Pet Animals

வீர பெடோங்கி

 

 

தில்லைஅகத்துக்ரோனிகல்ஸ் திருமதி  கீதா  பெங்குயின் பற்றி ஒரு பதிவும் அடுத்தபடியாக ஹச்சிகோ என்கிற நாய் பற்றியும் எழுதியிருந்தார் அவரது வலைத்தளத்தில். அதன் தொடர்ச்சியாக (அவர் அழைக்காமலேயே) ஒரு தொடர் பதிவு. இது நான் எழுதியது இல்லை.

 

எழுதியவர் திரு டி.எச். ஹவனூர் – நன்றி டெக்கன் ஹெரல்ட் தினசரி

 

எந்த விலங்காக இருந்தாலும் – நாய், குதிரை, யானை, ஆடு மாடுகள் அல்லது ஒட்டங்கங்கள், கோவேறு கழுதை – எதுவானாலும் வாய் பேசமுடியாவிட்டாலும் தங்களது எஜமானர்களுக்கு விச்வாசமுள்ளவையாகவே இருக்கின்றன.

 

நாம் எல்லோருமே நன்றியுள்ள நாய்கள், குதிரைகள் பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறோம். இங்கே நான் சொல்லப்போவது ஒரு கோவேறு கழுதை பற்றி. இந்த கழுதைகள் ராணுவத்தினரால் பலவகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் ஆயுள் முழுவதும் இவை இராணுவ  சேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. தங்களது தன்னலம் கருதாத சேவைக்குப் பெயர்போனவை. பல்வேறு வகையான கோவேறு கழுதைகள் – பொதி சுமக்கும் கழுதைகள், பாரமான துப்பாக்கிகளையும், குண்டுகளையும் சுமந்து செல்லும் கழுதைகள், மனிதர்களை சுமந்து செல்பவை என்று – நம் இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன பெரும்பான்மையான கழுதைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும்.

 

இந்தக் கழுதைகள் சுமார் 18 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றும். வயதானவுடன் இவற்றைக் கருணைக் கொலை செய்துவிடுவார்கள். ஏனெனில் இவற்றிற்கு தீனி போட்டு பராமரிப்பது என்பது இயலாத ஒரு காரியம். அவை இறந்தவுடன் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இதை cast and destroy என்பார்கள். ஹிட்லர் தவறு செய்யும் தனது இராணுவ அதிகாரிகளை கொன்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வாராம் அதுபோல! துளிக்கூட மனிதத்தன்மை இல்லாமல் என்று தோன்றலாம். ஆனால் நாம் எத்தனை ஆடுகள், கோழிகள், பன்றிகள் மனிதர்கள் சாப்பிட என்று கொல்லுகிறோம்.

 

கோவேறு கழுதைகள் வாயில்லாப் பிராணிகள். மிகவும் விசுவாசமானவை. சுலபமாக அடிபணிந்து போகக்கூடியவை. ஜீசஸின் அம்மா ஜீசஸைப் பெற்றெடுக்க கோவேறு கழுதை மேல் போனதாக கிறிஸ்துவ நூல்கள் கூறுகின்றன. இந்திய ராணுவத்தில் பெடோங்கி என்று ஒரு கோவேறு கழுதை இருந்தது. 1971 ஆம் வருடம் நடந்த போரில் இந்தக் கழுதை மிகவும் உண்மையாகவும் வீரமாகவும் பணி புரிந்தது. ஒருமுறை கோவேறு கழுதைகள் கூட்டமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய்க் கொண்டிருந்தபோது பாகிஸ்தானிய படைகள் வந்து அந்த மிருகங்களை தாக்கினார்கள். பல கழுதைகளும் அவற்றை ஓட்டிச் சென்றவர்களும் இறந்தனர். சிலர் படுகாயமுற்றனர்.

