புதிய வருடம் 2018

புள்ளேறும் கள்வன்

பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் நான் ரசித்த ‘புள்ளேறும் கள்வன்’

—————————-

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஒவ்வொரு வருடமும் வருகிறது. வந்த சுவடே தெரியாமல் சென்று விடுகிறது.  ‘இந்த வருடம் சீக்கிரம் போய்விட்டது, இல்லை?’ என்று நாமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஒரே மாதிரி.

அதேபோல எல்லோரும் தவறாமல் செய்வது கடந்து போன வருடத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது. கடந்து போன நான்கு வருடங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பது எனக்கு நல்லது என்று தோன்றுகிறது. அலைச்சல், மருத்துவமனை, மன உளைச்சல், அக்காவின் இழப்பு என்று இந்த நான்கு வருடங்கள் ரொம்பவும் என்னை அலைக்கழித்து விட்டன. ஒரு பள்ளத்தைக் கடந்தாகிவிட்டது அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் அடுத்தது என்னை தள்ளிவிட தயாராக இருக்கும். இத்தனைக்கும்  நடுவில் ஓர் புத்தகம் எழுதி முடித்திருக்கிறேன். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அல்லது வெகு விரைவில் வெளி வரும் என்று நம்புகிறேன்.

பட்ட துன்பங்களை எல்லாம்  மறக்கும்படியாக 2017 இல் பேத்தி பிறந்திருக்கிறாள்.

அவளைப் பார்த்துக்கொண்டு, அவளுடன் விளையாடிக் கொண்டு இனி அவள் மட்டுமே  எங்கள் வாழ்க்கையாக,  இந்த வருடமும் இனி வரும் வருடங்களும்  இனியதாக, நிம்மதியாக செல்லும் என்ற நம்பிக்கையுடன் இந்த 2018 ஆம் ஆண்டை வரவேற்கிறேன்.

மிகவும் ஆசையுடன் வலைத்தளம் தொடங்கி எழுத ஆரம்பித்த நான் கடந்த சில வருடங்களாக எழுதுவதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டேன்.  வாரத்திற்கு  ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை மட்டும் இந்தப் புதிய வருடத்தில் எடுத்துள்ளேன். நான் தொடர்ந்து வராத போதும், நான் எப்போதோ ஒருமுறை போடும் பதிவிற்கு தவறாமல் வந்து கருத்துரை சொன்ன எனது பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எழுதிக் கொண்டிருந்ததைவிட எழுதாமல் இருக்கும் இந்த சமயத்தில் நிறையப்பேர்கள் வந்து நான் எழுதிய பதிவுகளைப் படித்துக் கொண்டிருப்பது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எழுதுவதை விட்டுவிடலாமா என்று கூட சிலசமயம் தோன்றும். ஆனால் எழுதும் போது கிடைக்கும் சந்தோஷம் மறுபடி மறுபடி எழுதத் தூண்டுகிறது.

 

முடிக்கும் முன் நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு உண்மை நிகழ்வு:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றியது:

ஐன்ஸ்டீன் பல பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தனது ரிலடிவ் ஆப் தியரி பற்றி விரிவுரைகள் நடத்திக் கொண்டிருந்த சமயம். ஒரு முறை ஒரு பல்கலைக் கழகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது காரோட்டி சொன்னார்: ‘இந்த விரிவுரையை நான் முப்பது தடவைகளுக்கு மேல் கேட்டிருக்கிறேன். எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது உங்கள் தியரி. உங்களுக்கு பதிலாக நானே இதைப் பேசிவிடுவேன்’ என்றார்.

‘அப்படியா? சரி, உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். இன்று நான் போகும் பள்ளியில் அவர்கள் என்னை இதற்கு முன் பார்த்ததில்லை. அதனால் அங்கு போனவுடன் உங்கள் தொப்பியை நான் அணிந்து கொள்ளுகிறேன். நீங்கள் உங்களை ஐன்ஸ்டீன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுங்கள்’ என்றார் ஐன்ஸ்டீன்.

மேடையில் ஐன்ஸ்டீனின் காரோட்டி மிகப்பிரமாதமாகப் பேசினார், ஒரு தவறு கூட இல்லாமல். பேசிமுடித்து விட்டு மேடையை விட்டு இறங்கும்போது ஒரு பேராசிரியர் எழுந்திருந்து அவரை நிறுத்தி மிகவும் கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டார். உண்மையில் அந்த கேள்வி விஷய ஞானம் வேண்டி கேட்கப்பட்ட கேள்வியில்லை. மாறாக ஐன்ஸ்டீனை சங்கடப்படுத்துவதற்காக கேட்கப்பட்ட கேள்வி.

