பேசும் அரங்கன்

PESUM ARANGAN PART -1.
ARTICLE BY SRI. MURALI BHATTAR SWAMI in www.srirangapankajam.com
“மன்னிய சீர் மணவாள மாமுணிகள் ஈடு உகந்து
இன்னொரு ஸ்ரீசைலேசாயெனப் பேசும் அரங்காயெச்சரீகை!”
இது நம்பெருமாள் புறப்பாட்டின் போது நம் திருக்கோவில் சாத்தானி ஸ்ரீவைஷ்ணவர்களின் கட்டியமாகும். அரங்கனின் வருகை குறித்து நம்மை எச்சரிக்கின்றனர். தோன்றினது முதல் தற்காலம் வரை நம்மை அரவணைத்துப் பேசுக்கொண்டிருக்கும் அரங்கன் வருகின்றார் – தாங்கள் கவனம் சிதையாமல் இம்முதல்வனை தியானியுங்கள் – இவனிடம் மனம் விடடு பேசுங்கள் என்று குறிப்பால் உணர்த்துகின்றனர். அன்றும் சரி, இன்றும் சரி அரங்கன் பலருடனும் பேசிய வண்ணம்தான். பல்வேறு லீலைகள் புரிந்த வண்ணம்தான். ஏனைய தெய்வங்கள் போல் அவனால் வாளாதிருக்க முடியாது. இவன் இல்லாவிடின் ஏனைய தெய்வங்களேது? இவன்தானே அனைத்திற்குமே ஆதாரமானவன்!. இதனால்தான் தொண்டரடிப்பொடியாழ்வார் தனது திருமாலையில்

“மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்!
உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்,
அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை,
கற்றினம் மேய்த்த எந்தை கழலினைப் பணிமின்நீரே!”
“மற்ற தெய்வங்களைப் போல இவன் ஆராதிப்பதற்கு அரியவன் அல்லன். பசு கன்றுகளுக்கும் கூட தோழனாயிருந்து எளியவனாயிருப்பவன்” என்று அறுதியிட்டுரைத்தார்.
இவன் வந்தாரை வாழ வைப்பவன் –
தன்னோடு உறறாரோடு உரையாடுபவன்.
The original Version may be seen in the following Link.