வந்தது விருது!

versatile-blogger

 

 

மூன்று நான்கு மாதங்களாகவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மனம் உடல் இரண்டுமே சோர்ந்திருந்தேன். மாதப்பத்திரிக்கையில் வெளிவரும் எனது கட்டுரைகளைப் போடுவதுடன் சரி. வலைத்தளத்தில் வேறு எதுவும் எழுதவில்லை. மற்றவர்களின் வலைத்தளத்திற்குப் போகவும் இல்லை. சோர்வு, சோர்வு, சோர்வு!

 

அப்போது ஒரு அறிவிப்பு வேர்ட்ப்ரெஸ் தளத்தில். ஆமருவி என்பவர் எனது about பக்கத்தில் கீழ்கண்டவாறு அறிவித்திருந்தார்.

Hi – I have often enjoyed your blog. I have nominated you for the Versatile Blogger Award. Please visit the below site for further steps. Thanks

http://amaruvi.wordpress.com/2014/08/30/versatile-blogger-award/

 

சிறிது நேரம் ஒன்றுமே தோன்றவில்லை. இது நிஜமா என்று இருந்தது. திரு ஆமருவியின் தமிழ் தளத்தை அடிக்கடிப் படிப்பவள் நான். அதிகம் பின்னூட்டங்கள் போட்டதில்லை. அவரிடமிருந்து இப்படி ஒரு விருது நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு விருதினைக் கொடுத்து சோர்விலிருந்து என்னை எழுப்பி உட்கார வைத்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றி அவருக்கு. தேரழுந்தூர் ஆமருவியப்பனே நேரில் வந்தது போல உணர்வு!

 

இந்த விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியவை கீழே:

 

  • நமக்கு விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லி அவரது வலைத்தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். நன்றி ஆமருவி அவர்களே! இதோ உங்கள் தளத்திற்கு இணைப்பு:

Amaruvi’s Aphorisms

  • விருதினை வலைத்தளத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். போட்டுக்கொண்டு விட்டேன்.
  • என்னைப்பற்றிய 7 விஷயங்களை சொல்ல வேண்டும்.
  • நான் என் பங்கிற்கு குறைந்த பட்சம் 5 வலைப்பதிவாளர்களைத் இந்த விருதிற்கு பரிந்துரைக்க வேண்டும்.

என்னைப்பற்றிய 7 விஷயங்கள்

  • முழு நேர இல்லத்தரசி; பகுதி நேர எழுத்தாளர்.
  • மிகவும் பிடித்த சுவை நகைச்சுவை.
  • என்னை நானே கிண்டல் செய்துகொள்வது மிகவும் பிடித்த விஷயம்.
  • ரொம்பவும் பிடித்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்.
  • அடிக்கடி படித்து ரசித்த கதைகள் பொன்னியின் செல்வன், திருவரங்கன் உலா.
  • செய்ய விரும்புவது: மொழி பெயர்ப்புகள். நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
  • நிறைய எழுத நினைக்கிறேன்!

நான் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கும் வலைப்பதிவாளர்கள்:

 

திரு கோபு என்கிற வை. கோபாலக்ருஷ்ணன்

எனக்கு முதலில் விருதுகளைக் கொடுத்தவர். என்னுடைய மிகப்பெரிய மரியாதைக்கு உரியவர்.

திரு தமிழ் இளங்கோ தனது அனுபவங்களை சீரிய எழுத்துக்களில் வடிப்பவர்.

திரு ஜோதிஜி தேவியர் இல்லத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர்.

திரு பழனி கந்தசாமி சுவாரஸ்யமாகவும், கொஞ்சம் கோவமாகவும் தனது மனஅலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்பவர்.

சொல்லுகிறேன் என்று நமக்கு எப்போதும் அன்பும் ஆசியும் கூடவே ஆரோக்கிய சமையல் முறைகளையும் எழுதும் திருமதி காமாட்சி மகாலிங்கம்.

சின்னுஆதித்யா என்று பேரனை கொஞ்சுவதுடன் நிறுத்தாமல் அவன் பெயரிலேயே வலைத்தளம் ஆரம்பித்து சுறுசுறுப்பாக 1000 பதிவுகள் கொடுத்து சாதனை புரிந்த திருமதி விஜயா.

 

அரட்டை என்ற பெயரில் நல்ல விஷயங்களை மட்டுமே நகைச்சுவையுடன் பேசும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

 

கடைசி பெஞ்ச் என்ற பெயரில் முதல்தர பதிவுகளை எழுதும் திரு பாண்டியன்.

