தூ…….தூ…….போ……போ………! 

 

வலைச்சரம் நான்காம் நாள்

ரஞ்சனி நாராயணன்

சமையல் சாப்பாடு என்றால் என்ன அவஸ்தை பாருங்கோ. பேசாம சங்கீதம் பாடப் போயிடலாமா அப்படின்னு தோணறது. எல்லாம் அக்கரை பச்சை தான். சங்கீதம்னு நினைச்சாலே எனக்கு எங்க தமிழ் வாத்தியார் கேதாரேஸ்வர சர்மாவும், எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த சித்ரா தாசரதி தம்பதியும் தான் நினைவிற்கு வருவார்கள்.

 

முதலில் சர்மா ஸார்: பள்ளிக்கூடத்துல படிக்கறச்சே எங்க பள்ளி வளாகத்துக்குள்ளேயே சாயங்கால வேளைகள்ல காலக்ஷேபம், சங்கீத கச்சேரி நடக்கும். எனக்கு நன்றாக நினைவு இருப்பது டி.எஸ். பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளோட ‘தியாகராஜ ராமாயணம்’ தான். தியாகராஜரோட கீர்த்தனங்களை வைத்து இராமாயணம் சொல்லுவார். அப்போல்லாம் ‘ஹரிகதை’ என்று ஒரு பாணி. நின்றுகொண்டே கதை சொல்லுவார்கள். ஹரிகதை உட்கார்ந்து சொல்லப்படாதோ? ஊஹூம். நின்னுண்டேதான் சொல்லணுமாம். கால்கடுக்க நின்னுண்டே சொல்லுவார். பாடல்கள் எல்லாம் ரொம்ப நன்றாகப் பாடுவார். ‘ஸ்வரராக சுதா ரஸ’ என்று கணீரென்று சங்கராபரணம் ஆரம்பித்தால் கூட்டம் பின்-ட்ராப் சைலன்ஸ்.

 

எங்கள் சர்மா ஸார் சொல்லுவார்: சங்கீத வித்வான்கள் எல்லாரும் பாடும்போது கையை ஆட்டி ஆட்டி இட்லிக்கு அரைப்பார்களாம்; அம்மில குழம்புக்கு அரைப்பார்களாம்; யந்திரத்துல உப்புமாவிற்கு உடைப்பார்களாம். குடுமியை (நான் சொல்வது அறுபதுகளில்) ஆட்டிண்டு ஆட்டிண்டு அவர்கள் பாடுவதே பெரிய காமெடி என்பார். அவர்கள் செய்வது போல செய்தும் காட்டுவார். எங்களுக்கு அவர் செய்வது ரொம்பவும் சிரிப்பாக இருக்கும். ‘ததரின…….’ என்று இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு ஒரு கையால் உரல்ல அரைப்பார். இன்னொரு கையால் ‘தா…..நா…’ என்று மாவைத் தள்ளி விடுவார். எங்களுக்கு சிரிப்பு பொங்கும். ஒரு பாடகர் நிரவல் செய்வது போல அவர் பாடிக் கேட்கவேண்டும்.

‘தூ…..ஊ……….ஊ……..தூ……….தூ..!.

தூ……ஊ….ஊ….தூ…….!

போ….ஓ…….போ….போ….!

போ……ஓ…..போ…..!

நா……நா….நா…….!

ஆ……..யே……’

என்று அவர் பாடப் பாட  நாங்கள் எல்லாம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடமே அதிரச் சிரிப்போம். ‘தூது போனாயே’ என்பதை அந்தப் பாடகர்  இப்படி நிரவல் செய்வார் என்பார் சர்மா ஸார்.

இன்றைய சிறப்புப் பதிவாளர்கள்:

நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு இணையதளம் தமிழ்மணம் அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி இங்கே படியுங்கள்.

காசியின் வலைப்பதிவுகள்

http://kasiblogs.blogspot.in/2006/07/1.html

தமிழ்மணம் தோற்றம், வளர்ச்சி

 

*********

கைகள் அள்ளிய நீர் சுந்தர் ஜி. பிரகாஷ் அவர்களின் வலைப்பூ. முகநூலில் அதிகம் எழுதும் இவர் இனி தனது இந்த வலைப்பூவிலும் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். மிக நல்ல விஷயம்.

