தென்றல் …. முதல் மின்னூல்

இந்தப்பதிவில் இரண்டு செய்திகள்.

thendral

முதல் செய்தி:

‘உங்கள் பதிவுகள் வருவது ரொம்பவும் குறைந்துவிட்டது வருத்தமாக இருக்கிறது’ என்று திரு ஓஜஸ் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். உண்மைதான். கொஞ்சநாட்களாக மனதில் சிறிது தொய்வு. நிறைய காரணங்கள். வழக்கமாகப் போகும் தளங்களுக்கும் போகவில்லை.

அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்டு எழுதுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பிக்க நினைத்தேன். அதற்குக் கட்டியம் கூறுவதுபோல அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எனது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்ட செய்தி எனது தோழி திருமதி சித்ரா சுந்தர் மூலம் தெரியவந்தது. இணைப்புக் கொடுக்கிறேன். ஆனால் தென்றல் இதழ் உள்ளே போக பதிவு செய்து கொள்ளவேண்டும். பயனர் பெயர், பாஸ்வேர்டு வேண்டும்.

வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் என்னைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நான் எழுதும் குழந்தைகள் வளர்ப்பு தொடர், அறிவியல் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நன்றி தென்றல் இதழ்! என்னுடன் எனக்குத் தெரிந்த நிறைய பெண்பதிவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். எல்லோர்க்கும் பாராட்டுக்கள்.

 

 

தென்றலின் பாராட்டுரை:

தென்றல் இதழில் வந்த வலைத்தள அறிமுகம்.

மார்ச் 2014

 

ரஞ்சனி நாராயணன் என்ற தனது பெயரையே வலைப்பதிவுக்கும் வைத்திருக்கும் இவர் மருத்துவம், சமூகம், அறிவியல், குழந்தை வளர்ப்பு பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வருகிறார். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். குழந்தைகள் ஏன் பொய் சொல்லுகிறார்கள்? என்ற கட்டுரை புதிதாகப் பல விஷயங்களைச் சொல்கிறது. பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள், விசித்திர தோற்றங்களில் பால்வெளிகள், மரபணுக்கள் என்று பல அறிவியல் தகவல்கள் வியப்பளிக்கின்றன. பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பாளரும் கூட. விவேகானந்தர் பற்றி இவர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இணைய இதழ்களிலும் வலைப்பதிவிலும் சிறந்த பங்களிப்புகளைத் தந்து வருகிறார், 60 வயது கடந்த இந்த இளைஞி.

 

மேலேயிருக்கும் படத்தில் வலமிருந்து இரண்டாவதாக என் அழகிய முகம்!

 

நன்றி தென்றல் இதழ்!

ebook

அடுத்த விஷயம்:

எனது வலைப்பதிவில் இருக்கும் சில பதிவுகளின் தொகுப்புகள் மின்னூலாக வெளிவந்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எனது எழுத்துக்கள் எனது எழுத்துக்களாகவே வெளிவந்திருப்பது எத்தனை ஆறுதலைக் கொடுக்கிறது, தெரியுமா? இந்த என்னுடைய முதல் மின்னூலின் பெயர்:

சாதாம்மிணியின் அலப்பறைகள்

இந்த இணைப்பை சொடுக்கி புத்தகத்தை தரவிறக்கலாம்.

எனது வலைத்தளத்திலிருந்து தொகுக்கப்பட்டபதிவுகளை இந்த மின்னூலில் படிக்கலாம். ஒரே இடத்தில்  முப்பது பதிவுகளை வரிசையாகப் படிக்கலாம். சில நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மின்னூல் என்பதால் நீங்கள் அதை தரவிறக்கம் (download) செய்துகொள்ள வேண்டும். அந்தத் தளத்திலேயே தரவிறக்கம் பற்றி விவரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

freetamilebooks.com திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், திரு ரவிசங்கர் அய்யாக்கண்ணு அவர்களுக்கும் நல்ல முறையில் எனது மின்னூலை கொண்டு வந்ததற்கு முதலில் நன்றி. இதை அழகாக வடிவமைத்துக் கொடுத்த திரு கி. சிவ‍கார்த்திகேயன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பு செய்த திரு ‘ப்ரியமுடன் வசந்த்’ அவர்களுக்கும் நன்றி.

படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

38 thoughts on “தென்றல் …. முதல் மின்னூல்

  1. அருமையான தொகுப்பு 🙂
    வாசிக்க காத்து இருக்கிறேன் பதிவுகளுக்கு காத்து இருக்கிறோம் 🙂

  2. மீண்டும் அதே வேகத்துடன் வளம் வாருங்கள். உங்க மின்நூலை தான் படித்து கொண்டிருந்தேன். அம்மா பத்தி எழுதும் போது, உருகி போய், நெகிழ வைக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

    1. வாங்க ஓஜஸ்!
      நிச்சயம் அதே உற்சாகத்துடன் வலம் வர இருக்கிறேன்.
      படித்து முடித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
      நன்றி!

    1. வாங்க தியானா!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
      படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

    1. வாங்க ஸ்ரீராம்!
      படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், உங்கள் தளத்தில் என்னைக் குறிப்பிட்டதற்கும் மறுமுறை நன்றி!

