புது வருட வாழ்த்துகள் · Uncategorized

புதிய வருடம் 2018

பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் நான் ரசித்த ‘புள்ளேறும் கள்வன்’ —————————- எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒவ்வொரு வருடமும் வருகிறது. வந்த சுவடே தெரியாமல் சென்று விடுகிறது.  ‘இந்த வருடம் சீக்கிரம் போய்விட்டது, இல்லை?’ என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒரே மாதிரி. அதேபோல எல்லோரும் தவறாமல் செய்வது கடந்து போன வருடத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது. கடந்து போன நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. அலைச்சல்,… Continue reading புதிய வருடம் 2018

என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

bloggers · India · Internet · Life · Tamil bloggers

85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

கீழே இருக்கும் ஆண்டு அறிக்கை வேர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டில் என் வலைதளத்தின் நிலை பற்றியது. இது என்னுடைய முதல் ஆண்டாகையாலே பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது. என் ரசிகர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!   The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog. Here’s an excerpt: 4,329 films were submitted to the 2012 Cannes Film Festival.… Continue reading 85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்!

bloggers · Humour · Tamil bloggers

பதிவு எழுத மூடு வேண்டுமா?

மூடு இல்லை…….! வேண்டும் – வேண்டாம் இரண்டு பதில்களையும் சொல்லலாம். சில நாட்கள் மிகவும் சுலபமாக எழுத்துக்கள் தாமாகவே வரும்; வளரும்; வடிவு பெறும். சில நாட்கள் என்ன செய்தாலும்……..ஊஹூம்! அப்போது என்ன செய்வது? அதையே ஒரு பதிவாகப் போட்டுவிடலாம். ‘என்ன எழுதுவது? எதை எழுதுவது?’ என்ற தலைப்பில்! அல்லது இதேபோல வேறு ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எழுதுங்கள். சிலருக்கு ஓட்டலில் ரூம் போட்டு எழுதினால் தான் வரும்; சிலருக்கு பூங்காவில் போய்… Continue reading பதிவு எழுத மூடு வேண்டுமா?

bloggers · Internet · Life

பெயர் சூட்டுவோம்!

என்ன நண்பர்களே, புதிய வலைத்தளம் உருவாக்குவது பற்றி நேற்றைய பதிவில் படித்து விட்டு, உங்களுக்கென ஒரு தளமும் உருவாக்கி விட்டீர்களா? பாராட்டுக்கள்! என்ன பெயர் வைப்பது என்று மூளையை கசக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று உதவி செய்து விட்டு பிறகு தலைப்புகளில் கவனம் செலுத்தலாமா? ஒரு குழந்தை பிறந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த, மிகவும் நாகரீகமான இதுவரை கேள்விப்படாத பெயர்களை வைக்க விரும்புவார்கள். அதேபோலத்தான் தனது  வலைத்தளம் தனித்துத் தெரிய வேண்டும் என்று ஒவ்வொரு வலைபதிவருக்கும் ஆசை… Continue reading பெயர் சூட்டுவோம்!

bloggers · Internet

வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்!

சென்ற வார வலைபதிவர் விழாவிற்கு பிறகு ‘வலைப்பதிவு’ என்னும் சொல்லுக்கே ஒரு தனித்துவம் வந்துவிட்டது! எத்தனை வலைப்பதிவர்கள்! எத்தனை வலைப்பதிவுகள்!  யுவர்கள், யுவதிகள், நடுத்தர வயதுடையவர்கள், 50+, 60+, 70+, 80+ என்று வயதைக்கடந்த ஒரு சமூகத்தைப் பார்க்க முடிந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த விழாவிற்கு முன்பாகவே சந்தித்து இருக்கிறார்கள். பலருக்கும் அவரவர் வலைத்தளத்தில் போட்டிருக்கும் புகைப்படம்தான் அடையாளம்! இத்தனை பதிவர்களா என்று வியந்தாலும் இன்னும் பலருக்கு வலைப்பதிவு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. அவர்களுக்காகவே… Continue reading வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்!

India · Internet · Tamil bloggers

தமிழ் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி!

      தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகின்றன. இந்த எட்டு மாதத்தில் நான் அறிந்தது என்னவென்றால்…….ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்களுக்கு நிறைய உற்சாகம் தருகிறார்கள்; எக்கச்சக்க விருதுகள், போட்டிகள்; பல இணைய தளங்களிலிருந்து ‘விருந்தாளி பதிவு’ (guest post) எழுத அழைப்புகள் என்று மிகக் குறைந்த காலத்தில் புகழ் பெற்றுவிடுகிறார்கள், ஆங்கிலப் பதிவர்கள்.   பல சமயங்களில் தமிழ் பதிவர்களுக்கும் இத்தகைய உற்சாகம், ஊக்குவிப்பு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றும்… Continue reading தமிழ் பதிவர்களுக்கு ஒரு நற்செய்தி!