 

பெடோங்கி உள்பட சில கழுதைகள் பாகிஸ்தானியர்களால் பிடித்துச் செல்லப்பட்டன. முன்னணி இந்தியப் படைவீர்கள் பாகிஸ்தானியர்களை எதிர்த்துப் போரிட்டு விரட்டினர். ஆனாலும் பெடோங்கியையும் இன்னும் சில கழுதைகளையும் பாகிஸ்தானியர்கள் கூட்டிக் கொண்டு போய்விட்டனர். எதிரிகளிடமிருந்து பிடித்துக் கொண்டு வந்த கழுதைகளைப் பொதி சுமக்கப் பயன்படுத்துவார்கள். ஆனால் பெடோங்கிக்கு இதை பொறுத்துக் கொள்ள விருப்பமில்லை.

 

பதினைந்து நாட்கள் கழித்து ஒரு நடுத்தர இயந்திரத் துப்பாக்கி, இரண்டு பெட்டி வெடிகுண்டுகளை முதுகில் சுமந்தபடி பெடோங்கி தன்னுடைய பழைய இடத்திற்கு ஓடி வந்துவிட்டது.

 

பெடோங்கியைக் கண்டவுடன் விலங்கு போக்குவரத்து பெடாலியன் அதிகாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. தனது மேலதிகாரிக்கு செய்தியை அனுப்பினார். அவர் பெடோங்கிக்கு ஒரு பாராட்டுப்பத்திரம் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார். இந்திய குடியரசுத் தலைவர் பெடோங்கியின் வீரச் செயலைப் பாராட்டி அதற்கு வீர் சக்ரா விருது கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெடோங்கிக்கு ராணுவத்தில் ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டது. தனியாக ஒரு கொட்டிலில் அது தங்க வைக்கப்பட்டது. இஷ்டப்படி சாப்பிட்டுக்கொண்டு, ஜாலியாக வேலை எதுவும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தது. தனது 38 வயதில் இயற்கை மரணம் எய்தியது, பெடோங்கி.

 

அதற்குக் கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரமும், வீர் சக்ர விருதும் பெங்களூரில் உள்ள ராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொரு கோவேறு கழுதையும் வீரதீரச் செயல்கள் செய்கின்றனவோ இல்லையோ ஆனால் தன்னலமற்ற சேவையை செய்து வருகின்றன. எல்லா கழுதைகளும் பெடோங்கியைப் போலவே மரியாதையுடன் நடத்தப்பட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

Advertisements

21 thoughts on “வீர பெடோங்கி

 1. அன்புச் சகோதரி அவர்களுக்கு வணக்கம்.

  முதலில் ஒரு சிறு விளக்கம், தாழ்மையுடன். திருமதி (துளசிதரன்) கீதா என்பதைப் பற்றி. நானும், துளசிதரனும் (துளசிதரன் தில்லைஅகத்து) நண்பர்கள். நான் என் குடும்பம் வசிப்பது சென்னையில், துளசிதரன் அவர் குடும்பம் வசிப்பது கேரளாவில். நாங்கள் இருவரும் கல்லூரிக்காலத்து நண்பர்கள். சேர்ந்து எழுதுகின்றோம் எங்கள் தளத்தில் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸில்…

 2. வணக்கம் கீதா. துளசிதரன் என்கிற பெயர் தில்லையகத்து என்பதுடன் சேர்ந்து பிரபலமாகியிருப்பதால் அப்படி எழுதிவிட்டேன். உங்களுக்கு சங்கடம் விளைவித்துவிட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது. உடனே சரி செய்துவிடுகிறேன். உங்கள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

  1. என்ன சகோதரி மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. நீங்கள் சொல்வது சரிதான் துளசிதரன் தில்லைஅகத்து என்பது அவர் பெயர்தான். பலரும் முதலில் கணவன் மனைவி என்று நினைத்துவிட்டார்கள். அதனால்தான் இந்த விளக்கம். சங்கடம் எல்லாம் ஒன்றும் இல்லை சகோதரி. உங்கள் தவறு எதுவுமே இல்லை இதில். மிக்க நன்றி. தொடர்கின்றோம்.

