கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தான் 3

திருவாலி திருநகரியில் வருடம்தோறும் நடக்கும் வேடுபரி உத்சவத்தில் திருமங்கையாழ்வார் தனது ஆடல்மா குதிரையில்

 

 

பல பறவைகளை நோக்கி மாயனை அழை என்று சொல்லும் பாடல்கள் பத்து வெண்துறை என்னும் அரிதான பா வகையில் பாடியிருக்கிறார்.

அவைகளில் ஒன்று.

கரையாய் காக்கைப் பிள்ளாய்

கருமாமுகில் போல் நிறத்தான்

உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்

கரையாய் காக்கைப் பிள்ளாய்

 

என்று கண்ணன் வருமாறு கரைவாய் என்று காக்கையிடம் வேண்டிக் கொள்கிறாள் பெண்.

 

ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

 

திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகமும் திருக்குறுத் தாண்டகமும் முறையே முப்பது, இருபது விருத்தப் பாடல்கள் கொண்டவை.

 

நெடுந்தாண்டகம், எட்டு சீர்கள் அமைந்தவை. குறுந்தாண்டகம், ஆறுசீர் விருத்தம். தாண்டகம் என்னும் இலக்கிய வகையின் விதிகள் கடினமானவை. புள்ளி எழுத்துகளை நீக்கினால் ஒவ்வொரு அடியிலும் இருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை 27-க்கு மேல் இருக்க வேண்டும் என்று ஒரு விதி சொல்கிறது. இந்தப் பா வகை வடமொழியில் உள்ள தண்டகம் என்பதிலிருந்து வந்ததா என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. தமிழ் யாப்பின் தாண்டகம் வடமொழியிலிருந்து வேறுபடுகிறது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை தாண்டக யாப்பில் அமைந்தது. திருத்தாண்டகம் என்றும், அவர் ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார். திருமங்கையாழ்வாரின் தாண்டகங்கள் இரண்டும் மொத்தம் ஐம்பது பாடல்களே. எல்லா அடிகளும் தாண்டக அடிகளுக்கான இருபத்தேழுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையல்ல. திருமங்கை மன்னனின் தாண்டகத்தைப் பற்றி தனிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்.

 

திருக்குறுந்தாண்டகத்தில் அருமையான அறுசீர் விருத்தங்கள் உள்ளன.

 

மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம்கொண்ட

கோவினை குடந்தை மேய குருமணித் திரளை இன்பப்

பாவினைப் பச்சைத் தேனை பைம்பொன்னை அமரர் சென்னிப்

பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வார் தாமே.

 

மும்மூர்த்திகளுக்கும் முதல்வன், உலகத்தை விழுங்கிய தலைவன், குடந்தையின் மணித்திரள், இன்பப் பாட்டு, பச்சைத் தேன், பசும்பொன், தேவர்களின் தலைப்பூ இப்படி என்னவெல்லாம் சொல்லித் தொண்டர்கள் அவனைப் புகழ முடியும்! திருநெடுந்தாண்டகத்தின் இந்தப் பாடல் பிரசித்தமானது.

 

பாருருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகி

பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற

ஏருருவில் மூவருமே யென்னநின்ற

இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது

ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற

மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி

மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே

 

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றும் பலவேறு சமயங்களுமாய் பரந்து விரிந்தவனை ஒருமைப்படுத்தி, பிரமன், விஷ்ணு, சிவன் மூவரையும் ஓர் உருவம் என்று இமையவர்கள் எண்ணும்போது ஓர் உருவம் பொன்நிறம், ஒன்று சிவந்த நெருப்புருவம், ஒன்று கடல் உருவம். இந்த மூன்று உருவங்களும் கண்டபோது ஒருமைப்படுத்திய ஒரு சோதி போன்றவன் மேகக் கருமை படைத்த எங்கள் நாராயணனின் உருவம், என்று விஸ்தாரமான அழகான பாசுரத்தால் விளக்குகிறார்.

 

திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து ஏழுவரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும் இதைச் சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.

 

திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் பல் திறமையைக் காட்டுகிறது.

 

ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து

மங்கையர் இருவரும்

மலரன அங்கையில் முப்பொழுதும்

வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை

வருணமும் ஆயினை

மேதகும் ஐம்பெரும்

பூதமும் நீயே அறுபதம்

முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை

அடங்கச் செற்றனை அறுவகைச்

சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்

ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல்

நான்கவையாய்

மூர்த்தி மூன்றாய்

இருவகைப் பயனாய்

ஒன்றாய் விரிந்து

நின்றனை.

 

இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார். திருமங்கை மன்னனின் இரண்டு திருமடல்களும் மிகுந்த இலக்கிய சர்ச்சைக்கு உள்ளானவை. அவைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

தமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறித்தன. விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே ஒரு பைத்தியக்காரன் போலக் காதலன் தோன்றிப் பிடிவாதமாக அடம் பண்ணி அடையும் ஒரு விதமான முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல்

 

இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதித்துத் தொலைப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது. இயற்பா என்கிற பிரிவில் திருமங்கையாழ்வாரின் இரண்டு மடல்களும் வருகின்றன. திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாக இரு மடல்களிலும் பாடிப் புரட்சி செய்திருக்கிறார். தொல்காப்பியம் பெண்கள் மடலேறுதல் கூடாது என்கிறது. திருக்குறளும் கடல் போலக் காமம் இருந்தாலும் மடல் ஏறத்தயங்குவாள் என்று பெண்ணின் பெருமையைப் பேசுகிறது. திருமங்கையாழ்வாருக்கும் இது தெரியும்.

