தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு ஓய்வும் தேவை!

செய்து பாருங்கள்

செல்வ களஞ்சியமே – 88

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன் ரஞ்சனி நாராயணன்

நேரமே இல்லை என்று சொல்லும் என் மாணவர்களிடம் வேடிக்கையாகக் கேட்பதுண்டு: யாருக்கெல்லாம் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் வேண்டும் என்று. எல்லோரும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். ஒரு மாணவரைப் பார்த்து ‘நீங்கள் எத்தனை மணிக்குக் காலையில் எழுந்திருப்பீர்கள்?’ என்று கேட்பேன். 7 மணிக்கு என்று சொன்னால் ‘6 மணிக்கு எழுந்திருங்கள் உங்களுக்கு 25 மணி நேரம் கிடைக்கும்’ என்பேன்.

சில பல சமயங்களில் நம்மால் நாம் எதிர்பார்ப்பதை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். அப்போது ஒருநாளைக்கு இன்னும் ஒரு மணிநேரம் கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். சரி தூங்கும் நேரத்தைக் குறைக்கலாம் என்றும் நினைப்போம். ஆனால் காலையில் கண்விழிக்கவே இயலாது போகும்.

தேர்வு சமயத்தில் இரவெல்லாம் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கும். ஒரு உண்மையை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்தால் தான் அது உங்களுக்கு தன் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கும். உழைப்பிற்குத் தகுந்த ஓய்வும் கட்டாயம் தேவை.

ஓய்வு கொடுப்பதனால் உடல் மட்டுமல்ல; உங்கள் மூளையும் உங்களுடன் நன்றாக ஒத்துழைக்கும். நன்றாகப் படித்துவிட்டு நல்ல ஓய்வும் – முக்கியமாக இரவுத் தூக்கம் நன்றாகத் தூங்கி எழுந்தால் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். படித்ததெல்லாம் நினைவில் நன்றாக இருக்கும். அதிகாலை வேளையில் மூளை நல்ல சுறுசுறுப்புடன்…

View original post 396 more words

3 thoughts on “தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு ஓய்வும் தேவை!

  1. மூத்த சகோதரியின் கருத்துக்கள் மாணவர்களுக்கு நல்ல புத்திமதி அதிகாலை எழுவதும் கற்பதும் நல்ல பலன் தரும்

  2. மாணவர்க்கு தேவையான அறிவுரைகள். நமக்கும் தான் ஒரு மணித்தியாலம் முன்னர் எழுவது வேலைகளை கச்சிதமாக முடிக்க உதவும் தான் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ….!

Leave a comment