Uncategorized

நந்தினியும், குந்தவையும்!

nandini-001

கல்கி பத்திரிக்கையிலிருந்து பார்த்து வரைந்த படம் .

வரைந்த நாள்: 04.08.1970

kundavai-001

 

நான் சொல்லாமலேயே தெரிந்திருக்கும் இது யாரென்று. கல்கி அவர்களால் இளைய பிராட்டி என்று வர்ணிக்கப்பட்ட குந்தவை தேவி தான் இவள்.

இரண்டு நாட்களாக பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருந்த போது கிடைத்த பொக்கிஷங்கள் இவை. ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் நான் அதிகம் வரைந்தது நந்தினியைத் தான் என்று குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் படங்கள் எனக்கு அகப்படவில்லை. எங்கேயோ தொலைத்துவிட்டேன் என்று ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். நேற்று இவை கிடைத்தவுடன் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையேயில்லை. இன்று காலை இவற்றை ஸ்கேன் செய்து எனது கணினியில் சேமித்துக் கொண்ட பிறகு தான் மனது சமாதானம் ஆயிற்று.

 

nandini-2-001

பலவருடங்களுக்கு முன் வரைந்த ஓவியங்கள் இவை. காலப்போக்கில் அந்த பேப்பர்கள் மக்கிப் போய்விட்டன. ஓரங்கள் பிய்ந்து போயிருந்தன. அவற்றையெல்லாம் கத்தரித்து விட்டு இன்னொரு காகிதத்தில் ஒட்டியிருந்தேன். இதைச் செய்தும் பல வருடங்கள் ஓடிவிட்டன. எல்லாமே பென்சில் ஓவியங்கள் தான். இன்றுவரை அவை அப்படியே இருப்பது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

 

nandini-3-001

 

எனக்குச் சித்திரங்கள் வரைய ஆசையை ஏற்படுத்தியவர் என் கடைசி மாமா திரு சடகோபன் தான். ஒருமுறை மாமா ஸ்ரீரங்கத்திலிருந்து மதாராஸ் வந்திருந்தபோது எனது சயின்ஸ் பாட நோட்டுப்புத்தகத்தில் தவளையின் வாழ்க்கை சக்கரத்தை வரைந்து கொடுத்தார். அதைப் பார்த்த எனது ஆசிரியை பெரிய டிராயிங் ஷீட் வாங்கிக் கொடுத்து இதில் வரைந்து கொண்டு வா என்று சொன்னார். மாமாவும் தவளையின் முட்டையிலிருந்து, முழு தவளையாகும் வரை வரைந்து கொடுத்தார். மாமா வரைய ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். என் கண் முன்னே அந்தத் தவளை உயிர் பெற்று எழுந்தது. எத்தனை தத்ரூபமாக இருந்தது என்றால் ‘ச்சூ’ என்று விரட்டினால் தவளை குதித்து ஓடிவிடும் போல அத்தனை தத்ரூபம்! அந்த நிகழ்ச்சி இன்றைக்கும் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.

அன்றிலிருந்து ஓவியம் வரைவதில் எனக்கு தீராத ஆர்வம் ஏற்பட்டது. எனக்குப் பிடித்த ஓவியங்களை வாரப்பத்திரிக்கைகளிலிருந்து வரைய ஆரம்பித்தேன். நிறைய வரைந்தது நந்தினியை – அதுவும் ஓவியர் வினுவின் நந்தினியைத் தான். வினு அவர்களின் ஓவியங்களில் கண்கள் உணர்ச்சிகளைக் கொட்டும்.  அதேபோல கோபுலுவின் ஓவியங்களை வரைவது எனக்குப் பிடித்த ஒன்று. பாரிஸுக்கு போ நாவலின் கதாநாயகன் சாரங்கனை ஜிப்பாவுடன் அவர் வரைந்திருப்பார். அடர்த்தியான கூந்தல் காற்றில் (கிராப்) அலைபாய, மடித்துவிட்ட ஜிப்பாவுடன் சாரங்கன் அட்டகாசமாக இருப்பான்.  கோபுலுவின் ஓவியங்களில் மூக்கு சிறப்பாக இருக்கும். ஜெயகாந்தன் நாவல்களும், கோபுலுவின் ஓவியங்களும் நல்ல காம்பினேஷன்.

நான் அதிகம் வரைந்த இன்னொரு ஓவியம் அந்த காலத்திய மர்பி (ரேடியோ) பாப்பா. எங்கள் வீட்டுக் கதவுகளின் மேலெல்லாம் இந்த பாப்பாவை வரைந்திருப்பேன். கல்கி பத்திரிக்கையின் பிள்ளையார், சரஸ்வதி, பரதன் ஆகியோரையும் வரைந்திருக்கிறேன். அவற்றையும் போடுகிறேன். விளம்பரங்களைப் பார்த்தும் நிறைய வரைவேன். நான் வரையும் ஓவியங்களுக்கு என் அண்ணா மதிப்பெண் கொடுப்பார்.

அது ஒரு அழகிய கனாக்காலம்!

 

 

Advertisements

19 thoughts on “நந்தினியும், குந்தவையும்!

 1. உங்கள் திறமை வியக்க வைக்கிறது. மிக அருமையாக வரைந்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு முடியலைனாலும் உங்க மாமா மாதிரி நானும் தவளைகளின் வாழ்க்கை, பட்டுப்பூச்சிகளின் வாழ்க்கை என வரைந்து தள்ளி இருக்கேன். 🙂 எல்லாம் என் தம்பி மற்றும் என் குழந்தைகளுக்காக. ஆனால் இப்படி வரைந்து பார்த்ததில்லை. தோன்றவில்லை.

