Uncategorized

சூப்பர் சிங்கர்: பூனைக்கு மணி கட்டுவது யார்?

அன்புள்ள திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு,

 

வணக்கம். உங்களை பலவருடங்களாக தொடர்ந்து தொலைக்காட்சியில் (சன் தொலைக்காட்சியில் நீங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்திலிருந்தே) பல பரிமாணங்களில் பார்த்து வருபவள் நான். தற்போது இசையமைப்பாளர் ஆக உங்களது இன்னொரு பரிமாணத்தையும் பார்த்து பெருமை அடைகிறேன். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை ரசிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவள். எனது கணவரும் இந்த நிகழ்ச்சியின் ரசிகரே. இரவில் பார்ப்பதுடன் அதன் மறுஒளிபரப்பையும் மாலை வேளைகளில் கேட்டு மகிழ்வோம்.

 

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்து நீங்கள் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துவதும், அவர்களைப் பற்றி நேர்மையான, நேர்மறையான விமரிசனங்கள் கொடுப்பதும், மற்ற நடுவர்களைப் போலில்லாமல் நறுக்கென்று (ஒரு குடும்பத்தில் அம்மா சரியில்லை என்றால்….ஸ்ருதி மாதா இல்லையா? – ஷிவானி என்ற சிறுமி ஸ்ருதி சரியில்லாமல் பாடியபோது நீங்கள் கொடுத்த மிகவும் நறுக்கென்ற விமரிசனம்) விமரிசனம் செய்வது உங்களது தனிப்பாணியாக இருப்பதும் எனக்குப் பிடித்த விஷயம். மற்றவர்கள் சொல்லத் தயங்குவதை நீங்கள் வெளிப்படையாக சொல்லுகிறீர்கள் – அனுச்யாவிடம் – பறையடிப்பவரின் உள்ளக் குமுறலைப் பாடியபோது அழுத இந்தச் சிறுமி அடுத்த பாடலுக்கும் அழுத போது –  ‘ஒவ்வொரு பாடலுக்கும் நீ அழக்கூடாது. அந்தப் பாடலுக்கு நீ அழுதது இயற்கையாக இருந்தது. பாராட்டினார்கள். ஆனால் நீ ஒவ்வொரு பாடலுக்கும் அழுதால் அது உன் பலவீனத்தைக் காட்டும். தேவைப்பட்ட போது மட்டுமே அழ வேண்டும்’ என்று எல்லோர் முன்னிலையிலும் அழுத்தம் திருத்தமாகக் கூறியது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

 

மாளவிகா ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’ பாடலில் ஜதியையும் சேர்த்துப் பாடி பாடலை சரியாகப் பாடமுடியாமல் போனபோது கூறிய அறிவுரை, அனல் ஆகாஷுக்கு பாட வாய்ப்புக் கொடுப்பதாகச் சொல்லி – ஆனால் உன் படிப்பு முடிந்தபின் என்றது, என்று சூப்பர் சிங்கரில் உங்களது பங்களிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

 

வெறும் பாராட்டுக்கு மட்டுமே அல்ல இந்த மடல் என்பதை உங்கள் உள்ளுணர்வு நிச்சயம் சொல்லியிருக்கும். பாராட்டுக்களைத் தாண்டி சில விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டும். நான் நினைப்பவைகளை பெரும்போலோர் நினைத்திருப்பார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது? இதோ நான் அந்த வேலையைச் செய்கிறேன்.

 

மேலும் படிக்க: பூனைக்கு மணி கட்டுவது யார்? 

 

தினமணி டாட் காமில் வெளிவந்த எனது கட்டுரை இது. அங்கேயும் பின்னூட்டம் போடலாம். இங்கேயும் போடலாம்!

 

 

 

 

Advertisements

28 thoughts on “சூப்பர் சிங்கர்: பூனைக்கு மணி கட்டுவது யார்?

