Uncategorized

சந்தோஷமோ சந்தோஷம்!

 

காலையிலேருந்து எனக்கு சந்தோஷமோ சந்தோஷம்! எனக்கு வந்த ஒரு இமெயில் தான் என்னோட இத்தனை சந்தோஷத்திற்குக் காரணம் அப்படின்னா நீங்க நம்பணும், சரியா?

 

வயசாச்சுன்னா பாசஞ்ஜர் வண்டி மாதிரி மெதுவா ஆயிடறாங்க; அந்த வண்டி எப்படி ஒரு ஸ்டேஷன் விடாம நின்னு நின்னு மெதுவா போறதோ அதேபோல இவங்களும் ஒவ்வொண்ணுக்கும் நின்னு நின்னு மெதுவா யோசிச்சு யோசிச்சு….ஆ!  தாங்க முடியலடா சாமீ! ஆமை கூட இவங்களை தோற்கடிச்சுடும் அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க, இல்லையா? அது ஏன் அப்படின்னு அதாவது வயசானவங்க ஏன் slow coach ஆகறாங்கன்னு  ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. அதுல என்ன தெரிஞ்சுது அப்படின்னா வயசானவங்க புத்திசாலித்தனத்துல குறைஞ்சு போயிடறது இல்ல; அவங்க புத்தி கெட்டுப் போறதில்ல; அவங்களோட மூளையில எக்கசக்கமாக விவரங்கள் குமிஞ்சு கிடக்கறதால அவங்க யோசிக்க கொஞ்சம்(!!) அதீ…………..க நேரம் எடுத்துக்கறாங்க, அவ்வளவுதான். இத நான் சொல்லல. விஞ்ஞானிகள் ஆதார பூர்வமா சொல்றாங்க. என்ன ஆதாரம் அப்படின்னு கேட்கறவங்களுக்கு:

 

உங்களோட கணனி ஹார்ட் டிரைவ் ல விவரங்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிட்டால், அது எப்படி நீங்க கேட்கிற தகவலை எடுத்துக் கொடுக்கத் திணறுதோ அதேபோலத் தான் வயசானவங்களும். அவங்களோட மூளை தகவல்களால் நிரப்பப்பட்டு விடுவதால் நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதிலை தேட நேரம் எடுத்துக்கறாங்க. இத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு, ‘வயசானாலும் ‘கெத்து’ போகல பாரு. ரத்தம் சுண்டிப் போனாலும் கொழுப்பு அடங்கல பாரு’, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா என்ன? வாயில கொழுக்கட்டையா?’ அப்படின்னு எடுப்பு எடுக்கக்கூடாது.

 

இந்த மெத்தனம் புலனுணர்வு மெத்தனம் அல்ல. மனித மூளை வயதான காலத்தில் மெதுவாக வேலை செய்யக் காரணம் நாங்கள் அதிக அதிக விவரங்களை பலபல வருடங்களாக சேமித்து சேமித்து வைத்துக் கொள்ளுகிறோம். எங்களது மூளைகள் பலவீனமடைவதில்லை. மூளை மழுங்கி போச்சு, மூளைய கழட்டி வச்சுட்டீங்களா? ன்னு குத்தம் சொல்லக்கூடாது. இதற்கு நேர்மாறாக எங்களுக்கு அதிகம் தெரியும். அதிலேருந்து நீங்க கேட்குற ‘தம்மாத்துண்டு’ விவரத்த எடுத்துக் கொடுக்க வேணாமா? அது என்ன அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? அதான் லேட் ஆகிறது. அவ்வளவுதான்.

