ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்…….3 அட்சய பாத்திரம் கொண்டுவந்த ஜெயின் குடும்பம்

kaaraa boonthiமும்பைக்குப் பயணம். பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து இரவு கிளம்பும் உதயான் விரைவு வண்டி. பெங்களூரு கண்டோன்மென்ட்டில் ஒரு குடும்பம் ஏறியது. எங்கள் குடும்பம் பெரிசு என்பதுபோல நிறைய குழந்தைகள், பெண்கள், ஆண்கள். அதைவிட நிறைய சாமான்கள். ‘எத்தனை லக்கேஜ் ?’ என்று நினைத்துக் கொண்டவள் மௌனமானேன்.

ஏனென்றால் ஒருமுறை இப்படித்தான் ஒரு குடும்பம் –பெரிய குடும்பம் தான் – எங்கள் பெட்டியில் ஏறியது. எங்கள் சாமான்களை அப்படியும் இப்படியும் நகர்த்தி நகர்த்தி அவர்கள் சாமான்களை வைக்க ஆரம்பித்தனர். ‘எங்க சாமான்கள் அப்படியே இருக்கட்டும்; மூன்று airbags தான் என்றேன். ‘ஏனம்மா, உங்க ரெண்டு பேருக்கு மூணு பைன்னா நாங்க 6 பேரு எவ்வளவு பை இருக்கும், சொல்லுங்க’ என்றார் அந்தக் குடும்பத் தலைவர்! அன்றிலிருந்து லக்கேஜ் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒவ்வொருத்தர் எடுத்துக் கொண்டு வருவார்கள் பாருங்கள், பிரயாணத்திற்கா இல்லை வீட்டையே – சில சமயம் ஊரையே – காலி பண்ணிக் கொண்டு போகிறார்களா என்று தோன்றும்!

இப்போது எங்கள் பெட்டியில் ஏறியவர்கள் மொத்தம் மூன்று குடும்பங்கள் – கணவன், மனைவி மூன்று ஜோடி, ஏழு குழந்தைகள். ‘நான் இங்க, நீ அங்க’ என்று சளசளவென்று ஒரே சத்தம். இன்னிக்கு ராத்திரி அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக எங்களிருவருக்கும் லோயர் பெர்த்! IRCTC வாழ்க! சிறிது நேரம் கழித்து புடவையில் வந்த பெண்கள் அனைவரும் நைட் உடைக்கு மாறினார்கள். குழந்தைகளைப் படுக்க  வைத்துவிட்டு அவர்களும் படுத்துவிட்டனர். இரவு நான் நினைத்த அளவிற்கு சத்தம் இல்லை   doughtnut 2காலை விடிந்ததோ இல்லையோ, சாப்பாடுக் கடை ஆரம்பமாகியது. முதலில் MTR பன். குழந்தைகளுக்கு, கணவன்மார்களுக்குக் கொடுத்துவிட்டு எங்களிடம் நீட்டினார் ஒரு பெண். நாங்கள் மென்மையாக மறுத்துவிட்டோம். அடுத்து சுருமுறி (லேசான தின்பண்டங்கள்) அதுவும் எங்களுக்கு கொடுக்க வந்தார்கள். மறுத்தோம். ஒரு பெண் எங்களிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.’என்ன ஆண்ட்டி, புடவையில் வந்தவர்கள் உடை மாற்றி விட்டார்களே என்று பார்த்தீர்களா? எங்கள் வீட்டில் நாங்கள் புடவையில் தான் இருப்போம். வெளியிடங்கள், வெளியூர் சென்றால் எங்கள் விருப்பப்படி உடுத்துவோம். எங்கள் மாமியாருக்கும் இது தெரியும். இப்போதெல்லாம் அவர்களே வீட்டில் கூட சுடிதார் போட்டுக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.  நாங்கள் தான் புடவையே கட்டிக் கொள்ளுகிறோம். அவர்களுக்கு புடவை தான் விருப்பம். அதை ஏன் மறுக்க வேண்டும்?’ பேசிக்கொண்டே சாப்பிட்டார்களா, சாப்பிட்டுக் கொண்டே பேசினார்களா என்றே தெரியவில்லை. ஒவ்வொரு air-bag லிருந்தும் ஏதோ ஒரு சாப்பாட்டு சாமான் வந்த வண்ணம் இருந்தது.     cucumber ஒரு பெண் ஆரஞ்சு பழங்கள் கொடுத்தார். எல்லாவற்றையும் மறுத்தால் எப்படி என்று பழங்களை வாங்கிக் கொண்டோம். ஆரஞ்சு பழத்தை அடுத்து கொய்யா வந்தது; அடுத்து ஆப்பிள், அடுத்து சப்போட்டா …….! ஒரு பழமுதிர்சோலையே வந்துவிட்டது!

