என் குடும்பம்

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

ஒரு பிரபல எழுத்தாளர் தனது படிக்கும் அறையில் அமர்ந்திருந்தார். ஏதோ தோன்றவே தனது எழுதுகோலை எடுத்து எழுத ஆரம்பித்தார்:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சைக்குப் பின் நான் பல நாட்கள், மாதங்கள் படுக்கையிலேயே இருக்கநேரிட்டது. என்ன கொடுமையான நாட்கள்!
 • சென்ற வருடம் எனக்கு 60 வயது பூர்த்தியாயிற்று. அதனால் எனது மனதிற்குப் பிடித்த, 30 வருடங்கள் வேலை பார்த்த பதிப்பகத்திலிருந்து  கட்டாய ஓய்வு பெற வேண்டி வந்தது.
 • சென்ற வருடம் எனது தந்தையின் மறைவு எனக்கு மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது.
 • சென்ற வருடம் எனது மகன் ஒரு கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்டதால் அவன் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறவில்லை. மருத்துவமனையில் உடல் முழுக்கக் கட்டுக்களுடன் நீண்டநாட்கள் இருக்க நேர்ந்தது. எனது கார் அந்த விபத்தில் முழுவதும் சேதமடைந்தது இன்னொரு வருத்தமான செய்தி.

 

கடைசியில் எழுதினர்: மொத்தத்தில் சென்ற வருடம் ஒரு மோசமான வருடம்.

சற்று நேரத்தில் எழுத்தாளரின் மனைவி அந்த அறையினுள் வந்தார். தன் கணவர் ஏதோ நினைவில் ஆழ்ந்து, முகம் மிகவும் வாடிப்போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். கணவரின் அருகில் வந்தவர் அவர் கையில் இருந்த காகிதத்தை வாங்கிப் படித்தார். ஒன்றும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறியவர் சிறிது நேரத்தில் கையில் இன்னொரு காகிதத்துடன் வந்தார். தன் கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்தின் அருகில் தான் கொண்டு வந்த காகிதத்தையும் வைத்தார்.

எழுத்தாளர் அந்தத் தாளில் தனது பெயர் எழுத்தப்பட்டிருப்பதைக் கண்டார். கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அதில் எழுதியிருந்தது:

 • சென்ற வருடம் எனது கல்லீரல் அகற்றப்பட்டது. பல வருடங்களாக நான் பட்டுக் கொண்டிருந்த சொல்லமுடியாத வலியிலிருந்து எனக்கு ஒருவழியாக விடுதலை கிடைத்தது.
 • சென்ற வருடம் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும்போதே வேலை ஓய்வு பெற்றேன். இனி இன்னும் நிறைய எழுதலாம். எனது எழுத்துக்களில் அதிக கவனம் செலுத்தலாம். எனது நேரம் இனி எனக்கே.
 • சென்ற வருடம் என் தந்தை தனது 95 வது வயதில் யாரையும் சார்ந்து இருக்காமல், எந்தவிதமான நோய்க்கும் ஆளாகாமல் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
 • சென்ற வருடம் எனது காரை ஓட்டிச் சென்ற எனது மகன் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்டான். கார் முழுமையாக சேதமடைந்த போதிலும், எனது மகன்  எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்தான். இப்போது அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. கடவுள் மிகவும் கருணை உள்ளவர்.

கடவுளின் அருளால் சென்ற வருடம் நல்லபடியாகச் சென்றது.

இதைப்படித்த எழுத்தாளர் மனம் மகிழ்ந்து போனார். வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளிலும் நல்லவற்றைக் காணும் தன் மனைவியைப் பாராட்டினார்.

********                                          ***************                                    **************

அந்த எழுத்தாளரின் மனைவி போல நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் நல்லதைப் பார்க்கும் மனப்பக்குவத்தை கடவுள் எல்லோருக்கும் கொடுக்கட்டும்.

இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Advertisements

12 thoughts on “இனிய துர்முகி தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 1. அருமையான கருத்து புத்தாண்டு வாழ்த்திற்கு. ஆம் எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கையே சுவைத்துவிடும்தான்! அருமையான பகிர்வு. எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

 2. சிந்தித்திருக்கும் வகை, ெவ்வளவு பாராட்டினாலும்தகும். நல்லவைகளையே எண்ணுவோம். நல்லதே நடக்கட்டும். யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.அன்புடன்

 3. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  மிக அருமையான சிந்தனைகளுடன் புத்தாண்டினை வரவேற்றிருக்கிறீர்கள்! உங்களின் இந்தப்பதிவு நிறைய பேருக்கு புத்துணர்ச்சியினைக் கொடுக்கும்!

 4. நின்று நிதானித்துக் கவனிக்க முடியாமல் சென்ற வருடம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆண்டுகள் இரண்டுமே பயணங்களாக ஓடி விட்டன! இந்த வருஷம் இப்போதைக்கு எங்கேயும் இல்லை! 🙂 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

 5. நன்றி. நல்லவற்றையே நினைப்போம். அருமையான வாழ்த்து. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 6. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s