Uncategorized

வெந்நீர் உள் …?

IMG_20130221_141212

மித்தம் என்று சொல்லும் முற்றம்

IMG_20130221_142929

வெந்நீர் உள் அங்கிருக்கும் விறகு அடுப்பில் சருவம் (ஒரு பாத்திரம்) வைத்து வெந்நீர் போடுவது வழக்கம்.

IMG_20130221_142914

முதல் முற்றம் தாண்டி உள்ளே போனால் இன்னொரு முற்றம் – இதனை இரண்டுகட்டு வீடு என்பார்கள்.

IMG_20130221_145709

திண்ணை வீடு

அ.அ. தோசை   அ.அ. தோசை 2    அ.அ. தோசை 3  அ.அ. தோசை 4

அ.அ. தோசை 5

‘லெட்ரீன் காணோம்பா! ஸ்க்வேரா (ஸ்கொயர்) ஒரு இடம். கதவே இல்லப்பா. அங்க ஒக்காரு ஒக்காருன்னு அம்மா மெரட்டினாப்பா! இருட்டு வேற. நான் என்னப்பா பண்றது?’  என்று கண்ணீரும் கம்பலையுமா என் பெண் என் அகத்துக்காரர் கிட்ட சத்தமா சொல்றத கேட்டு நண்டுசிண்டுகள், சித்தி சித்தியா எல்லோரும் ‘கடகட’ன்னு சிரிச்சா. என் கணவர் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிண்டு ‘சரி விடு. அம்மாக்குத் தெரியலை. நாம தூங்கலாம், வா!’ என்று அவளை பக்கத்தில் படுக்க விட்டுக் கொண்டார். ரொம்ப நேரம் இந்த ராக்ஷசி தூங்கலைன்னு தெரிஞ்சுது. எப்படின்னு கேக்கறேளா? ‘இவாத்துல லெட்ரீன் கிடையாதாப்பா?’ என்று தூங்கிப்போன என் அகத்துக்காரரிடம் இவள் கேட்டுக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது!

அசதியில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன், அடுத்தநாள் எனக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கிறது என்று உணராமலேயே. எழுந்திருக்கும்போதே ரொம்பவும் லேட்டாகிவிட்டது. சித்தி குளித்துவிட்டு தளிகை உள்ளில் வேலையாக இருந்தார். நான் கொஞ்சம் வெட்கத்துடன், ’ஸாரி! சித்தி! மணி ஆனதே தெரியலை’, என்றேன். ‘பரவாயில்லடி, பிரயாண அலுப்பு. பல்லு தேச்சுட்டு வா! காப்பி தரேன்’ என்றார். வெளியிலிருந்த மித்தத்தில் போய் பல்லைத் தேச்சுட்டு வந்தேன். சித்தியின் கைகாப்பி மணத்தது.

‘கார்த்தால டிபன் சாப்பிட்டுப் பழக்கமா உனக்கு? இங்க டிபன் தான் கார்த்தால’ என்று கேட்டார் சித்தி. ‘இல்ல சித்தி. ஒரேயடியா பத்து மணிக்கு சாப்பாடுதான். மச்சினர்கள் எல்லாம் 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு ஆபீசுக்குப் போய்விடுவா. அம்மாவும் நானும் பத்து மணிக்கு சாப்பிட்டுடுவோம். அப்புறம் ஒன்றரை மணிக்கு காப்பி. 3 மணிக்கு அப்பாவிற்கு டிபன். அதையே நாங்களும் சாப்பிடுவோம்… ராத்திரி சாப்பாடு இவாள்ளாம் ஆபீசுலேர்ந்து வந்தவுடன் தான்’.

‘அங்க எல்லாரும் பெரியவா. இங்க குழந்தைகள் இருக்கா பாரு. அதனால கார்த்தால டிபன் தான். திருப்பித்திருப்பி இட்லி, தோசைதான். குழந்தைகளுக்கு வயறு ரொம்பணும் இல்லையா?’ என்றார் சித்தி.

‘நீங்க பூரி சப்பாத்தி பண்ணமாட்டீங்களா?’ என்று என் பெண் கேட்டது. ‘இன்னிக்கு ராத்திரி குழந்தைக்கு பூரி பண்ணலாமா?’ என்றார் சித்தி. ‘தொட்டுக்க என்ன?’ என்றது பெரிய மனுஷி மாதிரி. ‘உருளைக்கிழங்கு கரமது?’ ‘ஐயையே! பூரிக்கு கரமது எல்லாம் பண்ணக்கூடாது. சன்னா, ராஜ்மா, பட்டாணி மசாலா பண்ணனும்!’ என்று நீட்டி முழக்கியது நான் பெற்ற செல்வம்.

