது தளர்வாக இருக்கும்போது தோன்றும்.”

ஹெர்ட் ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழக உளவியலாளர் ப்ரொபசர் திரு. ரிச்சர்ட் வைஸ்மன் “இது ஒரு சுவாரஸ்யமான, அர்த்தமுள்ள கருத்து” என்று சொல்லுகிறார்.

ஆனால் நல்ல தூக்கம் கூட இதே அளவு பயன் கொடுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

 

written for ooooor.com