காதல் கடிதம் எழுதத் தயாரா?

யாரெல்லாம் தயார்?

நீங்கள் இதுவரை எழுதாத, ஆனால் ஒரு கனவு தேவதைக்கு எழுதத் துடித்த காதல் கடித்ததை எழுதத் தயாரா?

கனவுக் கன்னி கிடைக்கிறாளோ இல்லையோ, பரிசு நிச்சயம் கிடைக்கும்.

பதிவு உலகத்தில் ‘திடங்கொண்டு போராடு’ என்னும் தளத்தில் அமர்க்களமாய் எழுதி அசத்தி வரும் திரு சீனு தனது தளத்தில் ஒரு பரிசுப்போட்டியை அறிவித்திருக்கிறார்.

இதோ அவரே சொல்கிறார், கேளுங்கள்:

 

அன்பான பதிவுலகத்திற்கு வணக்கங்கள்,

 

இதுவரை யாருக்குமே காதல் கடிதம் எழுதியதில்லை, எழுதாத ஒரு காதல் கடிதத்தை கற்பனையாய் எழுதினால் என்ன என்ற ஒரு உணர்வு, ஒரு மாலை வேளையில் என்னுடன் சேர்ந்து கொண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தது.

 

என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பாலர் வகுப்பில் தொடங்கி இதோ இந்தக் கணம் என் முன் தோன்றி ஏதோ ஒருவிதத்தில் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகின்ற அந்த திடீர் பெண் மீது வரும் திடீர்க் காதல் வரை அத்தனை நியாபகங்கள் வந்து செல்கின்றன.

 

சரி பள்ளியில் தொடங்கி, திடீரென்று முன் தோன்றும் அந்த அழகு தேவதைகள் வரை ஒவ்வொருவருக்காய் அடுக்கடுக்காய் கற்பனைக் கடிதங்கள் எழுதலாம் என்ற சிந்தனைக்கு வந்தேன். நான் மட்டுமே எழுதினால் கொஞ்சம் போர் அடிக்கும், துணைக்கு பதிவுலக நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு தொடர் பதிவாய் எழுத ஆரம்பித்துவிடலாம் என்ற அளவில் அந்தக் காதல் கடித எண்ணம் சற்றே உரு ஏறியிருந்தது.

 

இந்தக் காதல் கடிதம் எழுதும் எண்ணம் இன்னும் மெருகேற ஏன் இதையே ஒரு போட்டியாக வைக்கக் கூடாது என்ற விபரீத ஆசை எழுந்ததன் விளைவு இப்பதிவு.

 

மீதி விவரம் இங்கே படிக்கவும்.

 

வோர்ட்ப்ரெஸ் – சில் தங்கள் முத்திரை பதிக்கும் அத்தனை பதிவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்

 

30 thoughts on “காதல் கடிதம் எழுதத் தயாரா?

  1. தலைப்பு ரொம்ப நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இந்த வயதில் கற்பனை செய்வது அவ்வளவு நன்றாக இருக்குமா? தெரியவில்லை எதற்கும் முயன்று பார்க்கலாம் என்றே தோன்றுகிறது

    1. வாருங்கள் விஜயா!
      காதலுக்கு கண் மட்டுமில்லை, வயதும் கிடையாது. உங்கள் புகைப்படத்தை வேண்டுமானால் கொஞ்சநாளைக்கு (போட்டி முடிவு வரும் வரை!) போடாதீர்கள்!
      ஹ……ஹா…..ஹா….!

    1. நீங்களும் எழுதுங்கள் தனபாலன்!
      கருத்துரைக்குப் பதிலாக காதல் கடிதம்!

    1. வா கண்மணி! நீயில்லாமல் ஒரு காதல் கடிதமா? உன் பெயரில் தான் முக்கால்வாசி காதல் கடிதங்கள் துவங்குகின்றன?

      பெஸ்ட் விஷஸ்!

  2. நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்றால் என் தொகுப்பையும் அனுப்பி வைக்கிறேன்

    1. வாருங்கள் முகுந்தன்!
      காதலின் மகத்துவத்தை என்ன சொல்ல?
      போட்டியின் நிபந்தனைகளை நான் மேலே கொடுத்துள்ள இணைப்பில் போய் படித்துவிட்டு அங்கு கொடுத்திருக்கும் இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள், ப்ளீஸ்!

  3. என்னைப் பற்றிய மிக உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா.. இருந்தால்லும் அவ்வளவு பெரிய கருத்துகளுக்கு தகுதியானவான என்று தெரியவில்லை, தகுதி படுத்திக் கொள்கிறேன்.

