Uncategorized

ஒரு நிமிஷம், கவனிங்க….!

படம், நன்றி: கூகிள்
புதிய தலைமுறை- பெண்கள் டயரி பகுதியில் வெளியான எனது கட்டுரை
சமீபத்தில் எனது சகோதரி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்தார். அவர் இருந்த இரு படுக்கைகள் கொண்ட அறையில் இன்னொரு ஆண் நோயாளி ஒருவரும் இருந்தார். அடுத்தநாள் அந்த ஆண் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் செல்லவிருந்தார். கிளம்பும் சமயம் ஒரு பெண் மருத்துவர் சொன்ன அறிவுரை மறக்க முடியாதது. அவருக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே தேவையான ஒன்று. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
‘இதோ பாருங்க ஸார்! நீங்க நடுவயசுக்காரர். இப்போ கையின் ஒரு பகுதி மரத்துப் போகிறது என்று சொல்லி இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பக்கவாதம் தாக்கியிருக்கிறது. உடனடியாக வந்ததால் இந்தமுறை தப்பித்துவிட்டீர்கள். அடுத்தமுறை இதுபோல ஆனால் உங்களது உடலின் ஒரு பக்கமே செயலிழக்கக் கூடும். பிறகு ஆயுள் முழுக்க மற்றவர்களின் தயவுடனேயே வாழ வேண்டும். எல்லா ஆண்களுக்கும் ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று நினைப்பு. பெண்களை விட ஆண்களுக்கு இந்த அலட்சியம் அதிகம். பெண்கள் பயப்படுவார்கள் எங்கே பிறரை அண்டி வாழ வேண்டி வந்துவிடுமோ என்று. ஆனால் ஆண்களுக்கு மனைவி இருக்கும் தைரியம்.
மனித உடல் இது. யாருக்கும் எந்த சமயத்திலும் எது வேண்டுமானால் ஆகலாம். இரண்டு வகையான நோய்கள் நமக்கு வரும். ஒன்று பரம்பரையாக வரும் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை. இன்னொரு வகை நோய் நாமாக நமது தவறான பழக்க வழக்கங்களினால் வரவழைத்துக் கொள்வது. நீங்க அதிகமா தம்மடிக்கிறீங்க, தண்ணி போடறீங்க.  இதையெல்லாம் உடனடியா நிறுத்திவிட்டு ஆரோக்கியமான வாழக்கையை வாழ ஆரம்பியுங்க. இல்லைன்னா நான் சொன்னதுபோல ஆயுசுக்கும் டிபெண்டன்ட் ஆகத்தான் இருக்கணும். சுதந்திரமா எங்கயும் வெளியே போகமுடியாது. வீட்டுக்குள்ளேயே, படுக்கையிலேயே முடங்கி கிடக்கணும். என்ன செய்யப் போறீங்கன்னு தீர்மானம் செய்யுங்க..’
அந்த மருத்துவர் கடுமையாகச் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மையை மறுக்க முடியாது. நாமாக வரவழைத்துக்  கொள்ளும் நோய்களைத் தவிர்ப்போமா?

 

———————————————————————————————————————–

இந்தப் பகுதியை ஊரிலிருந்து வந்த எனது உறவினர் ஒருவரிடம் காண்பித்தேன். அவர் ஒரு நெசவாலையில் பொதுமேலாளர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர்:

அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் சொன்னது இதுதான்:

ஆண்கள் எப்பவும் இப்படித்தான். தொழிற்சாலையிலும் நிர்வாகம் செய்து கொடுக்கும் பாதுகாப்பு கவசம் எதையும் பயன்படுத்த மாட்டார்களாம். சொன்னால், ‘அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் ஆகாது ஸார்’ என்பார்களாம். மேற்கூரையில் ஏறி வேலை செய்த ஒருவர் பாதுகாப்பு பெல்ட் அணியாமல் இருபது அடி உயரத்திலிருந்து விழுந்து அங்கேயே உயிரை இழந்தாராம். அதைப் பார்த்தும் மற்ற தொழிலாளிகள் திருந்துவதில்லை. நெசவாலையில் கைகள் இழந்தவர்கள், விரல்களை இழந்தவர்கள்  ஏராளம். அதேபோல குடித்துவிட்டு  மெய்மறந்த நிலையில் இயந்திரத்தில் கையை இழப்பது சர்வசாதாரணமாக நடக்கும் விஷயமாம்.

 

ஆண்களே ஏனிப்படிச் செய்கிறீர்கள்? உங்களை நம்பியிருக்கும் உங்கள் குடும்பம் என்ன ஆகும்? என்றைக்கு உங்கள் தவறுகளை உணரப் போகிறீர்கள்?

Advertisements

11 thoughts on “ஒரு நிமிஷம், கவனிங்க….!

  1. குடும்பத்திற்கு ஆணிவேர் நீங்கள். உங்களை பாதுகாத்துக்கொண்டு சுகமாக இருங்கள். உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.. அன்புடன்

  2. எங்கேயும் போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ரங்க்ஸ் இருக்கார். எனக்கெல்லாம் எதுவும் வராதுனு சொல்லிட்டு இருந்தார். 300+க்கு மேல் ரத்தச் சர்க்கரை அளவு! நல்லவேளையா கவனிச்சோம். இப்போ மூணு வேளை மருந்து, மாத்திரை. அளவுச் சாப்பாடு! இத்யாதி இத்யாதி! ஒரு இட்லி கூடச் சாப்பிடக் கூட யோசிக்கணும்! 😦

  3. எல்லா ஆண்களும் தங்களை ஒரு சாகசங்கள் செய்யும் கதாநாயகனாகக் கற்பனை பண்ணிக் கொள்வதால் தான் இந்த அலட்சியம் எல்லாம்! 😦 எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள்.

  4. //எல்லா ஆண்களும் தங்களை ஒரு சாகசங்கள் செய்யும் கதாநாயகனாகக் கற்பனை பண்ணிக் கொள்வதால் தான் இந்த அலட்சியம் எல்லாம்! 😦 எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள்.//

    பெண்கள் சுறுசுறுப்பானவர்கள். ஆண்கள் கொஞ்சம் சோம்பேறிகள். அவ்வளவுதான் கீதா மேடம்!

  5. நமக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லையே; ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்றே நானும் இருந்தேன். ஆனாலும் வந்துவிட்டது எனக்கு இரத்த அழுத்தம்.

    ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று பதிவினில் எச்சரிக்கை செய்த நீங்கள், அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கலாம். அடுத்த பதிவில் சொல்லுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s