Uncategorized

ஸார், போஸ்ட்!

writer

 

தினமணி டாட் காமில் ‘மீண்டும் கடிதம் எழுதலாமா?’ என்ற தலைப்பில் 17.6.2015 அன்று வெளியாகியுள்ள எனது கட்டுரை

ஸார் போஸ்ட்!

ஒருகாலத்தில் அமுதமாக இனித்த இந்தக் குரல் இப்போதெல்லாம் கேட்கமுடிவதே இல்லை. ரொம்பவும் வருத்தமான விஷயம் தான். தூர ஊர்களிலிருந்து தபால் வந்துவிட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். கடிதத்தில் கடிதம் எழுதியவர்களை அல்லவா பார்த்தார்கள்? ஆமை வேகத்தில் வருவதற்கு நாளானாலும் இந்தக் குரல் நமக்கு பிடித்தவர்களிடமிருந்து செய்திகளை நமக்குக் கொண்டு வரும் காலம் இப்போது மலையேறிவிட்டது. தொலைபேசிக்கும், எழுதி முடித்து ‘அனுப்பு’ பட்டனை அழுத்திய அடுத்த நிமிடம் ‘உங்கள் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது’ என்று சொல்லி நம்மை கடிதம் எழுத சோம்பல் படும் கும்பலாக மாற்றிய கணனிக்கும் நன்றி!

 

என் அம்மாவிற்கு இப்போதும் நாங்கள் கடிதம் எழுத வேண்டும் என்று தான் ஆசை. ‘தொலைபேசியில் என்ன பேச முடிகிறது? அப்புறம் என்ன? வேறென்ன என்று சொல்லிச் சொல்லியே பேச்சை முடித்து விடுகிறோம். பேசியபின் அவை நினைவில் இருப்பதும் இல்லை. ஆனால் கடிதம் என்றால் திருப்பித்திருப்பி படிக்கலாமே?’ என்று சொல்லும் அம்மாவின் கூற்றிலும் உண்மை இருக்கிறது.

 

சமீபத்தில் அம்மாவிடமிருந்த சில பழைய கடிதங்களை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எங்கள் பாட்டி, எங்கள் மாமா, என் அண்ணா வெளியூரில் வேலை பார்த்தபோது எழுதிய கடிதங்கள் எல்லாம் அம்மாவிடம் இன்றும் பத்திரமாக இருக்கின்றன. படிக்கப் படிக்க அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். இந்தக் கடிதங்களை மனப்பாடம் ஆகும்வரை திரும்பத்திரும்ப படித்தது நினைவிற்கு வந்தது. அதுமட்டுமா? நாங்கள் எல்லோருமே (கடிதங்கள் எங்கள் அம்மாவிற்கு என்று எழுதப்பட்டிருந்தாலும்) எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதுவோம். எல்லோரும் எங்களையும் விசாரித்துக் கேட்டிருப்பார்களே! கடிதம் எழுதுவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்த காலம் அது. எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி மதிப்பெண்கள் வந்தவுடன் எல்லோருக்கும் கடிதங்கள் மூலம் தெரிவித்தது; உறவினர்களின் பெண்ணிற்கோ, பிள்ளைக்கோ கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது என்று கடிதம் மூலம் தெரிந்து சந்தோஷத்துடன் நிச்சயம் கல்யாணத்திற்கு குடும்பத்துடன் வருகிறோம் என்று பதில் எழுதியது; நாங்கள் போடும் வேலை விண்ணப்பங்களுக்கு நேர்முகத் தேர்விற்கு கூப்பிடும் கடிதங்கள் என்று வகைவகையாக கடிதங்கள் எழுதியதும் பெற்றதும் நேற்றுபோல நினைவில் அப்படியே இருக்கிறது. இடையிடையே ஒருஉறவினருக்கு உடல்நலக்குறைவு, நெருங்கியவர்களின் மறைவு என்று வரும் கடிதங்கள் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தினாலும், கடிதங்கள் நிச்சயம் மகிழ்ச்சியைத் தரக்கூடியவையாகவே இருந்தன.

 

ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! கல்கியின் ‘அலைஓசை’ நாவலில் முதல் அத்தியாயம் தபால் சாவடி தானே? அங்கிருக்கும் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பங்காரு நாயுடுவையோ, தபால்காரர் பாலக்ருஷ்ணனையோ ‘ஜிங் ஜிங் ஜிக ஜிங்’ என்று ஈட்டி சிலம்பை குலுக்கிக் கொண்டு வரும் ரன்னர் தங்கவேலுவையோ மறக்க முடியுமா?