‘உங்கம்மா இதெல்லாம் பண்ணுவாளா?’

‘ஊஹூம்! அம்மா ஆத்துல பாம்பே சட்னி பண்ணுவா. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஹோட்டல சாப்பிடுவோம். அப்புறம் கோப்தா………!’

பயந்துகொண்டே சித்தியைப் பார்த்தேன். ‘என்னடிது…. வெளில ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா’ என்று கேட்பாரோன்னு. ஆனால் ரொம்ப டீசென்ட் ஆக விட்டுவிட்டார். அவரை அப்படியே விழுந்து சேவிக்க வேண்டும் போல இருந்தது.

என் மாமியாருக்கு வெங்காயமே உள்ளே வரக்கூடாது. பிள்ளைகள் மாமானார் எல்லோரும் சேர்ந்து எப்பவாவது வெங்காய சாம்பார் கேட்பா. அதுக்குன்னு தனியா பாத்திரங்கள், கரண்டி, ஸ்டவ் கூடத் தனிதான். தளிகை உள்ளில் பண்ணக்கூடாது. ஸ்டவ்வை வெளியே வைத்துக்கொண்டு பண்ணவேண்டும். சாம்பார் பண்ணிய பாத்திரம் ஒரு மூலையிலே இருக்கும். மற்ற உள் பாத்திரங்களுடன் சேர்க்கக்கூடாது அதை. பண்ணிமுடித்தவுடன் ஸ்டவ்வை (அந்தகாலத்திய பம்ப்பு ஸ்டவ்!) நன்றாக புளி சாணி போட்டு சித்து (சுத்தம்) பண்ணி வைக்கணும். வெங்காய சாம்பாருக்கே இத்தனை கெடுபிடின்னா எங்கேருந்து இது கேக்கற மசாலா, கோப்தா செய்யறது?

‘நான் குளிச்சுட்டு வரேன், சித்தி.  மாலா! வெந்நீர் உள் எங்கேருக்கு? கொஞ்சம் காமி’, என்று சித்தியின் பெரிய பெண்ணைக் கேட்டேன்.

இங்க வா. நா காமிக்கறேன்னு சித்தி மித்தத்திற்கு அழைச்சுண்டு போனார்.

‘இதான் எங்காத்து வெந்நீர் உள்’

மேல் ஆகாசம். சுற்றிவர வீடுகள். மறைவு என்பதே இல்லாத இடம் அந்த மித்தம். நான்கு வீடுகளுக்கும் பொது. எல்லார் வீட்டின் பின்பக்கக் கதவுகளும் அந்த மித்தத்தில் திறந்தன.

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘இங்கேயா குளிக்கணும்?’ என் குரலில் இருந்த பதைபதைப்பு சித்திக்குப் புரிஞ்சது போலிருக்கு.

‘இது பட்டணம் இல்லடி பொண்ணே! பொட்டல்காடு. இங்க வந்து நீ லெட்ரீன், வெந்நீர் உள் எல்லாம் கேட்டால் நா எங்கப் போவேன்?’

‘இங்க எப்படி சித்தி குளிக்கறது? எல்லாரும் வந்து போற இடமாச்சே!’

‘நீ கவலைப்படாம குளி. நான் எல்லோராத்துலேயும் போயி எங்க மாட்டுப்பொண்ணு குளிக்கறா. சித்த நாழிக்கு யாரும் மித்தத்திற்கு வாராதேங்கோ ன்னு சொல்லிட்டு வரேன். மாலா! ஓடிப்போயி பக்கத்தாத்து, எதித்தாத்து மாமி கிட்ட மன்னி குளிக்கப் போறா. கொஞ்சம் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோங்கோ ன்னு சொல்லிட்டு வா!’

‘ஐயையோ! வேணாம் வேணாம்…’ நான் கிட்டத்தட்ட அலறிட்டேன். நான் மித்தத்துல குளிக்கப் போற விஷயம் பிபிசி ல வந்துடும் போலருக்கே!

(தொடரும்…..அடுத்த பகுதியுடன் நிறைவடையும் இந்தத் தொடர் என்ற சந்தோஷ செய்தியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.)

Advertisements

34 thoughts on “வெந்நீர் உள் …?

