Uncategorized

புற்றுநோய்க்கு ஒரு மருந்து – லக்ஷ்மி தரு என்னும் சிமரூபா (Simarouba)

Seedstores : Simarouba Glauca Rare & Precious Lakshmitaru Paradise Tree 10 Seeds for Growing

 

எனது உறவினர் ஒருவருக்குப் புற்றுநோய் என்று எனது வலைத்தளத்தில்  எழுதியிருந்தேன். அதற்கு சிமரூபா என்ற மருந்து  திரு ஜோஷி என்பவர் கொடுக்கிறார், நல்ல பலன் இருக்கிறது என்று சொல்லி எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் திரு அமுதவன் ஆகியோர் கொடுத்த தொலைபேசி எண் மூலம் திரு. ஜோஷியைத் தொடர்பு கொண்டேன்.

 

மருத்துவ ரிபோர்ட் எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருந்தார் திரு ஜோஷி. சென்ற சனிக்கிழமை நானும் கணவரும் சென்றோம். எங்களுக்கு முன்னால் இருவர் வந்திருந்தனர். அவர்களிடம் பேசி மருந்து கொடுத்து அனுப்பி விட்டு எங்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார்.

 

மிகவும் சிறிய அறை அது. அதை ஒட்டினாற்போல ஒரு பால்கனி. அதில் ஒரு செடி தொட்டியில் இருக்கிறது. அதுதான் மேலே குறிப்பிட்ட சிமரூபா செடி என்று பிறகு அறிந்துகொண்டேன். அறையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டு பெரிய பெரிய எவர்சில்வர் பாத்திரங்கள் இருந்தன. பொட்டலம் பொட்டலமாக இவர் தயாரித்துக் கொடுக்கும் மருந்துகள். (இதையும் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.) ஒரு அலமாரியில் நிறைய நோட்டுப் புத்தகங்கள். தன்னிடம் வருபவர்களின் பெயர் எழுதி அதற்கு ஒரு எண் கொடுக்கிறார். அடுத்த தடவை போகும்போது அந்த எண்ணைக் கூறினால் மருந்து கொடுக்கிறாராம்.

 

ஜோஷி வெளியே வந்தபோது அவரது கையில் ஒரு தட்டு. அதில் மிகச் சிறியதாக இரண்டு டம்ளர்கள். அதில் ஏதோ டீ போல ஒரு திரவம். எங்களிடம் அதைக் கொடுத்து குடியுங்கள் என்றார். ‘அதற்கு முன்’ என்று சொல்லிவிட்டு ‘இதை மூன்று வாயாகக் குடிக்க வேண்டும். வாயில் ஊற்றிக்கொண்டு வாய்முழுவதும் பரவும்படி – பல் தேய்த்து வாய் கொப்பளிப்பது (செய்து காண்பிக்கிறார்) – போல செய்துவிட்டு சிமரூபா அம்மனையும் (பால்கனியில் உள்ள லக்ஷ்மி தரு செடியை சுட்டிக் காட்டுகிறார்) உங்கள் குலதெய்வத்தையும் மனதில் தியானித்துக் கொண்டு, எங்கள் நோய் எல்லாவற்றையும் நீயே குணமாக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு  நிதானமாக விழுங்குங்கள்’. நாங்களிருவரும் அப்படியே செய்தோம். ‘எப்படி இருந்தது?’ என்றார். ‘ ‘palatable’ சாப்பிடும்படியாக இருந்தது’ என்றேன்.

 

‘தேவரு இச்செ’ (கடவுளின் விருப்பம்) என்றபடியே பேச ஆரம்பித்தார் ஜோஷி. ‘இப்போ நீங்க குடிச்சீங்களே, அது எல்லாவிதமான நோய்களையும் தீர்க்கும் தெய்வீக மருந்து. அம்மா சிமரூபா தாயியின் ஆசீர்வாதத்துடன் நான் எல்லோருக்கும் கொடுக்கிறேன். முதல்ல வாயிலிருந்து ஆரம்பிப்போமா? இத நீங்க தினசரி குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் போயிடும். பல்லில் படியும் கருப்பு நாளடைவில் மறையும். பல் ஏதாவது ஆடிக் கொண்டிருந்தால் நான்கு நாட்களில் ஆடுவது நின்றுவிடும். தேவரு இச்செ’

 

 

‘இன்னு, இன்னு’ என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

இந்த மரத்தின் இலைகளில், மரப்பட்டைகளில்  இருக்கும் வேதிப்பொருள் anti-viral, anti-amoebic, anti-malarial, anti-bacterial, anti-helmentic, anti-cancerous.

இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு சிக்கன்குனியா, H. Pylori என்ற தொற்றால் வரும் gastritis, hepatitis, gastrointestinal குறைபாடுகளை நீக்கும். இந்தச் சாற்றில் இருக்கும் anti-cancerous பொருட்கள் முதல் இரண்டாம் நிலையில் இருக்கும் நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்தும். மூன்றாவது நான்காவது நிலையில் இருப்பவர்கள் மெதுவாகத் தான் குணம் காணுவார்கள். தினசரி வாழ்க்கை அவர்களுக்கு சற்று சுலபமாக ஆகும்.

 

இந்த நோய்களைத் தவிர இரத்தசோகை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்திரவுகள் – முறைதவறி வரும் மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், வெள்ளை படுத்தல், மெனோபாஸ் தொந்திரவுகளையும் போக்கும்.

 

பேசிக்கொண்டே இருக்கும்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் வருகிறார். ‘அவரது கதையைக் கேட்கிறீர்களா?’ என்று எங்களைப் பார்த்துக் கேட்டார் ஜோஷி. அந்த மனிதரும் சொல்ல ஆரம்பித்தார். ‘கால்வலி, முழங்காலில் வீக்கம் என்று ரொம்பவும் அவஸ்தை. மாடிப்படி ஏறி இறங்குவது சிம்ம சொப்பனம் ஆக இருந்தது. நாற்காலில் உட்காருவதே பெரிய வேதனை. நாற்காலியில் உட்கார முழங்கால்களை மடக்கினால் வலி உயிர் போகும்.. தரையில் உட்காருவதை மறந்தே விட்டேன். இப்போது தொடர்ந்து இந்த சிமரூபா டிகாக்ஷன் குடித்து வருகிறேன். மாடிப்படி கிடுகிடுவென ஏறுகிறேன்; இறங்குகிறேன். வலியே இல்லை. என் அம்மாவிற்கும் கால்வலி. இரண்டு அடி தொடர்ந்து நடக்க முடியாமல் இருந்தது. இப்போது அவரும் இந்த டிகாக்ஷனைக்  குடித்து வருகிறார். நன்றாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்’. என்றபடியே தனது நம்பரையும், தனது தாயின் நம்பரையும் கூறுகிறார். ஜோஷி அந்த அறையின் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் நோட்டு புத்தகங்களிலிருந்து இவர்களது நம்பரைத் தேடி எடுத்துப் பார்த்து மருந்து கொடுக்கிறார்.

‘ ஆர்த்ரைடிஸ் நோய்க்கு மிகச் சிறந்த மருந்து’

‘நான் இதை வர்த்தக ரீதியாக  வியாபாரம் செய்யவில்லை. இப்போது  நான் உங்களுக்குக் கொடுத்த டிகாக்ஷன் 100 ml. பாட்டிலில் போட்டு விற்கலாம். நான் ‘இராமானுஜர்’ மாதிரி. குருவுக்கு செய்த சத்தியத்தை மீறி, என் ஒருவனது தலை சுக்குநூறாக உடைந்தாலும் சரி, உலகத்து மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று நினைத்து நாராயண மந்திரத்தை சொன்னாரே, அதுபோலத் தான் நானும். எனக்கு எந்தவித லாபமும் வேண்டாம். உங்கள் வீட்டில் இடம் (இரண்டுக்கு இரண்டு அடி) இருந்தால் சொல்லுங்கள். தொட்டியில் இந்த மரம் படர்ந்து வளர முடியாது. நிலம் வேண்டும். விதை கொடுக்கிறேன். எப்படி வளர்ப்பது, எப்படி இந்த மருந்து செய்வது என்று எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்து உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுங்கள்.

 

ஒருவயது முதல் ஒரு குழந்தைக்கு இதைக் கொடுத்து வந்தால் எந்த நோயும் வராமல் தடுக்கலாம்.உங்களுக்கு நோயே இல்லாவிட்டாலும் அல்லது பொதுவான டானிக் ஆகவும் எடுத்துக் கொள்ள விரும்பினால் இந்த டிகாக்ஷனை காலை மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை இப்படி சாப்பிடவேண்டும்.