காரோட்டி முதலில் திகைத்தாலும் சட்டென்று ஒரு யோசனை பளிச்சிட்டது அவருக்கு. ‘நீங்கள் கேட்ட கேள்விக்கான விடை மிகவும் எளிமையானது. நீங்கள் என்னை அந்தக் கேள்வி கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. எத்தனை எளிமையான விடை இந்தக் கேள்விக்கு என்று உங்களுக்கு புரிய வைக்க எனது காரோட்டியை இப்போது கூப்பிட்டு இந்த கேள்விக்கான விடையை சொல்லச் சொல்லுகிறேன்!’ என்றார்.

ஐன்ஸ்டீன் எழுந்திருந்து வந்து அந்த பதிலை எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் விளக்கினார்!

நீதி: நீங்கள் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் உங்களைவிட தகுதியில் கீழே இருக்கும் ஒருவர் உங்களைவிட அறிவாளியாக இருக்கக்கூடும்.

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

34 thoughts on “புதிய வருடம் 2018

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரஞ்சனி அக்கா…

  தங்களின் உடல் நலம் மன நலம் எல்லாம் நல்லபடியாகி,தங்களின் இனிய பேத்தியுடன் அழகான பாட்டியாய் கதைகள் பல சொல்லி பேத்தியுடன் உறவாடிடவும், தங்களின் விருப்பப்படி வாரத்திற்குஒரு பதிவேனும் எழுதிடவும் மேலும் மேலும் அயற்சி இல்லாமல் எழுதிடவும், மகிழ்வுடன் இருந்திடவும் அந்தப் புள்ளின் மேலேறிய கள்வன் அனுக்ரஹிக்க வேண்டுதலுடன் புத்தாண்டு வாழ்த்துகள்!

  கீதா

  நண்பர் துளசியும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கச் சொன்னார்

  1. வாங்க கீதா!
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். திரு துளசிதரனுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  1. வாங்க பாண்டியன்
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களைப் போல் தான் எங்களுக்கும் 2015 ஆம் ஆண்டில் இருந்து தீராத பிரச்னைகள், மனக் கஷ்டங்கள். ஆனால் எழுதுவது ஒன்றே மனமாற்றம் கொடுக்கும் என்பதால் அதிகமா நிறுத்தலை. அவ்வப்போது மனச்சோர்வு வந்தப்போ மட்டும் அதிக பட்சம் ஒரு வாரம் எழுதாமல் இருப்பேன். இங்கே வந்து நண்பர்களுடன் பேசினால் மனது கொஞ்சம் அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறது.

 4. இனியாவது உங்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் அடையப் பிரார்த்தனைகள். பேத்தி நன்றாக முகம் பார்த்துச் சிரித்து விளையாட ஆரம்பித்திருப்பாள். எங்களுக்கும் எங்க பேத்தியை ஸ்கைப் மூலம் பார்ப்பது ஒன்றே மனசுக்கு ஆறுதலைத் தரும். பேத்தியுடன் விளையாடிக் களித்து மகிழ எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். வாரம் ஒரு பதிவு என்ற உங்களின் தீர்மானம் செயல்பட்டு வெற்றிகரமாக நடக்கவும் பிரார்த்தனைகள்.

  மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  1. வாங்க கீதா
   குழந்தைக்கு ஐம்பது நாள் ஆகிறது. ஒரொரு சமயம் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று மாட்டுப்பெண் சொல்லுகிறாள். பேத்தியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 5. சோதனைகள் தீரட்டும். நிம்மதி பரவட்டும். நல்லதொரு சம்பவத்துடன் வலைத்தளம் மீண்டும் தொடர்வது மகிழ்ச்சி.

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  1. வாங்க ஸ்ரீராம்
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 6. நமஸ்காரம் …புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் சகோதரி எங்கும்
  போய்விடவில்லை..உங்கள் பேத்தியாக
  பிறந்துள்ளார்..அமாவாசை,மாசப்பிறப்பு,வருஷ திதி காலங்களில் உங்கள் வீட்டு
  ஈசான்ய மூலையில் வந்து அமர்ந்து கொண்டு உங்களை
  ஆசீர்வதிக்கிறார்.எவ்வளவுதான் மனசுக்கு பிடித்ததாக இருந்தாலும் ..ஒரு
  கட்டத்தில் சலித்துவிடும் என்பது மனித இயல்பு.இந்த வாழ்க்கையின் புதிர்
  அதுதான்.பார்த்து பார்த்து பரிமாறிய கணவனுக்கு, பிள்ளைக்கு …ஒரு
  கட்டத்தில் …”மேசையில் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் ..போட்டு
  சாப்பிடுங்கள் “..அதுபோல்தான் …நீதியில் கூறியதை உணர்ந்து
  நடந்துகொண்டால் ..ஈகோ ஏன் வரப்போகிறது..?
  நன்றி ..வாழ்த்துக்கள்.