 

அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தௌ¤யோம்.

 

பெண்கள் வதந்தி பரவ, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ் நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு என்று தெரிந்திருந்தும் பாடுகிறார்.

 

திருமங்கையாழ்வார் காலத்துக்கு (8ம் நூற்றாண்டு) முன்பு பெண்கள் மடலேறுவதாக ஒரு சில குறிப்புகள் கலித் தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சம்பிரதாயத்தை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அச்சுறுத்தும் வகையில்தான் உள்ளன. நம்மாழ்வாரும் யாம் மடல் ஊர்ந்தும் எம்ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணந் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்று மடல் ஊர்ந்தாவது அவனை அடைவேன் என்கிறாரே தவிர முழுவதுமாக மடல் எழுதி அமைத்தவர் திருமங்கையாழ்வாரே. கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை ஆழ்வாரின் இரு மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் என்னும் நூல் கூறுகிறது.

 

இந்த காலகட்டத்தில்தான் மடலிலும் புதுமை செய்திருக்கிறார்.

 

நீரேதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய் செய்தான் ஆரானுமல்லன் அறிந்தேன் அவனை நான் கூரார் வேற்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ ஆரால் இவ்வையம் இவ்வையம் அடியளப் புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியாய் வீழ்ந்தது மற்று ஆராலே கன்மாரி காத்ததுதான் ஆழிநீர் ஆரால் கடைத்திடப்பட்டது அவன் காண்மின்

 

பயப்படாதீர்கள் உம் மகளுக்கு காதல் நோய் கொடுத்வன் வேறு யாருமில்லை. எனக்கு அவனைத் தெரியும். உங்களுக்கு அறியுமாறு சொல்கிறேன். யாரால் உலகம் மூன்று அடிகளால் அளக்கப்பட்டது. யாரால் இலங்கை பொடிப்பொடியாயிற்று, யாரால் கன்றுகள் மழையிலிருந்து காப்பாற்றப்பட்டன, யார் பாற்கடலைக் கடைந்தது அவன்தான்.

 

போரானை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால் நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய்

 

பொய்கையில் அகப்பட்ட போர் யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவை உயர்த்தி நாராயணா என் கஷ்டத்தை நீக்காயோ என்றபோது வந்து காப்பாற்றினவன். இவ்வாறு சிறிய திருமடல் முழுவதும் நாராயணன் என்கிற பெயருடன் எதுகை.

 

பெரியதிருமடலில் அதுபோல் கண்ணன் என்பதுடன் முழுவதும் எதுகை பயில்கிறார் (எதுகை என்றால் போரா, நீரா, வாரா, நாரா என்று ஆரம்பச் சீரில் பயிலும் _ ஓசை ஒற்றுமை)

 

பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார்.

 

அந்த ஊர்கள்: திருவிண்ணகர், குடந்தை, திருக்குறுங்குடி, திருச்சேறை, திருவாலி, திரு எவ்வளூர், திருக்கண்ணமங்கை, திருவெள்ளறை, திருப்புட்குழி, திருவரங்கம், திருவல்லவாழ், திருப்பேர்நகர், திருக்கோவிலூர், திருவழுந்தூர், தில்லைச் சித்திரக்கூடம், திருவேங்கடம், திருமாலிரும்சோலை, திருக்கோட்டியூர், திருமையம், திரு இந்தளூர் கச்சி, திருவேளுக்கை, திருவெஃபா, திருவிடவெந்தை, கடல்மல்லை, திருத்தண்கா, ஊரகம், அட்டபுயகரம், திருவாதனூர், திருநீர்மலை, திருப்புல்லாணி, திருநாங்கூர், திருக்கண்ணபுரம், திருநறையூர் மணிமாடக் கோயில் _ இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார். ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.

 

திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரை நம்மாழ்வாருக்கு அருகில் கொண்டு செல்கின்றன. நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார் _ முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.

இந்திரர்க்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.

இந்திரனின், பிரம்மாவின் தலைவன், நிலம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் ஐந்து பூதங்களும் அவன், தமிழும் அவன், வடமொழியும் அவன், நான்கு திசைகளும் அவன், சூரிய சந்திரனும் அவன், தேவர்களாலும்    ஸ்ரீ அறியப்படாத உத்தமன், வேத மந்திரமும் அவன்தான். அறியாத நெஞ்சமே அவனை மறக்காமல் இருந்தால் சிறப்பாக வாழலாம்.

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்

இந்தக் கட்டுரையை மிகச் சிறப்பாக எழுதிய திரு ராஜசேகரன் ஸ்வாமிக்கு எனது தண்டன்கள்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தோன் 2

திருமங்கையாழ்வாரும், அவரை மணந்து திருத்திப் பணி கொண்ட குமுதவல்லியும், திருவாலி திருநகரி ஸ்தலம்

என்ன  ஒரு  அழகான  திருவுருவம்!

 

பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார். ‘சரியான கலியனப்பா நீ’ என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார். பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது. என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை.

 

பரகாலன் ‘யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்’ என்று அதட்ட, நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.

