ரயில் பயணங்களில்

ரயில் பயணங்களில்…….!

வரவர பிரயாணங்கள் அதிகமாகிவிட்டன. அதுவும் ரயில் பிரயாணங்கள். மோதிஜியைப் பற்றி ஒரு ஜோக் முகநூலில் வந்திருந்தது. ‘ஐந்துநாள் பயணமாக மோதி இந்தியா வருகை’ என்று. நானும் அப்படித்தான் அவ்வப்போது ‘செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது போல மற்ற ஊர்களிலிருந்து அழைப்பு வராத போது பெங்களூருக்கு வந்து (இருந்து) கொண்டிருக்கிறேன்!

இப்போதெல்லாம் IRCTC ரயில் டிக்கெட் வாங்கும் தளம்  ரொம்பவும் வேகமாக வேலை செய்கிறது. உட்கார்ந்த இடத்தில் பயணச்சீட்டு வாங்கிவிடலாம். நான் எத்தனை முறை பயணச்சீட்டு வாங்கினேன் என்று தெரியவேண்டுமா? IRCTC யில் போனமுறை பயணச்சீட்டு வாங்க முயன்றபோது ‘நீங்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பயணச்சீட்டுக்கு மேல் வாங்க முயற்சிக்கிறீர்கள். மன்னிக்கவும். வேறு வழியில் முயற்சி செய்யவும்’ என்று மெசேஜ் வரும் வரை வாங்கியிருக்கிறேன். பிறகு நம்மவர் போய் ரயில்வே புக்கிங் கௌண்டரில் டிக்கெட் வாங்கி வந்தார்.

ஒவ்வொருமுறை பயணத்தின் போதும் விதவிதமான அனுபவங்கள். சில சின்னக் குழந்தைகள் – என் பேரு அனுஷ்கா ஸ்ரீராம் எஸ். தீட்சித், என் பேரு ரொம்ப நியூ!’ என்று சொன்னக் குட்டிப் பெண் –  சில பெரியவர்களின் குழந்தைத் தனங்கள்(!)  96 வயது அம்மாவுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்த 80 வயது இளம் பெண்(!) ‘அம்மாவிற்குக் காது கேட்காது’ என்று சொல்லிவிட்டு ரயிலின் சத்தத்தை மீறி அம்மாவுடன் விடாமல் பேசிக் கொண்டு வந்தது – இவர்களைத் தவிர நிஜமான இளம் பெண்கள், இளம் ஆண்கள் என்று கூடப் பிரயாணம் செய்தவர்கள் – நிறைய எழுதலாம்.

நான் உதவப் போகும் இடங்களிலும் சில வருத்தங்கள், சங்கடங்கள் இருந்தாலும் சில மனதை வருடும் சம்பவங்களும் நடந்தன. மனதை வருடும் சம்பவங்களை மட்டுமே எழுத உத்தேசம். வருத்தங்கள், சங்கடங்கள் எல்லாவற்றையும் மறக்க உத்தேசம்.

முதலில் மனதை வருடும் சம்பவம் ஒன்று.

திருச்சியிலிருந்து பெங்களூரு பிரயாணம். ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் வந்தோம். எங்கள் ரயில் வரும் நடைமேடைக்கு கீழே இறங்கி மேலே ஏறவேண்டும். எங்கள் பெட்டிகளை இழுத்துக்கொண்டு  ஒவ்வொரு படியாக இறங்க ஆரம்பித்தோம். மூன்று இளைஞர்கள் எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் சட்டென்று அருகில் வந்து ‘பெட்டிகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம் அம்மா’ என்றனர். கொஞ்சம் யோசித்தேன். யாரோ என்னவோ என்று. (நம் புத்தி போகாதே!) பிறகு கொடுத்தோம். ஆளுக்கு ஒரு பெட்டியாக எடுத்துக் கொண்டு எங்களுடன் கூடவே நடந்து வந்து எங்கள் ரயில் வரும் நடைமேடையில் வைத்துவிட்டுச் சென்றனர். ரயில் இன்னும் வந்திருக்கவில்லை. வாழ்த்துக்களும் நன்றியும் சொல்லி அனுப்பினோம். இன்றும் ஒவ்வொருமுறை இந்த இளைஞர்களைப் பற்றிய நினைவு வரும்போதும் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

Advertisements

26 thoughts on “ரயில் பயணங்களில்…….!

 1. ரயில் பிரயாணம் பற்றி தெரியாது. அதனால் நீங்க சொல்லும் IRCTC ரயில் டிக்கெட் வாங்கும்முறை பற்றியெல்லாம் தெரியவில்லை.

  ஒரு சிலரின் நடவடிக்கைகளால் நல்லவர்களையும் சந்தேகப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இன்னும் என்னென்ன நடந்திருக்கும் எனும் ஆவலில் ….