அடுத்து பச்சைக் காய்கறிகள். ஆளுக்கு ஒரு தட்டு. ஒரு பெண் முதலில் வெள்ளரிக்காயை எடுத்து அலம்பிக் கொண்டு வந்தார். தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கி அதற்கு உப்பு, காரம், மசாலா பொடி எல்லாம் போட்டு கொடுத்தார். இந்த பொடிகள் எல்லாம் ஒரு சின்ன – ரொம்ப ரொம்ப சின்ன – டிபன் கேரியரில்(4 அடுக்குகள்) குழந்தைகள் விளையாடுவார்களே அந்த அளவு தான் – பார்க்கவே மிக மிக அழகாக இருந்தது – கொண்டு வந்திருந்தார்கள். எங்களுக்கு ஆளுக்கு ஒரு தட்டு. பார்க்கவே கலர்புல் ஆக இருந்தது. ஆனாலும் நாசுக்காக ஒரு தட்டு போதும் என்று வாங்கிக் கொண்டோம்.   எல்லாம் ஆயிற்று (என்று நாங்கள் நினைத்தோம்!) ஆனால்……..!??

நாளை: தொடரும் சாப்பாட்டுக் கடை

Advertisements

22 thoughts on “ரயில் பயணங்களில்…….3 அட்சய பாத்திரம் கொண்டுவந்த ஜெயின் குடும்பம்

  1. வாங்க துளசிதரன்,கீதா!
   எப்படி இத்தனை வக்கணையாக பார்த்துப் பார்த்து எடுத்து வந்திருந்தார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சர்யம்!
   வருகைக்கும், ரசித்து படித்ததற்கும் நன்றி!

  1. வாங்க ஆமருவி!
   ஓ! சொல்லிட்டாப் போச்சு!
   எங்களின் இந்தக் கதையைக் கேட்டவர்கள் எல்லோருமே உங்களைப் போலத்தான் சொன்னார்கள்! பாதிப்பேர் காதிலிருந்து புகை வந்தது!
   வருகைக்கும், கருத்துரைக்கும் கூட வருவதாகச் சொன்னதற்கும் நன்றி!

 1. எனக்கு இந்தப் பதிவைப் படித்ததும் நினைவுக்கு வருவது மதுரைச் சித்திரைத் திருவிழா! நான் அதை உண்ணும் விழா என்றுதான் அழைப்பேன்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   சித்திரை எந்தத் தேதியில் இந்த விழா வரும் என்று சொல்லுங்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறோம்!
   சாப்பாடு என்றால் விடுவோமா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. //ஆனால் ஒவ்வொருத்தர் எடுத்துக் கொண்டு வருவார்கள் பாருங்கள், பிரயாணத்திற்கா இல்லை வீட்டையே – சில சமயம் ஊரையே – காலி பண்ணிக் கொண்டு போகிறார்களா என்று தோன்றும்!//

  கல்யாணங்களுக்குப் போனாலோ, மாற்றல் ஆகிப் போனாலோ இப்படி நிறைய சாமான்கள் இருக்குமே! ஹிஹிஹி, ஒவ்வொரு மாற்றலிலும் வீட்டையே காலி பண்ணி லாரியில் அனுப்பினதைத் தவிர கையிலும் கொண்டு போகும் சாமான்கள் உண்டு. நாங்களும் ரயிலிலேயே குடித்தனமே பண்ணி இருக்கோம்.ஒரு நாள் இரண்டு நாளெல்லாம் இல்லையாக்கும். மூணு நாட்கள். 🙂

 3. சென்னை வந்துவிட்டு ஒவ்வொரு முறை ராஜஸ்தான், குஜராத் போகும்போதெல்லாம் காப்பிக்கொட்டையிலிருந்து எடுத்துப் போவேன். 🙂 சாமான்கள் நிறையவே இருக்கும். என்ன ஒரு வசதி என்றால் முதல் வகுப்பு, நாங்க நாலு பேர் தான் இருப்போம். சாமான்கள் வைச்சுக்கறதிலே பிரச்னை இருந்தது இல்லை. சில சமயம் இரண்டாம் வகுப்பிலேயும் போயிருக்கோம். அப்போ உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் எங்களுக்கும் ஏற்பட்டது உண்டு. சாப்பிடுவதற்காகவே ரயில் பயணம் செய்யறாங்களோனு கூடத் தோணும். 🙂 இன்னும் மேதி ரோட்டி, சப்பாத்தி, பராத்தா, உ.கி. சப்ஜி, தயிர், ஊறுகாய்னு ஆரம்பிக்கலையா? இப்போ நீங்க கொடுத்திருப்பது ஸ்டார்ட்டர் மட்டுமே! 🙂

 4. தேப்லாவை விட்டுட்டேனே! குஜராத்தி என்றால் கட்டாயமாய்த் தேப்லா இருக்கும். 🙂 ஒரு சிலர் கமன் டோக்ளா கூடக் கொண்டு வருவாங்க! ஆனால் இது பகல் நேரத்தில் ரயில் ஏறினால் மட்டுமே இருக்கும்.

