Uncategorized

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

வாழ்க்கை என்பது அத்தனை சுலபமானது அல்ல. பல சவால்கள், பல பிரச்னைகள், பல ஏமாற்றங்களை அது தருகிறது. எல்லாவிதமான கடினமான சூழ்நிலைகளையும் நாம் எதிர்கொண்டு எதிர் நீச்சல் அடித்து எழுந்து வருகிறோம் என்றால் அது சாத்தியம் ஆவது நம் குடும்பம், நமது நட்புகள், நம் மேல் அன்பு செலுத்துபவர்களின் துணை தான். இதற்கும் மேலே நமக்கு உதவுவது நமக்கு வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடங்களும், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் உணர்தலும் தான்.

 

வாழ்க்கை முழுவதும் நாம் கற்கும் சின்னச் சின்னப் பாடங்கள் நமக்கு மிகுந்த அமைதியைக் கொடுக்கின்றன. நேர்மறையான எண்ணங்கள், உறுதியான மனது இவை வாழ்க்கையை எதிர்கொள்ள நமக்கு உதவுகின்றன. கீழே காணும் வரிகள் உங்கள் நேர்மறையான எண்ணங்களை வலுப்படுத்தும். தேவைப்படும் சமயத்தில் கைகொடுக்கும், உங்கள் மனதை உறுதிப்படுத்தும்.

 

  • உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் உங்களைவிட குறைவான வசதிகளுடன் உங்களை விட சந்தோஷமாக இருக்கிறார்.
  • ஒவ்வொருவரிடமும் குறைகளைக் காணாதீர்கள்; உங்களிடம் சொல்லப்படுவதையெல்லாம் கேட்காதீர்கள்; கருணையில்லாத வார்த்தைகளைப் பேசாதீர்கள்.
  • எல்லோரிடமும் இருக்கும் நிறைகளைப் பாருங்கள்; அனாவசியப் பேச்சுக்களையும், மற்றவர்களை இழித்துப் பேசும் பேச்சுக்களையும் தவிருங்கள். நல்ல பேச்சுக்களையும், உற்சாகம் தரும் பேச்சுக்களையும் அன்புடன் பேசுங்கள்.
  • ஒரு நாள் முழுவதும் யாரையும், எதற்கும் குறை சொல்லாதீர்கள். வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பாருங்கள்.
  • பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள்.
  • மகிழ்ச்சி என்பது நமது மனதில் இருக்கிறது. அதை வெளியில் தேடாதீர்கள்.
  • நம்மிடம் இல்லாததை அடைவது மகிழ்ச்சியை கொண்டு வராது. இருப்பதை கொண்டு மனத் திருப்தி அடைவதே உண்மையான மகிழ்ச்சி.
  • தேவாமிருதம் செய்யாத அதிசயத்தை உறுதியான நேர்மறையான எண்ணங்கள் உடைய மனது செய்யும்.
  • புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதற்கு காலம் மிஞ்சிவிடவில்லை. அதேபோல மகிழ்ச்சியாக இருப்பதற்கு காலம் கடந்துவிடவில்லை.
  • நேற்றைய வேலைகள் உங்கள் கை நிரம்ப இருக்கும்போது இன்று புதிதாக எதையும் ஆரம்பிக்க முடியாது.
  • உங்களை எப்படி மற்றவர்கள் நடத்த வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதேபோல மற்றவர்களை நீங்கள் நடத்துங்கள்.
  • உங்களிடம் மற்றவர்கள் எப்படிப் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதேபோல நீங்கள் மற்றவர்களுடன் பேசுங்கள்.
  • உங்கள் நடவடிக்கைகளினால் மரியாதையை சம்பாதியுங்கள்.
  • சந்தோஷம் தராத எந்த ஒன்றுமே உங்களுக்கு பயன்படாது.

 

இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்வதாக நினைக்காதீர்கள். எனக்கு நானே சொல்லிக்கொள்வது.

 

எல்லோருக்கும் இனிய 2015 ஆம் வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

 

 

 

 

Advertisements

35 thoughts on “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  1. உங்களுக்கு நீங்களே சொல்வதாகக் கூறிக்கொண்டு கலக்கி விட்டீர்கள்..புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

  2. அற்புதமான ஆழமான
    சிந்தனையுடன் கூடிய பதிவு
    எனக்கானதாகவும் எடுத்துக் கொண்டேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு சொல்லிகொள்கிற மாதிரி எங்களுக்கும் சொன்ன அறிவுரைக்கு நன்றி ரஞ்சனி பாராட்டுக்கள்

  4. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். புத்தாண்டு சிந்தனைகள் புதிய உற்சாகம் தருகின்றன.

    1. வாங்க மணியன்!
      எமர்சனின் மிக அருமையான செய்தியைச் சொல்லி வாழ்த்தியிருக்கிறீர்கள். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  5. உங்கள் எண்ணங்களை வெளியிட்டு எங்களையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள். முயற்சி செய்து பார்ப்போம்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  6. மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். புத்தாண்டில் அமைதியும் ஆரோக்கியமும் இறைவனருளால் கிட்டட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s