உடனே அவர் பாடிய பாசுரம்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே

 

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. தின வாழ்வில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து விட்டு உணர்வால் அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்துகொள்ளும் ஒரு கண்டுபிடிப்பு. வியப்பும், கடந்தகாலத் தப்புகளுக்கு வருந்துவதும் அவர் பாடல்களில் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதும் தெரியும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை போன்றவைகளையும் இயற்றியுள்ளார். பின் சொன்னவை மூன்றும் பிரபந்தத்தின் இயற்பா என்னும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட பாடல்களாயினும் யாப்பிலக்கணப்படி மூன்றையும் மூன்று பாடல்களாகக் கணக்கிடுவதுதான் சரி. இதனால் திவ்யப்பிரபந்தம் மொத்தம் நாலாயிரம் பாடல்களுக்குக் குறைவு. இருந்தாலும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்று கூறுவதே வழக்கம். இதில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. எல்லா வகைப்பாடல்களையும் இயற்றியுள்ளார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார். வடநாட்டிலுள்ள திருவதரி (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் இவைகளிலிருந்து துவங்கி தென்னாட்டுக் கோயில்கள் அத்தனையும் விட்டுவைக்காமல் ஊர் ஊராகச் சென்று பாடியிருக்கிறார். திருமங்கை மன்னனின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சில வைணவக் கோயில்களின் பழமை நமக்குத் தெரிகிறது. உதாரணம் திருவிடவெந்தை. சென்னைக்கு அருகே இருக்கும் அழகான கோயில். மகாபலிபுரம் போகும் வழியில் உள்ளது. அதைப் பாடியிருக்கிறார். முதல் பத்துப் பாடல்களும் அஷ்டாக்ஷரத்தின் மகிமையைச் சொல்கின்றன. அதில் உதாரணம் பார்க்கலாம்.

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கரசு என்னுடை வாணாள்

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி

அவருயிர் செகுத்தஎம் அண்ணல்

வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை

மாமணிக்கோயில் வணங்கி

நம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்

 

இதில் குறிப்பிடும் மாமணிக் கோயில் தஞ்சையில் எங்கிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

கீழ்வரும் பாசுரம் வைணவர்களுக்கு மிக முக்கியமானது-பல சந்தர்ப்பங்களில் இது வைணவ இல்லங்களில் ஒலிக்கும்.

 

குலந்தரும் செல்வம் தந்திடும்

அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்

அருளோடு பெருநிலமளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும்

பெற்ற தாயினும்ஆயின செய்யும்

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே.

 

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது.

 

இரண்டாம் பத்து பாடல்களில் திருமங்கையாழ்வார் திருப்பிருதியைப் பாடுகிறார். திருப்பிருதி என்பது வடக்கே மானசரோவர் என்கிறார்கள்.

 

வாலி மாவலத் தொருவனது உடல்கெட

வரிசிலை வளைவித்து அன்று

ஏல நாறு தண் தடம் பொழில்

இடம்பெற இருந்த நல் இமயத்துள்

ஆலி மாமுகில் அதிர்தர

அருவரை அகடுற முகடேறி

பீலி மாமயில் நடம்செயும் தடம் சுனை

பிருதி சென்று அடை நெஞ்சே

 

வாலியின் பலம் கெடும்படி வில்லை வளைத்து வீழ்த்தியவனை, வாசனை வீசும் குளிர்ந்த பரந்த பொழில் கொண்ட இமயத்தில் மழை மேகங்கள் சப்தமிட, மலை உச்சிகளில் மயில்கள் ஆடும் சுனைகளுடைய திருப்பிருதி என்கிற இடத்தைச் சென்று அடை.

 

இந்தப் பாடலை அவர் அங்கே போய்ப் பாடினாரா, இல்லை, மனசில் கற்பனை பண்ணிக் கொண்டு பாடினாரா என்பது தௌ¤வாக இல்லை. இமயத்துள் இருப்பதாக முதல் பாட்டிலேயே குறிப்பிடுகிறார். அவர் காணும் பிருதியில் மயில்கள் நடனமிடுகின்றன. சுனைகள் நிறைந்திருக்கின்றன. சிங்கங்கள் திரிகின்றன. யானைகள் தூங்குகின்றன. அருவிகள் சொரிகின்றன. மாதவிக் கொடிகள் மேகத்தை எட்ட எட்ட முயற்சிக்கின்றன. இவ்வாறான பொதுவான அழகான இடத்தைப் பற்றிய வருணனைகள் கிடைக்கின்றன.

 

திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்கிற வகைகளில் 1137 பாசுரங்கள் யாத்துள்ளார்.

 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் ஒரு முழு ‘ஆயிர’த்தையும் அவருடைய பெரிய திருமொழி வியாபிக்கிறது. எல்லா வகைப் பாடல்களையும் செய்திருக்கிறார். சங்க இலக்கிய மரபான மடல்கள் இரண்டை, பகவான் பேரில் அனுப்பியிருக்கிறார். வாழ்க்கையில் ஓர் அரசனுக்குரிய சந்தோஷங்களையும், பதவிச் சலுகைகளையும் பெற்றும் பக்தியில் ஈடுபட்டு இத்தனை உருக்கமாகப் பாடியுள்ளது பிரபந்தத்தில் வற்றாத வியப்பு. திருமாலை அவர் எப்படிக் கருதுகிறார் என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

எம்பிரான் எந்தை என்னுடைய சுற்றம்

எனக்கு அரசு என்னுடை வாணாள்

எனக்கு நன்மை செய்பவன், என் தந்தை, உறவினன், என் அரசன், என்னுடைய வாழ்நாள் எல்லாமே திருமால்தான் என்கிறார். மனித உடலை எப்படிக் கருதுகிறார்?

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி

உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்

தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்

சரணமே சரணம் என்றிருந்தேன்.

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்.

அவர் ஊர் ஊராய்ச் சென்று பாடிய பாசுரங்கள் பலவற்றுள் திருவேங்கடத்தில் பாடிய பாடல்கள் உருக்கமானவை.

 

மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து

நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்

தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே

மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.

