ஹிந்தி மாலும்…?

 

 

ஏப்ரல் 16, 2000 மாவது வருடம். எனது வாழ்வில் முக்கியமான நாள்.

 

25 வருட இல்லத்தரசி வேடத்தைக் கலைத்து விட்டு வெளியில் வேலைக்கு வந்திருக்கிறேன். அலுவலத்தில் நாற்காலியில் உட்காந்து செய்யும் வேலை இல்லை. மாணவர்கள் முன்னிலையில் நின்று கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்…எப்படி இருக்குமோ?

 

முதல்முறையாக பள்ளிக்கு போகும் குழந்தையைப் போல ஒரு கலக்கம்.

 

ஆங்கிலம் பேச வரும். சொல்லிக் கொடுப்பது வேறு இல்லையா?

 

முதல் வகுப்பு. முதல் நாள். உள்ளூர பட பட வென்று பல பல பட்டாம்பூச்சிகள் பறந்தாலும் முகத்தில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்கள் கவுன்சிலரிடம் கேட்டேன்

 

‘எத்தனை மாணவர்கள்?’

 

‘இது அடிப்படை நிலை வகுப்பு. ஒன்லி டென்..’ என்று இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

‘ஓ! ஒன்லி டென்…?’

எனது முதல் வகுப்பு flop-show- வாக முடியப் போகிறது என்பதை அறியாமலேயே முகத்தில் இருந்த தைரியம் உடலிலும் பரவ வகுப்பினுள் நுழைந்தேன்.

‘குட் மார்னிங்’

9 குட் மார்னிங்-கு களுக்கு நடுவே ‘ஹிந்தி மாலும்..?’ என்று பத்தாவதாக ஒரு குரல்!

குரல் வந்த பக்கம் திரும்பினேன். ஒரு இஸ்லாமியப் பெண்மணி தலையில் பர்த்தாவுடன்!

எனக்குள் எழுந்த முதல் வியப்பு. எனக்கு ஹிந்தி தெரியாது என்று  இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?

அடுத்து என்ன மொழியில் பதில் சொல்வது? நோ என்று ஆங்கிலத்திலா? நஹி என்று ஹிந்தியிலா?

சவாலே சமாளி….

கொஞ்சம் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன்.

‘நீங்கள் இங்கே வந்திருப்பது ஆங்கிலம் கற்க. அதை நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். கவலைப் படாதீர்கள்….!’

தன் தலை மேல் போட்டிருந்த பர்தாவை இழுத்து முகத்தை மூடியபடி அந்த பெண் எழுந்தே விட்டாள்.

நான் பதறிப் போனேன். ‘நோ, நோ, டோன்ட் கோ. ப்ளீஸ் சிட் டௌன்…!

நான் பேசியதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு முறை திரும்பிப் பார்த்து மறுபடி ஹிந்தியில் மூச்சு விடாமல் ஏதோ சொன்னாள். சுத்தமாக எதுவும் புரியவில்லை.

மற்ற மாணவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். ‘அவளிடம் சொல்லுங்கள். அவளை வகுப்பிற்குள் வரச் சொல்லுங்கள்…’ என்றேன்.

என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிலர் அவளை உட்காரச் சொன்னார்கள். எதற்கும் மசியவில்லை அந்தப் பெண். போயிந்தே! Gone!

என்னைப் பரிதாபமாகப் பார்த்த 9 பேருக்கு, பேருக்குப் பாடம் எடுத்து விட்டு வெளியே வந்தேன்.

மையத்தின் கவுன்சிலர், ‘ஹிந்தி வராதா….?’ என்றாள். ஏற்கனவே நொந்திருந்த நான் மேலும் நொந்து நூடுல்ஸ் ஆனேன்.

‘நாளைக்கு வரட்டுமா வேண்டாமா?’

‘டோன்ட் ஒரி. அந்தப் பெண்ணை ஹிந்தி பேசத் தெரிந்த ஒரு டீச்சரிடம் அனுப்பி விட்டேன். ரோனிலா உங்களிடம் பேசுவாள்’ என்று என் வயிற்றில் புளியை கரைத்தாள்.