 

இந்த விருதுகள் எதுவுமே தேவைப்படாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு வெர்சடைல் வலைப்பதிவர்கள்:

துளசிதளம் – திருமதி துளசி கோபால்

எண்ணங்கள் எழுதும் திருமதி கீதா சாம்பசிவம்

 

இந்த விருதினைப் பெற்றவர்கள் நான் செய்தது போலவே உங்கள் தளத்தில் இந்த விருதினை உங்களுக்குப் பிடித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

திரு ஆமருவிக்கு எனது நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தாமதாமாக இந்த விருது பற்றி வெளியிட்டதற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

42 thoughts on “வந்தது விருது!

  1. நீண்ட நாட்களுக்குப்பின் ‘மீண்டும் விருது’ என விருது வழங்கிடும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் என் மனதுக்கு மட்டும் சற்றே கவலையாகவும் உள்ளது. ஏனெனில் தங்களுக்குக் கிடைத்த இந்த விருதினை என்னுடன் பகிர்ந்துகொண்டு விட்டீர்கள் …… அதனால் தான். 🙂

    ஏற்கனவே இதுபோல ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் அடியேன், இதனை என் வீட்டில் எங்கே பத்திரப்படுத்தி வைப்பது என்பது கவலை முதல் கவலையாக உள்ளது.

    >>>>>

    1. வீட்டில் இடம் இல்லையென்றால் மனதில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் என்றைக்கும் நிலையானது.

  2. நன்றி! நன்றி! தாங்கள் அன்புடன் எனக்களித்த “ THE VERSATILE BLOGGER AWARD “- ஐ மூன்றாம் முறையாக ஏற்றுக் கொள்கிறேன். ஏற்கனவே சகோதரி கவிஞர் சசிகலா (தென்றல்) நாள் 21.02.12 ) மற்றும் சகோதரி யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள்) 10.06.12 ) இருவரும் இதே விருதினைத் தந்துள்ளார்கள். (உங்கள் பெயரினையும் (08.09.14) சேர்த்துள்ளேன். வலது பக்கம் பார்க்கவும். -> -> )

    1. வாங்க தமிழ் இளங்கோ ஸார்!
      நான் சொன்னவுடனே வந்து விருதினைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்ததற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் தளத்தில் எனது பெயரையும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். நன்றி!

  3. இரண்டாவது இது சம்பந்தமாக நான் ஒரு பதிவு வெளியிட வேண்டும். அதில் என்னைப்பற்றி நானே கொஞ்சம் சொல்ல வேண்டும். விருது அளித்த தங்களுக்கும் என் நன்றியினைச் சொல்ல வேண்டும். நான் மேலும் சிலருக்கு விருதினைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இதற்கெல்லாம் எனக்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது?? …… நினைத்தாலே எனக்கு மயக்கமாக வருகிறது 🙂

    என் வலைத்தளத்தில் தொடர்ந்து விமர்சனப்போட்டிகள் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், நேர நெருக்கடிகள் அதிகமாகி விட்டன. நான் தினமும் விரும்பிச்செல்லும் சிலரின் பதிவுகளுக்கும்கூட என்னால் செல்ல முடியாமல் அல்லவா உள்ளது !

    >>>>>

    1. நிதானமாக உங்கள் விமர்சனப் போட்டிகள் எல்லாம் முடிந்த பின் இந்த விருதினையும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  4. நான் இதுவரை இதுபோல 2012ம் ஆண்டு வாங்கிய விருதுகள் மொத்தம்: 12

    அவை:

    FABULOUS BLOG RIBBON AWARD FROM LATHA ON 12.08.2012 [12th]

    SUNSHINE BLOGGER AWARD FROM R.PUNITHA ON 28.07.2012 [10th]

    THE BEST ENCOURAGER AWARD FROM RIYAA ON 04.07.2012 [9th]

    AWESOME BLOGGER AWARD FROM Mrs. USHA SRIKUMAR ON 20.06.2012 [7th]

    AWESOME BLOGGER AWARD FROM Mrs. VIJI PARTHIBAN ON 02.07.2012 [8th]

    LIEBSTER BLOG AWARD [GERMAN] FROM Mrs. CHANDRAGOWRI ON 06.02.2012 [2nd]

    LIEBSTER BLOG AWARD [GERMAN] FROM Mr. HARANI ON 06.02.2012 [3rd]

    LIEBSTER BLOG AWARD [GERMAN] FROM Mrs. THENAMMAI LAKSHMANAN ON 16.02.2012 [5th]

    LIEBSTER BLOG AWARD [GERMAN] FROM LEELA ON 11.08.2012 [11th]

    THE VERSATILE BLOGGER AWARD FROM Mrs. USHA SRIKUMAR ON 04.02.2012 [THE VERY FIRST]

    THE VERSATILE BLOGGER AWARD FROM Mr. E S SESHADRI ON 15.02.2012 [4th]

    THE VERSATILE BLOGGER AWARD FROM MIRA ON 06.06.2012 [6th]

    தாங்கள் இன்று தந்துள்ள இந்த THE VERSATILE BLOGGER AWARD நான்காம் முறையாக எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிக்க மகிழ்ச்சி.