 

திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் repentant தொனியைப் பார்க்கலாம். வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

 

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

 

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்

என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்

குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா

அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.

பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது. மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்

பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்

சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்?

திருமங்கை மன்னன் பாடிய தலங்களின் அழகான தமிழ்ப் பெயர்கள் கிறக்கமூட்டும் திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம் என்று பெரிய பெயர்களுள்ள சின்னச்சின்ன ஊர்களில் எல்லாம் போய்ப் பாடிப் பரவசமடைந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் இன்று திருவெள்ளா என்று அழைக்கப்படும் ஊர், அவர் காலத்தில் திருவல்லவாழ் என்றிருந்தது. திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற தலங்களை அதிகம் பாடியிருக்கிறார். வல்லவாழ் பாசுரங்களில் ஓசை நயத்தையும், பொருள் நயத்தையும் ரசிக்கலாம்.

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்

அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான

மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று அடையும் வழியைப் பார் நெஞ்சே!

பெரியாழ்வாரைப் போல பிள்ளைத் தமிழின் கூறுகளாக சில பாடல்கள் கண்ணனை மையமாக வைத்து திருமங்கை மன்னனும் அமைத்திருக்கிறார். வெண்ணெய் உண்டது, சப்பாணிப் பருவம், ஆய்ச்சியர் முறையிடல்.

 

ஆய்ச்சியரின் வாசலில் அழகாக ஆடை அணிகலன்களுடன் வந்து நின்று புன்னகைத்து அவர்களை மயக்குகிறான் என்று முறையிடுவதும், வியப்பதும் ஒரு தனிப்பட்ட பார்வை. கண்ணன் காதலனா, குழந்தையா என்கிற மருட்சி ஏற்படுத்தும் அணுகல் இது.

 

சுற்றும் சூழல்தாழச் சுரிகை அணைத்து

மற்றும் பலமாமணி பொன் கொடணிந்து

முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்

எற்றுக்கு இது என்னிது என்னிது வென்னோ

 

அணிகலன்களும் அலங்காரங்களும் கொண்டு எங்கள் முற்றத்தில் நுழைந்து புன்னகை செய்கிறாய். எதற்காக இது? என்னதான் இது? என்று வியப்படைகின்றனர் ஆய்ச்சியர்.

கார்த்திகையில் கார்த்திகை நாள் வந்துதித்தான்

இதை எழுதியவர் திரு ராஜசேகரன், வரவரமுனி சம்மந்திகள் சபை

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.

ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லை
என்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.

மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்

சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்?

திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரை நம்மாழ்வாருக்கு அருகில் கொண்டு செல்கின்றன. நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார் _ முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.

வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுலைப் பயனே பேணினேன்…
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்

என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று  பல பாடல்கள் பாடியுள்ளார். இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள். குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது. நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார்.

பெண்ணோ பிராமணப் பெண். இவர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள்.

பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர். பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது. திருமங்கை மன்னன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய திறையையும் செலவழித்து விட்டார். அரசன் கோபங் கொண்டு அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்ப, திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு அவர்களை அடித்து விரட்டிவிட்டார். அரசனுக்கு மேலும் கோபம் மூண்டது. ஒரு சைன்யத்தையே அனுப்பி அவரைத் தோற்கடித்துச் சிறை வைத்தார். திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னன் மந்திரியை என்னுடன் காஞ்சிக்கு அனுப்புங்கள், காஞ்சியில் பொருள் கிடைக்கும் என்றார். அரசனும் தன் மந்திரியை உடன் அனுப்ப காஞ்சிபுரத்துக்கு வந்தார். வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தனத்தை அன்னதானத்துக்கு வைத்துக் கொண்டார். அரசர் இவருடைய நேர்மையை வியந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் பணத்தட்டுப்பாடு. பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹூட் அவர்… நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார். அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார். இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள். இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

நாளை தொடரும்…..

விருது வந்தது!

பைவ்  ஸ்டார் பதிவர்

எப்போதெல்லாம் மனம் சோர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்த எனது நண்பர்கள் யாராவது ஒரு விருதினைக் கொடுப்பார்கள். இது எதேச்சையாக அமைகிறது என்பதுதான் ரொம்பவும் வியப்பான செய்தி.

இந்த முறை அவர்கள் உண்மைகள் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு மதுரைத் தமிழன் எனக்கு இந்த பைவ் ஸ்டார் விருதைக் கொடுத்திருக்கிறார். இவரது பதிவுகளுக்கு நான் அதிகம் போனதில்லை. ஆனால் என் எழுத்துக்கள் இவரைக் கவர்ந்திருக்கின்றன என்பதை இவர் எனது பதிவுகள் சிலவற்றிற்குப் போடும் கருத்துரைகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

அவர் நவம்பர் 16 ஆம் தேதியே இதை அறிவித்திருக்கிறார். ஆனால் சென்னையில் இருப்பதால் முகநூல் பக்கம் வரமுடியவில்லை. இன்று தான் பார்த்தேன். விருது என்பது நானும் ஏதோ சில விஷயங்களை பலருக்கும் பயன்படும் வகையில் சொல்லிவருகிறேன் என்பதைப் புரிய வைக்கும் ஒரு மிகப்பெரிய விஷயம். (அதாவது நான் ஒன்றுக்கும் உதவாதவள் இல்லை என்பதை நான் உணரவைக்கிறது)

நன்றி மதுரைத் தமிழன்! அவரது பதிவில் என்னைப் பாராட்டி கருத்துரை இட்ட எல்லோருக்கும் எனது அன்பும், நல்வாழ்த்துகளும்.