  1. வாங்க சித்ரா!
   நிஜமான நல்லவர்களைக் கண்டால் கூட சந்தேகம் கொள்ளுகிறோம். என்ன செய்வது?
   வருகைக்கும், படிப்பதற்கு ஆவலாகக் காத்திருப்பதற்கும், நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   ஆமாம். யாரைத்தான் நம்புவதோ, பேதை நெஞ்சம்….ஆ! உங்களின் பதிவுகள் படித்துப் படித்து எனக்கும் பாட்டுப் பாடும் ஆசை வந்துவிட்டது!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 2. இங்கே ஶ்ரீரங்கம் பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் இடத்தில் கூட்டமே இருக்காது என்பதோடு பயணச்சீட்டுக் கொடுப்பவரும் மிகவும் உதவி செய்பவர். இரண்டு, மூன்று முறை இணையம் மூலமா வாங்க முயற்சித்துவிட்டு உங்களுக்கு வந்த மாதிரி செய்தி வரும் அல்லது இந்த காப்சா தொல்லை தாங்காது. ஆகையால் நம்ம ரங்க்ஸ் இப்போ அங்கேயே போய் நேரே ரயில்வே ஊழியரிடம் சொல்லி இரண்டு இருக்கைகளாக (தனியாச் சண்டை போட்டுக்கலாமே) அல்லது இரண்டு கீழ்ப் படுக்கை இருக்கைகளாக என்று கேட்டு வாங்கி வந்துடுவார். அரை மணி நேரம் தான் ஆகும். 🙂

 3. உங்களுக்குப் பெட்டியைத் தூக்கி வர உதவிக்கு ஆட்கள் வந்த மாதிரி எனக்கும் எங்கே போனாலும் வருவார்கள். ஒரு சிலர் என்னிடம் கேட்காமலேயே பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு போன அனுபவங்களும் உண்டு. கொஞ்சம் திக் திக் தான். ஆனால் பெட்டியைக் கொண்டு போய் நடைமேடையில் வைத்துவிட்டு நான் வரும் வரை நின்று கொண்டு இருந்துவிட்டுப் பின் போவார்கள். இம்மாதிரி அனுபவம் விமான நிலையங்களிலும் ஏற்பட்டிருக்கிறது.

  1. வாங்க கீதா!
   ஸ்ரீரங்கத்தில் போஸ்ட் ஆபீசிலேயே ரயில் டிக்கெட் வாங்கலாம் என்று என் அக்கா சொன்னாள். இங்கு கோடை விடுமுறை என்றால் ரொம்பவும் நீண்ட க்யூ நிற்கும். அதற்கு பயந்தே வீட்டிலிருந்து செய்கிறேன்.

   முதலில் பயமாக இருந்தாலும், எங்களுடன் கூடவே நிதானமாக நடந்து வந்தததால் கொஞ்சம் பயமில்லாமல் இருந்தது.
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 4. இரயில் பயணங்களே மிகவும் சுகமானவைதான் அதில் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கும் என்பது உண்மை தான். உங்களோடு ரயிலில் பயணம் செய்ய நாங்களும் தயார்தான் ரஞ்சனி

  1. வாங்க விஜயா!
   நமது மனநிலையும் நல்லவிதமாக இருந்தால் பயணங்கள் சுகமானவையே.
   வருகைக்கும், என்னோடு பயணிக்கத் தயாராக இருப்பதற்கும் நன்றி!

 5. பயணங்கள் இனிமையான ஒன்று தான்…சிலரின் உண்மையான உதவியைக்கூட நம்பமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். ஆனாலும் உதவி செய்பவர்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.முடியும் போது என்பக்கமும் வாருங்களேன். அடுத்து என்ன ஆவலாக இருக்கிறது. நன்றி

  1. வாங்க உமையாள் காயத்ரி!
   உங்கள் பக்கம் நேற்று வந்திருந்தேன். உங்களது இரண்டு வரி கவிதைக்குப் பாராட்டு தெரிவித்துவிட்டு வந்தேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. நாட்டில் நடக்கும் சம்பவங்களையெல்லாம் பார்த்தால், பயணங்களின்போது மிகவும் உஷாராக இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல, முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். உங்கள் அனுபவம், நல்அனுபவமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம்!

 7. வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
  நீங்கள் சொல்வது நிஜம் தான். அந்த இளைஞர்கள் எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடியிருந்தால்…..இப்போது நினைத்தாலும் ‘பக்’ என்கிறது. எங்கள் வேளை நல்ல வேளையாக இருந்தது என்றே சொல்லவேண்டும்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க துளசிதரன், கீதா!
   பாண்டியனும் உங்களுடன் ரேஸில் இருக்கிறார், உஷார்! 🙂
   வருகைக்கும், ஓடோடி வருவதற்கும் நன்றி! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s