 

என்னைபோலவே இதைப் படிக்கும் பலருக்கும் பலவித நினைவுகள் வரக்கூடும். ஆனால் கடிதம் எழுதுவது என்பது ஒரு பழைய விஷயம். அதை புதுப்பிக்க முடியுமா? புதுப்பித்துத்தான் என்ன செய்யப்போகிறோம்? என்றெல்லாம் தோன்றக்கூடும். இந்த டிஜிட்டல் யுகத்தில் இது தேவையா என்றும் நினைக்கலாம். ஆனால் லெட்டர்பார்ம்ஸ் (LetterFarms) குழுவைச் சேர்ந்த திரு ஜூபி ஜான் அப்படி நினைக்கவில்லை.

 

என்னசெய்தார் என்று தொடர்ந்து படிக்க இங்கே

Advertisements

9 thoughts on “ஸார், போஸ்ட்!

 1. பழைய கடிதங்களை நானும் வைத்திருந்தேன். ஆனால் பல இடங்களுக்கும் மாறியதில் எல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. ஜூபி ஜான் என்ன சொல்லி இருக்கார்னு போய்ப் பார்த்துட்டு வரேன்.

 2. படிச்சேன், அங்கே கருத்துச் சொல்ல முடியவில்லை. ஜூபி ஜான் சொல்வது உண்மையே. என்னைப் பொறுத்தவரையிலும் கடிதம் எழுதிக் கொண்டு பரிமாற்றங்கள் செய்வது நின்று போனாலும் என் பதிவுகள் மூலம் எண்ணங்களைப் பகிர்வதால் ஓரளவுக்கு மன அழுத்தம் குறையத்தான் செய்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நல்லதொரு பதிவு.

 3. கடிதங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான் ரஞ்சனி 2014 ல் நான் பாண்டிச்சேரி போனபோது பழைய பீரோவைக் குடைந்தபோது 1966 ல் என் அப்பா எனக்கு எழுதிய போஸ்ட் கார்டுகள் கிடைத்தன. 1967ல் நான் என் தந்தையை இழந்துவிட்டேன். அதைப் போட்டு ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன். அவர் எழுதிய செய்திகளை முதன்முதலில் படிக்க முடியாமல் என் கண்களை கண்ணீர் மறைத்தது என்பதும் நிஜம் மறக்க முடியாதவைகள் கடிதங்கள் மீண்டும் ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைப்பே இனிக்கிறது அருமையான பதிவு பாராட்டுக்கள் ரஞ்சனி

 4. தபால் சாவடி, தபால் சாவடி என்று சொல்லியே தபால்களைச் சாவடித்து விட்டார்களோ! ஹிஹிஹி….

  இனிமையான நினைவுகள். எனக்கும் இதை வைத்து ஒரு போஸ்ட் தேத்த ஆசை வருகிறது! முன்பு ஒருமுறை எழுதியிருந்த நினைவு. அதனால் என்ன? மறுபடி எழுதி விடுவோம்! உங்களுக்கு நன்றி சொல்லி விட்டால் போச்சு!!!

  சமீபத்தில் மதுரையில் எங்கள் புத்தகக் கலெக்ஷனில் ‘கல்கியின் கடிதங்கள்’ புத்தகம் பார்த்தேன். ஏனோ எனக்கு அதைப் படிக்கும் ஆர்வம் ஏற்படவில்லை.

  ஆனால் சொந்தங்களுக்கிடையே ஆனா சில கடிதங்களுக்கான மதிப்பு மிக அதிகம்தான்.

 5. அது அவ்ளோதான். மீண்டும் திரும்பாது. நீங்கள் இதைச் சொல்கிறீர்கள். நான் மின்னஞ்சலாவது எழுதச் சொல்கிறேன். யாரும் எழுத மறுக்கிறார்கள். அவ்வளவு சோம்பல். அட. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி மின்னஞ்சல் போட்டால் கூட பதில் வரலைன்னா பார்த்துக்கோங்களேன்.

 6. அருமையான பதிவு. அன்றைய நினைவுகளை மீட்டியது. இப்போது மெயில் அனுப்பும் பழக்கம் கூட மறைந்து வருகிறது….ஏதோ ஃபார்மல் விஷய்ங்களுக்கு மட்டுமே…..பெர்சனல் என்றால் தொலை பேசி. இப்போது உடனுக்குடன் பரிமாற வாட்ஸப் வரை வந்தாலும், அன்று வரிந்து வரிந்து, இன்லன்ட் அல்லது போஸ்ட் கார்டில் எழுதியதற்கு இணை உண்டோ என்றே தோன்றுகின்றது…… இதில் அன்று புகழ் வெளிச்சத்தில் இருந்த வியைபிக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுதிய நிநைவும் வந்தது. ஆனால் அப்போது விட இப்போது நட்பு வட்டம் பெருகி உள்ளதோ டெக்னாலஜியினால்….இதோ இந்த வ்லை மூலம் எத்தனை எத்தனை நல்ல உள்ளங்களுடன் உர்யைஆட முடிகின்றது!? பிரபலங்களுடன் எளிதாக…..உங்களுடனும்……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s