Uncategorized · Women

பெண்குரல் 1

முகநூலில் ஒரு காணொளி பகிர்ந்திருந்தார்கள். மாணவர்கள் நிறைந்த ஒரு வகுப்பறை. ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து இவளுடைய பொழுதுபோக்கு என்ன கண்டுபிடிக்க முடியுமா? என்று மாணவர்களிடம் கேட்டார்கள். எல்லோரும் கோலம், ஓவியம், சமையல், தையல் என்று பெண்களுக்கென்று நம் சமூகம் வரைந்து வைத்திருக்கும் எல்லையை மீறாமல் பதில் சொன்னார்கள். அந்தப் பெண்ணே நேரில் வந்தாள். அவள் சொன்னாள் ‘என் பொழுதுபோக்கு ‘மலையேற்றம்’!’ என்று. எல்லோருக்குமே அளவுகடந்த வியப்பு! பெண்ணாவது மலையேறுவதாவது……? என்று தான் அங்கிருந்த ஒவ்வொருமே – மாணவர்கள் மட்டுமல்ல; மாணவிகளும் கூட நினைத்திருப்பார்கள்.

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் இதைப்போல தங்கள் எல்லைகளை கடந்து சாதித்துக்கொண்டிருக்கும் சில பெண்களைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

நுங்ஷி மற்றும் தஷி மாலிக்:
உலகத்தின் ஏழு மலை உச்சிகளை (எல்லாக் கண்டங்களிலும் உள்ள அதிக உயரமான மலை உச்சிகள்) ஏறிய முதல் இரட்டை சகோதரிகள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் இவர்கள். தென், வட துருவங்கள் இடையே உள்ள மிகக்கடினமான கடைசி தூரத்தை ஸ்கீ (Ski) என்னும் சாகச விளையாட்டு மூலம் கடந்தவர்கள். டென்னிஸ் விளையாட்டில் கொடுக்கப்படும் கிராண்ட்ஸ்லாம் என்கிற விருது போல இந்த சாகசவிளையாட்டிற்குக் கொடுக்கப்படும் ‘Adventures Grand Slam’ மற்றும் ‘Three Pole Challange’ ஆகிய விருதுகளைப் பெற்ற முதல் சகோதரிகள், மற்றும் இரட்டையர் என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு.

‘18 வயது நிரம்பியவுடன் மலையேற்றம் ஆரம்பித்தோம். எங்கள் பயிற்சியாளர் எங்களை வேடிக்கையாக ‘எவரெஸ்ட் ட்வின்ஸ்’ என்று கூப்பிட ஆரம்பித்தார். அதுவே எங்களக்கு எல்லா மலை உச்சிகளையும் தொட உந்துதலாக இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த எட்மன்ட் ஹில்லாரி, ‘நாங்கள் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்ளவில்லை. எங்களை வெற்றிகொண்டோம்’ என்று கூறியதை நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்த சாகச விளையாட்டு மூலம் இயற்கையை ஆராய்ந்து அறிந்ததைவிட எங்களை நாங்கள் முழுமையாக அறிந்துகொண்டோம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். இன்றைக்கும் நமது சமுதாயம் மலையேற்றம் என்பதை ஆண்களுக்கு உரித்தானது என்ற எண்ணத்திலேயே பார்க்கிறது. இதை மாற்றவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்’ என்று நுங்ஷி கூறுவதை தொடருகிறார் தஷி:

‘உயிருக்கு ஆபத்து, கைகால் மூட்டுக்களுக்கு ஆபத்து, (பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது ரொம்பவும் கவலை தரக்கூடியது) தனியாக நெடுந்தூரம் பயணம் செய்வது, ஆண்களுடன் பலநாட்கள் தங்குவது, உடல்நிலை சரியில்லாமல் போவது, மாதவிலக்கு என்று பல சவால்கள் இந்த சாகச விளையாட்டில் உண்டு. இதைத்தவிர நாங்கள் இருவரும் கண்ணாடி அணிந்திருக்கிறோம். பனிப்பிரதேசங்களில் கண்ணாடியில் பனி படர்ந்து பார்க்கமுடியாமல் போகும். ஒவ்வொரு அனுபவமும் எங்களுக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. பலசமயங்களில் ஆண்களை விட பெண்கள் மனதளவிலும், உணர்வுபூர்வமாகவும் சிறந்த பலசாலிகள் என்பதை உணருகிறோம். அதேபோல ஆண்களைவிட பெண்களின் உடலமைப்பு இயற்கையின் சவால்களை ஏற்கும் வகையில் அமைந்திருக்கிறது என்றும் தோன்றுகிறது!’

கூரை ஏறி கோழி பிடிக்காதவள் நான். அதனால என்ன? வானம் ஏறி வைகுந்தம் போறேன்னு சொல்றவங்களைப் பற்றி எழுதலாமே!

இந்தப் பெண்கள் தினத்தில் இந்த வீரலட்சுமிகளுக்கு வாழ்த்துச் சொல்வோம்!

நாளை இன்னும் சிலரை சந்திக்கலாம்.

Advertisements

9 thoughts on “பெண்குரல் 1

 1. ஆண்களை விட பெண்கள் மண உறுதி மட்டுமல்ல உடல் உறுதியும் மிக்கவர்கள் என்பதை நிருபித்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்..
  மகளிர்தின வாழ்த்துகள்

 2. மிக மிக அருமையான பதிவு! பல பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து வருகின்றார்கள். எத்தனைக் கிராமத்துப் பெண்கள் தங்கள் தினசரி வாழ்வையே போராடி வாழ்ந்து சாதித்து வருகின்றார்கள் அதுவும் ஒரு சாதனை தானே இல்லையா?! பலருக்கும் சாதனைகள் புரிய முடிந்தாலும் இந்தச் சமூகம் அதை ஏற்றுக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது இல்லை. பலரும் வெளியிலும் தெரிவதில்லை. வெளியில் தெரியாமல் சாதித்து வருபவர்களும் இருக்கின்றார்கள்.

  வாழ்த்துகள்!

  நல்ல பதிவு…மிகவும் ரசித்தோம்….

 3. பெண்கள் ஆண்களை விட உறுதி படைத்தவர்கள்தான். ஆனால் சிறுவயதிலிருந்தே பெண்கள் ஒரு சட்டத்திற்குள் அவள் உடலால் பலவீனமானவள் என்று வளர்க்கப்படுகின்றார்கள் அதனால்தான் முடக்கப்படுவது மட்டுமின்றி ஒரு பெண்ணின் மனதிலும் அந்த எண்ணங்கள் பதிந்து அது அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து விடுகிறது…

  நுங்ஷி மற்றும் தஷி மாலிக் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்

 4. மகளிர் தினத்தில் மிகவும் பொருத்தமான பதிவு பாராட்டுக்கள் ரஞ்சனி உங்களுக்கும் உங்கள் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s