  1. வாங்க ஹூஸைனம்மா!
   உங்களது வேண்டுகோளுக்கு இணங்க(!!) இன்னும் ஒரு பதிவு நீட்டியிருக்கிறேன்! தொடர்ந்த ஆதரவு வேண்டும்! 🙂
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. நீங்கள் குளித்தது இருக்கட்டும், உங்கள் மகள் எப்படி அந்த வெட்ட வெளியில் குளிக்க சம்மதித்தாள் , எப்படி நீங்கள் சமாளித்தீர்கள் என்பது தான் மிகப் பெரிய விஷயம். ஹுசைனம்மா சொல்வது போல் சரியான சம்யத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே.

 2. படம் சுட்டிப் பொருள் விளக்கியிருப்பது நன்று.

  வெங்காய சாம்பார் வைத்தால் இவ்வளவு சம்பிரதாயங்களா? ஐயோடா!
  பொது மித்தம் நினைத்துப் பார்க்க முடியாதது! இப்படிக் கூட இருக்குமா?

  தொடர்கிறேன்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   எனக்குக் கூட அந்த வீடு இப்போது எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும் போலிருக்கு.
   வெங்காய சாம்பாருடன் இன்னும் நிறைய இருக்கு, ஸ்ரீராம்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. ’வெந்நீர் உள்’, ’மித்தம்’ என்கிற வார்த்தைகளே நம்மை எத்தனை வருடங்கள் பின்னோக்கி ஒரெ நொடியில் தள்ளிவிடுகின்றன. அடடா! நமது சந்ததிகளுக்கு இந்த மாதிரி வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லவே தனியா ஒரு என்சைக்ளோபீடியா போடவேண்டியிருக்குமே!
  சுவாரஸ்யமாப் போயிண்ட்ருக்கு. சட்டுனு முடிச்சிடாதீங்கோ!
  -ஏகாந்தன்

  1. வாங்க ஏகாந்தன்!
   உங்கள் பெயரே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! நான்கூட இந்த மாதிரி ஒரு பெயர் வைத்துக்கொண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. 🙂
   உங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவே இன்னும் ஒரு பதிவு நீட்டியிருக்கிறேன்!
   வருகைக்கும், உற்சாகமான கருத்துரைக்கும் நன்றி!

 4. குளிப்பதற்கு கட்டிண்டூ குளிக்கிர பழசு என்று ஒரு பெரிய புடவைத் துண்டு கொஞ்சம் பெரியதாகவே இருக்கும்., அதைக் கட்டிக்கொண்டுதான் குளிக்க வேண்டும். உடம்பு துடைத்துக் கொள்ளக்கூட இன்னொரு பழசு இருக்கும்.. இப்படி புடவைகள் பழசு உபயோகப்படும்.
  வெங்காயம் போடும் விஷயம் தெரிந்து விட்டால் போதும், அதென்ன இப்படியெல்லாம் வாய் கேட்குமா என்ன ? பாட்டிகள் பொரும ஆரம்பித்து விடுவார்கள்.. ஏதோ தகாத காரியம் செய்து விட்டமாதிரி.
  அந்த வென்னீர் அடுப்புக்கு சுள்ளி,தேங்காமட்டை,கொட்டாங்கச்சி, என வேண்டாத
  சாமான்களெல்லாம் எரிக்கப் படும். ஸமயத்தில் புகைமயம்தான்.
  மடிப்புடவை கட்டிக்கணும். யார் மேலேயும் படக்கூடாது.மடி,விழுப்பு தெரியணும்.
  தீர்த்தம் தூக்கிதான் குடிக்கணும்.
  சாப்பிடற தட்டெல்லாம் அலம்பி வைக்கிற இடம், எச்சத்தட்டு வைக்கிற இடம்னு பேரு.

  ஒருவர் தட்டில் மற்றவர்கள் சாப்பிட மாட்டார்கள்.
  குளிக்கறச்சே யாராவது பார்த்தால் என்ன செய்யறது.?
  நீ அவாளைப் பார்க்காதே என்று தமாஷாகவும் சொல்வார்கள்.
  நல்ல அசைபோடும் வைக்கும் சுவாரஸ்யமான தோசை.இன்னும் ஒரு தோசைதானா? அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   என்னை நாற்பது ஆண்டுகளுக்கு முன் அழைத்துக்கொண்டு போய்விட்டீர்கள்! மடி விழுப்பு எல்லாம் கூடப் பரவாயில்லை. என்னைப் பாடப்படுத்தினது இந்த உள் பாத்திரம், வெளிப்பாத்திரங்கள் தான்!
   இன்னும் ஒரு பதிவு நீட்டலாம் என்றிருக்கிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. மித்தம்,வாசலில் விளக்கு வைத்து புகை படிந்துள்ள பெறை, வாச உள்ளான ஜன்னல்
  உள், திண்ணையின் செம்மண்,சுண்ணாம்பு பட்டைகள்,திண்ணை போட்டோக்கள் தேர்ந்தெடுப்பும் சபாஷ். அன்புடன்

