ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்

சென்னையிலிருந்து பெங்களூரு வர வேண்டும் எனது கணவரும், மகளும். பெங்களூரு மெயில் வண்டியில் ஏற்கனவே டிக்கட் வாங்கியிருந்தோம். என் கணவருக்கு மேல் பர்த். கீழே லோயர் பெர்த்தில் ஒரு இளைஞர். என் கணவர் மேல் பெர்த்தில் ஏறுவதைப் பார்த்தவிட்டு, ‘மாமா, நீங்கள் கீழே படுத்துக் கொள்ளுங்கள்’ என்று தானாகவே முன் வந்து கீழ் சீட்டை விட்டுக் கொடுத்திருக்கிறார். எனது கணவர் ‘நோ நோ, என்னால் மேலே ஏற முடியும்! என்று தனது வீர(!)த்தைக் காட்டியிருக்கிறார். அந்த இளைஞர் என் கணவரிடம், ‘மாமா! ப்ளீஸ்…..!’ என்று சொல்லிவிட்டு மேலே ஏறிப் படுத்துவிட்டாராம். பெங்களூரு வந்தபின் என்னிடம் இதைச் சொன்னாள் என் பெண். ‘நன்றாகயிருக்கட்டும், அந்தப் பிள்ளை’ என்று மனமார வாழ்த்தினேன் நான். என் பெண் சொன்னாள்: ‘அவருக்கும் நம் அப்பாவைப் போல ஒரு அப்பா இருப்பாரோ என்னவோ?’ என்று!

இன்னொரு அனுபவம்:

நானும் என் கணவரும் மும்பை போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தோம். உதயான் விரைவு வண்டியில் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே ரிசர்வ் செய்திருந்தும் எங்கள் இருவருக்கும் சைடு மேல் பெர்த்தான் கிடைத்திருந்தது.  (வீர)நாராயணரைப் பற்றிக் கவலையில்லை. ஏறிவிடுவார். எனக்குத் தான் எப்படி ஏறுவது என்று யோசனை. இவரது பெர்த்திற்குக் கீழ் இருந்த சைடு லோயர் பெர்த்தில் உட்கார்ந்து கொண்டேன். யார் வருகிறார்களோ அவர்களை மேலே போகச் சொல்லிக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். என் அதிர்ஷ்டம் ஆந்திரா வரும் வரை யாரும் வரவில்லை. எங்கள் கோச்சில் ஒரு இளைஞர். மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினலில் ஏறினார். அவருக்கு கீழ் பர்த். ஏறியவுடன் நடுவில் இருந்த பர்த்தையும் போட்டார். அது ஏசி கோச். ரயில்வே கொடுத்திருந்த பெட்ஷீட்டை கீழ் பெர்த்தில் விரித்தார். படுத்துவிட்டார். என் கணவர் மேலே ஏறுவதைப் பார்த்தும் ஒரு மரியாதைக்குக் கூட கீழே படுத்துக் கொள்ளுகிறீர்களா என்று கேட்கவில்லை. எங்களுக்குப் பிறகு அந்தக் கோச்சில் ஒரு கணவர், மனைவி கைக்குழந்தையுடன் ஏறினார்கள். அந்தப் பெண்ணுக்கும் அந்த இளைஞரின் மனம் இறங்கவில்லை. அந்தப் பெண் கைக்குழந்தையுடன் மேலே ஏறிப்படுத்துக் கொண்டாள். பகல் முழுவதும் படுத்துக் கொண்டே வந்தார் அந்த இளைஞர். யாருக்கும் உட்காரக்கூட இடம் கொடுக்கவில்லை. மூன்று சீட்டுகளையும் அவரே ரிசர்வ் செய்திருப்பாரோ என்று கூட  நினைத்தேன். வந்தவர்களும் அவரை எழுந்திருக்கச் சொல்லவில்லை. அதை என்ன சொல்வது?

தண்ணீர் பாட்டில்கள் விற்க வந்தவர்களிடம் ‘ஏன் ஐந்து ரூபாய் அதிகம் கேட்கிறீர்கள்? கொடுக்க முடியாது, சீட்ஸ்’ என்று சண்டை போட்டார். சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று நினைத்துக் கொண்டேன். படித்த முட்டாள் என்று திட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

அப்படி ஒருவர் என்றால் இப்படி ஒருவர்!

நாளை: அட்சய பாத்திரம் கொண்டு வந்த ஜெயின் குடும்பம்

ரயில் பயணங்களில் 

Advertisements

17 thoughts on “ரயில் பயணங்களில்……..இரண்டு இளைஞர்கள்

  1. வாங்க ஆமருவி!
   எப்படி இத்தனை சரியாகச் சொன்னீர்கள்? இந்த மாதிரி கேரக்டர்களை பார்த்திருப்பீர்கள் போலிருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. Such characters are so addicted to ‘smart’ phones that the phones are smart and the humans are stupid. However in Singapore, if a person is found occupying a seat belonging to an elderly / pregnant-lady / child, any passenger is empowered to ask the squatter to get up and give up the seat for the needy. Modiji should bring something of this sort.

   2. பாவம் மோதிஜி,
    மனிதர்களின் குணங்களை அவர் எப்படி மாற்ற முடியும்? நம்மூரில் கடுமையான சட்டங்கள் வந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி கிடைத்துவிடும்!

