Uncategorized

நந்தினியும், குந்தவையும்!

கல்கி பத்திரிக்கையிலிருந்து பார்த்து வரைந்த படம் . வரைந்த நாள்: 04.08.1970   நான் சொல்லாமலேயே தெரிந்திருக்கும் இது யாரென்று. கல்கி அவர்களால் இளைய பிராட்டி என்று வர்ணிக்கப்பட்ட குந்தவை தேவி தான் இவள். இரண்டு நாட்களாக பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருந்த போது கிடைத்த பொக்கிஷங்கள் இவை. ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் நான் அதிகம் வரைந்தது நந்தினியைத் தான் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் படங்கள் எனக்கு அகப்படவில்லை. எங்கேயோ தொலைத்துவிட்டேன் என்று ரொம்பவும் வருத்தப்பட்டுக்… Continue reading நந்தினியும், குந்தவையும்!

Uncategorized

அன்புள்ள இந்திரா நூயி….

குங்குமம் தோழி இதழில் வெளிவந்துகொண்டிருக்கும் எனது கட்டுரைத் தொடர்: முதல் பகுதி  இரண்டாவது பகுதி   ‘உங்களிடமிருந்து நான் வித்தியாசமாக எதிர்பார்த்தேன்….!’   புதுயுகப் பெண்கள் வரிசையில் இல்லாவிட்டாலும் அவர்கள் தங்கள் உதாரண மனுஷியாகச் சுட்டிக் காண்பிப்பது திருமதி இந்திரா நூயியைத்தான். அவரது குற்றஉணர்ச்சி பற்றி புதுயுகப்பெண்களின் எதிர்வினை என்ன? அவர்கள் எப்படி இந்த விஷயத்தைப் பார்க்கிறார்கள்? ஸ்ருதி படேல் என்கிற பெண் ‘உங்களிடமிருந்து நான் வித்தியாசமாக எதிர்பார்த்தேன்….!’ என்கிறார் இந்திரா நூயிக்கு அவர் எழுதிய ஒரு… Continue reading அன்புள்ள இந்திரா நூயி….

தீபாவளி · Uncategorized

கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை. எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் அங்கு ஒரு நாற்காலியில் ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள்- உடன் ஸ்டைலாக உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்! எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி… Continue reading கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்தியா · பெங்களூரு · Uncategorized

அந்தக்கால பெங்களூர்!

பிரிட்டிஷ் கவுன்சில் கட்டிடத்தின் கீழே இருந்த கோஷி’ஸ் பார் & ரெஸ்டாரண்ட் ரொம்பவும் பிரபலமான இடம். கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரிகள் காபிக்காகவும், பானத்திற்காகவும் வருவார்கள். 1980 ஆம் ஆண்டு இந்தியா வந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் இந்த கோஷி’ஸ் ரெஸ்டாரண்ட்டிற்கு காபி சாப்பிட வந்திருந்தார்.     ‘இந்த ரயில்வே கிராஸிங் என்னுடைய இப்போதைய வீட்டிலிருந்து அரைக் கிலோமீட்டர் தான்’ என்கிறார் பெர்னாண்டஸ். 1960, 70 களில் அன்றைய மதாராசிலிருந்து பெங்களூர் வரும் ரயில் தினமும்… Continue reading அந்தக்கால பெங்களூர்!

இந்தியா · பெங்களூரு · Uncategorized

பழைய பெங்களூர் சில புகைப்படங்கள்

கார்டூனிஸ்ட் திரு பால் பெர்னாண்டஸ்-இன் ஓவியங்கள் பெங்களூரின் அந்த நாளைய வாழ்வைச் சுற்றியே இருக்கின்றன. இந்தியாவைச் சேர்ந்த இவர் 60,70 களில் பெங்களூரில் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை தனது வாட்டர் கலர் கார்ட்டூன்கள் மூலம் சொல்லுகிறார். இந்த தொடர் சித்திரங்களில் அவர் பெங்களூரின் பிரபல இடங்களையும் தனது மூதாதையர்களின் வீட்டையும் வரைந்திருக்கிறார். ‘பத்து வருடங்களுக்கு முன் எங்கள் பழைய வீடு எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. அந்த வீடு மிகப்பெரியது. அழகான தோட்டங்களுடன்… Continue reading பழைய பெங்களூர் சில புகைப்படங்கள்

Uncategorized

‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’

  இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி: தனக்கு ஆங்கிலம் சொல்லித் தரவேண்டும் என்பதற்காக சீனநாட்டிற்கு சுற்றுலா வந்த ஒரு சிறுவனை வடகொரிய அதிபர் கிம் கிட்னாப் செய்திருக்கிறார் என்று. 12 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து மேற்கு சீனாவிற்கு வந்த டேவிட் ஸ்நெட்டன் (David Sneddon) திடீரென மாயமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24. ப்ரிகம் யங் யுனிவர்சிட்டி மாணவரான டேவிட், ஜின்ஷா நதி அருகே  ட்ரெக்கிங் போனபோது நதியில் விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் சொல்லப்பட்டது.… Continue reading ‘உங்களை கிட்னாப் பண்ணப்போறேன்!’