 1. நான் எதிர்பார்த்தது சின்னஞ்சிறு குழந்தைகளை விரசமான பாடல்களுக்கு அந்தப் பாடலின் பொருளோடு சேர்ந்த உணர்வுகளைக் காட்டும்படியாகப் பாட வைக்கிறார்களே அதைக் குறித்து ஏதேனும் சொல்லி இருப்பீர்கள் என்னும் ஆவலோடு வந்தேன், என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகைப் பாலியல் கொடுமையாகவே தெரிகிறது. விபரம் தெரியாக் குழந்தை காதலன், காதலி பாடும் பாடல்களை எல்லாம் உருகி உருகிப் பாடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. 😦 நாங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. அவ்வப்போது வரும் ட்ரெயிலர்கள் மூலமும், பலரின் விமரிசனங்கள் மூலமுமே இது குறித்து அறிந்திருக்கிறேன். சங்கீதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. இது குறித்து இன்னும் நிறையவே எழுதலாம். என்றாலும் வேண்டாம் என்று தோன்றுவதால் நிறுத்திக் கொள்கிறேன். 🙂 அங்கே கருத்துச் சொல்ல முடியவில்லை செக்யூரிடி கேள்விக்கு பதில் சொல்லச் சொல்கிறது. ஆனால் கேள்வியே காணோம். 🙂

 2. வாங்க கீதா!
  நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் தவிர இன்னொன்றையும் சொல்ல நினைத்தேன். 12 வயதுச் சிறுமிகள் என்றாலும் முழு வளர்ச்சி அடைந்திருக்கும் அவர்களை முட்டிக்கு மேல் ப்ராக் போட்டு நிறுத்துவதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பெண்களின் உடை பற்றிச் சொன்னால் பெண்களுக்கே கோவம் வருகிறதே! அதனால் safe play பண்ணியிருக்கிறேன்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்தை பற்றியும் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
   http://fourladiesforum.com/2014/03/14/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1/

 3. நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. பொதுவெளியில் யாராவது குறிப்பாக யாராவது பாடிய பாடலைப் பாராட்டி இருந்தால் அதை மட்டும் பார்ப்பேன். அப்படிப் பார்த்து ரசித்த சமீபத்து பார்டிசிபன்ட் ஸ்பூர்த்தி. உடைகள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து எனக்கும் தோன்றுவதே.

  1. வாங்க ஸ்ரீராம்!
   இந்தப் போட்டிகளைப் பார்க்காமல் இருப்பது நல்ல வேலை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. நான் சூப்பர்சிங்கர் பார்ப்பதை நிறுத்தியதே இது போல வேஷங்களைப் பார்க்க முடியாமல்
  தான். மேக் அப் ப்ளஸ் வினோதமான உடைகள்.வயதுக்கு மீறிய பாவனைகள்,பாடும் பாடல்களுக்குப்
  பெரியவர்கள் கூட எழுந்து ஆடுவது எல்லாமே அதீதம்.அதைக் காமிரா ஃபோகஸ் செய்வது வேற.

  இதற்கு முன் ஜெயித்தவர்கள் படிப்பைத் தொடர்ந்தார்களா, இல்லை காண்பிக்கப் பட்ட வீட்டிற்குக் குடி போய் விட்டார்களா
  அத்துடன் வாழ்வு முன்னேறியது என்று சும்மா இருந்தார்களா.
  எனக்கேன் கவலை. கிரிக்கெட் போல இதுவும் ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் பொலிருக்கு.பத்தாம்பசலியாகத் தெரியும் இது போலப் பேசினால்.

  1. வாங்க வல்லி!
   நாமெல்லாம் பத்தாம்பசலி தான். நல்லகாலம் நம் குழந்தைகள் வளர்ந்து ஆளாகிவிட்டார்கள் என்று சந்தோஷப் படலாம்.
   வருகைக்கும், அழகான கருத்துரைக்கும் நன்றி!

