ரயில் பயணங்களில்

கடவுள் ஏன் சிரித்தார்?

சனிக்கிழமை இரவு  சென்னையிலிருந்து பெங்களூரு வருகை. பெங்களூரு மெயிலில் நிற்க இடமில்லை. உண்மையாகவே! கூட்டமான கூட்டம். RAC காரர்கள் பாடு ரொம்பவும் திண்டாட்டம். உட்கார்ந்துகொண்டே இரவு முழுக்க பயணம் செய்தார்கள். எனக்கும் இப்படித்தான் ஆகும் என்று நினைத்தேன். காரணம் எனக்கு அப்பர் பெர்த். எப்படி மேலே ஏறுவது? யாரிடமாவது மாற்றிக் கொள்ளலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தால் எல்லாமே நம் வயசுக்காரர்கள்!

எங்கள் கம்பார்ட்மெண்டில் லோயர் பெர்த்துகளில் படுத்திருந்த கணவன் மனைவி இருவருமே எங்களை விடப் பெரியவர்கள். பாவம் அந்த மாமி, ‘எங்களை கேட்காதேங்கோ’ என்றார் டென்ஷனுடன். நான் அவர்களை ஆசுவாசப்படுத்தி விட்டு, யாராவது சின்ன வயசுக்காரர்கள் லோயர் பெர்த் கிடைத்து என்னுடைய அப்பர் பெர்த்துக்குப் போகத் தயாரா என்று மறுபடியும் ஒரு நோட்டம் விட்டேன்.  ஒரு இளைஞர் மிடில் பெர்த் பரவாயில்லையா என்றார். மேலே ஏறுவதற்கு இது பரவாயில்லை என்று கொஞ்சம் முயற்சி செய்து (அவருக்கு நன்றி கூறிவிட்டுத்தான்) ஏறிவிட்டேன்.

காற்று வருமா என்று சந்தேகம். கீழ் பெர்த் மாமா, மாமி இருவரும் எல்லா ஜன்னல்களையும் இறுக்கி சாத்திவிட்டார்கள். இன்னைக்கு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டே படுத்தேன். ரயில் கிளம்பியவுடன் காற்று! அதிசயமாக இருந்தது. ரயில் வேகம் எடுக்க எடுக்க குபுகுபுவென காற்று. ‘ஆஹா! என்னைப் படைச்ச ஆண்டவனே! நன்றி! நன்றி!’ என மகிழ்ச்சிப் பெருக்கில் கையைக் கூப்பிவிட்டு, தூங்கிவிட்டேன். யாரோ தூரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது. தூக்கக்கலக்கத்தில் அதை அசட்டை செய்துவிட்டேன். ஆ! எத்தனை தப்பு!

நடுவில் ஒரு முறை கீழே இறங்கி பாத்ரூம் போய்விட்டு வெற்றிகரமாக மேலே ஏறிவிட்டேன். மறுபடி என்னை படைத்தவனுக்கு நன்றி சொன்னேன். ‘ரஞ்சனி கண்டோன்மென்ட் வந்துவிட்டது’ என நம் ரங்கஸ் எழுப்ப கீழே இறங்கினேன்.  செருப்பைத் தேடினேன். காணோம்! இரண்டும் தொலைந்திருந்தால் கூட இத்தனை வருத்தம் வந்திருக்காது. வலது கால் செருப்பைக் காணோம். இடது காலில் என்னுடைய செருப்பைப் போட்டுக் கொண்டு கீழே குனிந்து குனிந்து தேடினேன். என் கணவர் தனது டார்ச் லைட்டை வேறு கொடுத்தார். ஊஹூம்! இதென்ன இன்னொரு  செருப்பு இருக்கிறதே என்று பார்த்தால் வலது கால் செருப்பு. என்னுடையது இல்லை. ஒரு ஆணின் செருப்பு. சட்டென்று ஒரு மின்னல். ஒருவேளை கீழே படுத்திருந்த மாமா இருட்டில் தெரியாமல் என்னுடையதைப் போட்டுக் கொண்டு போய்விட்டாரோ? இருட்டு என்றால் கூட செருப்பைப் போட்டவுடன் நம்மது இல்லை என்று தெரியாதோ?