  3. வாழ்த்துகள் ரஞ்சனி. இனிய தென்றலாக உங்கள் எழுத்தும் வாசகர் மனதில் வீசி இடம் பெறட்டும்.

    1. வாங்க கீதா!
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்கள் கைலை யாத்திரை படித்து முடித்துவிட்டேன். மின்னூலுக்கு மதிப்புரை எழுதலாமா?

      1. தாராளமாய் எழுதுங்கள். கூடவே எழுதும்போது நான் செய்திருக்கும் தவறுகள், தவிர்த்திருக்க வேண்டியவை ஆகியவற்றையும் குறிப்பிடவும். மறக்காமல் குறிப்பிடவும். அப்போது தான் வரும் நாட்களில் கவனமாக இருக்க இயலும். நன்றி ரஞ்சனி. உபநயனம் மின்னூலையும் படித்துக் கருத்துச் சொல்லவும்.

    1. வாங்க, தமிழ் இளங்கோ ஸார்!
      படித்துவிட்டு சொல்லுங்கள், ப்ளீஸ்!
      நன்றி

  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா…. மீண்டும் புத்துணர்வுடன் எழுதுங்கள்… கவலைகள் இல்லாதோர் யார்…. தொடர்ந்து உங்கள் எழுத்துகளைப் படிக்க நாங்கள் இருக்கிறோம்.

    மின்புத்தகம் தரவிறக்கம் செய்து படித்து விடுகிறேன் – இந்த வார விடுமுறையில்…..

    தொடர்ந்து சந்திப்போம்……

    1. வாங்க வெங்கட்!
      மிகுந்த ஆறுதலைச் சொல்லியிருக்கிறீர்கள்.
      படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
      வருகைக்கும், இதமான சொற்களுக்கும் நன்றி!

  5. தென்றல் வீசினால் எல்லோருக்கும் சுகம்தான். தென்றலை மறுப்பவர்களோ வெறுப்பவர்களோ இருக்கமுடியாது. தென்றல் வீசப் போவதை அறிய மிகவும் சந்தோஷம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரஞ்சனி காத்திருக்கிறேன் கதவையும் ஜன்னலையும் திறந்து வைத்துக்கொண்டு தென்றலின் வருகைக்காக

    1. வாங்க விஜயா!
      மின்னூலைப் படித்துவிட்டு சொல்லுங்கள்.
      நன்றி!

    1. வாங்க ராமலக்ஷ்மி!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    1. வாங்க டொக்டர்!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  6. வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் அறிமுகமானதற்கு இனிய வாழ்த்துகள் பாராட்டுக்கள்..!

    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  7. வணக்கம் அம்மா
    தங்களின் பதிவுகளை மின்னூலாக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் சிந்தனைகள் என்னைப்போன்ற இளைஞர்களுக்கும், நம் சகோதரிக்களுக்கு நிச்சயம் பயன்படும் என்பது தான் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தென்றல் இதழ் அறிமுகத்திற்கும் மின்னூலுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும் வணக்கங்களும் அம்மா. தொடர்வோம். நன்றி..

    1. வாங்க பாண்டியன்!
      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
      என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இன்னொரு நன்றி!

  8. சூப்பர் !! வாழ்த்துக்கள் அம்மா 🙂 மின்னூல் தரவிரக்கிக்கொண்டேன்

    1. வாங்க விஜயன்!
      நன்றி விஜயன், வாழ்த்துக்களுக்கும், புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொண்டதற்கும்.

  9. வாழ்த்துக்கள் அம்மா! மின்னூல் வெளியீட்டிற்கும் தென்றல் இதழில் வாழ்த்து பெற்றதற்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னுடைய சில படைப்புக்களும் (ஜோக், ஹைக்கூ) பாக்யா வார இதழில் வெளிவந்துள்ளன. உங்களின் ஆசிகளை வேண்டி http://thalirssb.blogspot.com/2014/03/my-haikoo-in-bhagya-weekly.html

    1. வாங்க சுரேஷ் பாபு!
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      உங்களுடைய பதிவையும் படித்து பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  10. என்னால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை. ரஞ்சனி. தென்றல் இத்ழையே வாங்கிப் படிக்கலாம் என்று நினிக்கிறே. எந்த மாதம் எந்ன்று சொல்லுங்காள். மிக மிக சந்தோஷ்ம்.

    1. வாங்க வல்லி!
      உங்கள் வருகை மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. 2014 மார்ச் இதழ். வாங்கிப் படியுங்கள்.
      நன்றி!

  11. இன்று சீனிவாசன் அவர்களுக்கு ஆண் குழந்தை காலையில் பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    அமெரிக்கா வரைக்கும் விசா எடுக்காமல் சென்று வெற்றிக் கொடி நாட்டிய அம்மாவுக்கு (இது தமிழ்நாட்டு அம்மா அல்ல) எங்கள் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

    1. வல்லமை குழு மடலிலில் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்.

      தேவியர் இல்லத்தின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

Leave a reply to ranjani135 Cancel reply