வீட்டிற்கு வந்து ‘இங்கிலீஷ் வகுப்புக்கு வந்து விட்டு இந்தி தெரியுமான்னு கேக்கறா?’ என்று புலம்பித் தீர்த்தேன்.

கொஞ்ச நேரத்தில் எனது பாஸ் என்கிற பாஸ்கரன் இல்லை – ரோனிலா விடமிருந்து தொலைபேசி.

கொஞ்சம் பயமாக இருந்தது. என்ன சொல்லுவாளோ?

என் மாமா Single Speech Hamilton என்று ஒருவரைப் பற்றிக் கூறுவார். ஒரே ஒரு முறை மேடையில் பிரமாதமாகப் பேசிவிட்டு நிறுத்திவிட்டாராம். அதன் பிறகு அவர் பேசவே இல்லையாம். அதைப்போலவே நானும் Single English Class – அதுவும் Flop Show பண்ணிவிட்டு நிறுத்தி விடப் போகிறேன். தினம் ஒரு புது கதை கேட்கும் என் பேரனுக்கு என் கதையை சொல்லலாம்.

என்னென்னவோ நினைத்தபடியே தொலைபேசியில் ‘ஹலோ..ரோனிலா…!’ என்றேன்.

‘வாட் ஹப்பென்ட்..?’

என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே என்று சொல்ல ஆரம்பித்தேன்.

‘ஸாரி ரோனிலா…எனக்கு ஹிந்தி வராது…..’

‘எனக்குப் புரிகிறது. நீ ஒண்ணு பண்ணு. உன்னிடம் வரும் மாணவர்களிடம் நீ லண்டனில் பிறந்து, தேம்ஸ் தண்ணி குடித்து வளர்ந்தவள் என்று சொல்லு….’

‘ரோனிலா…?’ நான் நம்ப முடியாமல் கேட்டேன். நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து, பெங்களூர் வந்து காவேரி நீர் குடித்து வருபவளாயிற்றே!

‘ஆமாம் , உனக்கு இந்திய மொழி எதுவும் வராது இன்னிலேருந்து சரியா?’

‘…………….’?

‘ஹிந்தியும் பேசாதே, கன்னடமும் பேசாதே…தமிழும் பேசாதே….’

‘ஆனா…. ரோனிலா வீட்டில…..’

‘ரஞ்ஜனி…! நான் வகுப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்…..புரிகிறதா?’

அவளுக்கு கோபம் அதிகமாவதற்குள் ‘நன்றி…என்னைப் புரிந்து கொண்டதற்கு…’ என்று சொல்லிவிட்டு தொலை பேசியை கீழே வைத்தேன்.

அதற்குப்பின் ஒவ்வொரு வகுப்பிலும் சில பல ஹிந்தி பேசும் மாணவர்கள். ஹிந்தி கற்காமலேயே அன்றிலிருந்து இன்றுவரை வகுப்புகளை மட்டுமல்ல; வாழ்க்கையையும் தான் சமாளிக்கிறேன்!

முதல் கோணல்…முற்றிலும் வெற்றி!

 

44 thoughts on “ஹிந்தி மாலும்…?

    1. வாழ்வே சமாளிப்பதுதான்! இல்லையா ?
      ரசிப்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. நல்ல பகிர்வு. ஹிந்தி மொழி தெரியாது தில்லி வந்த புதிதில் கண்ட அனுபவங்கள் நினைவில்… 🙂

    1. அந்தப் பக்கம் யாத்திரைக்கு வரும்போது என் ஹிந்தி மொழிப் புலமையை காட்டத் தவறியதே இல்லை….ஹி…ஹி…

  2. 🙂 அம்மாவுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும்… ஆனா தமிழ்ல பதிவு எழுதுவாங்க.. 🙂

    1. கண்மணி ரொம்ப நாளா காணுமே!

      ஒழுங்கா தெரிஞ்ச மொழியிலதானே எழுத முடியும்?
      நன்றி கண்மணி!