 

இன்டர்நெட் எனும் மாயவலை – மின் பத்திரிகைகள்!

நன்றி: திரு அனந்தநாராயணன்
91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.
 
 
92. உதாரணமாக, அவள் விகடன் உள்ளிட்ட விகடன் பதிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென ஆண்டுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
 
93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.
 
 
பிளாக் (Blog)… நமக்கே நமக்காக இணையத்தில் ஓர் இடம்!
 
 
நம் கருத்துக்களை, எண்ணங்களை எந்த தயக்கமும் இன்றி முழு சுதந்திரத்துடன் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் இடம்தான் ‘பிளாக்’ எனப்படும் வலைப்பதிவு. இணையதளங்களைப் போலவே, ஆனால், பைசா செலவில்லாமல் இலவசமாக நமக்கான வலைப்பக்கத்தை நிர்வகித்து, தகவல்களைப் பகிரலாம்.
 
 
94. பிளாக்கர் (www.blogger.com), வேர்டுபிரஸ் (www.wordpress.com) உள்பட பல இணையதளங்கள், வலைப்பதிவு சேவை அளிக்கின்றன. நமக்கான பக்கத்தின் வடிவமைப்புக்குத் தேவையான டெம்ப்ளேட்களையும் இலவசமாகவே தருகின்றன. தொழில்நுட்ப அறிவு என்பது வலைப்பதிவுகளுக்குத் தேவையில்லை.
 
95. நமது வலைப்பதிவைப் பிரபலப்படுத்துவதற்காகவே திரட்டிகள், அதாவது வலைப்பதிவுகளை ஒருசேர காட்சிக்கு வைக்கும் தளங்கள் உதவுகின்றன. www.tamilish.com, www.tamilmanam.net போன்ற திரட்டி தளங்களில் நமது வலைப்பதிவுகளை பதிவு செய்து பிரபலப்படுத்தலாம்.
வேலைவாய்ப்புக்கும் ‘க்ளிக்’குங்கள்!
 
 
 
மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் முதுகெலும்பாக இருக்கின்றன இணையதள சேவைகள்.
 
தற்போதுள்ள சூழலில் 90% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, ஆன்லைனிலேயே நடக்கிறது.
 
 
96 www.naukri.com, www.monsters.com, www.jobsdb.com உள்பட நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
 
97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.
 
முடிவில்லா இணையவெளியில் எச்சரிக்கை உணர்வும் அவசியம்!
 
 
இன்டர்நெட்டில் அழகான ஸ்வீட்டும் உண்டு; ஆபத்தான பாய்ஸனும் உண்டு. எனவே, சில அலர்ட் டிப்ஸ்கள்…
 
 
98 எந்த ஒரு சிறந்த சேவைக்கும் குறைகளும் இருக்கும். இது இணையத்துக்கும் பொருந்தும். கொடுத்த முழு சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இணையத்தில் அதிகம். நமக்குத் தெரியாமல் அவர்கள் பக்கம் நாமும் சாயக் கூடும், அல்லது அவர்கள் வலையில் விழக்கூடிய சூழல் ஏற்படும்.
 
 
99. இணையத்தில் உலவும்போது, பார்வையிடும் இணையதளங்கள் அனைத்திலும் உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். சில மோசமான தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தவறாக பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் கணக்கையே ஒன்றுக்கும் உதவாதது என்றாக்கிவிடுவார்கள். எச்சரிக்கை!
 
 
100 உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பரிசுகள் அனுப்பியிருப்பதாக மின்னஞ்சல் வரும். அதைக் கிளிக் செய்த சில நிமிடங்களில், உங்கள் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும், அதே மின்னஞ்சல் செல்லும். அதில் நீங்கள் பரிசு அனுப்பியதாக செய்தி தோன்றும். இதனால் உங்கள் நற்பெயர் கெடும்… கவனம்!
இன்டர்நெட்டை கூலாக, கொஞ்சம் கேர்ஃபுல்லாக பயன்படுத்துங்கள்! பலன்கள் பல பல பெறுங்கள்!
யுரேகா…..! யுரேகா….!

பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமெடீஸ், அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள்…

‘யுரேகா… யுரேகா’ (கண்டுபிடித்துவிட்டேன்…கண்டுபிடித்துவிட்டேன்).

ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னும் அந்தக் குரல் ஓயவில்லை. தினம் தினம் உலகம் முழுக்க புதிது புதிதாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் விஷயத்தில் நிமிடங்களுக்கு ஒன்றாகக் கூட புது விஷயங்கள் முளைக்கின்றன. பலமுனைகளில், பலதரப்பட்டவர்களும் மூளையைக் கசக்கிக் கொண்டு உழைப்பதால் நிகழும் அற்புதம் அது! அப்படிப்பட்ட அற்புதம் மற்றும் அதை உருவாக்கியவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் இதோ எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்… கம்ப்யூட்டர்…!

 

இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்?

‘டிஃபரன்ஸ் இன்ஜின்’ என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம்ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு,அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால்,அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் ‘சார்லஸ் பாப்பேஜ்’. இவரைத்தான், ‘கம்ப்யூட்டரின் தந்தை’ என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால்,பல பரிணாமங்களைக் கண்டு…இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது. இன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்? உலகை ஆளும் ‘இன்டெர்நெட்’டைஉருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.

 

முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் ‘நெட்வொர்க் வொர்க்கிங் குரூப் என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் ‘யு.சி.எல்.ஏ.’ என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.

