Uncategorized

ஏமாறாதீங்க… இது உங்க பணம்!

nose ring

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்:

நம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இத படிங்க!

 

 

நண்பர்களே! படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல் நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.

 

அவர் சொன்னது இதுதான்.

 

 

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றிவிசாரித்ததோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித்தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

 

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்றுமுழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

 

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர்யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை?’ என்பதே அவரது நியாயமான கேள்வி.

 

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய்வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

 

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில்“ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

 

 

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்தஅதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

 

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறுரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

 

 

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்றுஇருக்கும்.

 

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம் தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

 

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

 

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக்கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

 

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக்கடை திறக்க மாட்டான்?

 

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

 

கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும்.

 

விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…! இந்த செய்தியை அவரவர்கள் அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து அனுப்புங்கள், தயவுசெய்து……nose ring

 

Advertisements

13 thoughts on “ஏமாறாதீங்க… இது உங்க பணம்!

 1. நிஜம்தான். இதைக் கூட ஒரு வெளிநாட்டுப் பெண்மணி சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டிய நிலை! எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார்கள், விட்டது அரசாங்கம்?, விட்டோம்? யாராவது பொதுநல வழக்குப் போடா முடியாதோ? (அதுகூட பாருங்கள், யாராவதுதான்! நான் போடுகிறேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை!) சிறுகடைகளுக்கும் ஆயிரம் விதிகள் வைத்துள்ள அரசாங்கம் எப்படி இதைக் கண்டு கொள்ளவில்லை!

 2. அட! நாங்க ஒவ்வொரு முறை நகைக்கடைக்குப் போகும்போதும் இந்த விஷயம் குறித்து நகைக்கடைக்காரங்க கிட்டே பல முறை வாதாடிப் பார்த்தாச்சு. ஒண்ணும் நடக்கலை! ஶ்ரீராம் சொல்றாப்போல் பொதுநல வழக்குப் போட்டால் தான் தீர்வு கிடைக்கும். 😦

 3. நாமெல்லோரும் சேர்ந்து நமக்குப் புன்னகை போதும், பொன்னகை வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாலே, நகை சேதாரத்திற்கு மட்டுமில்லை நகைக் கடைகளுக்கே மூடு விழாக் கொண்டாடி விடலாம் . ஆனால் பூனைக்கு யார் மணிக் கட்டுவது?
  நல்ல விழிப்புணர்வுப் பதிவு ரஞ்சனி.
  வாழ்த்துக்கள்.

 4. இத்தனை நாள் இதெல்லாம் தெரியாமல், யோசிக்காமல் ஏமாந்திருக்கின்றோமே என்று வெட்கமாகவும் இருக்கின்றது சகோதரி! மிக மிக நல்ல பகிர்வு. நிச்சயமாக எல்லோருக்கும் இதைப் பகிர்கின்றோம். எல்லோரும் கடையில் கேட்கத் தொடங்கினால் நடைமுறைக்குக் கொண்டுவந்து தானே ஆக வேண்டும் இல்லையா?!!!
  மிக்க நன்றி!

 5. அதிக வேலைப்பாடுகள் உள்ள நகைக்குக் கூடுதல் சேதாரம். இது இல்லை என்றால் கூலியை உயர்த்தி வேறு விதத்தில் பணம் வசூலிப்பார்கள். யோசனையே இல்லாமல் நகைகளை அடிக்கடி மாற்றி ,நகையின் மதிப்பைக் குறைவாகச் செய்து கொண்டு, நாகரீகம் என்ற பெயரில் உலா வருபவர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.. தங்கம் வாங்குபவர்களும், விற்பவர்களும் அதற்கென மாற்று யோசனைகளைத் தயாராக வைத்திருப்பார்கள். தங்க நகைகளை ரெடிமேடாக
  வாங்கும் காலமுதல் நாளுக்குநாள் சேதாரம் கூடிக்கொண்டே வருகிறது.
  உங்கள் கட்டுரை மூலம் ஏதாவது விழிப்புணர்ச்சி ஏற்பட்டால் மிகவும் நல்லதே..
  ஐந்து பவுன் நகையை மாற்றி நான்கு பவுன் கூடத் தேராத நகையை தெர்ந்தெடுத்துக்
  கூடவே பணமும் கொடுத்து விட்டு ஸந்தோஷமாக வீட்டுக்கு வரும் பெண்மணிகள்
  யோசிக்க வேண்டும். நஷ்ட உணர்வு எல்லோரும் உணர்ந்தால், ஒழிக்கப் பாடுபட்டால் ஏதாவது நன்மை கிடைக்கலாம். உங்கள் கட்டுரையால் சாதிக்க முயற்சிக்க வேண்டும். பார்ப்போம். அன்புடன்

 6. வணக்கம்
  அம்மா

  தாங்கள் சொல்வது நியாயம் அம்மா என்ன செய்வது காலம் செய்த கோலம்.. தட்டி கேட்க முடியாது..என்று சொல்ல முயது. இவற்றுக்கு மக்க
  விழிப்படைய வேண்டும் அப்போதுதான் விடிவு பிறக்கும் .பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 7. பதபதவைக்கும் காணொளி
  தெளிவூட்டும் ரஜினி நாராயணன் அவர்களின்
  அற்புதமான பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

 8. அடடா இது உண்மை தானே சேதாரம் என்று அவர்கள் வீசப் போவதில்லையே. சேதாரம் வரத் தான் செய்யும் ஆனால் எவ்வளவு வரும் என்று தெரியவில்லை வந்தாலும் மீண்டும் அவர்கள் அதை சேர்த்து உருட்டி பொன்னாக்கி நகையாக்கலாமே. அப்படிப் பார்த்தால். எள்ளளவு சேதாரமும் வராது என்று தானே அர்த்தம் இது பெறரும் கொள்ளை யல்லவா. இது முன்னெடுத்துச் செல்லவேண்டிய பிரச்சினை தான்.
  மிக்க நன்றி ! பதிவுக்கு.

 9. தொடர்ந்து நடக்கும் கொள்ளை. அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. வாங்கும் மக்களும் பேசுவதில்லை…..

  ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் சொல்லுவது போல புன்னகை போதும் பொன்னகை வேண்டாம் என்று இருப்பது மேல்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s