Uncategorized

ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….?

இது பற்றிய விளக்கம் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் வலைப்பதிவில் இங்கே படிக்கலாம்

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

train -india

பக்கத்து அடுக்குமாடி வீடு ஒன்றில் குடியிருக்கிறார்
ஒரு முதியவர் ( என்னை விட….!!!).

வெளியில் பார்க்கும்போதெல்லாம் பொதுவான விஷயங்களை
பேசிக்கொள்வோம். நேற்று மிகவும் டென்ஷனுடன் காணப்பட்டார்.

பார்த்தவுடனேயே படபடவென பொரிந்தார் ..” என்ன சார் இது
முட்டாள்தனமா இருக்கு… இவனுக்கெல்லாம் அம்மா, அப்பா,
தாத்தா, பாட்டி யாருமே இருக்க மாட்டாங்களா ..? திமிரெடுத்த
தடியனுங்களா இருக்கானுங்களே….”

சிறிது அமைதிப்படுத்திய பிறகு அவர் வருத்தம் தெரிந்தது.
நான் ஏற்கெனவே கடுப்பாகி, இது குறித்து ரெயில்வே அமைச்சருக்கு ஒரு புகார் அனுப்ப வேண்டுமென்று நினைத்திருந்த விஷயம் தான்.

செய்தியைப் பாருங்களேன் – உங்களுக்கே புரியும்….

——————————————-

குடும்பத்தினருடன் செல்லும் போது மூத்த குடிமக்களுக்கான
ரயில் கட்டண சலுகை ரத்து

புதுடெல்லி: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை
ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரயிலில் பயணம்
செய்யும் முதியோர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை
வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி
குடும்பத்துடன் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு
சலுகை கட்டண டிக்கெட் ரத்து செய்யப்படும். அதே நேரத்தில்
அவர்கள் தனியாக டிக்கெட் பெற்றால் மட்டுமே சலுகையுடன்
கூடிய டிக்கெட் கிடைக்கும்.

அனேகமாக இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்
என தெரிகிறது. இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டல
அதிகாரிகளுக்கும் கடந்த மாதம் 31ம் தேதி ரயில்வே நிர்வாகம்
சுற்றறிக்கை…

View original post 378 more words

Advertisements

11 thoughts on “ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….?

 1. அனுகூலம், பிரதிகூலம் இரண்டுமே வேண்டாம். இருக்கும் இடத்திலேயே இருந்தால் ஸொர்கம் என்று நினைக்கச் சொல்கிறார்கள். ஏன்கருடா ஸுகமா தான். அன்புடன்

 2. அப்போ இனிமேல் நான் தனியாக எனக்கும், அவர் தனியாக அவருக்கும் டிக்கெட் வாங்கணுமோ? ஆனால் இதைக் குறித்து எந்தப் பத்திரிகையும் அல்லது தினசரி அல்லது தொலைக்காட்சிச் சானல்கள் இன்னமும் கிழிக்க ஆரம்பிக்கவில்லை. ஒரு வேளை முதியோருக்காகத் தானே என்பதால் விட்டுட்டாங்களா? தெரியலை! 🙂

 3. கடந்த பத்து வருஷமாக ரயில்வேயில் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை. அதற்குப் பணம் தேவைப்படுகிறது. கோடிகளில்! என்றாலும் இந்தச் சலுகையை ரத்து செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் யானைப்பசிக்குச் சோளப்பொரி கணக்குத் தான். பணத்தேவைக்காகவே தனியார் மயத்தில் ரயில்வேயில் சிலவற்றை விடப் பார்க்கிறார்கள். அதுவும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. தனியார் ஆகிவிட்டால் வேலை செய்யணுமே! 🙂 இப்போ மாதிரி இருக்காதே!

 4. அட ! இதைப் பற்றி புலவர் இராமானுசம் ஐயா கூட எழுதியிருந்தார். அப்போது அவர் அதை உறுதிப்படுத்தவில்லை…இப்போதுதான் தெரிகின்றது இது செய்திதான் என்று. மிக மிக மோசம்….தொலைக்காட்சி, செய்தித்தாளில் எல்லாம் ஒன்றும் பெரிதாகவரவில்லையே…..ஏன்? நாங்களும் இதை உறுதிப்படுத்திவிட்டு பதிவு எழுத வேண்டும் என்றிருந்தோம்…..அப்போ வயதானவர்களை குழந்தைகள் தனித் தீவாக்குகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் இருக்கின்றது. இப்போ பார்த்தால் அரசும் அதைத்தான் செய்கின்றது…ம்ம்ம் கொண்டுவருபவர்களுக்கு என்ன நஷ்டம்…அவர்களுக்கு இலவசப் பிரயாணம்தானே….என்னவோ போங்க…

 5. இந்தச் செய்தி உண்மையல்ல என ரயில்வேயில் உயர்பதவி வகிக்கும் நண்பர் கூறுகிறார். ஆகவே இதை நம்ப வேண்டாம்.