என்னுடைய செருப்பு  இப்படி இருக்கும் (மேலே)

எனக்குக் கிடைத்த இன்னொரு செருப்பு (இங்கே ஜோடியாக இருக்கிறது. எனக்குக் கிடைத்தது வலது கால் செருப்பு)

என்னுடையதும் அங்கிருந்தும் முழுக்க முழுக்க வேறு மாதிரி இருக்கிறது. எப்படி அதைப் போட்டுக் கொண்டு போயிருக்க முடியும்? ம்….ம்…..ம்……!எப்படியோ, செருப்பு போய்விட்டது. என்ன செய்வது என்று யோசிக்கும் போது ரங்க்ஸ் சொன்னார்: ‘அதையே போட்டுண்டு வா. செருப்பில்லாமல் எப்படி நடப்பாய்?’ செருப்பு என்னவோ புதிதாக இருந்தது. ஆனால் ரொம்ப பெரிசு. ஒரு காலில் லேடீஸ் செருப்பு; இன்னொரு காலில் ஜென்ட்ஸ் செருப்பு! ‘காமெடி ஷோ ஆயிடும். அய்யய்யோ! வேணாம் சாமீ! நான் செருப்பில்லாமலேயே வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு (நம் அதிர்ஷ்டம் ரயில் மூன்றாவது நடைமேடையில் வந்திருந்தது. மாடிப்படிகள் மேலே ஏறி, இறங்கி வெளியில் வரவேண்டும். கஷ்டம்!) வெறும் காலுடனேயே நடந்து வந்தேன். எத்தனை நாளாயிற்று. பூமியில் நம் கால் பட்டு என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.

புது செருப்பு வாங்கவேண்டும். பாவம் அந்த மாமாவும்!

ராத்திரி சிரித்தது யார் என்று தெரிந்ததோ? என்னைப் படைச்சவன் தான்! ‘இப்ப எஞ்சாய்! காலைல உனக்கு இருக்கு ஹப்பா(திருவிழா!) என்று சிரித்தான் போலிருக்கு!

24 thoughts on “கடவுள் ஏன் சிரித்தார்?

 1. ஹிஹிஹிஹி, நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கீங்க போலே! ஒரு நிமிஷம் வலக்காலில் பெண்கள் செருப்பும், இடக்காலில் ஆண்கள் செருப்பும் போட்டால் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். சிரிப்பு அடக்க முடியலை!🙂 மனம் லேசாகியது. நன்றி.

  1. வாங்க கீதா!
   உங்கள் மனம் லேசாகியது என்று தெரிந்து எனக்கும் மகிழ்ச்சிதான்.

   வருகைக்கும், சிரிப்பிற்கும் நன்றி!

 2. அதனால் என்ன, செருப்பு தொலைந்தால் பீடை போச்சு என்பார்கள். ராத்திரி நிம்மதியான தூக்கத்துடன் பயணம் அமைந்ததே… அதற்குத் நன்றி சொல்லுங்கள்! காற்று போனஸ்.

  :))))))))))

  1. வாங்க ஸ்ரீராம்!
   செருப்பு தொலைந்தால் பீடை போச்சா? நல்லதுதான். உண்மைதான் அத்தனை காற்று வரும் என்று நான் நினைக்கவேயில்லை. வண்டி என்ன வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது என்று காற்றின் வேகத்தில் புரிந்தது. நேரத்திற்கு முன்னாலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. //சனிக௠கிழமை இரவ௠ சென௠னையிலிர௠ந௠த௠பெங௠களூர௠வர௠கை. பெங௠களூர௠மெயிலில௠நிற௠க இடமில௠லை. உண௠மையாகவே! கூட௠டமான கூட௠டம௠. RAC காரர௠கள௠பாட௠ரொம௠பவ௠ம௠திண௠டாட௠டம௠. உட௠கார௠ந௠த௠கொண௠டே இரவ௠ம௠ழ௠க௠க பயணம௠செய௠தார௠கள௠. எனக௠க௠ம௠இப௠படித௠தான௠ஆக௠ம௠என௠ற௠நினைத௠தேன௠. காரணம௠எனக௠க௠அப௠பர௠பெர௠த௠. எப௠படி மேலே ஠ற௠வத௠? யாரிடமாவத௠மாற௠றிக௠கொள௠ளலாம௠என௠ற௠ச௠ற௠ற௠ம௠ற௠ற௠ம௠பார௠த௠தால௠எல௠லாமே நம௠வயச௠க௠காரர௠கள௠! எங௠கள௠கம௠பார௠ட௠மெண௠டில௠லோயர௠பெர௠த௠த௠களில௠பட௠த௠திர௠ந௠த கணவன௠மனைவி இர௠வர௠மே எங௠களை […]

  அதனால௠என௠ன, செர௠ப௠ப௠தொலைந௠தால௠பீடை போச௠ச௠என௠பார௠கள௠. ராத௠திரி நிம௠மதியான தூக௠கத௠த௠டன௠பயணம௠அமைந௠ததே… அதற௠க௠த௠நன௠றி சொல௠ல௠ங௠கள௠! காற௠ற௠போனஸ௠.