 

அதேபோல இன்னொன்று நாங்க திடீர்னு எழுந்து இன்னொரு அறைக்கு கனகாரியமாகப் போவோம். அங்கு போனவுடன் எதற்கு அங்கு வந்தோம் என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு மூளையை கசக்கிக் கொண்டு நிற்போம். நினைவிற்கே வராது. எதற்கு இங்கு நிற்கிறோம் என்று வியப்பாகக் கூட இருக்கும். முதல்ல உட்கார்ந்திருந்த இடத்துக்கு திரும்பி வந்தவுடனே ‘பளிச்’ என்று பல்பு எரியும். மறுபடி எழுந்து போய் அந்த வேலையை முடிச்சுட்டு வருவோம். இதற்குப் பெயர் ஞாபகமறதி இல்லை. இயற்கையே எங்களை அதிக உடற்பயிற்சி செய்ய வைப்பதற்காக ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் இது. புரிகிறதா?

 

அதான்!

 

இந்த செய்தியை என்னோட எல்லா  நண்பர்களுக்கும் அனுப்ப ஆசைப்படுகிறேன். இதைப் படிச்சுட்டு அவங்களும் என்ன மாதிரியே சந்தோஷப்படுவாங்க இல்லையா? ஆனா எனக்கு அவா அத்தனை பேர்களோட பேரும் உடனே நினைவுக்கு வரல; அதனால ஒரு சின்ன உதவி பண்ணுங்களேன். உங்கள் நண்பர்களுக்கு இத அனுப்பிடுங்கோ. அவங்கள்ளாம் என்னோட நண்பர்களாகவும் இருக்கலாம், இல்லையா?

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் சினேகிதி ஜூலை 2015 இதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது.

Advertisements

18 thoughts on “சந்தோஷமோ சந்தோஷம்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   இந்தப் பதிவை எழுதிவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். அதனால் இத்தனை தாமதமான பதில்.
   இந்த பாசிடிவ் சிந்தனைக்காகவே எனக்கு இது மிகவும் பிடித்தது.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 1. நான் இந்தப் பட்டியலில் வரவே மாட்டேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஹிஹி எனக்கு வயசே ஆகலை! அதோட அபார ஞாபக சக்தியும் இருக்கு! விட்டால் போன ஜென்மத்தின் நினைவெல்லாம் கூட வந்து தொலைக்கும் போல! 🙂

  1. வாங்க கீதா!
   ஏற்கனவே முகநூலில் எழுதியதுதான் இது. திருமதி மஞ்சுளா பத்திரிகையில் போட்டுக்கட்டுமா என்று கேட்டாங்க. சரி என்றேன். உங்களுக்கு வயசே ஆக வேண்டாம். ஆனால் பழைய நினைவுகள் வேண்டாம் – அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் ஒழிய. அதுவும் போன ஜென்மத்தின் நினைவுகள் வேண்டவே வேண்டாம், ப்ளீஸ்!
   இப்போதுதான் ஒருவாரத்திற்கு முன் இரண்டு பெண்மணிகளுக்கு பழையதையெல்லாம் நினைத்து நினைத்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் என்று வாய் வலிக்க சொல்லிவிட்டு வந்தேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. நீங்க எழுதினதை படிச்சமாதிரி இருக்கே.. நான் கூட சொல்லுகிறேன். எனக்கு உங்கள் கேள்வி ஸரியாகப் புரிந்து பதில் சொல்ல கொஞ்சம் தாமதமாகிறது என்று. ஒரு முறை டாக்டரிடம் இதைச்சொன்ன போது இதெல்லாம் வயதானால் தலைநரைப்பது போல இதுவும் ஒன்று. ஏன் இப்படி என்று சிந்திக்காதீர்கள். அததை ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள் என்றார். இதெல்லாம் கூட அனுபவத்தில்தான் உணர முடியும். விதி விலக்காக பலபேர் இருக்கலாம். உங்களை எல்லாம் அந்த லிஸ்டில் யாரும் சேர்க்க முடியாது. அதற்குப் பலகாலம் இருக்கிறது. நல்ல உபமானங்களுடன் மாற்றுக் கட்சி வக்கீல் வாதாடுவதுபோல் உள்ளது. நல்ல கட்டுரை. அன்புடன்