 5. நாங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தது எல்லாம் சொல்லி விட்டீர்கள் சகோதரி! அதைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டோம். ஏனென்றால் அதில் குழந்தைகள் குழந்தைத் தன்மையை இழக்கும் நிகழ்வாகத்தான் தெரிகின்றது. அவர்களுக்கு அது தெய்ர்ய வாய்ப்பில்லை. ஆனால் பெற்றோர் ? அவர்கள் குழந்தைகளை சிறு வயதிலேயே புகழ் உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதில் அவர்களும் குளிர் காய விழைகின்றார்கள். மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மேதைதான். ஆனால் அவர் புகழ் உச்சிக்குப் போய் புகழ்பபோதை மட்டுமல்லாமல் குடி போதையிலும் ஆழ்ந்துவிட்டார். அதனால் தான் இத்தனை சஇள வ்யதில் மரணம்.

  சூப்பர் சிங்கர் மிகவும் கீழ்தரமாகிக் கொண்டிருக்கின்றது. குழந்தைகளின்படிப்பு….ஆச்சரியம் அமெரிகாவிலிருந்து வந்த அந்தக் குழந்தையின் பெயர் மறந்து போனது…அவள் சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார் ஆனால் அதன் பின் படிப்பு? ம்ம்ம் இப்படித்தான் குழந்தைகள் எப்படி பள்ளியை மேனேஜ் செய்கின்றார்களோ…இரவு எல்லாம் ரெக்கார்டிங்க் நடக்குமாமே…..என்னவோ போங்க…..

  அருமையான கட்டுரை! வாழ்த்துகள். தினமணியில் வெளியானதற்கு பாராட்டுகள்!

  1. வாங்க துளசிதரன், கீதா!
   எல்லாமே பணம் பண்ண தொலைக்காட்சிகள் அடிக்கும் கூத்து. இதில் பெற்றோர்கள் பலியாகி, தங்கள் குழந்தைகளையும் பலி கொடுக்க தயாராகிறார்களே! அதுதான் வேதனையை அளிக்கிறது.
   வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

 6. மிகச் சரியான கட்டுரை ரஞ்சனி. பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று! இன்று எல்லா விஷயமும் பணத்தையும், புகழையும் முன்னிறுத்தியே நடக்கிறது. பாவம்….அந்தக் குழந்தைகள்….என்ன பாடு படுவார்களோ இப்படிப் பாட. படிப்பை விட்டு, விளையாட்டை மறந்து, தூக்கத்தை தொலைத்து….நினைக்கவே மனம் கஷ்டப்படுகிறது.

  நானும் ரொம்ப சுவாரசியமாக இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவள்தான். ஆனால் காதல் பாட்டு பாடும் குழந்தையிடம் ‘கெமிஸ்ட்ரி சரியில்லை’ (அந்தக் குழந்தைக்கு காதலையும், மோகத்தையும் பற்றி என்ன தெரியும்?) , இன்னும் உணர்வு பூர்வமாக பாட வேண்டும் என்றெல்லாம் நடுவர்கள் சொல்வது சகிக்கவில்லை. இப்போதெல்லாம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

  இந்த புகழ் போதையை ஏற்றுவதற்காக, பெற்றோர்கள் தாம் பெற்றெடுத்த செல்வங்களை எவ்வளவு சிரமப் படுத்துகிறார்கள் என்பதை சமீபத்தில் ஒரு இதழில் படித்த போது,ஐயோ …அந்தக் குழந்தை இவர்கள் பெண்ணாக, பிள்ளையாகப் பிறக்க என்ன பாவம் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  உடலை முழுதும் மறைக்காத ஆடம்பர, அலங்கார உடைகள்…ஒரு குழந்தையும் தலையைக் கட்டுவதில்லை. நெற்றியில் பொட்டு கிடையாது. நம் நாட்டின் பாரம்பரிய உடைகள் அணிவது தவறா? ஏதோ பக்தி கீதம், கர்நாடக சங்கீதத்திற்கு மட்டும் அழகான நம் பாரம்பரிய உடைகளில் வரும் குழந்தைகள் கண்ணுக்கு விருந்து.