 

‘நானும் (ஷ்யாம்சுந்தர் ஜோஷி) எனது மனைவி சாந்தா ஜோஷியும் 25 வருடங்கள் ஆராய்ச்சி செய்த கண்டுபிடிப்பு இது. இதில் நாங்கள் எதுவும் ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை. எல்லாமே வெளிப்படையானவை. இந்த மருந்து இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் விருப்பம். அன்று ஒருவர் வந்து இந்த மரத்தின் விதைகளை வாங்கி கொண்டு மரம் வளர்ந்த பின் இலைகளை உங்களுக்கே கொண்டு தருகிறேன் என்றார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னிடத்தில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வரக்கூடாது. எல்லோரும் இந்த விதைகளை வாங்கி வளர்த்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.’

 

ஒரு புத்தகம், ஒரு CD, மருந்து ஒரு பொட்டலம் (ஒரு மாதத்திற்கு தேவையானது) எல்லாம் சேர்த்து முதல் தடவைக்கு 1200/- ரூபாய் வாங்கிக் கொள்ளுகிறார். ‘இந்தப் பணம் எனக்கு உதவியாக இந்த மரத்தை நட்டு வளர்த்து மருந்து தயாரிக்க உதவும் ஆட்களுக்கு’ என்கிறார். ‘அடுத்த தடவை 1000 ரூபாய் கொடுத்தால் போதும். உங்களுக்கு 6 மாதத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கிறேன். முதலில் ஒரு மாதம் சாப்பிட்டுப் பார்க்கட்டும். பிறகு 6 மாதத்திற்கு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

மருந்தை வாங்கிக் கொண்டு வந்து சென்னை அனுப்பியாயிற்று. யோசிக்க யோசிக்க பல சந்தேகங்கள் மனதில் எழுகின்றன.

  • இத்தனை நம்பிக்கை தரும் இந்த மருந்து இன்னும் ஏன் அலோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை?
  • யாராவது இந்த மருந்தின் குணநலன்கள் பற்றி ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்களா – ஜோஷி தம்பதிகளைத் தவிர? அவர் கொடுத்திருக்கும் புத்தகத்தின் அட்டையில் University of Agricultural Sciences, Bangalore, Indian Council of Agricultural Research, New Delhi என்று போட்டிருக்கிறது.
  • இந்தியாவில் அல்லது கர்நாடகாவில் இன்னும் வேறு யாராவது இவரைப் போல இந்த செடியில் இருந்து இத்தகைய மருந்து தயாரிக்கிறார்களா?
  • தன்னிடம் வரும் நோயாளிகளைப் பற்றிய குறிப்புகள், அவர்களது நோயின் தன்மை, குணமாகும் காலம் இவை பற்றி ஜோஷி பதிவு செய்கிறாரா, என்று தெரியவில்லை. (யாரையும் நான் தொடர்பு கொள்வதில்லை. அவர்களே வந்து இந்த பவுடரை வாங்கிப் போகிறார்கள் என்கிறார்) பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்பு எப்படிப் பயன்படுகிறது, அதனால் பயன்பெற்றவரின் விவரம் எல்லாம் எழுதி வைத்துக் கொள்வார்கள், இல்லையோ?
  • இந்த விவரங்கள் மிகவும் தேவையானவை என்று எனக்குத் தோன்றுகிறது. வரும் தலைமுறைக்கு இந்த விவரங்கள் மேலும் ஆராய்ச்சி செய்ய பயன்படுமே.
  • திரு ஜோஷி இதற்கு உரிமை வாங்கியிருக்கிறாரா, தெரியவில்லை.
  • உலகம் முழுவதும் புற்றுநோய் என்பது தீவிரமான நோயாக இருந்துவரும் வேளையில் இந்த மருந்தைப் பற்றி ஏன் அதிகம் வெளியில் தெரியவில்லை?
  • வெளிநாட்டினர் யாரும் அக்கறை காட்டவில்லையா?

உண்மையில் இது ஒரு மிகச் சிறந்த மருந்தாக இருந்து நாம் அதை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிடப் போகிறோமே என்று மனது அடித்துக் கொள்ளுகிறது.

