Uncategorized

வைகுண்ட ஏகாதசி

 
இரண்டு தடவை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் போயிருக்கிறோம். முதல் தடவை நடுஇரவில் எழுந்திருந்து தீர்த்தாமாடிவிட்டு கோவிலுக்குள் சென்று கிளி மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டோம். நம்பெருமாள் எழுந்தருளியதும் அவர் பின்னாலேயே கொஞ்ச தூரம் போய்விட்டு மூலவரைசேவிக்க மறுபடி கருவறைக்குள் நுழைந்தோம். மூலவரை முத்தங்கியில் நிதானமாக சேவித்துவிட்டு வந்தோம். என்ன இத்தனை சுலபமாக சொல்லிவிட்டீர்கள் என்கிறீர்களா? அந்தக் காலத்தில் அத்தனை சுலபமாகத்தான் இருந்தது பெருமாள் சேவை – எந்த நாளாயிருந்தாலும். எப்போது முடிகிறதோ அப்போது போய் சேவித்துவிட்டு வருவோம். நம்பெருமாள் நாள் முழுவதும் மணல்வெளியில் எழுந்தருளியிருப்பார் ஸ்ரீமான்தாங்கிகளின் தோள்களில். நிதானமாகப் போய் சேவித்துவிட்டு வருவோம்.
திருப்பதியில் கூட ஒரு காலத்தில் அம்மா அங்கப்பிரதட்சணம் செய்யும்போது அவள் பின்னாலேயே போய் அம்மா முடித்தவுடன் த்வஜஸ்தம்பத்திலிருந்து அப்படியே பெருமாள் சந்நிதியில் நுழைந்து பெருமாளை சேவித்துவிட்டு வந்திருக்கிறோம்- பலமுறை. இந்தக் க்யு, ஜருகண்டி ஜருகண்டி எல்லாமே செயற்கை. மனிதர்களால் செய்யப்பட்டது. அங்கு சரியும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு மற்ற கோவில்களிலும் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ சீக்கிரம், சீக்கிரம் அல்லது நட, நட (மலையாள திவ்ய தேசங்களில்) என்று விரட்டுகிறார்கள்.
திருவனந்தபுரம் போயிருந்தபோது மூலஸ்தானத்தில் நாங்கள் மட்டுமே. சேவிக்க ஆரம்பித்தவுடன் அங்கு பணியில் நின்றிருந்த பெண் போலீஸ் ‘நட, நட’ என்றார். நான் உடனே ‘எண்ட பொன்னு மோளே! யாரும் இல்லையே, இன்னும் கொஞ்ச நேரம் தரிசித்துவிட்டுப் போறேன்’ என்றேன். ‘எத்தர நேரம்?’ என்றார் அவர். ‘எத்தர நேரமானாலும் பெருமாளை தூக்கிக் கொண்டு போகமாட்டேன்’ என்று தமிழிலும் மலையாளத்திலும் கலந்துகட்டி சொல்லிவிட்டு மனம் குளிர பெருமாளை ஆற அமர சேவித்துவிட்டுத்தான் வந்தேன். ஒரேஒரு வருத்தம் என்னவென்றால் அத்தனை செல்வம் இருந்தும் பெருமாளுக்கு அழுக்கு வஸ்த்திரம் தான்!
இரண்டாவது முறை வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் போனபோது விடியற்காலை கோவிலுக்குப் போகமுடியவில்லை. விடிந்ததும் நானும் என் கணவருமாக கோவிலுக்குள் சென்றோம் கூட்டம் தாங்கமுடியவில்லை. க்யூ நீநீ……………………. …….ண்டிருந்தது. பார்த்துக்கொண்டே சென்றோம். தாயார் சந்நிதிக்கு போகும் வழியெல்லாம் தாண்டி நின்றிருந்தனர் மக்கள். க்யூ எங்கே முடிகிறது என்றே தெரியவில்லை. மெதுவாக சந்திரபுஷ்கரிணி அருகில் வந்தோம். பரமபத வாசல் கதவின் அருகே யாருமே இல்லை. மெல்ல அங்கு போய் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே அந்த வாயிலுக்குள் நுழைந்துவிட்டோம்! பரமபத வாசலிலிருந்து எல்லோரும் வெளியே வருவார்கள். நாங்கள் அதன் உள்ளே நுழைந்து கொஞ்ச தூரம் அப்படியே நடந்தோம். பிறகு திரும்பி வெளியே வந்தோம். இதுசரியா தவறா என்று மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.
வீட்டிற்கு வந்தவுடன் எனது மாமாவிடம் நடந்ததைச் சொன்னேன். ‘நீ செய்ததுதான் சரி. பெருமாள் மட்டும் தான் அவனது ஆஸ்தானத்திலிருந்து பரமபத வாசல் வழியாக வெளியே வரமுடியும். நாமெல்லாம் அதற்குள் இங்கிருந்து நுழையத்தான் முடியும்! அங்கு ஒருமுறை நுழைந்துவிட்டால் திரும்ப வருதல் இல்லை’ என்றார். மனது கொஞ்சம் சமாதானமாயிற்று.
பெங்களூரில் சில கோவில்களில் மட்டுமே பரமபதவாசல் இருக்கும். பரமபதவாசல் இல்லாத கோவில்களில் பெருமாளை ஒரு மண்டபத்தில் ஊஞ்சலில் உயர எழுந்தருளப் பண்ணியிருப்பார்கள். நாம் குனிந்து பெருமாளின் கீழே வரவேண்டும். எத்தனை மணிக்குப் போனாலும் எத்தனை பேர்கள் வந்தாலும் அத்தனை பேர்களுக்கும் அவலில் செய்த சித்திரான்னம் கிடைக்கும் பெங்களூர் கோவில்களில். சில கோவில்களில் கூடவே லட்டும் கொடுப்பார்கள்.
பெங்களூரு மார்கெட் இருக்குமிடத்தில் உள்ள கோட்டே வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலுக்குத்தான் வருடாவருடம் போவோம். காலை 2 மணிக்கு எழுந்து தீர்த்தாமாடிவிட்டு போனால் கோவிலுக்குள் போகமுடியும். பிறகு போனால் வெளியில் க்யூவில் கால்கடுக்க நின்று சேவிக்க வேண்டும். நல்ல குளிர் வேறு. ஆனால் அந்த அதிகாலையில் போய் பெருமாளை சேவிப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த அதிகாலையிலும் அவல் சித்ரான்னம் நிச்சயம் கிடைக்கும்.
இந்தமுறை தொலைக்காட்சியில் பெருமாளை சேவித்ததுடன் திருப்திப் பட்டுக்கொண்டேன்.
Advertisements

4 thoughts on “வைகுண்ட ஏகாதசி

  1. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வைகுண்ட எகாதசிகளுக்கு நான் கோவிலுக்குச் சென்றதில்லை! எனக்கும் சேர்த்து என் மனைவி கோவிலுக்கு தினமுமே செளிறார் என்பது வேறு. கூட்டங்களைக் கண்டால் எனக்கு அலர்ஜி. திருப்பதி சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன! பெரிய பெருமையா என்று கேட்காதீர்கள். பெருமை இல்லை ஜஸ்ட் ஒரு தகவல்!

    :)))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s