என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

என் ரசிகர்கள்

கண்ணுக்குத் தெரியாத ரசிகர்கள்!

ஒருமுறை என் வகுப்பில் சேர ஒருவர் வந்திருந்தார். நடுவயசுக்காரர். அவரது ஊர் மங்களூரில் உள்ள குந்தாபுர. அங்கு மிகவும் பிரபலமான ஒரு பேருந்து நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் அந்த வருடம் ரோட்டரி சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவர் நன்றாகவே ஆங்கிலத்தில் பேசினார். ஆனாலும் அவருக்கு இன்னும் தனது ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை. தனி வகுப்பு – ஒரு ஆசிரியை – ஒரு மாணவர் என்றிருப்பது கேட்டிருந்தார். வாராவாரம் வெள்ளி, சனிக் கிழமைகளில்… Continue reading கண்ணுக்குத் தெரியாத ரசிகர்கள்!

Uncategorized

ஒரு தோழி பலமுகம்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி   பொழுதுபோக்கு இணையத்தில் எழுதுவது, புத்தகங்கள் படிப்பது. அவ்வப்போது கேண்டி க்ரஷ் விளையாடுவது, மற்றவர்கள் எழுதும் கதை, கட்டுரைகளைப் படித்து கருத்துத் தெரிவிப்பது. தொலைக்காட்சியில் நேஷனல் ஜியாக்ரபி சானலில் வரும் ‘ஸ்டோரி ஆப் காட்’ ரொம்பவும் பிடித்த நிகழ்ச்சி. தவறாமல் பார்ப்பேன்.   இயற்கை உங்கள் பார்வையில்… முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்ததால் இயற்கையுடன் அத்தனை நெருக்கம் இல்லை. ஆனால் தும்கூரில் இருந்த இரு வருடங்களில் வீட்டில் நிறைய செடிகள் வளர்த்தேன். என்… Continue reading ஒரு தோழி பலமுகம்

ரயில் பயணங்களில்

டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில் தொடர்ச்சி…… இரண்டாவது முறை இந்த டபிள் டக்கரில் (ஒரு எமர்ஜென்சி வேறு வழியில்லாமல் இந்த வண்டியில் போக நேரிட்டது.) போக நேர்ந்த போது ஒற்றை சீட் கிடைத்தது. அப்பாடா! ஒரு மகிழ்ச்சி பெருமூச்சு விட்டேன். அப்புறம் தான் தெரிந்தது அது எத்தனை பெரிய அசௌகரியம் என்று.   இருக்கையில் உட்கார முயன்றேன்.  கைப்பிடியை எடுத்துவிட்டு உள்ளே நுழையலாம் என்றால் அது பெர்மனென்ட் ஆக உட்காந்திருந்தது!  கஷ்டப்பட்டு என்னை திணித்துக் கொண்டு உட்கார்ந்தேன், எழுந்திருக்கும்போது பார்த்துக்… Continue reading டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில்

இரக்கமில்லாத நகரங்கள்!

ரயில்வே மட்டுமல்ல எந்தவித போக்குவரத்து சாதனங்களும் பயனீட்டாளர்களின் நண்பர்களாக இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க? வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே?’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.   அன்று ஒரு நாள் இரவு சென்னையிலிருந்து திரும்பி வந்து ஒரு வாடகை வண்டி ஏற்பாடு… Continue reading இரக்கமில்லாத நகரங்கள்!

Uncategorized

காணாமல் போய்விட்டேன்!

  வெளியில் போகும்போது என் கணவர் எப்போதுமே ‘உன் கைப்பையில் பணம் இருக்கிறதா பார்த்துக்கொள் என்பார். இவருடன் தானே போகிறோம், காசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று  நான் யோசிப்பதுண்டு. என்னிடம் ஒரு வழக்கம். காரில் ஏறியவுடன் கைப்பையை பக்கத்தில்  வைத்துவிடுவேன். இறங்கும்போது எடுத்து மாட்டிக் கொள்வேன். இதனால் நான் இரண்டு முறை தொலைந்து போனேன்.   பெங்களூருக்கு வந்த புதிது. கோதாஸ் காபி பவுடர் கிடைக்குமிடம் தேடிப் போய்க்கொண்டிருந்தோம். மெஜஸ்டிக் பகுதிக்கு வந்தோம். காரை… Continue reading காணாமல் போய்விட்டேன்!

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்

சென்னையிலிருந்து பெங்களூரு வர வேண்டும் எனது கணவரும், மகளும். பெங்களூரு மெயில் வண்டியில் ஏற்கனவே டிக்கட் வாங்கியிருந்தோம். என் கணவருக்கு மேல் பர்த். கீழே லோயர் பெர்த்தில் ஒரு இளைஞர். என் கணவர் மேல் பெர்த்தில் ஏறுவதைப் பார்த்தவிட்டு, ‘மாமா, நீங்கள் கீழே படுத்துக் கொள்ளுங்கள்’ என்று தானாகவே முன் வந்து கீழ் சீட்டை விட்டுக் கொடுத்திருக்கிறார். எனது கணவர் ‘நோ நோ, என்னால் மேலே ஏற முடியும்! என்று தனது வீர(!)த்தைக் காட்டியிருக்கிறார். அந்த இளைஞர்… Continue reading ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்