    இந்த ஆண்டிற்காக முதல் விருது தங்கள் கைப்பட வாங்கியுள்ளதில் எனக்கும் சந்தோஷமே. மிக்க நன்றி.

    அன்புடன் கோபு [VGK]

    1. வாங்க கோபு ஸார்!
      எத்தனை முறை கொடுத்தாலும், பெறத் தகுதியானவர் நீங்கள். நீங்கள்தான் முதன்முதலில் விருது கொடுத்தவர். என்னால் ஆன சின்ன கைம்மாறு இது. எனது வேண்டுகோளுக்கு இணங்க பெற்றுக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றி!

  5. “ THE VERSATILE BLOGGER AWARD “ பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! அதனைப் பகிர்ந்தளித்த சகோதரிக்கு நன்றி! சில மாதங்களாகவே சோர்ந்து இருக்கும் வலைப்பதிவு உலகம் மீண்டும் உற்சாகம் பெற்று எழும் என்பதில் ஐயமில்லை!

    திரு V.G.K என்று மரியாதையாகவும், கோபு அண்ணா என அன்போடு மற்றவர்களாலும் அழைக்கப்படும் மூத்த வலைப்பதிவர் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த விருதை வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவார்டுகளாக வாங்கி குவித்து அதை மற்றவர்களுக்கும் வாரி வழங்கியவர் திரு V.G.K. நகைச்சுவையாகச் சொல்வதென்றால் திருப்பதிக்கே லட்டு கொடுத்து விட்டீர்கள்.

    விருதினைப் பெற்ற பழனி கந்தசாமி (மன அலைகள்), ஜோதிஜி (தேவியர் இல்லம்), ராஜலக்‌ஷ்மி பரமசிவம் (அரட்டை), துளசி கோபால் (துளசி தளம்) மற்றும் கீதா சாம்பசிவம் (எண்ணங்கள்) ஆகியோரது வலைத்தளங்களில் அவர்களுடைய கட்டுரைகளை அடிக்கடி வாசிப்பவன்.

    காமாட்சி மகாலிங்கம் (சொல்லுகிறேன்), விஜயா (சின்னு ஆதித்யா), பாண்டியன் (கடைசி பெஞ்ச்) ஆகியோர் எனக்கு அறிமுகம். இவர்களோடு எனது பெயரையும் சேர்த்தமைக்கு நன்றி!

    அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    1. இந்த விருதுகளின் சிறப்பே குவிந்து கிடக்கும் பதிவுகளிலிருந்து நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க உதவுவதுதான். அனைத்தையும் பீட்லியில் சேர்த்திருக்கிறேன். அறிமுகங்கள் என்றுமே மகிழ்வு தருபவை. தளம் அமைத்துத் தந்த பதிவர் அம்மாவிற்கு நன்றி.

      1. // அனைத்தையும் பீட்லியில் சேர்த்திருக்கிறேன். // புரியவில்லை, பாண்டியன். கொஞ்சம் விவரம் தேவை. இணைப்புக் கொடுக்க முடியுமா?

    2. வாங்க இளங்கோ ஸார்!
      என்னுடைய சோர்வை நீக்கிய விருது பலருக்கும் உற்சாகம் கொடுக்கட்டும். விருது கொடுப்பதன் காரணமே இதுதான்.
      இரண்டாம் முறையாக வருகை தந்ததற்கு நன்றி!

    1. வாங்க ஸ்ரீராம்,
      நிச்சயம் இந்த விருது எனக்கு புத்துணர்ச்சி கொடுத்திருப்பது உண்மை. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  6. விருது பெற்றமைக்கும், விருது பெற்றவர்களுக்கும் , இனி பெறப் போகிறவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

  7. தமிழ் பதிவுலகிற்கு இந்த விருது ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தாமதமாக வந்தாலும் பரபரப்பாக விருதுடன் எக்ஸ்பிரஸ் ரயில்போல வந்தமைக்கு நன்றிகள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  8. உங்கள் பின்னூட்டத்தை என் தளத்தில் படித்ததும் சற்று நேரம் ஒன்றுமே புரியவில்லை. அட…. எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் விருது பரிந்துரைத்தது, என் எழுத்தை செம்மைப் படுத்த நிச்சயம் உதவும். நன்றி ரஞ்சனி.

