என் குடும்பம்

அடிச்சுப் பாடடி பெண்ணே..!

 

 

படம்: நன்றி கூகிள்

சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். மணப்பெண்ணின் அம்மா ரொம்பவும் பரபரப்பாக இருந்தார். பெண்ணின் கல்யாணம் என்றால் சும்மாவா? அடிக்கடி கண்ணைத் துடைத்துக்கொண்டு உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தார். இத்தனை நாள் குழந்தை குழந்தை என்று பொத்திப் பொத்தி வளர்த்த பெண் இன்று இன்னொரு வீட்டிற்குப் போகப்போகிறாள் என்பது சாமானியமான விஷயமா? எல்லோரையும் வரவேற்று உபசரித்து சிரித்து சிரித்து பேசிப் பேசி அவருக்கு தொண்டை கமறிப் போயிருந்தது. தொண்டை சரியில்லை என்று காற்று மட்டுமே வந்துகொண்டிருந்த வாயாலும், கைகளாலும் சைகை காட்டி விடாமல் தன் உபசாரத்தை மற்றவர்களின் மேல் பொழிந்து கொண்டிருந்தார். அப்புறம் நடந்தது பாருங்கள் ஒரு விஷயம், அதுதான் இந்தப் பதிவின் சாரம்.

 

மாப்பிள்ளைத் தோழன் ஒரு பக்கம் குடையை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு வர, ஒரு கையில் தாத்தா தடியை வைத்தக் கொண்டு  ‘டக், டக்’ என்று நடந்தபடியே, இன்னொரு கையில் சுந்தர காண்டம் புத்தகத்துடன், விசிறியையும்எடுத்துக் கொண்டு, தோளில் கட்டித் தொங்கவிடப்பட்ட அரிசி, வெல்ல மூட்டை சகிதமாக மாப்பிள்ளை நேராகக் காசிக்குக் கிளம்பிவிட்டார் படிக்க.  சுந்தர காண்டத்தை படிக்க காசிக்குப் போவானேன் என்று அதிகப் பிரசங்கித்தனமாக கேட்கப்படாது.

 

இதைப்பார்த்த மாமனார் சும்மா இருக்கலாமோ? பல லட்சங்களை தண்ணீர் மாதிரி வாரியிறைத்து கல்யாணச் சத்திரம்,  சமையல், சாப்பாடு ஏற்பாடு செய்து (கேடரிங் மட்டும் பல லகரங்கள்!) இதெல்லாம் போதாதுன்னு தொண்டை கட்டின பெண்டாட்டியுடன் சைகையில் வேறு பேசிண்டு…பாவம் மனுஷனுக்கு நுரை தள்ளிக் கொண்டிருந்தது. ஆனாலும் மாப்பிள்ளை காசிக்குப் போறேன்னால்? அடிச்சு பிடிச்சு ஓடி வந்தார். மாப்பிள்ளை கையில் இரண்டு தேங்காயைக் கொடுத்து, ‘காசிக்கு போகாதீர்! என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கும்…(ரெண்டும் ஒண்ணுதான்…;-)) அப்படின்னு சொல்லி உள்ளே கூட்டிண்டு வந்து பொண்ணோட கையைப் பிடிச்சு அவர்கிட்ட ஒப்படைச்சு…! அப்பாடா!  எத்தனை பெரிய பொறுப்பு!

 

பெண்ணை அவளோட மாமாவும் அவளோட தமையனுமாக தோள்ல  எடுத்துக் கொண்டு ரிவர்ஸ்ல போக மாப்பிள்ளை தடால்புடலான்னு ஓடி வந்து மாலை அவள் கழுத்தில் போட்டார். இப்போ மாப்பிள்ளை வீட்டுல  ‘அட! அவாதான் பொண்ணை தோள்ல தூக்கிப்பாளா? நாங்க என்ன இளிச்சவாயனா அப்படின்னு தூக்க முடியாம அவரை தூக்க… பொண்ணு ஓடிவந்து மாலையை அவர் கழுத்துல போட்டா. ஒருவழியா மாலை மாத்தல் ஆச்சு. ஊஞ்சல் ஆட ஆரம்பித்தார்கள் பொண்ணும் பிள்ளையும். ‘நேரமாயிடுத்து….பொம்மனாட்டிகள் எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் பால் தொட்டு, பிடி சுத்தி பெண்ணையும் மாப்பிள்ளையையும் உள்ளே கூட்டிண்டு வாங்கோ…’ அப்படின்னு குரல் கொடுத்துட்டு நம்ம வாத்தியார் ஸ்வாமி டிபனை ஒரு பிடி பிடிக்க டைனிங் ஹாலுக்குள் பாய்ஞ்சார்.

