வருத்தமே வாழ்க்கையா

feel sad

 

இன்னிக்கு வருத்தப் பட விஷயமே இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? வருத்தம் வடிவேலுவின் அக்கா? தங்கை? அண்ணா? தம்பி? அப்போ இந்த செய்தி உங்களுக்கு வருத்தத்தை- இல்லையில்லை- சந்தோஷத்தைத் தரும்.

வருத்தப்படுபவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்தது. நாம் எல்லோருமே நம் வாழ்வில் நடந்த 6 விஷயங்களை பற்றி-இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம் என்கிறது இந்த ஆய்வு. 6 வித்தியாசங்கள் போல 6 வருத்தங்கள்!

இதில் முதல் இடம் பெறும் வருத்தம்: நாம் ஆசைபடும் அளவிற்கு பயணம் செய்ய இயலவில்லை என்பதுதான்.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேறு விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேறு வேலை, வேறு துணைவர் இப்படி.

ஐந்தில் ஒரு பெண் தான் தப்பான ஒரு துணைவருடன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆண்களில் வெறும் 10% பேர் மட்டுமே இப்படி நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 25% பேர் நம் வாழ்வில் வருத்தம் என்பது இல்லாமல் இருக்க முடியாது, வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தான் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களும் ஒரு வாரத்திற்கு 2 மணி நேரங்களும் ‘இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்யாமல் போனோமே’ என்றும் நாம் வருத்தப் பட்டு மாய்கிறோம் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஏன் நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை? காரணங்கள் என்ன என்று கேட்டபோது கிடைத்த பதில்கள்:

மூன்றில் ஒரு பங்கு பேர்கள் தங்களிடம் போதுமான பணம் இல்லாததால், தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழமுடியாமல் போயிற்று என்றனர். 25% பேர்கள் தங்கள் விருப்பத்திற்குரியவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ் முடிய வில்லை என்றனர்.

ஆனால் 32% தங்களுடைய பலவீனமான மனமும் – வலிமையான செயல்பாட்டுத் திறன் இன்மையுமே  – வேறு ஒரு நல்ல வாழ்க்கையை – அதாவது தங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

நமது கனவு வாழ்க்கையை வாழ முடியாமல் தடை செய்யப் பல விதக் காரணங்கள் இருப்பதாக நம்மில் பலரும் நினப்பதே இந்த வருத்தங்களுக்குக் காரணம் என்று இந்த ஆய்வின் டாக்டர் கெயில் ப்ரூவர் கூறுகிறார். இந்த மன நிலையில் ஆசைப் பட்டாலும் அதை நிறைவேற்றக் கூடிய மன உறுதி இல்லாமல் போகிறது என்கிறார் இவர்.

நமது 10 உச்சகட்ட வருத்தங்கள்:

 1. போதுமான அளவு பிரயாணம் செய்ய முடியாமை
 2. நண்பர்களுடன் தொடர்பு விட்டுப் போவது
 3. போதுமான உடற்பயிற்சி செய்யாமை
 4. அதிகப் பணம் சேர்த்து வைக்க முடியாமை
 5. புகை பிடிப்பது
 6. பள்ளிப் பருவத்தில் சோம்பித் திரிந்தது
 7. வேலை தேர்வு
 8. சரியான துணை அமையாமை
 9. ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம்
 10. நமது தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை பற்றி அவர்கள் இருக்கும்போது கேட்டு அறியாமை.

என்ன தோழர்களே உங்கள் வருத்தங்களையும் பட்டியலிடுங்களேன்!

http://tk.makkalsanthai.com/2012/12/blog-post_8027.html

20 thoughts on “வருத்தமே வாழ்க்கையா

 1. நல்ல ஆளோசனை ரஞ்சனி வருத்தம் இல்லாமல் தான் எல்லொருமே வாழ நினைக்கிறொம் வாழ்க்கை முழுவதும் வருத்தம் இல்லாமல் இருந்தால் சரி

  1. வருத்தமும் மகிழ்ச்சியும் கலந்து இருந்தால் தான் வாழ்க்கையும் இனிக்கும் இல்லையா?
   நன்றி விஜயா!

 2. நேரமிருக்கையில் வருத்தப் பட்டுக் கொள்வோம்
  பிறகு கூட காரணத்தைத் தேடிக் கொள்வோம்
  என்கிற வகையில் கவலைகளின் அடிமைகளாக
  எல்லோரும் ஆகிப் போனோம்.அதை அலசி
  ஆராய்ந்துக் கொடுத்தமைக்கு நன்றி

  1. மிக சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் ரமணி!
   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

  1. வாருங்கள் பழனிவேல்!
   நீண்ட நாட்களாகிவிட்டது உங்கள் பக்கம் வந்து. சீக்கிரம் வருகிறேன்.
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 3. உலகத்தில் உள்ள அனைவருக்கும் வருத்தப்பட ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும்! கவலையே இல்லை என்றால் வாழ்க்கை ரசிக்காது!
  உங்களுடைய தொகுப்பு மிகவும் நன்றாக இருந்தது அம்மா!

 4. வணக்கம்
  அம்மா

  வருத்தமே வாழ்க்கையா என்ற தொடரை படிக்கும் போது உண்மையில் இத்தனை விடயங்கள் உள்ளதா? என்பதை படித்த பின்புதன் தொரிகிறது அருமையான படைப்பு உங்களின் சிந்தனை ஆழுமையின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் அம்மா இந்த படைப்பு வாழ்த்துக்கள் அம்மா தொடருங்கள் பதிவுகளை நானும் தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாருங்கள் ரூபன். தொடர்ந்து கொடுத்து வரும் ஊக்கத்திற்கு நன்றி!

 5. நான் எழுதின மறு மொழி எங்கே போயிற்று. இல்லே இப்படிதான் இருக்கிறேனா? வாழ்க்கையும்,வருத்தமும்
  போட்டி போட்டுக் கொண்டு இருந்தாலும் வாழ்க்கையே
  ஜெயிக்க முற்படுகிரது. ஜெயித்துக்கொண்டு இருக்க வேண்டும். ரொம்பவே நல்ல ஆராய்ச்சி.

  1. நீங்கள் எழுதிய மறுமொழி இன்னொரு தளத்தில் இருக்கிறது!
   அங்கே போட்டதையே இங்கேயும் போட்டேன்!
   குழப்பத்திற்கு மன்னிக்கவும்!

  1. வருத்தம் இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா ?
   வருத்தங்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் அருமை .
   பாராட்டுக்கள்.
   ராஜி

  1. வாருங்கள் மின்னல் நாகராஜ்!
   பாராட்டுக்களுக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s