Uncategorized

ஹெல்த் செக்கப் பண்ணிக்கப் போறீங்களா?

health image
எனது உறவினர் ஒருவருக்கு புற்றுநோய் என்று தெரிய வந்தது. மனது உடைந்து போனது. வாழ்க்கையில் ரொம்பவும் நொந்து போனவர். அவருக்கு இந்த நோய் வேறு வர வேண்டுமா என்று மனசு அங்கலாய்த்தது. எத்தனை பேர்கள் திருட்டும் புரட்டும் செய்கிறார்கள். எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒவ்வொருவரிடமும். எல்லோரையும் விட்டுவிட்டு இவருக்கு – வெளியில் உணவு அருந்துவது என்பதே தெரியாதவர் இவர். காபி, டீ போன்ற பானங்களும் அதிகம் குடிக்காதவர்.
எல்லாவற்றையும் விட, கஷ்டப்படுபவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். அமைதியாக நிறைய பேர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்புவார். இவர் செய்யும் இந்தக் காரியங்கள் வெளியில் தெரியவே தெரியாது. இவருக்கு எதற்கு இந்த நோய்?  கோவில்களுக்கு இவரைப் போல கைங்கர்யம் செய்பவர்கள் யாரும் இல்லை. இந்தியாவில் உள்ள அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்தவர் – ஒன்றுக்கு இரண்டு முறை.
ஏன்? ஏன்? என்று நான் கேள்வி கேட்பதுதான் மிச்சம். யார் வந்து பதில் சொல்லப் போகிறார்கள் எனது கேள்விக்கு? விடுங்கள்.
ஏன் இங்கு இதை எழுதுகிறேன் என்றால்,
அவரைப் பார்க்கப் போனபோது ஒருவிஷயம் திரும்பத் திரும்பச் சொன்னார்: ‘சென்ற வருடம் ஏப்ரல் மாதம் தான் முழு ஹெல்த் செக்கப் பண்ணிக் கொண்டேன். அப்போது கூட எல்லாம் நார்மல் என்று சொன்னார்கள். ஒருவருடத்திற்குள் எப்படி இந்த நோய் வந்து இத்தனை தூரம் பரவியது?’
அவர் சொன்னது என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. ஏன் ஹெல்த் செக்கப்பில் ஒரு சின்ன க்ளூ கூடக் கிடைக்கவில்லை? பொதுவாக ஹெல்த் செக்கப் என்றால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ECG,  ECG யில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் டிரெட் மில் என்று பரிசோதனை செய்து பார்க்கிறார்கள். பெண்கள் என்றால் கூடுதலாக மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் (பாப் ஸ்மியர் பரிசோதனை) என்று கூடுதலாகச் செய்கிறார்கள். அவ்வளவுதான். இவருக்கு எல்லாப் பரிசோதனைகளும் நார்மல் என்று ரிசல்ட் வந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் வயிற்றுவலி என்று ஆரம்பித்து, என்டோஸ்கோபி செய்து பார்த்ததில்  இவருக்கு வந்திருப்பது gastric lymphoma என்று சொல்லும் ஒருவகை புற்றுநோய் என்று தெரிய வந்திருக்கிறது.
இவரது தந்தைக்கு இந்த நோய் வந்திருந்தது. புற்றுநோய் பரம்பரையாக வருமா என்று தெரியவில்லை. அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை இயக்குனர் திருமதி ஷாந்தா பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இனி எல்லோரும் ஹெல்த் செக்கப் போகும்போது உங்கள் குடும்பத்தில் இதுபோல உயிர்கொல்லி நோய்கள் (TB, கான்சர் போல) யாருக்காவது இருந்திருந்தால், மருத்துவரிடம் சொல்லி  அதற்குண்டான பரிசோதனைகளையும் மேற்கொள்ளுங்கள். அதனால் இந்த நோய்கள் வரும் வாய்ப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம்.  ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால்  சிகிச்சையும் பலன் அளிக்கும், இல்லையா?
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனக்குப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று அறிந்து தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்  கொண்டுவிட்டார்.சமீபத்தில் தனது ஓவரீஸ் களையும் அகற்றிக் கொண்டு விட்டார். இது கொஞ்சம் ஓவர் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இனி, ஹெல்த் செக்கப் போகும்போது எனது இந்த வேண்டுகோளை – உங்கள் வீட்டில் பரம்பரை நோய்கள் இருந்தால் அவற்றையும் சொல்லி அதற்குண்டான பரிசோதனைகளையும் மேற்கொள்வது – நினைவில் கொள்ளுங்கள், ப்ளீஸ்!
Advertisements

19 thoughts on “ஹெல்த் செக்கப் பண்ணிக்கப் போறீங்களா?

 1. உண்மைதான். வருடத்துக்கொருமுறை அல்லது இருமுறை, அதுவும் பரம்பரையாக இந்நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் இதற்கென்று இருக்கும் சோதனைகளைச் செய்து விடுவது நல்லது. உங்கள் உறவினருக்கு நோய் முற்றிலும் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

  1. வாங்க தனபாலன்!
   யாருக்கு எந்த வயதில் இந்த நோய் வரும் என்றே சொல்ல முடியவில்லையே! உங்கள் சகோதரியின் முடிவு மிகவும் வருத்தத்தைத் தருகிறது.
   எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

 2. ஒவ்வொருவரைச் சுற்றிலும் யாராவது ஒருவர் இந்த கொடும் நோயின் வலையில் வீழ்ந்திருக்கிறார்கள். அனைத்தும் சரியாகிவிடும். குணமடைவார்