 

‘மாலை சாத்தினாள் கோதை மாலை மாத்தினாள்….! திடீர்னு கிளம்பின இந்தப் பாட்டு எல்லோரையும் ஸ்தம்பிக்க வெச்சுடுத்து. இருக்காதா பின்னே! ‘கரகர’னு வந்தக் குரல் எல்லோரையும் நடுநடுங்க  வைத்தது. குரலா அது? காதில யாரோ ரம்பம் வெச்சிண்டு ‘கர்…கர் ….னு அறுக்கறாப் போல சத்தம்! யாரோட குரல் அப்படின்னு பார்த்தா….பொண்ணுக்கு அம்மாதான் தன்னோட கமறிப் போன குரல்ல பாடிண்டு இருக்கா. நாலு வரில நானூறு அபஸ்வரம். நானூறு தப்பு! ‘பாலாலே காலலம்பி…’ என்கிற பல்லவி காலாலே பாலலம்பி என்று மாறியது!  எதுக்காக இப்படி ஒரு குரல்ல பாடணும்? சரி, நம்ம பொண்ணு கல்யாணம் நாம பாடினாதான் நெறைவா இருக்கும் அப்படின்னு நினைச்சு ஒரு பாட்டோட நிறுத்தினாளா ஊஹூம்….

 

கரகர குரல்லயே காஞ்சனமாலையை  பொன்னூஞ்சல்ல ஆட்டினாள். (பாவம் ரொம்ப பயந்திருப்போ) ஒடப்பாட்டுல  ‘தசரதர் மகனாக வந்த ஸ்வாமி’ இனி வருவேனான்னு தல தெறிக்க ஓடினார். ‘க்ஷீர சாகர விஹாரா’ விழுந்தடிச்சுண்டு எனக்கு என்ன க்ஷீர சாகரம் வேண்டிருக்குன்னு அதைக் காலி பண்ணிட்டு காணாமப் போனார்!

 

எங்கள் வீட்டில் ஒரு பரம்பரை கதை உண்டு. கதையின் நாயகி பெயர் யதி என்கிற யதிராஜவல்லி. (அந்தக் காலத்துக் கதை அதுனால பெயர் இப்படித்தான் இருக்கும்) யதி பாட வேண்டும் என்று அவளோட அம்மாவிற்கு ஆசை. யதிக்கு இல்லை. அம்மா எங்கிருந்தோ ஒரு பாட்டு வாத்தியார தேடித் பிடிச்சு பொண்ணுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தாள். பாவம் வாத்தியார்! ‘எங்க, கொழந்தே! ‘ஸா’ பிடி பார்க்கலாம்’ ன்னு ஹார்மோனியத்துல ஆறாவது கட்டையில கையை வச்சு சொல்லிக் கொடுத்தா நம்ம யதி சமத்தா ‘நீங்க கையை எடுங்கோ ஸார்! நான் ‘ஸா’ வை பத்திரமா பிடிச்சுக்கறேன்’ அப்படின்னா!

 

தொடரும்

 

பின்குறிப்பு: இந்த தொடர் எழுதக் காரணங்கள்:

தொடர் எழுதணும்னு எனக்கு அநியாயத்துக்கு ஆசையாக இருக்கிறது.

அரியலூர் படிச்சு மனசு நொந்து போனவர்களுக்கு இந்த நகைச்சுவை தொடர் ஆறுதல் கொடுக்கும்.