 

 

மெயில் அனுப்புவது என்றாலே… ஒரு காலத்தில் அது ‘யாஹூ’ என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் ‘கரிகுலம் வீட்டாய்’ எழுதும்போது ‘யாஹூமெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹூ நிறுவனத்தை நிறுவியவர்கள் ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.

 

‘கூகுள்’ என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத்தகவல்களையும் பெற முடிவது எப்படி?  1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், ‘ஸர்ச்இன்ஜின்’ எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக்கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை.

 

1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்! ‘ஆர்குட்’ எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது… 2004 ஜனவரியில்.உருவாக்கிய ‘ஆர்குட்’ பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்… பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ… வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.

 

கண்ணுக்குத் தெரியாத ‘செல்’ தொடங்கிகாணவேமுடியாத ‘அண்டம்’ வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா… ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. ‘ஜிம்போ’ என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ எனும் டெக்னாலஜி… பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது.

‘மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு’ என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே… போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார்.

இந்தக் கம்ப்யூட்டருக்கு…. சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா… இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!

இந்தத் தொடர் இந்தப் பகுதியுடன் முடிவடைகிறது.

இதுவரை :

இன்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100

குப்பை மெயில் 

ஹேக்கிங் 

ஆன்லைன் ஷாப்பிங் 

இன்டர்நெட் – ஆன்லைன் ஷாப்பிங்!

போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!
 
 
66. ஷாப்பிங் என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.
 
 
67. ஆன்லைன் ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்
 
 
68. முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!
 
 
69. நம்பத் தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
 
 
70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
 
 
71. சற்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 
 
72. இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.
 
 
73. ஒவ்வொரு முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
 
 
74. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.
 
 
75 உதாரணமாக, indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
 
 
ஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்!
 
5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.
 
 
76. இணையத்தில் தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
 
 
77. முன்பெல்லாம், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.
 
 
78 யூ-டியூப் (www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.
 
 
79 திரைப்படங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.
 
 
80 பாடல்களைக் கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.
 
 
81. ஆன்லைனில் பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.
 
 
82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.
 
 
83. சீரியஸாக ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, ‘இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?’ என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.
 
 
84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
‘ஜி-டாக் (Google Talk)’-ல் பேசுங்கள்… ‘சாட்’டுங்கள்!
 
 
85 நண்பர்களுடன் அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். ‘யாஹ” மெசெஞ்சரை’ கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது ‘ஜி-டாக்’.
 
 
86. ஜி-மெயில் சேவையின் அங்கம்தான் ‘ஜி-டாக்’ என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
 
 
 
நம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)!
 
கடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்தகங்களும், மின் பத்திரிகைகளும்!
 
87. இணையத்தில் தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.
 
 
88. இணைய தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.
 
 
89. புத்தகங்கள் பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.
 
 
90 பல தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.

 

இன்டர்நெட் எனும் மாயவலை – ஹேக்கிங் கவனம்!

 நன்றி: திரு அனந்தநாராயணன்
ஹேக்கிங் (Hacking)… கவனம்!
 
 
நமக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துக்களை, அதாவது ஆன்லைன் சொத்துக்களை நம் கண் முன்னாலேயே அழகாக அபகரித்துச் செல்வதே ஹேக்கிங். அதைப் பற்றி சில துளி தகவல்கள் இங்கே…
 
 
44. ஹேக்கிங் என்பது இன்று நேற்று முளைத்த சொல் இல்லை. 1900-ம் ஆண்டுகளிலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஹேக்கிங்கின் தொடக்கம் என்று கூறுகின்றனர்.
 
 
45. ஹேக்கிங் என்ற முறைகேட்டை எல்லோராலும் செய்து விட முடியாது. உலகின் மிகச்சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 100 பேரைத் தேர்வு செய்தால், அவர்களுள் 80 பேர் ஹேக்கர்களாக இருப்பர்.
 
 
46. அதிக தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் என பல சிறப்புகளைப் பெற்றிருப்பவர்தான் முழுமையான ஹேக்கராக முடியும்.
 
 
47. இணைய இணைப்புதான் ஹேக்கிங் மன்னர்களுக்கு முதுகெலும்பு. இணையத்தில் நாம் உலவுவதை கண்காணித்து, நம்மைக் குறிவைத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களுக்குள் நாம் ஹேக்கிங் வளையத்துக்குள் சிக்கிவிடுவோம்.
 
 
48. சிலருக்கு ‘பாப் – அப்’ திரைகள் மூலம் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகள் தோன்றும். சிலருக்கு, ‘உங்கள் கம்ப்யூட்டர் ஆபத்தில் உள்ளது’ என்பது போன்ற எச்சரிக்கைச் செய்திகள் தோன்றும். இதுபோன்ற செய்திகளை கிளிக் செய்துவிட்டால் முடிந்தது கதை.
 
 
49. பொதுவாக இந்த ஹேக்கர்கள், ஏதாவது ஒரு சிறிய ஓட்டை வழியாக தண்ணீரைப் போல ஊடுருவி, நம்மை மூழ்கடித்து, நம் அறிவுசார் சொத்துக்கள், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் சேவைத் துறை என்று நாம் பயன்படுத்தும் பலவற்றையும் தங்கள் வசம் வளைத்துக் கொள்வார்கள்.
 
 
50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.
 
 
51. வொயிட் ஹேட், க்ரே ஹேட், ஸ்கிரிப்ட் கிட்டி, பிளாக் ஹேட் என ஹேக்கிங்கில் பலவகை உண்டு. இவற்றுள் பிளாக் ஹேட் மிக மோசமானது. நம் வங்கிக் கணக்குகளை மொத்தமாக முடக்கி பணத்தை அபகரிக்கும் ஹேக்கிங் இது.
 