தொடர்புக்கு

 

Dr. Syamasundar Joshi and Dr. Shantha Joshi

23, RBI colony (behind Punjab National Bank) (near Saibaba Temple, R.T. Nagar

Ananda nagar, Bangalore – 560021.

09448684021 – 080 – 23335813.

email: joshi.sim@gmail.com

 

 

32 thoughts on “புற்றுநோய்க்கு ஒரு மருந்து – லக்ஷ்மி தரு என்னும் சிமரூபா (Simarouba)

  1. அருமையான பதிவு சகோதரி! குறித்துவைத்துக் கொண்டோம். செடியும் கிடைக்குமா? அவரிடம்….ஆம் உங்கள் ஆதங்கம் எங்களையும் தொற்றிக் கொண்டுள்ளது….அதுவும் எங்களில் கீதாவின் மகன் வெட்னரியன் அதனால்…..

  2. வாருங்கள் துளசிதரன், கீதா!
    அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள், நிச்சயம் கொடுப்பார் என்று தோன்றுகிறது.
    நல்ல பலன் கிடைக்கட்டும், வெட்னரி டாக்டருக்கு.
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  3. நான் ஏற்கெனவே சொன்னபடி இவர்களைப் பற்றி சிமரூபா கஷாயம் என்ற பெயரில் எங்கள் பிளாக்கில் பகிர்ந்திருந்தேன். ஜோஷியின் நோக்கம் நல்லதாகத் தெரிகிறது. ‘ரகசியம் வேண்டாம் எல்லோருக்கும் சொல்லுங்கள்’ என்பது அவரின் நல்ல மனத்தைக் காட்டுகிறது. இதுவரை நெகட்டிவ் விஷயங்கள் காதில் படவில்லை, வேறு புகார்களும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. நம்பிக்கைதான் பாதி மருந்து என்பார்கள். வேறு ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலையில் இதை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. நல்லதே நடக்கட்டும

    1. வாங்க ஸ்ரீராம்!
      நாங்களும் நம்பிக்கையில் தான் மருந்தை வாங்கி அனுப்பியிருக்கிறோம். இனி கடவுள் விட்ட வழி.
      நன்றி ஸ்ரீராம்.

  4. ஸ்ரீராம் சொன்னாற்போல் முயற்சித்துத் தான் பார்க்கலாமே. நல்லபடி குணமாகட்டும். தைரியமாக இருங்கள். கவலை வேண்டாம். எல்லாம் அவன்கையில்.

    1. வாங்க கீதா!
      நம்பிக்கையுடன் கூடிய முயற்சியை நாங்கள் செய்து வருகிறோம். எல்லாம் அவன் கையில் என்பதை நாங்களும் நம்புகிறோம்.
      நன்றி!

  5. பயனுள்ள தகவல். அறிய மூலிகைகளின் பயன்கள் அனவைருக்கும் சேரவேண்டும். விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவியல் முறைப்படி மருந்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

    1. வாங்க முரளி!
      முதலில் எல்லோருக்கும் இந்த மருந்து பற்றி தெரிய வரவேண்டும். அப்போதுதான் இந்த ஆராய்ச்சியை முறைப்படி செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.
      நன்றி!

  6. புற்றுக்கு மருந்து கொடுக்கும் மனிதரை எத்தனைப் பாராட்டினாலும் தகும். அதை விடவும் மருந்தை ரகசியம் காக்க வேண்டாம் என்று சொல்வது அவரின் தன்னலமற்ற சேவையைக் காட்டுகிறது. அவருக்கு என் வணக்கங்கள்.
    அரிய செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரஞ்சனி.

    1. வாங்க ராஜி!
      நேரில் சந்தித்தப்பின் எனக்கும் அவரைப் பற்றிய எண்ணம் உயர்வாகவே இருக்கிறது. நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
      நன்றி!

  7. ஆச்சரியமா இருக்குங்க. பலன் அளிக்குமானால் எவ்வளவு பேர் பயனடைவார்கள் & வாழ்த்தவும் செய்வார்கள் !

    உறவினர் பூரண‌ குணமடைந்து, உங்கள் மகிழ்ச்சியை விரைவில் எங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆண்டவன் அருள் புரியட்டும்.