    இந்த விருது என் தளத்தில் இருப்பதை நினைவில் கொண்டு பதிவுகள் எழுத வேண்டும் என்பதை மனதில் வைக்கிறேன்.

    என்னோடு விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல.
    மீண்டும் நன்றி ரஞ்சனி.

    1. வாங்க ராஜி!
      உங்களுக்கு இந்த விருது எல்லாவிதத்திலும் பொருந்தும். உங்களுடைய தளத்தில் இதைப் போட்டுக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் தெரியட்டும்.
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  9. இன்னும் பலப்பல விருதுகள் நீங்கள் வென்றிட என் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்மா.

  10. வாழ்த்துகள் அம்மா. புத்துணர்வு பெற்றதில் மகிழ்ச்சி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  11. விருது கிடைத்தமைக்கு நன்றி. என் பெயரையும் பரிந்துரை செய்ததுக்கு மீண்டும் நன்றி. ஏற்கெனவே இந்த விருது கிடைத்திருக்கிறது. இப்போது நீங்களும் பரிந்துரை செய்தமைக்கு நன்றி. கொஞ்சம் இடைவெளி விட்டபின்னர் உங்களுக்கு நன்றி கூறியும், நானும் எனக்குத் தெரிந்த சிலரை கௌரவித்தும் எழுதுகிறேன். நன்றி ரஞ்சனி.

    வீட்டில் எல்லோரும் சுகமாக இருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏற்கெனவே பின்னூட்டம் கொடுத்த நினைவு. ஆனால் அது போகவில்லை என நினைக்கிறேன்.

    1. வாங்க கீதா.
      எல்லா விருதுகளுக்கும் பொருத்தமானவர் நீங்கள். இது நான் எனது மகிழ்ச்சிக்காக உங்களுடன் பகிர்ந்து கொண்டது.

      இப்போது வீட்டில் நிலைமை சற்று பரவாயில்லை. நிதானமாக எழுதுங்கள்.
      நன்றி!

  12. ரஞ்ஜனி உங்களுக்கு இந்த விருது கிடைத்ததற்கு மிகவும் எல்லையில்லா மகிழ்ச்சி. நேற்றே ஃபேஸ் புக்கில்பார்த்தேன் உங்கள் தளத்தில். இன்று தளத்திலேயே பார்த்தேன்.
    விருதுகளெல்லாம் எப்படி கிடைக்கிறது என்று யோசனைகள் செய்ததுண்டு.
    இப்போதுதான் புரிகிறது.
    என்னையும் பரிந்துரை செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. இந்த லிங்க் கொடுப்பது முதலானது எனக்குச் சற்று நிதானமாகும்..
    நான் ஸரியான உடல் நலத்துடனும் இல்லை. விரைவில் செய்கிறேன்..
    மீண்டும் ஒருமுறை கௌரவம் அளித்ததற்கு நன்றி கூறுகிறேன்.
    ஆ.பக்கங்கள் நான் ரஸித்துப் படிப்பதுண்டு..யாவரின் நலம் விழையும் அன்புடன்.
    விருது பெற்ற யாவருக்கும் நல் வாழ்த்துகள்.

    1. வாங்க காமாக்ஷிமா,
      உங்கள் ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றி. நிதானமாக எழுதுங்கள்.

  13. அன்பு ரஞ்சனி உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    அந்த விருதில் பங்களித்து என்னையும் கௌரவித்ததற்கு மிகவும் நன்றி விருது கொடுக்கும் அளவிற்கு எழுதியுள்ளேனா என்று எனக்கே வியப்பாக உள்ளது. படித்த பல நல்ல விஷயங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி மகிழ்ச்சி விருது கொடுத்து எழுத்துலகில் அடிவைத்த என்னை உற்சாகப்படுத்தி மிகவும் நன்றாக எழுத வேண்டும் என்ற எனது பொறுப்பை அதிகமாக்கிவிட்டீர்கள் நன்றி விருது கிடைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

    1. வாங்க விஜயா!
      விருது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. இன்னும் பல பல விருதுகள் கிடைக்க வாழ்த்தக்கள்!
      நன்றி!

  14. வணக்கம் !
    வாழ்த்துக்கள் அம்மா மென்மேலும் இது போன்ற விருதுகள் வந்து குவியட்டும் !
    தங்கள் மூலமாக இன்று விருதுகளை வென்று சென்ற என் வலைத்தள
    சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
    உரித்தாகட்டும் !

Leave a comment