 
52. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் சந்தேகப்படும்படியான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் அளிக்கும்போது கவனமாக இருந்தால், ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்கலாம்.
 
 
ஆக்டிவ்வாக இருங்கள் ஆன்லைனில்!
 
 
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…
பயன்படுத்துங்கள் ஆன்லைன் பேங்க்கிங் (Online Banking)!
 
 
53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.
 
 
54. ஆன்லைன் வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.
 
 
55. இப்போது ‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!
 
 
56. இதுபோன்ற தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்… அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.
 
 
57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.
 
 
58. சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.
 
 
59 ஆன்லைன் பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.
 
 
60. சொந்த கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.
நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (Online ticket booking)!
 
 
61. ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.
 
 
62. பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.
 
 
63. ஆன்லைனில் 21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
 
 
64. இப்போது தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக p://www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்றும் கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது).
 
 
65. சாதாரண தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
 
நாளை : போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!
 

இண்டர்நெட் எனும் மாயவலை – குப்பை மெயில்?

நன்றி : திரு அனந்தநாராயணன்
குப்பை மெயில் (Spam) தெரியுமா..?
 
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘ஸ்பேம்’ எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம்.
 
அதன் விவரங்கள் இங்கே…
 
 
22. உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.
 
 
23. ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை ‘ஸ்பாமர்கள்’ எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.
 
 
24. இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.
 
 
25. அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.
 
 
26. தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.
 
 
27. குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.
 
 
28. உங்கள் மின்னஞ்சல் கணக்கின் ‘ஸ்பேம்’ பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.
 
 
29. தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு ‘என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்’ என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
 
 
வைரஸை (Virus) விரட்டுவோம்!
 
 
நம் கணினியின் இயக்கத்தை தாமதப்படுத்தும், ஸ்தம்பிக்க வைக்கும், ஒரு கட்டத்தில் செயலிழக்க வைக்கும் வில்லன்கள்தான் வைரஸ்கள்! அந்த வில்லன்களிடமிருந்து நம் கணினி கன்னுக்குட்டியைக் காப்பாற்றுவதற்கு பிடியுங்கள் இந்த டிப்ஸ்களை!
 
 
30. வைரஸ்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். சில வைரஸ்கள் சிறிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை சாதாரண ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருட்களை வைத்து அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து மொத்தத்தையும் காலியாக்காமல் விடாது.
 
 
31. ஸ்பைவேர், ஆட்வேர், ட்ரோஜான், மால்வேர் என பல்வேறு வடிவங்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றுள் ட்ரோஜன் மிக மோசமானது.
 
 
32. இணையத்திலிருந்து ஏதேனும் மென்பொருள் அல்லது புரோகிராமை பதிவிறக்கும்போது, அவற்றுடன் ட்ரோஜனும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். அதன் பின் நம் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு அபகரிக்கப்படும்.
 
 
33. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.
 
 
34. கம்ப்யூட்டரில் அவ்வப்போது ‘ஆட்டோமேடிக் அப்டேட் செய்து கொள்ளுங்கள்’ என்ற செய்தி தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் விண்டோஸ், இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், மைக்ரோசாஃப்ட் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
 
 
35. இணையத்தில் உலவும்போது குட்டித் திரைகளில் தோன்றும் விளம்பரங்களில் பெரும்பாலானவை வைரஸ்களின் தூரத்துச் சொந்தங்களாக இருக்கும். எனவே, டோன்ட் டச் இட்!
 
 
36. இணையத்திலிருந்து முன் பின் தெரியாத புரோகிராம்கள், விளையாட்டுக்களை பதிவிறக்குவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அவை வைரஸ் விருந்தாளிகளாக இருக்கலாம்.
 
 
37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
 
 
38. இணையத்திலிருந்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை (ஆன்டி வைரஸ்) இலவசமாக பதிவிறக்கும்போது கவனம். சில நேரங்களில் இந்த இலவசங்களுடன் சேர்த்து வைரஸ்களும் இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே முறையான, நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
 
 
39. முன் பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக, இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
நண்பர்கள், உறவுகளை, புதியவர்களை இணையத்தில் இணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் (Social networking sites)!
 
 
தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைய பயனாளர்கள் அனைவரையும் ஆட்டிப் படைப்பது சமூக வலையமைப்பு எனும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்தான்.
 
 
ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் இணைய உலகில் உள்ளன.
 
 
 
அவை பற்றி கொஞ்சம்… கொறிக்க!
 
 
40. இந்தியாவில் ஃபேஸ்புக், ஆர்குட் ஆகிய தளங்கள் புகழ்பெற்றவை. ஆர்குட் என்பது கூகுளின் சேவை. மிக அதிகமான பயனாளர்களைக் கொண்ட இந்த சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டது ஃபேஸ்புக்.
 
 
41. சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பெண்களில் இளவயதினர் அதிகளவிலும், ஆண்களில் நடுத்தர வயதினர் அதிகளவிலும் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
 
42. இந்தியாவில் ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்தான் அதிகளவில் பயனாளர்கள் இருப்பதால், இந்த இரண்டு சேவைகளும் போட்டி போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகின்றன.
 
 
43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.
ஹேக்கிங் (Hacking)… கவனம்! நாளை……..!
 

இண்டர்நெட் எனும் மாயவலை .… சூப்பர் டிப்ஸ் 100

இந்தக் கட்டுரை எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
அனுப்பியவர் : திரு அனந்தநாராயணன் – நன்றி!
 internet image
1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது.
 
 
90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது.
 
