Uncategorized

சாவியின் விசிறி வாழை

ranjani narayanan

நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சல் இது:

அன்பு வணக்கம். நலம் என நம்புகிறேன்.

விசிறி வாழை நாவலை ஒரே மூச்சில், படு வேகமாக வாசித்து முடித்தேன்.அலையோசை, குறிஞ்சி மலர் கொடுத்த அதே கனத்தை, ரணத்தை உணர்ந்தேன்.

உங்களுக்கு மிக பிடித்த நாவல் இது தான் என்று அறிவேன். ஏன் என்று காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இதனை பற்றி பதிவு ஏதும் எழுதி ஊள்ளீர்களா? இருந்தால் சுட்டி தரவும்

அன்புடன்,

……………..

என்று முடித்திருந்தார். இந்த நாவலை சிலமுறை படித்திருந்தாலும் பதிவு எதுவும் எழுதியதில்லை.

விசிறி வாழை நாவல் எந்த வருடம் வந்தது என்று நினைவில்லை. ஆனால் விகடனில் தொடராக வந்து கொண்டிருந்தபோதே படித்திருக்கிறேன். அப்போது புரியாத சில விஷயங்கள் இப்போது படிக்கும்போது புரிகிறது. பல வருடங்களுக்குப் பின் இந்த புத்தகத்தின் pdf கிடைத்தது. இதை அனுப்பியவரும் மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியவர்தான் –  எனது பிறந்த நாளைக்கென்று தனது பரிசாக இந்தக் கதையின் pdf அனுப்பியிருந்தார்.

இந்தக் கதையின் கதாநாயகி பார்வதி முதிர்கன்னி. சிறுவயதிலேயே அம்மா அப்பாவை இழந்து ஒரே அண்ணனின் குழந்தையை (அண்ணா-அண்ணியின் மறைவிற்குப் பிறகு) தன் குழந்தையாக வளர்த்து வருபவள். தான் படித்த கல்லூரியிலேயே வேலைக்கு சேர்ந்து இன்று அதன் பிரின்சிபால் ஆக இருப்பவள். கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டிடத்தை திறந்து வைக்க வரும் சேதுபதியின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது.

இனி நண்பருக்கு நான் எழுதிய…

View original post 320 more words

Advertisements

6 thoughts on “சாவியின் விசிறி வாழை

 1. மீள்பதிவா? பழைய பதிவையும், அங்கு என்னுடைய பின்னூட்டத்தையும் பார்த்தேன். விசிறி வாழை புத்தகத்தை எந்த பெட்டியில் வைத்து மேலே ஏற்றி உள்ளேன் என்று தெரியவில்லை!!

  1. ஆமாம் ஸ்ரீராம், மீள் பதிவுதான். சாவியைப் பற்றி பல பத்திரிகைகளில் படித்ததுதான். எனக்கு அவரது பத்திரிகையில் எழுத வேண்டும் என்ற ஆசை அந்தக் காலத்தில் நிறைய இருந்தது. ஆனால் அப்போது எழுத வருமா என்ற சந்தேகத்திலேயே இருந்துவிட்டேன். முயற்சி செய்ததே இல்லை!
   அவருக்கு ஒரு சின்ன அஞ்சலி இந்தப் பதிவு மூலம். அவ்வளவுதான்.
   http://www.tamilvu.org/library/nationalized/pdf/87-saavi/visirevalzai.pdf
   இந்த இணைப்பில் படியுங்கள்.

 2. சேவற்கொடியோன் தான், விகடனின் மறைந்த ஆசிரியர் எஸ் பாலசுப்ரமணியம் அவர்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது காலத்தை மிஞ்சிய சிந்தனை. இப்போல்லாம் தொடர் வாசிக்கும் பழக்கமோ பொறுமையோ குறைந்துவருகிறது என்று நினைக்கிறேன்.

  1. வாங்க நெல்லைத் தமிழன்!
   அந்தக் காலத்தில் தொடர்கதைகளுக்காகவே விகடன், கல்கி வாங்குவார்கள் வீட்டில். சேவற்கொடியோன் தான் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் என்பது தெரியும். ஒருகாலத்தில் விகடனை விடாமல் படித்திருக்கிறேன்.
   இப்போது எந்த வார, மாத இதழ்களையும் வாங்குவதில்லை.
   தொலைக்காட்சி வந்து வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க துளசி!
   தமிழ் இணையப் பல்கலைகழக தளத்தில் விசிறி வாழை என்று போட்டால் கீழே இருக்கும் பக்கம் திறக்கிறது. படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

   http://www.tamilvu.org/library/nationalized/pdf/87-saavi/visirevalzai.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s