 2. கோபுலுவின் ஓவியங்களில் எனக்குப் பிடித்தவை தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், துப்பறியும் சாம்பு படக்கதைக்கு அவர் வரைந்தவை ஆகியவை. துப்பறியும் சாம்பு படக்கதையாக வருவதற்கு முன்னால் தொடராக வந்து கொண்டிருந்தப்போ வரைந்தவர் ஓவியர் ராஜுனு நினைக்கிறேன். தேவன் இறந்த பின்னர் அவர் ஞாபகார்த்தமாகத் துப்பறியும் சாம்பு படக்கதையாக விகடனில் ஐம்பதுகளில் வெளிவந்தது. இந்தப் படக்கதை சாம்புவைத் தான் முதலில் அறிமுகம். அதன் பின்னால் தான் தொடராக வந்திருப்பது குறித்தும் அறிந்தேன். சாம்புவையும் முடிந்தால் வரைந்து பாருங்கள்! 🙂

 3. உங்களுக்குள் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல ஓர் ஓவியரும் ஒளிந்திருப்பது தெரிகிறது மிக அழகான ஓவியங்கள் அதைவிட அழகான மலரும் நினைவுகள் ரஞ்சனி நிஜமாகவே பொக்கிஷங்கள் தான் பாராட்டுக்கள் ரஞ்சனி

 4. ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீங்க. அதைப் பாதுகாத்தும் வச்சுருக்கீங்க. ரொம்ப நல்லா வந்திருக்கு. இதைப் பார்த்தவுடன், என்னுடைய ஓவியத் திறமையையும் (சும்மா பில்டப்) தூசி தட்டலாம்னு தோணறது…

  எனக்கு ஜெயராஜ் படங்களும் இந்த மாதிரி சரித்திரக் கதைகளுக்குள்ள படங்களும், சில்பி அவர்களின் படங்களும் வரைவதற்கு ரொம்பப் பிடிக்கும். (சரியா வருதோ இல்லையோ)

 5. ரஞ்ஜனியிடம்,நந்தினியும்,குந்தவையும். வீடுஒழிப்பு வேலையில் கிடைத்த பொக்கிஷங்கள் என்று முதலிலேயே மனதில் தோன்றிவிட்டது. ஏனோ,தானோ என்று இராமல் உயிர்ப்புள்ள சித்திரங்களாக வரைந்திருக்கிறீர்கள். கண், ,அலங்காரமெல்லாம் அழகு. பார்த்தெழுதிய சித்திரமானாலும் அழகு நம்பமுடியாது. இனி ஒரு மணிநேரம் சித்திரமும் வரையுங்கள். தொலைந்துபோனது கிடைத்தது. ஆனந்தமென் சொல்வெனே என் கண்படைத்த பயனே என்று பாடுங்கள்.
  ஸகலகலாவல்லி மாலை தொடுக்க வேண்டியதுதான். அன்புடன்

 6. அழகான ஓவியங்கள் ,
  //அது ஒரு அழகிய கனாக்காலம்!//

  அருமை.
  அழகிய கனாக்காலம் தான்.
  நீங்கள் இப்போதும் உங்கள் பதிவுக்ளுக்கு தேவைபடும் படங்களை வரையலாமே!
  வாழ்த்துக்கள்.

 7. ஆஹா அருமை.கதையில் வெளியான ஓவியம் போலவே உள்ளது.நீங்கள் பல்துறை வித்தகர் என்பதில் ஐயமில்லை . முந்தைய பின்னூட்டத்தில் எழுத்துப் பிழைகள் உள்ளதால் அதனை நீக்கி விடவும்

 8. எழுத்தைப் போல ஓவியத்திலும் தங்களின் முத்திரையை அறியமுடிகிறது. ஓவியம் வரைய நீங்கள் தற்போதுகூட நேரம் ஒதுக்கலாம். பாராட்டுகள்.

 9. பென்சில் சித்திரங்கள் அனைத்தும் மிக அழகு ரஞ்சனி! முதல் ஓவியம் அது ஓவியர் வினு வரைந்தது என்று பார்த்த மாத்திரத்தில் சொல்லி விடலாம்! அப்படியே வரைந்திருக்கிறீர்கள்!!

 10. நன்றாகவே வரைந்திருக்கிறீர்கள், ஆயினும் ஒரு சிறிய கேள்வி, இந்த உயிர்க்கதாபாத்திரங்களை முதன் முதலில் வரைந்தவர் காலஞ்சென்ற ஓவியர் திரு.மணியம் அவர்கள் [ ஓவியர் திரு.மணியம்செல்வனின் தந்தை ] , திரு.வினுவின் சித்திரங்கள் ஒருவிதமாக இவற்றின் நகல்களே., பிற்காலத்தில், இந்தக் கதையை கல்கி பத்திரிகை மறு பிரசுரம் செய்தபோது, அவர்களுக்கு, பழைய மணியத்தின் சித்திர ப்ளாக்குகள் சரிவர கிடைக்காததினால், ஓவியர் திரு.வினு, சித்திரங்கள் வரையும் பொறுப்பை ஏற்றார்.
  பி.எம்.ஜெயராமன், பெங்களூரு, [ முற்கால திருச்சி, ஸ்ரீரங்கம் வாசி ]

 11. நான்கு படங்களில் இருந்தும் அந்தக் கண்களை மட்டும் எனக்குக் கொடுக்க முடியுமா? கொள்ளை அழகு! – இராய செல்லப்பா நியுஜெர்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s