தீபாவளி · Uncategorized

கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை. எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் அங்கு ஒரு நாற்காலியில் ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள்- உடன் ஸ்டைலாக உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்! எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி… Continue reading கொஞ்சம் காபி, நிறைய தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபாவளி

சாம்பார் ஊத்தும்மா……!

  தீபாவளி என்றால் ஒரு சம்பவம் தவறாமல் எனக்கு நினைவுக்கு வரும்.   ஒருமுறை நானும் என் தோழியும் ‘கல்யாணப்பரிசு’ படம் பார்க்கப் போயிருந்தோம்.  என் தோழிக்கு ரொம்பவும் இளகிய மனது. சோகப் படம் என்றால் பிழியப் பிழிய அழுவாள். அழுது அழுது சினிமா அரங்கமே அவளது கண்ணீரில் மிதக்கும். எனக்கோ அவளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும்.   கல்யாணப்பரிசு படம் பாதிவரை நன்றாகவே இருந்தது. தங்கவேலு, சரோஜாவின் நகைச்சுவைக் காட்சிகளை ரொம்பவும் ரசித்துக் கொண்டிருந்தோம். அப்புறம்… Continue reading சாம்பார் ஊத்தும்மா……!