குழந்தையை மேலே தூக்கிப் போட்டுப் பிடிக்காதீர்கள்!

creeping child

 

 

 

 

செல்வ களஞ்சியமே – 30

 

குழந்தைகளுக்கு வெளி ஆபத்துக்களை விட வீட்டினுள் ஏற்படும் ஆபத்துக்கள் தான் அதிகம் என்றால் வியப்பாக இருக்கும். மற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்தை விட மனிதர்களால் ஏற்படும் அபாயம் இன்னும் அதிகம்.

 

ஒருமுறை என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். என் மகள் அப்போது குழந்தை. வந்தவர் குழந்தையை ஒரே அலாக்காக தலைக்கு மேல் தூக்க, நான் ‘ஆ’ என்று அலறினேன். மேலே மின் விசிறி முழு வேகத்தில்……! அப்படியே குழந்தையை இறக்கிவிட்டு விட்டார். எல்லோருக்கும் படபடப்பு அடங்க சற்று நேரம் பிடித்தது.

 

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒருவர் தன்னிடம் வரும் குழந்தைகளையெல்லாம் மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். என்னால் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியவேயில்லை. போய் சொல்லிவிட்டு வரலாம் என்றால் என் கணவர் ‘சும்மா இரு. வந்த இடத்தில் எல்லாம் உன் அறிவைக் காட்டாதே’ என்றார். வேறு பக்கம் பார்த்து உட்கார்ந்துகொண்டேன்.

 

தூக்கிப் போட்டுப் பிடித்தால் என்ன ஆகும்?

 

டாக்டர் திரு கே. லோக முத்துக்கிருஷ்ணன் சொல்வதைப் படிக்க இங்கே 

5 thoughts on “குழந்தையை மேலே தூக்கிப் போட்டுப் பிடிக்காதீர்கள்!

  1. மிகவும் பயனுள்ள பதிவு. குழந்தைகளை மேலே தூக்கிப்போட்டு பிடிப்பது கூடவே கூடாது. மிகவும் ஆபத்தானது. அதுபோல யாராக இருந்தாலும் [தாய் தந்தையே ஆனாலும்] குழந்தைகளை முத்தமிட அனுமதிக்கவே கூடாது.

    1. வாருங்கள் கோபு ஸார்!
      எதோ விளையாட்டு என்று நினைக்கிறார்கள் ஆனால் எத்தனை ஆபத்து பாருங்கள்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  2. உங்கள்தி இந்தப் பதிவில் ஒரு தாயின் அக்கறையைக் காண்கிறேன் ரஞ்சனி.
    வாழ்த்துக்கள்….
    தொடருங்கள்…..

Leave a reply to வை. கோபாலகிருஷ்ணன் Cancel reply