   கீதா

 3. எங்கள் பதிவுகளையும் சுட்டி, தொடர்ந்து ஒரு அருமையான பதிவை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

  இதைப் பற்றி மகனும் சொல்லிக் கொண்டிருந்தான். பொதுவாகவே விலங்குகள் தாங்கள் வசித்த இடத்தை விட்டுச் செல்ல விருப்பப்படமாட்டா. மைக்ரேஷன் தவிர. அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குத்தான், எனவே அவற்றிற்கு இயற்கையாகவே நாவிகேஷன் – வழி மனதில் பதிந்து மோப்பம் பிடித்தே கூட வந்து சேர்ந்துவிடுவார்கள்.

  பெடோங்கி வீரமிக்க பெடோங்கிதான்…மிகவும் ரசித்தோம் பதிவை.

  மிக்க நன்றி

  கீதா

 4. ஒரு புதிய புதுமையான தகவல். கழுதைகள் புத்திகுறைவானவை என்று தவறாக மதிப்பிடப் படுகின்றன. அதன் விசுவாசத்தையும் புத்திசாலித் தனத்தையும் உறுதிப் படுத்துகிறது இந்தப் பதிவு. இதனைப் படித்ததும் நான் 2012 இல்’ நான் கழுதை’ என்ற எனது கவிதை நினைவுக்கு வந்தது.(என் பதிவு எனக்கு மட்டும்தானே நினைவு வரும் ஹிஹிஹி)

  1. அவரவர்கள் எழுதிய பதிவு அவரவர்களுக்கு மட்டுமே நினைவுக்கு வரும். அதுவும் நான் கழுதை என்று நாம் தான் நம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்ள முடியும், இல்லையா? அந்தப் பதிவின் இணைப்பையும் கொடுத்திருக்கலாமே! (எல்லோரும் நான் கழுதை, நான் கழுதை என்று படித்திருப்பார்களே! ஹா….ஹா….!)
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி, முரளி!

 5. நீங்கள் சொல்வது போல் கழுதைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் கொடுப்பதேயில்லை.. பாடல் பெறாத மிருகங்கள் என்கிற தலைப்பில் பட்டியல் எழுத ஆரம்பித்தால், பட்டியல் மிக நீளும்..
  பெடோங்கி கழுத்தைப் பற்றியத் தகவல் மிக சுவாரஸ்யம். .
  மிகவும் அருமையாக எடுத்து சொல்லியமைக்கு நன்றி ரஞ்சனி.
  வாழ்த்துக்கள் …….

  1. ஆமாம் ராஜி, நீங்கள் சொல்வது ரொம்ப சரி. எத்தனையோ பிராணிகள் நமக்காக உழைக்கின்றன. கொடுத்த வைத்தவை மட்டுமே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கின்றன.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

 6. சுவையான தகவல்கள். சமீபத்தில் பாஸிட்டிவ் செய்திகள் பகுதியில் தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் தனது எஜமானருக்கு தனியாகத் தான் மட்டுமே சென்று பால் விற்றுக் கொடுத்து வந்த ஒரு நாலு கால் செல்லத்தைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது. விபத்தில் சிக்கிய அதைப் பிழைக்காது தூக்கி எரிந்து விடுங்கள் என்று சொன்னவர்களையும் மீறி எஜமானர் அதைக் காப்பாற்ற, மறுபடி அது பால் வியாபாரத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

 7. பாவம் இந்த பிராணிகள். தங்கள் எஜமானர்களுக்காக எவ்வளவு பாடுபடுகின்றன. ‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது, இல்லையா?வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி, ஸ்ரீராம்!

  1. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ம்யூல் பற்றிய ஒரு சொலவடையை இங்கு சொன்னதற்கு.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s