குறும்செய்தியில் வந்த இன்சுலின்!

முதல் நாள் இரவு எட்டு மணிக்கு கிளம்பிய ரயில் அடுத்த நாள் மாலை ஊர் போய் சேர்ந்தது. முதலில் உறவினர் வீட்டிற்குப் போனோம். அங்கு எல்லோரையும் குசலம் விசாரித்துவிட்டு நாங்கள் தங்கவிருந்த ஹோட்டேலுக்கு வந்தோம். இவரிடம் மெள்ளக் கேட்டேன் : ‘டாக்டருக்கு போன் செய்து கேட்கட்டுமா?’ என்று. இவர் பதில் சொல்வதற்குள் டாக்டரின் நம்பரைப் போட்டு பேச ஆரம்பித்துவிட்டேன். ‘நாங்கள் வெளியூருக்கு வந்திருக்கிறோம். இன்சுலின் பேனா கொண்டுவர மறந்துவிட்டார். அதற்கு பதிலாக வேறு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எப்படிச் சொல்லுகிறீர்களோ, அப்படி….’ என்றேன். ‘இன்சுலினுக்கு மாற்று வேறு கிடையாது. முதலில் அவரிடம் போனைக் கொடுங்கள்’ என்றார் டாக்டர்.

‘குட் ஈவினிங் டாக்டர்……!’ என்று ஆரம்பித்தவரை பேசவே விடவில்லை எங்கள் டாக்டர். ‘எப்படி இன்சுலின் மறந்து போகலாம் நீங்கள்? எங்கு ஊருக்குப் போனாலும் முதலில் இன்சுலின், உங்கள் மெடிக்கல் ஃபைல், க்ளூகோ மீட்டர் இவற்றைத்தான் எடுத்து பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்….’ என்று சொல்லிவிட்டு என்ன இன்சுலின் வாங்க வேண்டும் என்று எஸ்எம்எஸ் செய்வதாகச் சொன்னாராம். அடுத்த நிமிடம் என்ன இன்சுலின், கூடவே பயன்படுத்த வேண்டிய சிரிஞ்ஜ் என்று குறும்செய்தி வந்தது. பின்னாலேயே இன்னொரு கு.செ. எப்போது ஊருக்குப் போனீர்கள்? இன்று காலை இன்சுலின் எடுத்துக் கொண்டாரா? என்று. அதற்கு நான் பதில் செய்தி அனுப்புவதற்குள் இன்னொரு கு.செ. ‘இந்த இன்சுலின் ஊசி நீங்களே போட்டுக் கொள்ள முடியாது. டாக்டரிடமோ, நர்ஸ்ஸிடமோ தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் உடனே என்னைக் கூப்பிடுங்கள். நான் அவர்களுக்கு சொல்லுகிறேன்’ என்று. நான் அப்படியே மனசு உருகிப் போய்விட்டேன். எத்தனை அக்கறையுடன் சொல்லுகிறார் என்று அவருக்கு நன்றி கூறி இறைவனுக்கும் நன்றி கூறினேன்.

இரவு சாப்பாட்டிற்கு உறவினர் வீட்டிற்குப் போனபோது அவர்களது உதவியுடன் டாக்டரின் கு.செ – யைக் காட்டி மருந்துக் கடையிலிருந்து இன்சுலின், சிரிஞ்ஜ் வாங்கிக் கொண்டோம். அடுத்தநாள் காலை 9 மணி அளவில்’ பக்கத்திலிருந்த ஒரு மருத்துவ மனைக்குப் போய் இன்சுலின்  போட்டுக் கொண்டு வந்தார். அப்புறம் தான் எனக்கு உயிரே வந்தது. எங்கள் டாக்டருக்கும் உடனடியாக ஒரு கு.செ அனுப்பினேன். டேக் கேர் என்று பதில் அனுப்பினார். நாங்கள் அங்கு இருந்த நான்கு நாட்களும் எங்கள் உறவினரின் பிள்ளை இவரை அழைத்துக்கொண்டு போய் இன்சுலின் போட்டுக் கொண்டு வருவதை தன் தலையாய கடமையாகச் செய்தார்.

எங்களுடைய டாக்டருக்கும், எங்கள் உறவினரின் பிள்ளைக்கும் என்ன கைம்மாறு செய்ய முடியும், மனமார்ந்த நன்றியை மறுபடி மறுபடி சொல்வதை தவிர?

9 thoughts on “குறும்செய்தியில் வந்த இன்சுலின்!

 1. உங்கள் கணவருக்கு சிறந்த வாழ்க்கை துணைவி.

 2. நல்ல மருத்துவர்……

  தொடர்ந்து இன்சுலின் போட்டுக்கொள்ள முடிந்ததே…..

 3. ஆபத்பாந்தவர் என்பதில் எள்ளளவும் ஸந்தேகமில்லை. குடும்ப டாக்டர். எடுத்துக்காட் டு. உஷார் நிலையில் நீங்கள் செயல்படவேண்டிய அவசியம். மதியூகி மந்திரி எங்கள் ரஞ்ஜனி.அன்புடன்

 4. ஹூம், இப்படியும் ஒரு டாக்டர் இருக்கிறார் என்று நம்பச் சொல்கிறீர்கள்…சரி, இன்னொரு சமயம் அவருடைய பெயர், அலைபேசியைக் கொடுங்கள்…சமயத்தில் பயன்படும் அல்லவா? – இராய செல்லப்பா

 5. well rr ji the doctors are put into needless pressure… tension…by
  your act ji…most of the good doctors die very early in india
  because the patients are irresponsible impatient… gathers medical
  informations from the wrong source… harass the doctors…may god
  save this country

 6. டாக்டர் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது! வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s