    பரிசுப் போட்டியில் நடுவராக இருக்க சம்மதித்த உங்களுக்கு மிக்க நன்றி….

    1. வாருங்கள் சீனு!
      என்னைக் காதல் கடிதம் எழுதச் சொல்லாதவரை எனக்கு ஓகே தான்!

      இந்தப் போட்டி வெற்றிகரமாக நடை பெற என் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!
      Best Wishes!

      1. வா ஜெயந்தி!
        ஆமாம், வேறு வகையான அனுபவத்திற்குத் தயாராகி வருகிறேன்.
        வாழ்த்துக்களுக்கு நன்றி!

  4. தலைப்பே நல்லாருக்கு.அப்படின்னா ஜாலியா படிக்கலாம்.

    கனவுக் கன்னி கிடைக்கிறாளோ இல்லையோ, பரிசு(?????????) நிச்சயம் கிடைக்கும்_____முதலில் வீட்டில் கிடைக்கும் பரிசுன்னு!!! நெனச்சுட்டேன். பிறகு அங்கு போய் பார்த்துதான் அது பண பரிசுன்னு தெரிந்த‌து.நடுவருக்கு வாழ்த்துக்கள்.

    1. வாருங்கள் சித்ரா!
      நீங்களும் எழுதுங்கள்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி!

  5. இந்தப் போட்டிக்கு மிகச் சிறப்பான அறிமுகம் தந்திருக்கீங்கம்மா. நீங்களும் ஒரு நடுவராகிட்டதால நாங்கல்லாம் ரொம்ப ஃப்ரீயாக்கும்! ரிலாக்ஸ்ரா கணேஷா!

    1. வாங்க கணேஷ்!
      நீங்கள் மூவரும் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த பதவியை ஏற்றுக் கொண்டதே!
      நால்வருமாகச் செய்வோம்!

    1. வாருங்கள் கவிஞரே!
      காதலுக்கு எதுவுமே தடையில்லை. இந்தப் போட்டியில் உங்களது பங்களிப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  6. மாமி, உங்க காதல் கடித’ங்களில்’ ஒன்னு எடுத்து, இங்க publish பண்ணுங்க, எங்களுக்கு அது ஒரு blue-print மாதிரி இருக்கும் 😉

    1. என்ன அம்பி ஆளையே காணோம்!
      என்னுடையது ஏற்கனவே வந்திருக்கிறதே!
      இணைப்பு: http://wp.me/p244Wx-s5

      நீங்களும் தமிழும் கட்டாயம் இந்தப் போட்டியில் பங்கு பெற வேண்டும், சரியா?

      1. மாமி, அதை முன்னமே பார்த்துள்ளேன், முழுமையான கடிதம் அதில் இல்லை. முழுசா ஒன்னு போடுங்க. அதான் நிறைய வச்சு இருக்கீங்கள……

        போட்டிக்கு நான் எழுதவில்லை, ஆனலும் கடிதம் வரைய முயற்சி செய்கிறேன். தமிழிடம் சொல்கிறேன் 🙂

  7. தகவலுக்கு நன்றி…. போட்டிக்கு நான் தயாராகி விட்டேன்… ஜூரிகளில் நீங்களும் ஒருவர் என்பதால் எனக்கு கவலை இல்லை….

    1. வாருங்கள் ஜெயராஜன்!
      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
      கடிதம் எழுதி அனுப்பிவிட்டீர்களா?
      வெற்றி பெற வாழ்த்துகள்!

    1. வாருங்கள் பழனிவேல்!
      நல்ல சமயத்தில் வந்தீர்கள். நீங்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்களேன், ப்ளீஸ்!
      ஜூலை 20 கடைசி தேதி.
      உங்களது பங்களிப்பை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.

      1. தங்களிடம் ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன்.
        என் இளங்கலை பட்டப் படிப்பின் போது ஒரு காதல் கடிதம் எழுதினேன்.
        அதன் பின் காதல் கடிதமாக எழுதுவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.
        காரணம், என் முதல் கற்பனைக் காதலை(கடிதத்தை) மறக்காமல் என் மனைவிடம் தர வேண்டும்.
        அதுதான் யோசிக்கிறேன்…
        மேலும் போட்டிக்கு தகுதி எனக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்…

      2. அன்புள்ள பழனிவேல்,
        உங்களது உணர்வுகளை மதிக்கிறேன்.
        கூடிய விரைவில் உங்கள் ஆசை நிறைவேறட்டும்!

Leave a reply to vijikumari Cancel reply