 

இரண்டு கதைகள்

இரண்டு ‘ம்’ களுக்கு நடுவில் என்ன நடக்க முடியும்? படியுங்கள் புரியும்.

 

முதுமையின் நாட்குறிப்பு

எல்லோரையும் தங்களது முதுமையைப் பற்றி நினைக்க வைக்கும்.

********

கீதமஞ்சரி http://geethamanjari.blogspot.in/2015/02/blog-post.html

 

என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே!

என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே!

என்கிறார் கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் எழுதுகிறார் திருமதி கீதா மதிவாணன்

ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள் கருப்பு அன்னங்கள்

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனுக்காக எழுதப்பட்ட மலையாளக் கவிதையின் மொழி பெயர்ப்புக் கவிதை இது:

மன்னியுங்கள் என்னை

சமீபத்தில் இவரது புத்தகம் ‘என்றாவது ஒருநாள்’ (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்- ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்) — மூல ஆசிரியர் – ஹென்றி லாசன் (ஆஸ்திரேலியா) அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது.

 

*******************

 

அமுதவன் பக்கங்கள் – இவரைத் தெரியாதவர்கள் இணைய உலகில் இல்லை. பல பிரபல பத்திரிக்கைகளிலும் எழுதுபவர். இவரது என்றென்றும் சுஜாதா மிகவும் பிரபலமான புத்தகம்.

http://amudhavan.blogspot.com/2015/02/blog-post.html

சூப்பர் சிங்கர் ஜூனியர் சில சிந்தனைகள்

எட்டு போட்டு நடை பயிலுங்கள் http://amudhavan.blogspot.com/2012/12/blog-post_25.html

**********************

 

ரங்கன் மன மின்வான் என்னும் வலைத்தளத்தில் எழுதுபவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். இவர் தொடாத விஷயங்களே கிடையாது எனலாம். ரவீந்திரநாத் தாகூரிலிருந்து Ayan Rand வரை எல்லோருடைய படைப்புகளையும் படித்து தானும் ரசித்து நம்மையும் ரசிக்க வைப்பவர்.

சிறுகதை என்றால் என்ன என்று சொல்லுகிறார். கதை சிறுத்து

காளீ! யாதுமாகி நின்றாய்.. 1

 

யாரு ஸார் இவரு? விவேகானந்தரை ஒரு ஆட்டோ ஓட்டுனருக்கு இவர் என்ன எளிமையாக அறிமுகம் செய்து வைக்கிறார், படியுங்கள்.

உண்மையாக இருக்குமோ? சிந்திக்க வைக்கும் முல்லா கதை

*************

 

‘சும்மா’ என்ற வலைத்தளத்தில் எழுதும் தேனம்மை. சாட்டர்டே போஸ்ட் – தேனம்மை லக்ஷ்மணின் பதிவில் பல சாதனையாலர்களைத் தெரிந்து கொள்ளலாம். இதோ திருமதி பத்மா மணி பற்றிய பதிவு.

நமது பதிவுலக சகலகலாவல்லி திருமதி கீதா சாம்பசிவமும் இந்த சாட்டர்டே போஸ்டில் எழுதியிருக்கிறார். இவரது பதிவு இதோ

 

வேதாவின் வலை

 

கோவைக்கவி திருமதி வேதா இலங்காதிலகம் நவீன பார்த்தசாரதி(யாரைச் சொல்லுகிறார்?) யுடன் சென்றது எங்கே என்று தெரிந்துகொள்ள படியுங்கள் இதை

வேதாவின் ஆத்திச்சூடி

பேரன் வெற்றிக்காக இவர் பாடும் சிறுவர் பாடல்கள் ஒன்று எண்ணுவோம்

இரண்டு எண்ணுவோம்

*************

https://andamantamilnenjan.wordpress.com/

அந்தமான் தமிழ் நெஞ்சம் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன? என்ன சொல்ல வருகிறார் என்று மேலே படியுங்கள்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

******************

சொல்லுகிறேன் என்ற வலைப்பதிவில் காமாக்ஷிமா எழுதும்

அன்னையர் தினப்பதிவு  அவரது அன்னையின் நினைவுகளை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்பா இறைவன் திருவடி அடைந்தபின் அந்தக் குடும்பத்தை இவரது அம்மா தனியாக நிர்வகித்ததையும், பேரன் பேத்திகளை வளர்த்துக் கொடுத்ததையும் நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்ளுகிறார்.