  Vasu Balaji (Bala)
  5:36 PM

  We are not aware of any such moves. No circulars, proposals. And normally such policy decisions will be conveyed only through Budget speech in Parliament.

 6. புலவர் ராமானுசம் அவர்களுக்குக் கீழ்ப் படுக்கை வசதி கிடைக்கவில்லை என்கிறார். உண்மையாகவே அவர் முன் பதிவு செய்யும் நேரத்தில் இருந்திருக்காது. இப்போது நாலு மாசம் முன்னாலேயே முன் பதிவு செய்யலாம் என ஆகி விட்டதால் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ரயிலில் யாரேனும் உதவுவார்கள். இந்த வசதியை ரயில்வே பறித்து விட்டது என்று கூறுவது சரியல்ல. இவர் இல்லாமல் மற்ற எத்தனையோ முதியோருக்குக் கிடைத்திருக்கும். முதியோர் இல்லை எனில் பிறருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். பல வதந்திகள் இந்த அரசைப் பற்றி உலாவுகின்றன. உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் எல்லோரும் கூப்பாடு போடுகின்றனர். உண்மையாகவே இப்படி ஒரு திட்டம் இருந்தால் அது பத்திரிகைகளுக்கோ தொலைக்காட்சிச் சானல்களுக்கோ வராமலா போகும்? இந்நேரம் சானல்கள் கிழித்துப் பிழிந்து காயப் போட்டிருக்காதா?

  மேலும் எனக்குத் தெரிந்தவரை இம்மாதிரி முக்கிய முடிவுகள் சலுகைகள் ரத்து செய்வது, சலுகைகள் அளிப்பது போன்ற முக்கிய முடிவுகள் அதிகாரிகள் மட்டத்தில் செய்ய முடியாது. அரசு தன் பட்ஜெட்டில் அறிவித்து முறையாகச் சொன்ன பின்னாலே சம்பந்தப்பட்ட துறை இது குறித்து ஆரம்பிக்கும். இது ஒரு மத்திய அரசு ஊழியரின் மனைவி என்ற முறையில் நான் திட்டவட்டமாக அறிந்த ஒன்று. இதற்கு மேல் நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். குற்றம் சொல்வது எளிது. ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது தெரிந்தும் ஏற்க முடியாமைக்கு அவரவர் மனோநிலை தான் காரணம்.

  1. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,

   கே.எம்.சார், இப்போது இன்னும் விவரமாக
   விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். விமரிசனம் வலைத்தளம்
   சென்று பார்க்கவும். நன்றி.

   1. பார்த்தேன், பல பத்திரிகைகளிலும் பல செய்திகள் வருகின்றன. அவைஎல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதற்கு நாம் ஒன்றும் சிறு குழந்தை அல்ல. இது குறித்து மற்ற எந்தப் பத்திரிகைகளிலுமோ அல்லது வேறு எங்குமோ விவாதங்களோ பேச்சுக்களோ நடைபெறவில்லை. ஆகையால் காவிரி மைந்தன் சொன்னார் என்பதற்காக அந்தச் செய்தி உண்மையாகிவிடாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே அவருக்கு பதில் கொடுத்து விவாதங்களை வளர்க்க வேண்டாம் என்றே செல்லவில்லை. அதோடு செய்தித் தாளின் ப்ரின்டில் ஒரு செய்தி இருந்தால் அது நம்பத்தக்க செய்தி ஆகிவிடாது. பத்திரிகைகள் சார்பு உள்ளவையே! இது போல் எத்தனையோ செய்திகள் வந்து பின்னர் அவை உண்மை இல்லை என்று தெரிந்த பிறகு எந்தப் பத்திரிகையுமோ அல்லது தொலைக்காட்சிச் சானல்களுமோ வருத்தம் கூடத் தெரிவித்தது இல்லை. சும்மா பரபரப்புக்காகவும் மக்களைத் தூண்டி விடுவதற்காகவும் பரப்பப்படும் செய்திகளை நம்பக் கூடாது என்பதே என் கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s