  3. எப்படியோ சமாளிச்சிட்டீங்க போங்க!!!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  4. முதல் கோணல்… முற்றிலும் வெற்றி. அட. இது புதுசா இருக்கே. இந்த ஹிந்தி பேசறவங்க கிட்ட மாட்டிக்கிட்டு பேய் முழி முழிச்ச அனுபவம் எனக்கும நிறையவே உண்டும்மா. அனுபவப் பகிர்வு அருமை.

    1. ஒலகத்துல இருக்குறவங்க எல்லாரும் ஹிந்தி பேசணும்னு எதிர் பார்ப்பாங்க….!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்!

  5. எங்க வீட்லே ஹிந்தி,இங்லீஷ், அஸ்ஸாமி,தமிழ், பெங்காலி, நேபாலி,பஞ்சாபி எல்லா பாஷையும் இருக்கு.
    பேசறவா இருக்கா. தெலுங்கு, கன்னட பாஷையும் கொஞ்சம் வரும். புதுசா ப்ரெஞ்சும் புழக்கத்திலிருக்கு. தமிழும்,நேபாலியும் ,ஹிந்தியும் பரவாயில்லை எனக்கு. தமிழு க்குத்தான்
    ஜயகோஷம். பெருமையில்லை. இதுதான் எனக்குச் ஸொந்தம்.
    எவ்வளவு அழகாக உன் கட்டுரை.படிக்க திரும்பப் படிக்க அலுக்கவேயில்லை.

    1. உங்க முன்னாடி நான் ஒன்றுமே இல்லை!
      எத்தனை பாஷை கற்று வைத்திருக்கிறீர்கள்!
      ஒவ்வொரு முறை உங்களைப் பற்றி நினைக்கும்போதும் பெருமையாக இருக்கிறது.

      நன்றி காமாட்சி அம்மா!

  6. அருமையாக இருந்தது.எனக்கும் இந்த மாதிரி இந்தி பேசும்
    ஊரில் மாட்டிக்கொண்டு திண்டாடிய அனுபவம் நினைவுக்கு வருகிறது.

  7. சவாலே! சமாளி! தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி! என்ற சிவாஜி கணேசன் படப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. சமாளியுங்கள்!

    1. மேலே சொன்னது ஆரம்ப சமாளிப்பு தான். இன்னும் பல பல சமாளிப்புகள்!
      நன்றி திரு தமிழ் இளங்கோ!

  8. வாழ்க்கை என்றால் அனைத்தையும் சமாளித்துதான் ஆகவேண்டும்…

    எதற்கும் எதற்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க முடியாது.

    அதை போல நல்ல சமாளிப்புகள் அதை மிக சுவை படைத்தமைக்கு நன்றிகள் பல ராஞ்சனி அவர்களே

    1. வாருங்கள் கமலக்கண்ணன்!
      வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

  9. இந்தியாவுல எந்த மொழியையும் சொந்த மொழியில சொல்லிக் கொடுப்பது வாடிக்கை – கொஞ்சம் யோசிச்சா இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும். என் பள்ளிக்கூடத்துல இங்க்லிஷ் ப்ரெஞ்ச் எல்லாமே தமிழ்ல தான் சொல்லிக்கொடுத்தாங்க.

    தேம்ஸ் விவகாரம் is overt deception. இது கவுன்சிலருக்கோ அந்த ரோவுக்கோ தெரியாமப் போனது வருத்தம். still, இது எப்படி பிரச்சினையைத் தீர்த்தது என்பது கே?யாக இருக்கிறது.

    கட்டுரையின் நகைச்சுவை பிரமாதம்.

  10. நீங்கள் சொல்வது போல நானும் ஆங்கிலத்தை தமிழில் தான் கற்றேன்.

    ஆனால் வேலை கிடைத்தவுடன் என் அலுவலகத்தில் என் பாஸ் (இது வேற பாஸ்) முதல் நாளிலிருந்து ஆங்கிலத்தில் தான் பேசுவான்.

    அங்குதான் நான் ஆங்கிலம் பேசக் கற்றது!

    எந்த ஒரு மொழியுமே காதால் கேட்டுக் கேட்டு கற்கலாம் –
    பேசுவதற்கு மட்டும் – இல்லையா?