**********************

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் திருமதி மகாலக்ஷ்மி எழுதும் வலைத்தளம்.

நாம் தினசரி பயன்படுத்தும் இண்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அடுப்பு முதலியன பற்றியும், குறட்டை, வாய்த்துர்நாற்றம் என்று பல விஷயங்களைப் பற்றி அழகான தமிழில் விளக்குகிறார்.

அடுப்படியில் இருக்கும் பிசாசு என்று யாரைச் சொல்லுகிறார் என்று படித்துப் பாருங்கள்.

 

ஆ…..பக்கங்கள்

என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் ஆமருவி திரு தேவநாதன்

ஆள் தேடி நின்று கொண்டிருக்கிறார் பெருமாள் என்கிறார்.

சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்

இவர் எழுதும் பல பதிவுகள் நம்மை உருக வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.

 

கடைசிபெஞ்ச் என்ற வலைத்தளத்தில் பாண்டியன் திரைப்பட அனுபவம், (நிறைய) புத்தக விமரிசனம் என்று சிறப்பாக எழுதி வருகிறார். ஜெமோ வின் விசிறி. பெயர் தான் கடைசி பெஞ்ச். பதிவுகள் தரத்தில் முதல் ராங்க்!

எழுத்தாளர் ஜெயமோகன் உடன் கலந்துரையாடல் http://wp.me/p2IK8Q-ow

 

http://wp.me/p2IK8Q-kr ராஜீவ்காந்தி கொலைவழக்கு

 

**********************

Musings of a small town boy என்ற வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதும் ராகவன்,  ஆன்மீகப் பதிவுகளும் எழுதுகிறார்.

 

ராசிபலன் இது குட்டிகதை அல்ல என்கிறார்.

கோபாலும் கணிதத் தேர்வும்

புதிய பறவை சினிமாவிற்கும், கணிதத்திற்கும் சம்மந்தம் உண்டா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

 

நாளை சந்திக்கலாம்!

7 thoughts on “தூ…….தூ…….போ……போ………! 

  1. என்னுடைய வலை தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ரஞ்சனி அம்மா 🙂 நேற்று சங்கட சமையலும் அருமை , இன்று சங்கீதமும் இனிமை 🙂 வலைச்சரத்தில் இன்று அறிமுகம் ஆகி இருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 🙂

    1. மிக்க நன்றி அம்மா. மிக்க ஆர்வத்துடன் ஓடிவந்தேன். ரயிலின் உள்ளே இருந்ததால் இணையம் அரைகுறையாய் கிடைத்து பதிவின் தலைப்பு மட்டும் வந்தது. என்னடா இது. நம்ப பதிவைப் பார்த்து துப்பிவிட்டாரா, இந்தக் குப்பையை எல்லாம் படிக்க வேண்டி இருக்கிறதே என்று தனக்குத்தானே துப்பிக்கொண்டாரா என்று ஒரு நொடிக்குள் என்னென்னவோ பதட்டங்கள். 🙂 மிக்க நன்றி அம்மா. பயிற்றுவிப்பது ஆசிரியர் தொழில். ஊக்குவிப்பது ஆசிரியர் குணம். மிக்க நன்றி. பணிச் சூழல் காரணமாக அடிக்கடி வர இயலவில்லை. ஆனால் அதற்குள் அசுர வேகத்தில் எழுதி குவித்து வருகிறீர்கள்.
      வணக்கம்.
      அன்புடன்
      பாண்டியன். புதுக்கோட்டை

  2. கத்துக்குட்டியான என் BLOG பற்றிக்கூட உங்கள் வலைதளத்தில் எழுதியமைக்கு மிக்க நன்றி…

    பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு சிறிய விவாதம் கூட என் BLOG இல் உண்டு… “யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது?” http://wp.me/p5gvcj-18 உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து… 🙂

  3. நன்றி ரஞ்ஜனி. மிக்க அருமையாக இருக்கிறது உன் வலைப்பூ ஆசிரியர்வேலை. தமிழ்மணம் திரு காசி அவர்களின் 15 பதிவுகளை படித்து முடித்து விட்டேன். எள்லோருடைய பதிவுகளையும் படிக்க வேண்டும். அருமை அன்புடன்

Leave a comment