 
இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!
 
internet image 2
 
மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது.
 
internet image 3
அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
 
 
அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
 
 
அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.
 
 
கற்றுக் கொள்ளுங்கள்… கையாளுங்கள்… இன்டர்நெட்டையும் வாழக்கையையும் அழகாக!
 
 
 
சாஃப்ட்வேர்… சிறு அறிமுகமும் சில தகவல்களும்!
 
 
கணினியின் இதயம்… சாஃப்ட்வேர்! அந்தளவுக்கு கணினியின் இயக்கத்துக்கு முதற் காரணமாக இருக்கும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பற்றிய அடிப்படை விவரங்கள் அறிவோமா..?
1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.
 
 
2. அசல் மென்பொருட்களைவிட, அவற்றின் போலி பதிப்புகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ‘களையெடுப்பு’ நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.
 
 
3. கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால், நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும். எனவே, கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் ‘பேக்-அப்’ எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காகவே இலவச மென்பொருட்கள் இணையத்தில் உலவுகின்றன.
 
 
4. நம் கணினியில் நீண்ட காலம் பயன்படுத்தாத மென்பொருள் தொகுப்புகளைத் தயங்காமல் அகற்றிவிட வேண்டும். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்வதோடு, வைரஸ்களின் தாக்குதலுக்கும் அவை எளிதில் ஆளாகக் கூடும்.
 
 
5. தேவையில்லாத மென்பொருட்களை நிரந்தரமாக அகற்றுவதற்கு, கன்ட்ரோல் பேனல் (Control panel) சென்று, சேர்த்தல் அல்லது நீக்கல் (Add or remove programs) செய்வதற்கான ஐகானை கிளிக் செய்து, ஒவ்வொரு மென்பொருளாக தேர்வு செய்து அகற்றலாம்.
‘ஸர்ச் இன்ஜின்கள்’
 
இணையுங்கள் இணையத்தின் தேடுதல் (Search Engine) வேட்டையில்!
 
இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…
 
 
6. இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ’1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
 
 
7. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.
 
 
8. ஸர்ச் இன்ஜின்களில் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், துல்லியமான தகவல்களைப் பெறலாம்.
 
 
9. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால், சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + realestate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.
 
 
10. பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
 
 
11. உதாரணமாக, சூப்பர் ஸ்டார் என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் ரஜினிகாந்த் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், சூப்பர்ஸ்டார் – ரஜினிகாந்த் (Superstar – Rajinikanth) என்று தேடுங்கள்.
 
 
12. ‘நான் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம்’ என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள். உதாரணமாக, “அவள் விகடன்” (“Aval Vikatan”).
 
 
13. குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு ”~”’ என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ”அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர் (“Aval vikatan ~ Women Welfare”).
 
 
14. ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, டிஃபைன்:பெலிசியேஷன் (“define: felicitation”).
விரைவான தகவல் தொடர்புக்கு கை கொடுக்கும் மெயில்… இ-மெயில்!
மின்னஞ்சல் அல்லது இ-மெயில் 
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…
 
 
15. முன்பெல்லாம் மின்னஞ்சல்களின் கொள்ளளவு மிகச் சிறியதாக இருந்ததால் பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. இப்போது போட்டி காரணமாக, மின்னஞ்சல் சேவை அளிக்கும் ஒவ்வொரு இணையதளமும் 1 ஜி.பி. மற்றும் அதற்கு மேல் கொள்ளளவுள்ள வசதியைத் தருகின்றன.
 
 
16. ஜி-மெயில் மின்னஞ்சலில் 20 எம்.பி. அளவு வரை கோப்புகளை இணைப்பாக அனுப்பலாம். இதுவே அதிகபட்ச இணைப்பு அளவாக இருந்தது. ஆனால், யாஹூ இப்போது அதிரடியாக 100 எம்.பி. வரை இணைப்பாக கோப்புகளை அனுப்பும் வசதியை தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது.
 
 
17. மின்னஞ்சல் அனுப்பும்போது மிகுந்த கவனம் தேவை. அனுப்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீங்கள் டைப் செய்தவற்றை முழுதாக படித்துவிடுங்கள். அவசரப்பட்டு send பட்டனை அழுத்திவிட்டால் அவ்வளவுதான்… மின்னல் வேகத்தில் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மின்னஞ்சல் சென்று விடும்.
 
 
18. ‘அவுட்லுக்’ மற்றும் ‘அவுட்லுக் எக்ஸ்பிரஸ்’, சொந்தமாக வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற மின்னஞ்சல் புரோகிராம்கள். இதில் இணைய இணைப்பு இல்லாமலும் மின்னஞ்சல்களைப் படிக்கலாம். ஜி-மெயில், யாஹூ என எந்த மின்னஞ்சல்களையும் இவை பதிவிறக்கித் தரும்.
 
 
19. ‘அவுட்லுக்’ மூலம் மின்னஞ்சல் அனுப்பும்போது, முதலில் ‘அவுட்பாக்ஸ்’ (Outbox) பகுதியில் உங்கள் மின்னஞ்சல் நிறுத்தப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அனுப்பப்படும். எனவே, தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பினால்கூட, ‘அவுட்பாக்ஸ்’ சென்று அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.
 
 
20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
 
 
21. உங்கள் மின்னஞ்சலில் ‘தானியங்கி பதில் செய்தி அனுப்பும் வசதி’யை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோருக்கு உடனடியாக, ‘உங்கள் மெயில் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்’ என்பது போன்ற செய்திகள் சென்று சேரும்.
 
குப்பை மெயில் (Spam) தெரியுமா..? ……நாளை!