 1. இருவேறுபட்ட அனுபவங்கள். இரண்டாவது இளைஞருக்கு வேறு கசப்பான அனுபவங்கள் ஏதாவது இருந்திருக்கலாம். அவரைக் குறை சொல்ல முடியாது! சில விஷயங்கள் நாம் உரிமையாக எதிர்பார்க்க முடியாதே!

  :)))))

  1. வாங்க ஸ்ரீராம்!
   குறை சொல்ல முடியாதா? அவர் இரண்டு பேர்களின் சீட்டுகளை அபகரித்துக் கொண்டு படுத்திருந்தார், ஸ்ரீராம்! அது எங்கள் சீட் இல்லை. இருந்திருந்தால் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும். அவரை நாலு வார்த்தை கேட்டு கிழித்துவிட்டு வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். நம்மவர் திட்டுவார். அதுதான் வாயை மூடிக் கொண்டு வரவேண்டியதாயிற்று. அவரைப்போலத் தானே இன்னும் இருவரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள்?
   எனக்கு என்ன ரொம்பவும் ஆச்சர்யம் என்றால் முதல் நாள் காலை 8 மணிக்கு ஏறிப் படுத்தவர் அடுத்தநாள் பெங்களூரு வந்து சேரும்வரை எழுந்திருக்கவே இல்லை. அவருக்கு மிஞ்சிப்போனால் 25 வயது இருக்கும். எப்படி அப்படி படுக்க முடியும்? நோயாளி மாதிரியும் இல்லை.

   வருகைக்கும், எனக்குப் பிடிக்காத ஒரு கருத்துரை போட்டதற்கும் (??!!) நன்றி!

 2. வணக்கம்
  அம்மா

  தங்களின் பயண அனுபவத்தை தொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  இறுதியில் சொல்லிய தண்ணீர் பாட்டில்கள் அனுபவத்தில் நானும் சிக்குண்ட அனுபம் உள்ளது அம்மா..தாங்கள் சொல்லியது போல வாழ்பவர் அதிகம்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாங்க ரூபன்!
   இரண்டு இளைஞர்களிடையே எத்தனை வித்தியாசம்! எல்லாம் வாழ்வில் ஒரு அனுபவம் தான், இல்லையா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. ம்ம்ம்ம் ஒரு முறை சென்னை செல்லும்போதோ, அங்கிருந்து வரும்போதோ எனக்கு 3 ஏசியில் மிடில் பெர்த் கொடுத்துட்டாங்க. நம்ம ரங்க்ஸுக்கு சைட் அப்பர். அவர் எப்படியோ மேலே ஏறிப் படுத்துட்டார் என்னால் தான் மிடில் பெர்த்தில் ஏறவே முடியலை. அப்போ சைட் லோயரில் இருந்த ஒரு மாமி என் நிலைமையைப் பார்த்துட்டுத் தானாகவே தான் அங்கே படுத்துக்கொள்வதாகவும், என்னை லோயர் பெர்த்தில் படுக்குமாறும் சொன்னார். ஆனால் அவரோட ரங்க்ஸுக்குக் கோபம் வந்ததே பார்ப்போம்! கன்னா&பின்னாவென்று என்னைத் திட்டித் தீர்த்தார். நான் இரவு முழுவதும் உட்கார்ந்தே வந்துடறேன்னு சொல்லியும் அந்த மாமி கேட்கவே இல்லை! வலுக்கட்டாயமாக என்னை சைட்லோயர் பெர்த்தில் படுக்க வைத்துவிட்டு டிடியிடமும் சொல்லிவிட்டார். அப்புறம் அந்த மாமாவால் எதுவும் பேசமுடியவில்லை.

  இப்படிப் பலரும் எதிர்பாராமல் வந்து உதவி இருக்கின்றனர்.

  1. வாங்க கீதா!
   எங்களுக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் உண்டு. என்னவருக்குக் கிடைத்த லோயர் பெர்த்தை இன்னொரு சர்க்கரை நோயாளிக்கு விட்டுக் கொடுத்தோம். அடுத்த பதிவில் எழுதுகிறேன் அதைப் பற்றி.
   அதுசரி, அந்த மாமி விட்டுக் கொடுத்தால் அவருக்கு ஏன் கோவம் வரவேண்டும்? தானும் நல்ல காரியம் செய்ய மாட்டார், பெண்டாட்டியும் செய்யக்கூடாதோ?
   ரயில் பயணங்கள் உண்மையில் சுவாரஸ்யமானவை தான்!

  1. வாங்க உமையாள்!
   நாம் நம் குழந்தைகள் படிப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று விரும்புகிறோமே தவிர, மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லையோ என்று தோன்றுகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. இரண்டு விதமான மனிதர்கள். சிலர் இப்படித்தான் பர்த்துக்கு காசு கொடுத்திருப்பதால் நாள் முழுவதும் படுத்துக் கொண்டே தான் வர வேண்டும் என்று நினைப்பார்கள்.

  1. வாங்க ஆதி!
   இன்றுதான் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் போட நேரம் வந்திருக்கிறது.
   தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்.
   வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s