 3. Rangarajan Eechampadi via Facebook says:

  Biggest worry. The number of cancer cases is higly alarming and success rate is very minimal. The treatment is horrible. If your are facing sudden weight loss please do not ignore. None of the researches are able to corner the reason for cancer occurrence. What it makes cells to mutate? What it makes DNA signature to change? One point I noted the part which consumes food, air; parts of body where Glands are present. I have not seen any muscle cancer, hence no heart cancer. My request please in take raw turmeric with milk, have papaya. While taking grapes or any other fruits pls clean well with water since residuals of pesticides would be there. Take more food items which Anti-oxidant by nature. Anti-oxidants remove free radicals in cells which makes cells weaker. Hence take food such as dry fruits which are rich on minerals and selenium. If needed please do a DNA test. Before it reaches to the level of cancer the mutations would have started in cells much before. For women PAP smear test on uterus is a good test to identify cell structures. People getting old to be careful as cells becoming older and unable to clear the toxins in cells.

 4. பலவித பரிசோதனைகளையும் ஏமாற்றிவிட்டு திடீரென்றுகூட வெளிப்படுகிரது சில நோய்கள். என்னால் ஸமாளிக்க முடியும்,என்றமனோதைரியம் இருந்தால்
  வியாதிகள் தீவிரமாகாது என்றும் சொல்லுகிரார்கள். கான்ஸர் என்றவுடனே இல்லாத இடம்,தேடாத குறிப்புகள் என்று தேடி மனதை அலைக்கழிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள். வம்சத்திலேயே இல்லை என்றவர்களுக்கும் ஆரம்பிக்கும் முதல்வராக வந்து விடுகிரது. ஒரு பிள்ளையின் அம்மாவிற்கு கேன்ஸர். அவர்கள் பிள்ளைக்குப் பெண் கொடுக்க யோசித்தார்கள். ஒரு ஃபேமலிடாக்டரிடம் ஆலோசனை கேட்டனர். முன் வினைப்பயனாக நினைக்க வேண்டும். யாருக்கும் வராது என்றுசொல்லமுடியாது.. என்று சொன்னார்.
  ஸம்பந்தம் நடக்கிறது..நிறையபேர்கள் குணமும் பெற்றிருக்கிரார்கள்.
  யாருக்கும் வரக்கூடாது. வந்தவர்கள் நல்லபடியாக குணமடைய வேண்டும்.
  உங்கள் கோரிக்கை மனதினால் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. வைத்தியத்துடன் மனோதைரியத்தை வளர்த்துக்கொண்டு அவர் விரைவில் குணமடைய வேண்டுவோம். அன்புடன்.

 5. // அவருக்கு இந்த நோய் வேறு வர வேண்டுமா என்று மனசு அங்கலாய்த்தது. எத்தனை பேர்கள் திருட்டும் புரட்டும் செய்கிறார்கள். எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒவ்வொருவரிடமும். எல்லோரையும் விட்டுவிட்டு இவருக்கு //

  உங்களுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக தானுண்டு, தன் வேலை உண்டு என்று வாழும் எல்லோருக்கும் மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் இவை.

  எல்லாமே வியாபாரமாக மாறிவிட்ட சூழ்நிலையில், இப்போதெல்லாம் ஹெல்த்செக் அப் என்றால், நமக்கு இல்லையென்று எதையெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதையெல்லாம் மட்டுமன்றி, வேறு புது நோய்களையும், நமக்கு உண்டு என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம்தான் வருகிறது.

  ஹெல்த்செக் அப் பற்றி நல்ல யோசனை.

 6. வணக்கம்
  அம்மா

  நல்ல அறிவுரை… சொல்லியுள்ளீர்கள் யாவரும் அறியவேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 7. let us develop patience perseverance boldness to face all such things sujatha the famous writer was not allowed to sip one mouthful of water when he was seriously ill.just imaginehis suffering. the genius knew all about all….the famous rhemotology doctor christian bernard suffered from serious rhemotoid problem…… and he died as rhemotoid victim….. the writer wishes good to all.

 8. யாருக்கு, எந்த நேரத்தில், எது வரும் என்றே தெரியமாட்டேன்கிறதே ! பரம்பரையில் இருந்திருந்தால் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக செக்கப் செய்துகொள்வது நல்லது. ஆனாலும் இரண்டு மாதத்தில் இவ்வளவு விரைவாகப் பரவியிருக்கிறது எனும்போது கஷ்டமாக உள்ளது. மனம், உடல் இரண்டும் தாங்கும் சக்தி வேண்டும், முழு குணமடைய பிராத்திப்போம்.

  “எத்தனை பேர்கள் திருட்டும் புரட்டும் செய்கிறார்கள். எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒவ்வொருவரிடமும். எல்லோரையும் விட்டுவிட்டு “____ நல்லவரோ கெட்டவரோ யாருக்குமே வரவேண்டாம் என்றுதான் மனம் அடித்துக்கொள்கிறது.

  1. வாங்க சித்ரா!
   நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. யாருக்குமே நம் எதிரிகளுக்குக் கூட இந்த நோய் வரக்கூடாது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர கூட இருப்பவர்களையும் மனதளவிலும், உடலளவிலும் ரொம்பவும் பாதிக்கிறது இந்த நோய். யாருக்குமே, யாருக்குமே வரக்கூடாது என்றே நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
   உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி!

 9. சிலருக்கு நான்காம் கட்டத்தில் தான் என்ன நோயென்றே தெரிய வருகின்றது அம்மா.

  குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் வருவதற்கு வாய்ப்பு தான் இருக்கிறது.

  1. வாங்க ஆதி!
   எங்கள் உறவினருக்கும் இதே நிலைதான் ஆதி. மனது மிகவும் நொந்து போயிருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s