    ஒருவருக்கு ஹிந்தி தெரியும் என்றால், இன்னொருவர் கர்நாடகாவில் இருக்கிறீர்கள் கன்னடத்தில் விளக்குங்கள் என்பார்.

    அதற்காகவே ரோனிலா அப்படிச் சொல்லச் சொன்னாள் என்று எனக்குப் போகப் போகப் புரிந்தது.

    நான் நிறைய கற்றேன் இந்த வகுப்புகளில்!

    இன்னும் நிறைய எழுதலாம்!

    வருகைக்கும் சுவாரஸ்யமான கருத்துரைக்கும் நன்றி!

  11. Super “samali” .Always boss is right .

    Teaching is a hard job, for those who do not have the flair. I am sure you became very popular after that day!

    A nice post Ranjani.

    1. ரொம்பவும் நிஜம்! ஹிந்தி தெரியாத ஆங்கில ஆசிரியை என்று – இந்தியாவின் வடக்கு பகுதிகளில் இருந்து ஆங்கிலம் கற்க வரும் மாணவர்கள் என்னைக் கண்டாலே புடனியில் குதிகால் பட ஓடும் அளவுக்கு -பிரபலம் ஆகிவிட்டேன்!

  12. உங்க சமாளிப்பு பிரமாதம் அம்மா. நானும் தில்லி சென்ற புதிதில் முழித்ததை நினைத்துக் கொண்டேன்.

    1. எனக்குக் கூட தில்லி அல்லது மும்பை வந்து சிறிது நாட்கள் (வருடங்கள்?) இருந்து ஹிந்தி மொழியைக் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு ஆதி!

      நன்றி ஆதி!

    1. உங்களின் நேரத்தை செலவழித்து என் எழுத்துக்களை படித்து கருத்துரை எழுதியதற்கு நன்றி பழனிவேல்!

      1. வணக்கம் மேடம். இந்தி கற்பது எப்படி என்பதை தேடி கொண்டிருந்த போது தங்கள் நிகழ்வை வாசிக்க முடிந்தது. தாங்கள் ஆங்கிலம் நன்கு தெரியும் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு மிகவும் அடிப்படை அளவிலேயே தெரியும். இந்தி,அரபும் முழுவதுமே தெரியாது. ஆனால் இப்போது சௌதி அரேபியாவில் கட்டுமான துறையில் QCயாக பணியாற்றுகிறேன். படிக்கும் போது தமிழ், கடைசி ஐந்து வருடங்கள் தஞ்சாவூர்,பாபநாசத்தில் வேலை செய்தேன். இப்போது 4 மாதங்கள் இங்கு வந்தாயிற்று. முதல் மாதம் வேலை செய்த இடம் லேபர் அனைவரும் வட இந்தியா,பாகிஸ்தான் சேர்ந்தவர்கள்.அவர்களுக்கு எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் தெரியாது.
        அவர்களிடம் இந்தி தெரியாமல் நொந்து நூடூல்ஸ் ஆகிவிட்டேன். அதன் பிறகு இந்தி கற்க கடுமையாக முயற்சி செய்த போது என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். அங்கு சென்ற பிறகு ஒரு நிம்மதி. ஏனெனில் அங்கே இத்தாலி,துருக்கி,பிலிபைன்ஸ், ஸ்பெயின்,கொலம்பியா,கனடா, எகிப்து,சௌதி,பாகிஸ்தான் என 10 மேற்பட்ட நாட்டவர்களுடன் வேலை செய்வதால் இந்தி என்பது மறந்து விட்டேன். இப்ப நம்ம அரைகுறை ஆங்கிலம் தான். இன்னும் 20 மாதங்கள் காத்திருக்க வேண்டும் நம்ம தமிழை வழக்கம் போல் பேசுவதற்கு….
        சுட்டுபோட்டாலும் இந்தி வராதுனு தோனுது.
        உங்கள் முதல் கோணல்,முழுவதும் வெற்றிற்கு வாழ்த்துக்கள்…..
        நன்றி…….
        – மணி கருப்பூர்.

