என் குடும்பம் · Uncategorized

WOW

It was my last day in the city ……. – ஒரு காலத்தில் மதாராஸ் என்று எங்களால் அழைக்கப்பட்ட நகரம் – இன்று சென்னை என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில் இன்று தான் என்னுடைய கடைசி நாள். என்னுடைய நாளைய தினம் புதிய ஊரில் விடியப் போகிறது. ஒருபுறம் மகிழ்ச்சி – புதிய ஊருக்குச் செல்லுகிறோம் என்று. இன்னொரு புறம் புதிய வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம்.   நான் இப்போது சொல்லப்போகும் இந்த… Continue reading WOW

ரயில் பயணங்களில்

டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில் தொடர்ச்சி…… இரண்டாவது முறை இந்த டபிள் டக்கரில் (ஒரு எமர்ஜென்சி வேறு வழியில்லாமல் இந்த வண்டியில் போக நேரிட்டது.) போக நேர்ந்த போது ஒற்றை சீட் கிடைத்தது. அப்பாடா! ஒரு மகிழ்ச்சி பெருமூச்சு விட்டேன். அப்புறம் தான் தெரிந்தது அது எத்தனை பெரிய அசௌகரியம் என்று.   இருக்கையில் உட்கார முயன்றேன்.  கைப்பிடியை எடுத்துவிட்டு உள்ளே நுழையலாம் என்றால் அது பெர்மனென்ட் ஆக உட்காந்திருந்தது!  கஷ்டப்பட்டு என்னை திணித்துக் கொண்டு உட்கார்ந்தேன், எழுந்திருக்கும்போது பார்த்துக்… Continue reading டபிள் டக்கர் என்னும் நரகம்!

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்

சென்னையிலிருந்து பெங்களூரு வர வேண்டும் எனது கணவரும், மகளும். பெங்களூரு மெயில் வண்டியில் ஏற்கனவே டிக்கட் வாங்கியிருந்தோம். என் கணவருக்கு மேல் பர்த். கீழே லோயர் பெர்த்தில் ஒரு இளைஞர். என் கணவர் மேல் பெர்த்தில் ஏறுவதைப் பார்த்தவிட்டு, ‘மாமா, நீங்கள் கீழே படுத்துக் கொள்ளுங்கள்’ என்று தானாகவே முன் வந்து கீழ் சீட்டை விட்டுக் கொடுத்திருக்கிறார். எனது கணவர் ‘நோ நோ, என்னால் மேலே ஏற முடியும்! என்று தனது வீர(!)த்தைக் காட்டியிருக்கிறார். அந்த இளைஞர்… Continue reading ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்

ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்…….!

வரவர பிரயாணங்கள் அதிகமாகிவிட்டன. அதுவும் ரயில் பிரயாணங்கள். மோதிஜியைப் பற்றி ஒரு ஜோக் முகநூலில் வந்திருந்தது. ‘ஐந்துநாள் பயணமாக மோதி இந்தியா வருகை’ என்று. நானும் அப்படித்தான் அவ்வப்போது ‘செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது போல மற்ற ஊர்களிலிருந்து அழைப்பு வராத போது பெங்களூருக்கு வந்து (இருந்து) கொண்டிருக்கிறேன்! இப்போதெல்லாம் IRCTC ரயில் டிக்கெட் வாங்கும் தளம்  ரொம்பவும் வேகமாக வேலை செய்கிறது. உட்கார்ந்த இடத்தில் பயணச்சீட்டு வாங்கிவிடலாம். நான் எத்தனை முறை… Continue reading ரயில் பயணங்களில்…….!

இந்தியா · வெப்துனியா

2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

பெங்களூரிலிருந்து இதயம் சென்னைக்குப் பறந்தது! வெப்துனியாவில் 17.9.2014 அன்று வெளியான எனது கட்டுரை   ‘நிஜவாழ்க்கையில் நடப்பதைத்தான் நாங்கள் எங்கள் படங்களில் சொல்கிறோம்’ என்பார்கள் திரைப்பட இயக்குனர்கள். முதல் முறையாக திரைப்படத்தில் காட்டிய விஷயம் ஒன்று நிஜமாக நிகழ்ந்திருக்கிறது.   ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் காட்டியது போல உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று பரபரப்பாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. உறுப்பு தானமாகப் பெறப்பட்டது பெங்களூரில். அதை இன்னொருவருக்குப் பொருத்தியது சென்னையில். பெங்களூரில்… Continue reading 2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

குழந்தை வளர்ப்பு

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

செல்வ களஞ்சியமே – 54   தான் கருவுற்றிருப்பது தெரிய வந்தவுடன் காயத்ரி நினைத்தார்: தனது மகனுக்கு விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ பிறக்கப்போகிறது என்று. ஆனால் நடந்தது என்ன? ஒரு தம்பியும் மூன்று தங்கைகளும் பிறந்திருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறதா? நமக்கு மட்டுமல்ல; காயத்ரி குடும்பத்தினருக்கும் இது வியப்பான செய்திதான். (ஸ்கேனில் தெரிந்திருக்காதோ?)  சென்னை மைலாப்பூரைச்  காயத்ரி என்ற பெண்மணிக்கு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு ஆண், மூன்று… Continue reading ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

Uncategorized

சென்னைக்கு இன்று 374 வயது

                                                     இன்று ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம். சென்னைக்கு இன்று 374 வயது. நாமும்  சேர்ந்து  கொண்டாடுவோமா….!! சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. அதை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் வாருங்கள் ….. கி.பி. 1 ஆம் நூற்றாண்டு… Continue reading சென்னைக்கு இன்று 374 வயது