  :))))))))))//

  படிக்க முடிகிறதா? ரஞ்சனியின் பதிவுகள் எனக்கு இப்படித் தான் வருகின்றன. மாற்றவும் முடிகிறதில்லை. நேரடியாகப் பதிவுக்கு வந்தால் தான் படிக்க முடியும்!😦 பல நாட்களாக/மாதங்களாக இப்படி!😦

 4. வெகு ஹாஸ்யமான பதிவு ரஞ்சனி படித்தேன் வெகுவாக ரசித்தேன். அடிக்கடி இப்படி சென்னை பெங்களூரு என பயணம் செய்தால் இப்படித்தான். என்னைப்போல் வருடத்துக்கு ஒரு முறைதான் பயணம் செய்யவேண்டும் பாராட்டுக்குரிய பதிவு

  1. வாங்க விஜயா!
   நீங்க சொல்றது ரொம்பவும் சரி. அடுத்த வருடத்திலிருந்தாவது எனது பயணங்கள் குறையட்டும்.
   வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

 5. கல்லாக அவர் நின்றால், `கடவுள் ஏன் கல்லானான்!` என்று பாடுகிறீர்கள். அவர் சிரித்தால், `கடவுள் ஏன் சிரித்தார்` என்கிறீர்கள். என்னதான் செய்யச்சொல்கிறீர்கள் அந்த அப்பாவியை !

  1. வாங்க ஏகாந்தன்!
   கடவுளை மட்டும்தான் இப்படி நினைத்தபடியெல்லாம் பேசமுடியும், இல்லையா? அதுதான்.
   வருகைக்கும், கடவுளுக்குப் பரிந்து பேசியதற்கும் நன்றி!!🙂

 6. ரசித்து எழுதி இருக்கிறீர்கள்,,,,சிரித்துக் கொண்டே வாசித்து முடித்தேன். என்ன இது அடுத்தவர் பாடு சந்தோஷமா என என்னை கேட்டுக் கொண்டேன்…ஹிஹிஹி…நீங்கள் ஸ்வாரஸ்யமாக எழுதி இருப்பதே காரணம் என நினைத்துக் கொண்டேன். அழகாக எழுதுகிறீர்கள் அம்மா…

 7. கடவுள் சிரித்தாரோ இல்லையோ , உங்கள் வீட்டில் கண்டிப்பாக யாரவது ஒருவராவது சிரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். LOL
  நல்ல நகைச்சுவை மிளிர , ரசித்து எழுதியிருக்கிறீர்கள் .

  1. வாங்க ராஜி!
   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை என் இந்தப் பதிவு இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது போல!
   வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

  1. வாங்க துளசிதரன், கீதா!
   எனக்குக் கூட முதலில் வியப்புதான். எழுந்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இரும்பு ஷட்டரின் இடுக்கு வழியாக வந்தது காற்று என்று புரிந்தது.
   உங்களது இந்தக் கேள்வியைப் பார்த்து மறுபடி சிரிக்கப் போகிறார், கடவுள்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க பாண்டியன்!
   எப்பவுமே ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும், இல்லையா? நான் காற்றுக்கு என் செருப்பை இழந்தேன் என்று வைத்துக் கொள்ளலாம்.
   அது போக வேண்டிய செருப்பு, அதான் போச்சு!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   நிச்சயம் சிரித்திருப்பார்.
   ‘இன்னிக்கு உனக்கு ஒரு கால்ல லேடீஸ் செருப்பு, ஒரு கால்ல ஜென்ட்ஸ் செருப்பு போட்டுண்டு நடக்கணும்னு விதி’ என்று!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 8. அடக் கொடுமையே… செருப்பு இல்லாமலேயே நடந்தது தான் சரி!

  என்னுடையது கோவில் வாசலில், ஆஸ்பத்திரி வாசலில் காணாமல் போயிருக்கிறது, ஆனால் ஜோடியாகத் தான்…:)

  1. வாங்க ஆதி!
   எனக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் ஒருமுறை செருப்பு தொலைந்துவிட்டது. அதிலிருந்து கோவிலுக்கு செருப்பு இல்லாமலேயே போகிறேன். வீடு கோவிலுக்கு வெகு அருகில், அதனால்!
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s