  1. வாங்க காமாக்ஷிமா!
   டாக்டர் நன்றாகச் சொல்லியிருக்கிறார். அந்தந்த வயதில் அதையதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் மனவருத்தம் வரவே வராது.
   பழையதை நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் வெறும் துயர நிகழ்ச்சிகளையே நினைக்காமல் மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைத்து மகிழலாமே! எத்தனையோ சாதனை புரிந்த சச்சின் கூட ஆட்டத்தை நிறுத்திவிட்டாரே! எல்லாமே இயற்கைதான். எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.
   வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

 3. இதை எங்கேயோ படிச்ச மாதிரியே இருக்கு. ஆனா எங்கேன்னுதான் தெரியலெ. ஆங்..தெரிஞ்சுடுத்து. எதோ புஸ்தகத்துல தான். ஆனா என்ன புஸ்தகம்னு தெரியல. அடடே புஸ்தகம்னு தெரியறதே. அதுவே பெருசு.
  இப்ப புரிஞ்சுபோச்சு.என்ன புஸ்தகம்னு. ஆனா என்ன படிச்சேன்னுதான் ஞாபகம் வரல.
  ஆமா இவ்ளோ நேரம் யாரண்ட பேசிண்டிருக்கேன் ?

  1. ஹா….ஹா.. வாங்க ஆமருவி. உங்களுக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது.
   நன்றாகவே கிண்டல் பண்ணியிருக்கிறீர்கள்.
   வருகைக்கும், நகைச்சுவையான கருத்துரைக்கும் நன்றி!

 4. //உங்களோட கணனி ஹார்ட் டிரைவ் ல விவரங்கள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிட்டால், அது எப்படி நீங்க கேட்கிற தகவலை எடுத்துக் கொடுக்கத் திணறுதோ அதேபோலத் தான் வயசானவங்களும். அவங்களோட மூளை தகவல்களால் நிரப்பப்பட்டு விடுவதால் நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதிலை தேட நேரம் எடுத்துக்கறாங்க. //
  நல்ல உதாரணம் .
  பெரியவர்களின் ஞாபக மறதிக்கான காரணத்தை இதைவிட சிறப்ப சொல்ல முடியாது
  நல்ல கட்டுரை! வாழ்த்துக்கள் ரஞ்சனி அம்மா!

 5. ஒப்பிட்டமை அருமை. கனினியொடு…அதானே நமக்கென்ன வயசா ஆச்சு?!! ஏதோ நிறைய அனுபவத் தகவல், வாசித்த தகவல் எல்லாம் மண்டைக்குள்ள பொதிஞ்சு இருந்தா அதைப் பிரிச்சு எடுக்க நேரம் ஆகத்தானே செய்யும்…!!

  இதோ இந்தப் பின்னூட்டத்தை அடிக்கும் போது கூட இந்தக் கணினி ரொம்ப ஸ்லோவா அடிக்குது..ஹஹஹ

  நல்ல கட்டுரை சகோதரி! மிகவும் மகிழ்வாக்கிய, பெரியவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது என்பதற்கான அழகிய எடுத்துக் காட்டுடன் வெகு சிறப்பான கட்டுரை….வாழ்த்துகள், நன்றியும்….

 6. அனுபவ பூர்வமான செய்திகள். அதுவும் அறைக்குள் சென்று ஏன் வந்தோம் என்று
  தெரியாமல் முழிப்பது மிக மிகச் சரி. அதுமட்டுமல்ல சொல்ல வந்த செய்தியை ஒரு
  வினாடி தாமதித்தாலும் அடுத்தவினாடி மறந்து விடுகிறது. இதுவும் வயதின் காரணமோ
  என நம்மையே நினைக்கச் செய்கிறது.
  நல்ல சிறப்பான கட்டுரை. பாராட்டுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s