 7. நமஸ்காரம் …புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் சகோதரி எங்கும்
  போய்விடவில்லை..உங்கள் பேத்தியாக
  பிறந்துள்ளார்..அமாவாசை,மாசப்பிறப்பு,வருஷ திதி காலங்களில் உங்கள் வீட்டு
  ஈசான்ய மூலையில் வந்து அமர்ந்து கொண்டு உங்களை
  ஆசீர்வதிக்கிறார்.எவ்வளவுதான் மனசுக்கு பிடித்ததாக இருந்தாலும் ..ஒரு
  கட்டத்தில் சலித்துவிடும் என்பது மனித இயல்பு.இந்த வாழ்க்கையின் புதிர்
  அதுதான்.பார்த்து பார்த்து பரிமாறிய கணவனுக்கு, பிள்ளைக்கு …ஒரு
  கட்டத்தில் …”மேசையில் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன் ..போட்டு
  சாப்பிடுங்கள் “..அதுபோல்தான் …நீதியில் கூறியதை உணர்ந்து
  நடந்துகொண்டால் ..ஈகோ ஏன் வரப்போகிறது..?
  நன்றி ..வாழ்த்துக்கள்.

  1. வாங்க கிருஷ்ணமூர்த்தி,
   மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மனதிற்கு மிகுந்த ஆறுதலைக் கொடுக்கிறது உங்கள் வார்த்தைகள்.
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 8. மீண்டும் வலைப்பக்கம் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பேத்திக்கு எனது ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

  1. வாங்க தமிழ் இளங்கோ
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும், ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 9. Arumaiyaana pathivukku nanri, ungalukkum, ungal kudumbaththaarukkm enathu puththaandu vaazhthugal. Peththikku engal aasigal.

  1. வாங்க சேகர்
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 10. Wishing you and your family a happy and healthy new year Ranjani. Busy this side too. Shall talk to you leisurely. All the Best.

 11. மற்றவர்கள் வலைப்பக்கமும் நீங்கள் வருவதில்லை. 2018 யாவருக்கும் ஸந்தோஷங்களைக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். நல்ல ஆரம்பக் கட்டுரை. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  1. வாங்க முத்துசாமி
   உண்மை. எழுதும்போது ஒருவித அமைதி கிடைக்கிறது.
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   உங்களது வலைத்தளம் இப்போது இயங்குவதில்லையா?

  1. வாங்க பத்மா
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரஞ்சனிம்மா…

  1. வாங்க வெங்கட்
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 13. இனி வரவிருக்கும் நாட்கள் இனிதாகவே இருக்கும் ரஞ்சனிம்மா. பேத்திக்கு நல்வாழ்த்துகள்! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  1. வாங்க ராமலக்ஷ்மி
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 14. மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புத்தாண்டு உங்களுக்கு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

  1. வாங்க பானுமதி

   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 15. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  “நீங்கள் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் உங்களைவிட தகுதியில் கீழே இருக்கும் ஒருவர் உங்களைவிட அறிவாளியாக இருக்கக்கூடும்.” – படித்திருந்தாலும் நினைவுபடுத்தி, இந்த நீதியைச் சொன்னதற்கே உங்களுக்கு இன்னும் ஒரு முறை என் வாழ்த்துக்கள்.

  1. வாங்க நெல்லைத் தமிழன்

   நீங்கள் ஒருவர் மட்டுமே அந்த துணுக்கைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
   உங்களது வருகைக்கும், வாழ்த்திற்கும் (இரண்டு முறை!) மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 16. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்… ரஞ்சனிம்மா. …

  நான் விரும்பி படிக்கும் தளத்தில் இதுவும் ஒன்று…எப்பொழுதும் நேர்மறை செய்திகளையும் ..எண்ணங்களையும் விதைக்கும் தளம்…

  முடியும் போது எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறேன்…

 17. வாங்க அனுபிரேம்
  உங்களது வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s