குங்குமம் தோழி இதழில் ஸ்டார் தோழியாக நான்!

kungumam star thozhiஇன்று ஒரு மகிழ்ச்சியான நாள்.

மூன்றாவது முறையாக ஒரு பத்திரிகையில் என்னைப் பற்றி வந்திருக்கிறது. முதல்முறை வந்தபோது இருந்த அதே சந்தோஷம், கட்டுக்கடங்காத பெருமிதம் இன்றைக்கும்!

அவள் விகடனில் வலையரசி என்றும், அமெரிக்காவிலிருந்து வரும் தென்றல் பத்திரிகையில் வளைக்கரங்கள் பகுதியிலும் எனது வலைப்பதிவுகள் பற்றி வந்தது.

எனது எழுத்துக்களுக்கு உற்சாகம் கொடுக்கும் பத்திரிக்கைகளுக்கு எனது நன்றி!

குங்குமம் தோழி இதழ் ஆசிரியர் திரு வள்ளிதாசன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

 

 

 

 

19 thoughts on “குங்குமம் தோழி இதழில் ஸ்டார் தோழியாக நான்!

 1. JI it will be appropriate if your followers point out this article in your blog Instead you chose to mention about your recognition……..JI
  ANYWAY GOOD WISHES

  1. நல்லாயிருக்கே நீங்க சொல்றது! ஏங்க, என் எழுத்திற்கு நியாயமாக கிடைத்த ஒரு அங்கீகாரத்தை என் வலைதளத்தில் போட எனக்கு உரிமை இல்லையா?

   Anyway, வாழ்த்துகளுக்கு நன்றி!

 2. வாழ்த்துக்கள் ரஞ்சனி. உங்கள் எழுத்து நடை எல்லோரையும் உங்கள் தளம் பக்கம் வரவழைத்து விடும். தோழி அங்கீகரித்ததில் வியப்பில்லை. ஆனால் மகிழ்ச்சியளிக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  1. நன்றி ராஜி. நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டது தான் வருத்தமாக இருக்கிறது. ப்ளீஸ் மீண்டும் தொடருங்கள்.

 3. வாழ்த்துகள். நேற்றே முகநூலில் பார்த்தேன். எழுத்துகளைப் பெரிதாக்க முடியவில்லை. ஃபோன் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். வாசகர்கள் வட்டம் பெரிதானால் அளவில்லா மகிழ்ச்சிதான். உன்னுடைய மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். மீதியைப் படிக்கத் தோழியைத் தேட வேண்டும். அன்புடன்

  1. நன்றி காமாக்ஷிமா!
   மூலத்தை அனுப்பி வைக்கிறேன். படித்து மகிழுங்கள்!

 4. மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் தங்களின் எழுத்துகள் போற்றப்படும் என்பது என் எண்ணம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முதலாக எனது வாசகர் கடிதம் வெளியானபோது கிடைத்த அதே மகிழ்ச்சி அண்மையில் தி இந்து நாளிதழில் தலையங்கப்பக்கத்தில் வந்த எனது கட்டுரையினைப் பார்த்ததும் ஏற்பட்டது. அதை உணரும்போது கிடைக்கும் சுகம் இன்னும் அலாதி.

  1. நன்றி, ஐயா. உங்களைப் போன்றார்களின் பாராட்டுக்கள் கிடைக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
   எனது முதல் கதை வந்த அன்று அந்தப் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரே நடனம் தான். ஒருவருக்கும் கொடுக்கவும் மாட்டேன் என்று பயங்கர கலாட்டா செய்தேன்!

   எத்தனை எழுதினாலும் ஒரு பத்திரிக்கையின் அங்கீகாரம் என்பது தனிதான் இல்லையா?

 5. இப்பொழுது தான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  ஒரு காப்ஸ்யூலில் எல்லாவற்றையும் அடக்கி விட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு செய்தியையும் விரித்துப் பார்க்கையில் அவற்றிற்கான சந்தோஷம், குதூகலமாக உள்ளே குடியிருப்பது தெரிகிறது. உங்கள் உழைப்பில் விளைந்த உன்னதமும் கோபுரத்து விளக்காக சுடர் விடுகிறது.

  எனக்கு மிகவும் பிடித்த ஜெகேயின் ‘கருணையினால் அல்ல’ உங்களுக்கும் பிடித்திருப்பத்தில் நிறைய சந்தோஷம். நிறையப் பேர் நிறைய, சொல்வார்கள். ஆனால் ‘கருணையினால் அல்ல’வை சொன்னவர் குறைவே
  காதல் கருணையினால் அமைந்திடக் கூடாது என்று சொன்னவர் எனக்குத் தெரிந்து ஜெயகாந்தன் ஒருவரே. அப்படி விளைந்தால் அதனால் ஏற்படும் அனர்த்தங்கள் அதிகம் என்பதன் தீட்சண்ய பார்வை அது. இன்னொரு ஜெயகாந்தன் எப்போவோ, தெரியவில்லை. அவரவருக்கு விதித்த வரை காத்திருப்போம்.

  ‘தோழி’ அட்டகாசமான பத்திரிகை. மற்ற மங்கையர்களுக்கென்று ஆனவைகளிலிருந்து— அதன் லே அவுட், வழவழ காகிதம், தெளிவான வாசிக்க இலகுவான அச்சு, பிரசண்டேஷன் என்று எல்லாமே வித்தியாசமாகவும் இருக்கிறது.

  ஒரு கூடை நிறைய நிறைய திமிறி வெளியே தெரிகிற அளவுக்கு வாழ்த்துக்கள். பிடியுங்கள், சகோதரி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s