  13. ECHARIKKAI :: PADIPPADARKUL PAL SULUKKINAAL NAAN PORUPPALLA !!!!

    Ungaludaiya intha idugai-inai padikkum pozhuthu, enakku nerntha irandu sambavangal ninaivukku varugindrana

    1. Hindi theyriyaama, Bombay-il naan patta kashtangal !!!

    JuHu Beach-il kuthirai savaari seivatharkaaga, athan meethu yeri amarnthavudan kuthirai vegam kolla thodangiyathu!

    Lesaana bayathudan naan, “Slow, Slow” endren!

    Koodave oodi vantha aangilam-theyriyaatha-kuthiraikaaran, naan “Chalo, Chalo” endru solvathaaga ninaithu, kuthirai baashaiyil etho koorave, antha kuthirai “PANCHA KALYAANI” aaga maari,
    naalu kaal paachalil ootam yeduthathu!

    vayitril ulla kudal ellaam vaai vazhiyaaga varaatha kuraiyaaga, gathi kalangi ponen!

    Aanalum dhairiyaththai varavazhaithu kondu kuthiraiyil irunthu manalil guthithu vitten!

    Pinnadiye vantha kuthiraikaaranai, kanna-pinna vendru tamizh-il thitti theerka, avano naan enna thappu saithen enbathu pola, vizhithu nindra sambavam, indru varai enakku sirippu mootigirathu!!

    2. Kanyakumari Maavattam-Nagercoil il enakku nigalntha Nagaichuvai sambavan :

    Iravu vegu neram kazhithu urangiyathanaal, vidiyar kaalai inthu manikku, naan thangi iruntha veetin keezh thalathil vanthu indra paalkaranai ethir kolvatharkku kaala thaamadam aagivithathu!

    Avano enathu thaamatha varugai-ai purinthu kondu, than cycle maniyai vegamaaga adikka thuvanginaan!

    Kaiyil kidaitha paathirathai eduthu kondu sendren. Ennai paarthathum, pudhiya nabaraaga irukkave, Kumari maavatta tamil-il : ” thatla thaamasikaela ” endran !

    Pucca Chennai-vaasiyaana enakku avan kaetathil oru atcharam kooda puriyavillai.Etho “thattu” enbadu puriyave, “?! Paathiram thaane kondu vanthirukken” endren!

    Avan marubadiyum, “athu illai, thatla thaamasikaela” endru athaiye thirumbavum kaetaan!!

    Udane naan, etho “thaamasam” engiraane, paathiram eduthu kondu varuvatharkku kaala thaamatham aanathai kurippiduvathaaga ninaithu, “nightu late-ah paduthen” endru thalai sorinthen.

    Ippothu ennai avan sevidan endre ninaithuvittan!!

    Theruvirke kaetkum alavirku, athey kelviyai satham pottu kaetaan.

    Antha kaalai nera thadumaatrathilum, enakku kobam thalaikku yaeriyathu, “naan ondrum sevidan illai!”-badilukku naanum kathinen.

    Appothu pakkathil perukkikondiruntha velaikkaara amma balamaaga sirithukkonde, “aamam,aamam” endru solli, paal kaaranai anuppi vaithaal!!

    Ondrum puriyaamal, thalaiyil adithu kondu naal ulle thirumbinen!!

    Silla naatkal kazhithu, enakku Kumari-maavatta-Tamizh pazhakkam-aana pothu, andru nadantha en ariveenathai ninaithu enakkulleye naan pala murai sirithathundu !!!!

    {Paal kaaran kaetathan artham ungalukku puriyaathu endral, Shanthi-idam kaettu theyriyavum !}

  14. உங்கள் முதல் அனுபவத்தைப் படித்ததும் எனக்கு எஸ்.வி. சேகரின் ‘வண்ணக்கோலங்கள்’ நினைவுக்கு வந்தது.

    இரண்டாவதாக நிஜமாகவே பால் காரன் கேட்டது புரியவில்லை. சாந்தியிடம் கேட்டுவிட்டு என் விசிறிகளுக்கும் தெரிவிக்கிறேன்.

    நன்றி ராஜூ!

    இரண்டாவதும் புரிந்திருந்தால் பல் சுளுக்கிக் கொண்டிருக்குமோ?

