ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…?

govt of Tamilnadu

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும்.

ஈ.சி எனப்படும் வில்லங்கச்சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

பொதுவாகவே ஈ சி (EC – Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று  ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது  ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதைவீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி, நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்கு தோராயமாக ரூபாய் 61. முதல் வருடம் ரூ.15. பிறகு ஒவ்வொரு வருடமும் ரூ. 5. ஒன்பது  (9×5) வருடங்களுக்கு ரூ. 45. ஈ.ஸி. எடுக்க ரூ 1. ஆகவே 15+45+1 = 61.

இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.

ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.

சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் , திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது தவிர  பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றும் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி  தெரிந்து இன்வெஸ்ட் செய்ய  ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கீழே உள்ள இணைப்புகளை நேரடியாகவே கிளிக் செய்து பலன் அடையுங்கள்.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற

http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற

http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்

http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய

http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்

http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்

http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற

http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

நன்றி: திரு அனந்தநாராயணன்

24 thoughts on “ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…?

    1. வாங்க தனபாலன்!
      வருகைக்கும் bookmark செய்து கொண்டதற்கும் நன்றி!

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //பத்து வருடத்திற்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. //

    இந்தக்கூட்டுப்புள்ளியில் தவறு உள்ளதே.

    ஓஹோ… மறந்துட்டேன்.
    நீங்க கணக்கில் வீக் என்று சொன்னதை நான் மறந்துட்டேன்.

    1. வாங்கோ கோபு ஸார்!
      இதுக்குத்தான் ஈயடிச்சான் காப்பி பண்ணக்கூடாது என்று சொல்வது. ஹி…ஹி…
      சரியாக கணக்குப் பண்ணி போடுகிறேன், இப்போதே!
      வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி!

    1. வாங்க வேணுகோபால்!
      நிஜமாகவே பயனுள்ளதாக இருக்க வேண்டும்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. இப்படி லஞ்சம் வாங்க முடியாமப் பண்ணிட்டாங்களே! புலம்பல் இங்கு வரை கேட்கிறது.

    பயனுள்ள பதிவு. நடையாய் நடக்காமல் இனி எளிதாக வேலை முடிந்துவிடும்.பகிர்தலுக்கு நன்றிங்க.

    1. வாங்க சித்ரா!
      இது எனக்கு forward செய்யப்பட்ட மின்னஞ்சல். இதன் மூலம் எளிதாக வேலை முடிந்தால் சந்தோஷம்தான்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  3. நன்றி. ௧௯௬௬இல் வில்லங்க சான்று பெற நடந்து களைத்து பின் ௩௦ ரூபாய் கையூட்டு கொடுத்துத் தான் பெற்றேன். இதுபோல் பட்டா படாத பாடு படுத்துகிறது.
    அதற்கும் ஒரு எளிய வழி தேவை. பத்திரப்பதிவு அன்றே பட்ட பதிவுத்துரைமூலம் வழங்கவேண்டும். பதிவுத் துறையில் பதிவு வேறு பட்டவேறு அங்கு லஞ்சம் வெளிப்படை. அப்பொழுதுதான் இறைவன் மேல் கோபம்.

    1. வாருங்கள் அனந்தகிருஷ்ணன்!
      இதெல்லாம் இங்கு சாதாரணமாக நடப்பதுதான். இதெற்கெல்லாம் இறைவன் என்ன செய்வார், பாவம்!
      இந்த இணைப்புகள் நிஜமாகவே பயனுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனையும்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  4. அருமையான பதிவு அவசியமான தகவல்கள் அம்மா அப்பா தவிர ஆன்லைனில் எல்லாமே கிடைப்பது சௌகர்யமாகத்தான் இருக்கிறது நன்றி ரஞ்சனி

  5. அருமையான பதிவு அவசியமான தகவல்கள் அம்மா அப்பா தவிர ஆன்லைனில் எல்லாமே கிடைப்பது சௌகர்யமாகத்தான் இருக்கிறது நன்றி ரஞ்சனி

  6. இதில் நான் முயன்று பார்த்து விட்டேன் ரஞ்சனி . .இணைப்புகள் எல்லாம் நன்றாகவே திறக்கின்றன. ஆனால் நமக்கு வேண்டியவை கிடைப்பதில்லை. ஆனால் நான் சொல்வது எல்லாம் ஒரு வருடத்திற்கு முந்தைய கதை. இப்பொழுது மாறியிருந்தால் மகிழ்ச்சி.

  7. இந்த வசதி உண்மையாகவே கிடைப்பதாயிருந்தால் ஓகே ஆனால் நிறைய அரசு துறை வெப் சைட்டுகள் கிடைப்பதேயில்லை ட்ரை பண்ணுவோம் நன்றி

  8. ஹாய்..நான் எனது வீட்டு மனைக்கு ஆன்லைனில் பட்டா பெற வேண்டும். என்னிடம் ஒரிஜினல் பத்திரம் இருக்கிறது. அதற்கான வழிமுறைகளையும் வெப் சைட் முகவரியையும் பரிந்துரை செய்யுங்கள். நன்றி.

  9. இது பழைய பதிவு. தற்போது தமிழக பதிவுத்துறை http:// ecview.tnreginet.net என்ற இணைய தளத்தில் நுழைந்து,EC/ DOCUMENTS/GUIDELINE VALUE & UTILITY FORMS அனைத்தையும் கண்டு, தேர்ந்தெடுத்து, வீட்டிலேயே அச்சடித்தும் கொள்ளலாம்! சற்று கடினமான காரியமாகவே தெரிகிறது. லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கலாமே?

Leave a reply to venugopal Cancel reply