Uncategorized

உபன்ட்டு!

 

உபன்ட்டு   (UBUNTU ) என்பது ஒரு ஆபரேடிங் சிஸ்டம். அந்தப் பெயர் எதனால் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு நிகழ்வு காரணம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தளத்தில் வந்திருந்தது. இதோ உங்களுக்காக அந்த நிகழ்வு:

ஒரு மனிதவியலாளர் ஒருமுறை ஆப்பிரிக்க பழங்குடி இனக் குழந்தைகளுக்காக ஒரு விளையாட்டை  நடத்தினார்.

ஒரு கூடை நிறைய மிட்டாய்களும், இனிப்புகளுமாக ஒரு மரத்தினடியில் வைத்தார். குழந்தைகளை அந்த மரத்தினின்றும் நூறு அடி தூரத்தில் நிற்க வைத்தார். குழந்தைகளிடம் சொன்னார்: ‘யார் முதலில் ஓடிப்போய் அந்த கூடையைத் தொடுகிரார்களோ, அவர்களுக்கு அந்த மிட்டாய்களும், இனிப்பும் கிடைக்கும்’

அவர் ஒன்று, இரண்டு, மூன்று சொன்னவுடன் அந்தக் குழந்தைகள் என்ன செய்தனர் தெரியுமா? எல்லோரும் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக அந்த மரத்தடிக்குச் சென்று கூடையை எடுத்து இனிப்புகளையும் மிட்டாய்களையும் சமமாகப் பிரித்துக் கொண்டார்களாம்.

ஏன் அப்படிச் செய்தார்கள் என்று மனிதவியலாளர் கேட்டபோது அவர்கள் ‘உபன்ட்டு’ என்றார்களாம். அதற்குப் பொருள் எல்லோரும் வருத்தமாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?’

உபன்ட்டு என்பதற்கு அவர்கள் மொழியில் ‘நான் என்பது நாங்கள்’ என்று பொருள்.

இந்த செய்தி எல்லா தலைமுறையினருக்கும்.

இந்த செய்தி என்றும் நம் மனதில் இருக்கட்டும். இந்த குழந்தைகள் சொன்ன செய்தியை உலகிற்குப் பரப்புவோம். கூடவே அது தரும் சந்தோஷத்தையும்!

‘நான் என்பது நாங்கள்!’

இதையே தான் ஆண்டாளும் ‘கூடியிருந்து குளிர்ந்து’ என்கிறாள்.

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2016!

Advertisements

25 thoughts on “உபன்ட்டு!

 1. அருமையான செய்தி. நம் பி எஸ் என் எல் கூட உபன்டு உண்டு…

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் நட்புகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

 2. நான் என்பது நாங்கள். நன்னாளில் நல்பதிவு. நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  1. நன்றி முனைவர் ஐயா!
   உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!
   உங்கள் முதல் வலைப்பூவைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்துச் செய்தியும் சொல்லிவிட்டு வந்தேன்.

   1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

 3. சமத்துவத்தை இதைவுட அழகாக சொல்ல முடியாது!! குழந்தைகள் உண்மையில் தெய்வங்கள்… புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா. இந்த வருடம் சென்ற வருடத்தின் தழும்புகளை மறக்கச் செய்து மகிழ்ச்சி தர இறைவனை வேண்டுகிறேன். 🙂

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
   இந்த வார்த்தை எந்த ஆஃப்பிரிக்க நாட்டிலிருந்து, எந்தப் பழங்குடியின் மொழியில் என்று அந்த மனிதவியலாளர் கூறவில்லையா? அவருக்கு ஆஃப்பிரிக்க பழங்குடி என்று சொன்னாலே போதுமெனத் தோன்றியிருக்கும்!

   சோமாலியா, கென்யா, காங்கோ என்கிற ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 10 வருடங்கள் பணிசெய்துள்ளேன். வாழ்ந்திருக்கிறேன். தலைநகர்களின் உல்லாச வாழ்வைத்தாண்டி, அந்த நாடுகளின் குக்கிராமங்களில், காட்டுப்பகுதிகளில் போய் பழங்குடிகளைப் பார்த்த அனுபவம் உண்டு. பழங்குடிகளிடம் ஒரு சீரான, கறாரான சமூகக்கட்டுப்பாடு உண்டு. அதன் தலைவர்கள் எப்படி அறிவுறுத்துகிறார்களோ அதன்படி, கேள்வி ஏதும் கேட்காமல் பணிய வேண்டும்; இட்ட காரியம் செய்ய வேண்டும். அந்தவழிப்படிதான் இனம் சிதறாது, கூட்டாக வாழும். கடும் உணவுத்தட்டுப்பாடுகளோடு, அலைந்து திரிந்து வாழும் அவர்களுக்கு கிடைத்தவற்றைப் பகிர்ந்தே உண்ணவேண்டும் என பழங்குடித் தலைவனால் புகட்டப்பட்டிருக்கிறது. அதன் விளைவே இந்தக் குழந்தைகளின் செயல். நகரத்திலிருந்து போயிருக்கும் நம்மைப்போன்றோருக்கு இது ஆச்சரியமான செயல். அங்கு வாழும் மனிதருக்கு இதுவே இயல்பானது.

   பொதுவாகக் குழந்தைகளுக்கு எதனை நீங்கள் சரியாகச் சொல்லித் தருகிறீர்களோ அதனைச் செவ்வனே செய்வார்கள். அவர்களின் சரியான பருவத்தில், சரியான மனிதர்களால், சரியாக அவர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். நகரவாழ்வில் நாம் அவர்களுக்கு என்ன சொல்லித்தருகிறோம்? தந்திரமாக இருப்பது எப்படி, மற்றொருவரை வெல்வது, வீழ்த்துவது எப்படி, சாமர்த்தியமாக பக்கத்தில் வருவோரை இடித்துத்தள்ளிவிட்டு `முன்னேறுவது` எப்படி என்றுதான் தினம்தினம் கற்றுக்கொடுக்கிறோம். அதனையே பெருமையாகவும் எண்ணுகிறோம்! நமது நவீன வாழ்வின் அவலமிது.
   -ஏகாந்தன்

 4. அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s