    1. வாங்க சித்ரா!
      ஆரம்பத்திலேயே வந்திருக்க வேண்டும் என்றார். எங்களுக்குத் தெரிந்ததே முற்றிய பிறகு தான். ஆண்டவன் அருளைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
      நன்றி!

  8. இப்ப நாம் எப்படி இருக்கோம் என்றால் எத்தைத் தின்னால் பித்தம்தெளியும் என்ற கையறுநிலை அல்லவா? இந்த மருந்து சாப்பிட்டுப் பலன் கிடைக்கும் என்றால் இதைவிட வேறு நல்லது உண்டோ?

    கெட்ட சேதி பரவும் வேகத்துக்கு நல்லசேதி பரவாது என்பதே உண்மை:(

    1. வாங்க துளசி!

      //கெட்ட சேதி பரவும் வேகத்துக்கு நல்லசேதி பரவாது என்பதே உண்மை:(// நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. முகநூலில் கூட யாரும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
      நன்றி!

  9. மிக அருமையான பகிர்வு உபயோகமான பகிர்வு புற்று நோய்க்கு மருந்தென்றால் எவ்வளவு பெரிய உபயோகம் அது உலகத்திற்கு பகவான் கிருபையில் குணமாகவேண்டும் என வேண்டிக்கொள்வோம். இந்த மருத்துவர்பற்றி ஒரு முறை என் தோழி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவள் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாக சொன்னாள் பாராட்டுக்கள் ரஞ்சனி
    விவரமாக எழுதியமைக்கு நன்றி

  10. உங்களின் நேரில்பார்த்துப்,பேசி அனுபவம் இருக்கிரதே அது பன்மடங்கு நம்பிக்கையைத் தருகிறது. மூலிகையையும் காண்பித்து இப்படி யாவருக்கும் தெரியும்படி செய்வதே மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கையே நல்ல பலனைத் தரும். மூலிகைகள் சத்துள்ளதாக இருக்கும். எல்லா உடல் நலக்குறைவையும் தீர்க்குமென்றால், இன்னும் பல தரப்பட்டவர்களும் முயற்சி செய்வார்கள். நானே கூட நினைக்கிறேன். மறதி நோய்க்கும் நிவாரணம் கிடைக்குமா என.. தெய்வ நம்பிக்கையும் உடன் சொல்கிரார். நல்லபடி
    குண மானால் வைத்திய உலகத்திற்கே அருமருந்தாகும்.
    கடவுளைப் பிரார்தித்துச் சொல்கிறேன். நல்ல மூலிகை மருந்தாக இருந்து குணப்படுத்த வேண்டும்.. உங்களின் முயற்சியும் பலன் கொடுக்கட்டும்.
    நல்ல கட்டுரை. அன்புடன்

  11. மிகவும் பயனுள்ள கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. இந்தக்கட்டுரை நிறையப்பேரை சென்றடைய வேண்டும்.

    கேன்சர் உட்படபல நோய்களைக் குணப்படுத்தக்கூடியதெனில் இது ஒரு அருமருந்து. இதன் முக்கியத்துவம் சிறப்பானது. எந்த ஒரு மருந்தையும் குறிப்பாக இத்தகைய நாட்டு மருந்துகளை தெய்வநம்பிக்கையுடன் கொள்வதே நல்லது- அவரவர்களின் தெய்வம் எதுவாயினும். தெய்வ நம்பிக்கையற்றவர்கள் குறைந்தபட்சம் மருந்தின்மீது நம்பிக்கை வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

    அனைவருக்கும் மருந்து பயன்படவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் நோய் குணமான தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளல் நல்லது. சொந்தத் தனிவீடு வைத்திருக்கும் பாக்கியம் உள்ளவர்கள் இந்தச்செடியை வாங்கி நடலாம். மற்றவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்கலாம்.

    ஜோஷி தம்பதியினருக்குக் கடவுளின் ஆசீர்வாதம் கிட்டட்டும்.
    -ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

    1. வாங்க ஏகாந்தன்!
      உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
      அவர் கொடுத்திருக்கும் புத்தகத்தில் எல்லா விவரங்களும் இருக்கின்றன.
      அவர் கொடுத்திருக்கும் CD யில் இந்த மருந்தை சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருகிறார்கள். இன்னும் சரியானபடி இந்த ஆராய்ச்சி நடந்து உலகத்திற்கே நன்மை செய்யவேண்டும்.
      நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s