சங்கீத சீசன்ல நானும் இதுபோல பதிவு எழுத வேண்டாமா? என்கிற நல்ல எண்ணம் தான்!

 

 

 

Advertisements

27 thoughts on “அடிச்சுப் பாடடி பெண்ணே..!

 1. ஹாஹாஹாஹா, சங்கீத சீசன் கச்சேரி ஆரம்பமே அமர்க்களம். தொடருங்க. காத்திருக்கோம். அப்புறம் ரஞ்சனி, ஓடப்பாட்டு முழுசும் நினைவில் இருந்தால் பகிருங்க, இல்லைனா தனி மடலில் அனுப்புங்க. 🙂 எனக்கு சுத்தமா மறந்தே போச்சு. 🙂

  1. வாங்க கீதா!
   அடுத்த பகுதில ஓடப்பாட்டு போட்டிருக்கேன்.
   எங்கள் வீட்டுல அடுத்த தலைமுறை திருமணங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் நாங்கள் 6 மாட்டுப்பெண்களும் up to date!
   வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

 2. நகைச்சுவை ததும்ப நிஜமாகவே இப்படியாக நடக்கும் கல்யாணங்கள் ஞாபகம் வரது. ஜமாயுங்கோ எல்லோரும் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்து விடுகிறோம்.
  ஸந்தோஷமான தொடர். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   உங்களுடைய சந்தோஷமான கருத்துரை படிக்க நன்றாக இருக்கிறது. அரியலூருக்கு ஒரு மாற்று இந்தத் தொடர்.
   வருகைக்கும் உற்சாகம் ததும்பும் கருத்துரைக்கும் நன்றி!

 3. அம்மா பாலாவின் அவன் இவன் படம் பார்த்திருப்பீர்கள் இல்லையா.. அதில் ஜனனி ஐயர் சொல்லுவாளே வால்ட்டர் We need more emotion… அதை போல நாங்களும் இதை விட அதிக நகைச்சுவையை உங்களிடம் எதிர் பார்க்கிறோம் 🙂

 4. ஹா….ஹா…

  இதுல கொடுமை என்னன்னா, இவர்களைப் போல கடூரமா பாடிண்டு இருக்கும்போது அங்கே யாராவது ஒருவர் சொல்வார் – “ரொம்ப நல்லா பாடுறீங்க!” என்று 🙂 அப்புறம் கேட்கணுமா பாட்டை தொடர்ந்து பாடி எல்லோருக்கும் அவஸ்தை தான்!

  ரசித்தேன். தொடர்கிறேன்.

  1. வாங்க வெங்கட்!
   ஆமாம். எனக்கும் இதுபோல அவஸ்தை ஏற்பட்டிருக்கிறது. உங்களது கரகரப்ரியாவும் இதுபோலத் தான் இருக்கிறது!
   வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி!

 5. திருமணத்தில் தொண்டைக் கட்டினாலும் பாட்டுப் பாடின பெண்ணின் அம்மாவிடம் என் பாராட்டைத் தெரிவித்து விடுங்கள். அவருடைய மகிழ்ச்சியான மனநிலையின் பிரதிபலிப்பல்லவா கரகர பாட்டு ? அதைக் கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள், பாவம் தான். உங்கள் நகைச்சுவை சரளம். வாழ்த்துக்கள் ரஞ்சனி.

  1. வாங்க ராஜி!
   நான் சொன்னால், மாட்டிப்பேனே! நான் அவரைப் பற்றி எழுதியது தெரிந்துவிடுமே! உங்களுக்குப் பதில் நானே பாராட்டிவிடுகிறேன், சரியா?
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 6. ஹஹஹாஹ்ஹ சங்கீத சீசன் களை கட்டுகின்றதே! பரவாயில்லை தொண்டை கட்டினால் பல நல்ல புதிய புதிய ராகங்கள் ஸ்வரபேதமகிக் கிடைக்குமே…..தொடர்கின்றோம்…

 7. காலாலே பாலலம்பியாயிடுத்தா…..:))) சூப்பர்…

  நகைச்சுவை ததும்பும் இந்த தொடரின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s