கனவில் வந்த காந்தி

பேஷ்! பேஷ்! நல்ல பதில்கள்!

 

என்னை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்த திரு அ. பாண்டியனுக்கு என் மனமார்ந்த நன்றி.

 

http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.html

 

  1. நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

இராமானுச சம்பந்தம் இருப்பதால் மறுபிறவி கிடையாது. இராமானுசர் காலத்திலேயே எங்களுக்கு வைகுந்தத்தில் இடம் ரிசர்வ் ஆகிவிட்டது.

  1. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

முதலில் இலவசங்களை ஒழிப்பேன். நமது வரிப்பணத்தில் இருந்து நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பெயர் வாங்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பேன். உழைப்பவர்களுக்குத்தான் முதலிடம். வேலைவெட்டி இல்லாமல் திரிபவர்களை இராணுவத்தில் சேர்த்துவிட சட்டம் கொண்டுவருவேன். மாணவர்கள் எல்லோரும் – ஆண், பெண் உட்பட –பள்ளிக்கல்வி முடித்தபின் இரண்டு வருட இராணுவ சேவை கட்டாயம்.

கல்வி ஆரோக்கியம் இவற்றிற்கு முதலிடம்.

  1. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?

எனது திட்டங்கள் நிச்சயம் எல்லோரும் வரவேற்கும்படிதான் இருக்கும். ஹி….ஹி…. அரசியல்வாதி போலவே பேசுகிறேன் பாருங்கள்!

  1. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

முதியோர்களுக்கு ‘நா காக்க’ என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். யாரும் வாயைத்திறந்து மகனையோ மகளையோ குற்றம் சொல்லக்கூடாது. 70 வயதாகிவிட்டால் நிச்சயம் பிள்ளைகளுடன் தான் இருக்க வேண்டும். ‘நா காத்தல்’ அப்போது ரொம்பவும் அவசியம்! போனால் போகிறது என்று ப்ளாக் ஆரம்பித்து எழுதலாம். அங்கு யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பிள்ளைகளுடன் போடவேண்டிய சண்டையை அங்கு யாருடனாவது – மற்ற கிழவர்களுடன் / கிழவிகளுடன் போடலாம்.

  1. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?

அவர்களது வேலைத்திறன் பார்த்து சம்பளம் மக்கள் வழங்குவார்கள்! சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனே பதவியிறக்கம்!

  1. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?

இந்தக் கேள்வி இங்கு அவுட் ஆப் சிலபஸ் என்று நினைக்கிறேன். மாணவர்களைப் பற்றிப் பேசாமல் மதிப்பெண்களைப் பற்றி பேசுவது ஏன்?

  1. விஞ்ஞானிகளுக்கென்று….ஏதும் இருக்கின்றதா?

குறைந்த செலவில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் கண்டுபிடிப்புகளுக்கு அவர்களின் உதவியை நாடுவேன்.

  1. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

அடிப்படை தேவை எல்லோருக்கும் அவசியம் அல்லவா? அதனால் தொடருவார்கள்.

  1. மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

பெண்களின் அரசாங்கம் கொண்டுவருவேன். ஆட்சி முழுவதும் பெண்கள் கையில்!

  1. எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

பரமபதத்தில் ஏற்கனவே என் பெயரில் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது இறைவனுக்கும் தெரியுமே! அதனால் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கமாட்டார்.

நன்றி அ. பாண்டியன்!