    1. சாந்தியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ரொம்ப நேர சிரித்தோம்!

      தமிழில் தட்டச்சு செய்ய:
      google – இல் இருந்து தமிழ் எழுத்துக்களை download செய்து கொள்ளலாம். இல்லையென்றால் gmail compose mail – இல் language options இல் தமிழ் செலக்ட் செய்தும் தமிழில் எழுதலாம்.

      நன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு!

  15. ரொம்பசரி.

    //‘எனக்குப் புரிகிறது. நீ ஒண்ணு பண்ணு. உன்னிடம் வரும் மாணவர்களிடம் நீ லண்டனில் பிறந்து, தேம்ஸ் தண்ணி குடித்து வளர்ந்தவள் என்று சொல்லு….’//

    இந்திய மொழிகளை வச்சு ஆங்கிலம் சொல்லித்தந்தா….. சரிப்படாது.

    இங்கே ஒரு துளிகூட ஆங்கிலம் தெரியாம வந்திறங்கும் குஜராத்திப்பெண்மணிகள். ஆங்கில வகுப்புக்குகளுக்குப்போய் கத்துக்கிட்டு அசல் கிவிகளைப்போலவே பேசுவாங்க. ஆனா…. நாம் பேசறதுலே கொஞ்சம் இன்டியன் ஆக்செண்ட் கலந்துதான் இருக்கும்.

  16. வாருங்கள் துளசி டீச்சர்!
    நம் மொழிகளில் வாக்கியங்களின் அமைப்பும், ஆங்கில வாக்கியங்களின் அமைப்பும் வேறு வேறு இல்லையா? இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு விட்டால் ஆங்கிலம் சுலபம் தான்!
    ஆனால் மாணவர்கள் நாங்கள் (பயிற்சியாளர்கள்) மாய மந்திரம் செய்து அவர்களைப் பேச வைத்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டு வருவார்கள்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  17. ஆஹா, சவாலே சமாளியா? நல்லா இருக்கு. ஆக்ஸ்ஃபோர்டா? கேம் பிரிட்ஜா, ஈடனானு கேட்டிருந்தால்???? ஹிஹிஹிஹி, ஜாலியா இருந்திருக்கும் இல்லை! :))))))

    1. நிஜம் தான்! யாரும் இதுவரை அப்படிக் கேட்கவில்லை.
      ரசித்ததற்கும், கருத்துக்கும் நன்றி கீதா!

  18. இந்தி மாலுமா?..நல்லாக இருந்தது. முதல் கோணல் முற்றிலும் வெற்றி. நாமும் இதை இங்கு கூறுவோம்.
    நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    1. தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பது என் வாழ்வில் நிஜமாயிற்று சகோதரி!

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி கோவை கவிதாயினி!

  19. முதல் கோணல் முற்றிலும் வெற்றி.

    ஐ ஸ்பீக் மெனி லாங்வேஜஸ் இன் இங்க்லீஸ் என்று ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தீர்களா !???

  20. //முதல் கோணல்…முற்றிலும் வெற்றி!//

    அருமை. மிகவும் ரஸித்தேன்.
    பழமொழியையே முற்றிலும் மாற்றி
    வெற்றியும் அடைந்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    1. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
      என்னை சந்தித்தவர்கள் வெற்றியை சந்திக்காமல் போனதில்லை – இப்படிக்கு தோல்வி! என்று நேற்று முனைவர் வலைச்சரத்தில் சொல்லியிருந்தது எவ்வளவு நிஜம்!

      வருகைக்கும் மேலார்ந்த கருத்துக்களுக்கும் நன்றி வைகோ ஸார்!

  21. ஆந்திரா வந்த புதிதில் தெலுங்கு வராமல் நான் பட்ட பாடு நினைவுக்கு வந்தது
    இப்போது இந்தி கூட நன்றாக பேச கற்றூ வருகிறேன் ரொம்ப அருமையான கட்டுரை

    1. இதுவரை பெங்களூரைத் தாண்டி போகவில்லை. அதனால் என் மொழி அறிவு கன்னட மொழியுடன் நின்றுவிட்டது.

      நன்றி விஜயா!

Leave a comment