  குழந்தைகளுக்கு தோல்வியை சந்திக்க சொல்லிக் கொடுக்க வேண்டிய பெரியவர்களே, குழந்தைகளோடு சேர்ந்து அழுவதும், ஆடுவதும், பாடுவதும் சகிக்கவில்லை. இதில் எத்தனை குழந்தைகள் பாடகர் ஆகியிருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?!

  1. வாங்க ராதா!
   நான் சொல்லாமல் விட்ட விஷயங்களையும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். எப்படியோ, பார்ப்பவர்களின் புத்தியை மழுங்க அடித்துவிடுகிறார்கள்.
   வருகைக்கும், கூர்மையான கருத்துரைக்கும் நன்றி!

 7. திரு துளசிதரன் தில்லையகத்து, கீதா, மாண்டலின் ஶ்ரீநிவாஸ் குடிபோதையில் இறக்கவில்லை என்பது நிச்சயம். இதைப் படிக்கும் அவரின் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்கள் மனம் வருந்துவார்கள். இது குறித்துத் திரு ஈரோடு நாகராஜ் அவர்கள் (மிருதங்க வித்வான்) தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயம் தான் என்றாலும் இங்கே ஶ்ரீநிவாஸைக் குறிப்பிட்டிருப்பதால் சொல்லி இருக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

 8. இந்த நிகழ்ச்சி சலித்து போய் வெகு நாட்கள் ஆகிறது. பெற்றோர்களின் பேராசை, பொஸெஸிவ்நெஸ் இரண்டும் பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக்குரியாகி விடுகிறது.

 9. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு உதாரண பாடகர்களும் மிக அருமை. இளம் மேதை சரியாக வளரவில்லை என்றால், பெற்றோர் கண் வழியாக உலகத்தை பார்த்தார் என்றால் அதோகதி தான்!!

  1. வாங்க சூர்யா!
   பெற்றோர்களின் அதீத ஆசை குழந்தைகளை கசக்கிப் பிழிந்து பாட வைக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 10. வணக்கம்
  அம்மா

  இரசிகை என்ற ரீதியில் தங்களின் கருத்தை வரவேற்கிறேன்.. உண்மைதான் ஒரு வர்விழுந்து விட்டால் அவனை தட்டி எழுப்ப வேண்டும் பகிர்வுக்கு நன்றி அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 11. உண்மையான அக்கறையுடன் தாயுள்ளத்தோடு சொல்லியிருக்கும் செய்திகளாகத்தான் இருக்கின்றன உங்களின் பரிந்துரைகள். ஏற்கப்பட்டால் நிச்சயம் அவர்களுக்கு லாபமே.

  1. வாங்க அமுதவன்!
   நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். கேட்பதும், விடுவதும் அவர்கள் பாடு.
   உங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 12. ஏற்கனவே சினிமா என்ற பெயரில் ஆபாசங்களை அள்ளி வீசி குழந்தைகளை கெடுத்து விட்டார்கள். அடுத்ததாக இந்த வேலையை இது போன்ற தொலைகாட்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். தனியார் மயமும் சீரழிந்த கலாச்சார நுகர்வும் தான் காரணம். பொற்றோர்களே பிள்ளைகளின் எதிரி ஆகிவிட்டார்கள்.

 13. வாங்க செந்தில்!
  இதற்கெல்லாம் யார் முடிவு கட்டுவது என்பதுதான் பெரிய கேள்வி. பெற்றோர்களே இப்படிச் செய்தால் நாளைய தலைமுறை என்னவாகும்?
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 14. Apart from James Vasanthan, another person who gives good tips to singers is, sorry forgot the name – he is Trichy Loganathan’s son. I may add that the anchor-persons are at times overdoing their roles under the garb of humor. Also, the judges, instead of just talking about the performance, could also sing and show how to deliver the song in the right way so as to guide the singers.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s