  1. வாங்க கீதா!
   நான் என் வாழ்வில் முதல்முறையாக பெங்களூரு வந்தேன். அதைத் தவிர ஊர் மாற்றல் எல்லாம் கிடையாது. அதனாலோ என்னவோ நிறைய சாமான்களுடன் பயணம் செய்பவர்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். பாவம் நீங்கள், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறியிருப்பீர்களோ?
   எங்கள் மாமாக்கள் உங்களைப் போலத்தான் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் மாறுவார்கள். அவர்கள் வைத்திருக்கும் பெட்டிகளைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.

   எங்களுடன் பயணம் செய்தவர்கள் சாப்பிட்ட பல பொருள்களுக்கு எனக்குப் பெயர் தெரியவில்லை. அவர்கள் சொல்லி சொல்லித் தான் கொடுத்தார்கள். வேண்டாம் என்று சொல்லியே டயர்டாகி விட்டோம்!
   இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
   அடுத்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் வருகிறது.
   வருகைக்கும், உங்களின் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   இங்க பாதிதான் சொல்லியிருக்கேன்!
   அடுத்த பதிவுல மீதி வருது!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. தேப்லா கமன் டோக்ளா.. கீதா சாம்பசிவம் அவர்கள் புது தமிழ் சினிமாப் பாட்டிலிருந்து ஏதோ எடுத்துவிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  சமீப ரயில் பயணம் பற்றி நானும் ஒரு பதிவெழுதி சில மாதங்களாகப் பதியாமல் வைத்திருக்கிறேன். ம்ம்ம்.. என்னால் இது போல் கூட்ட இரைச்சலில் பயணம் செய்வது மிகவும் சிரமம்.

  இந்திய/சீனச் சாப்பாட்டு மணம் தலைவலியை உண்டாக்கிவிடும். அதுவும் குறுகலான இடத்தில் பலவகையான உணவுகளின் கதம்ப மணம் – பொறுக்க முடியாத வேதனை. எப்படி சமாளித்தீங்களோ!

  1. வாங்க அப்பாதுரை!
   இத்தனை உணவுகளை பக்கத்தில் பார்த்ததே எங்களுக்கு ஒரு மாதிரிதான் இருந்தது. நீங்கள் சொன்னதுபோல கலவையான வாசனை வேறு. ஆனால் எப்படி இடைவிடாமல் இப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வியப்பில் ஆழ்ந்துவிட்டதால் வேறெதுவும் தெரியவில்லை.
   வருகைக்கும், இங்கும் கீதாவை கலாய்த்து, பதிவின் சுவாரஸ்யத்தைக் அதிகப்படுத்தியதற்கும் நன்றி!

 6. //தேப்லா கமன் டோக்ளா.. கீதா சாம்பசிவம் அவர்கள் புது தமிழ் சினிமாப் பாட்டிலிருந்து ஏதோ எடுத்துவிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

  ஹிஹிஹி, வம்பாதுரை, இந்த தேப்லா பத்தி “சாப்பிட வாங்க!” பக்கத்தில் போட்டிருக்கிறதாவும் நீங்க அதுக்குக் கருத்துச் சொன்னதாகவும் நினைவு! அந்தப் பக்கம் போயே பல மாசங்கள் ஆகுது! கு.ச.கு.ஓ. இருக்கேன். அதுவும் கொஞ்ச நாட்களாக நிறுத்தி வைச்சிருக்கேன். 🙂 சே. எங்கேருந்து எங்கேயோ போறேனே! 🙂 ஆகவே இவை சாப்பிடும் வகைகளே!

 7. தங்களின் தளத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன்.
  மிக அருமையான பயணக் கட்டுரை.
  இனி ஒவ்வொரு பதிவிற்கும் வருகிறேன்.

  1. வாங்க வாங்க செந்தில்குமார்!
   உங்களது முதல் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. தொடர்ந்து வரப்போவதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

  1. வாங்க, டெலிபதி கிரிதர் பாபா!
   முதல் வருகைக்கும், இனி தொடர்ந்து வருவதாக உற்சாகம் கொடுத்ததற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

 8. இது போன்ற அனுபவங்கள் தில்லியிலிருந்து வரும் போதும் போகும் போதும் கிடைத்திருக்கிறது. ஆப்பிள் பெட்டிகள், கம்பளிகளை நம்மாட்கள் வாரிக் கொண்டு வருவார்களே அங்கேயிருந்து…:)

  1. வாங்க ஆதி! மிகவும் தாமதமாக பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும். உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் உண்டா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s