 6. புகைப்படங்கள் அனைத்தும் அருமை. எனது ராதா நல்லூர் பாட்டிவீட்டைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். இது தவிர தாவாரம் என்ற தாழ்வாரம் இரண்டாம்கட்டு என சொல்லப்படும் வீட்டின் பின்புறம் உள்ள இடங்கள் காமரா உள்ளு என்று சொல்லப்படும் இருட்டான ஒரு store room இதையெல்லாம் நினைவு கூர்ந்தேன். பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி ரஞ்சனி
  அடுக்கு தோசை தீர்ந்துவிடப்போகிறதே என்றிருக்கிறது. கதா நாயகிகள் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே நடிப்பதை நிறுத்துகிறமாதிரி அடுக்குதோசைக்கு முடிவு கொண்டுவருகிறீர்களே? அருமையான நடைக்கு பாராட்டுக்கள்

  1. வாங்க விஜயா!
   இந்தத் தொடர் எல்லோருக்கும் பழைய நினைவுகளை மலரச் செய்வது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் ஒரு பதிவு வரும்!
   ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. //மேல் ஆகாசம். சுற்றிவர வீடுகள். மறைவு என்பதே இல்லாத இடம் அந்த மித்தம். நான்கு வீடுகளுக்கும் பொது. எல்லார் வீட்டின் பின்பக்கக் கதவுகளும் அந்த மித்தத்தில் திறந்தன.//

  அட, அட, அட! என்னோட கல்யாண காலத்துக்குப் போயிட்டேன். கல்யாணம் ஆகி நாலாம் நாள் பிள்ளை வீட்டில் மாலை மாற்றி கிரஹப்ரவேசம். அப்போக் குளிக்கச் சொன்னபோது இப்படித் தான் ஒரு முற்றத்தைக் காட்டினாங்க. அரண்டு போயிட்டேன். இங்கேயா குளிக்கணும்னு கத்த ஆரம்பிக்க, என் அம்மா வந்ததுமே வாயைக் காட்டாதேனு வாயை மூடிப்பல்லைக் கடிக்க, ஏற்கெனவே மாலை மாத்தும்போது மாத்து மாலையைப் பார்த்து வாய் நிறையச் சிரிச்சுட்டேன்! வெறும் பச்சையும், வெள்ளையுமோ எதையோ வைச்சுக் கட்டி இருந்தாங்க. மதுரையிலே செண்டு செண்டாக மல்லிகை, ரோஜா, சம்மங்கி மாலைகளைப் பார்த்த கண்களுக்கு இந்த மாலைகளைப் பார்த்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்! அதுவும் அந்தப் பத்தொன்பது நிறையா வயசிலே எதைப் பார்த்தாலும் சிரிக்கத் தானே தோணும்! 🙂

  1. வாங்க கீதா!
   ஆஹா! என்ன அருமையான மலரும் நினைவுகள்! இதையெல்லாம் வைத்து எழுதுங்களேன்! ஏற்கனவே எழுதிட்டீங்களா? 19 கூட நிறையாமல் கல்யாணமா?

 8. நானே எங்க கிராமத்து வீட்டுப் படம் போடலாமானு நினைச்சேன். நீங்க போட்டுட்டீங்க. ஆனால் இவை எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பது தான் வருத்தம். உங்க சித்தி வீட்டிலாவது அவங்க வீட்டுக் கொல்லையிலேயே கழிவறை இல்லாட்டியும் போகும் வசதி இருந்ததே, அதைப் பாராட்டணும். எங்களை மாதிரி சொம்பைத் தூக்கிண்டு எதிரே உள்ள தோட்டத்துக்குப் போகாமல்!!!! :))))

  1. சிவராமபுரம் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்ன அழகான ஊர் என்று பார்த்ததையெல்லாம் போட்டோ எடுக்க ஆரம்பிச்சுட்டேன்! உண்மைதான் இந்த வீடுகள் எல்லாம் மறைந்து வருகின்றன என்பது வருத்தமான செய்தி தான்!

   நீங்க எழுதியிருக்கறத பார்த்த சித்தி எல்லாம் கொஞ்சம் முன்னேறி இருந்தாங்கன்னு சொல்லலாம் போலிருக்கே! 😉

 9. வெங்காய சாம்பார் கல்சட்டினே தனியா இருக்கும் எங்க வீட்டிலே எல்லாம். எல்லா நாட்களிலும் அதை எடுக்க மாட்டாங்க. அதே போல் பழையது எனப்படும் பழைய சாதம் வைக்கும் கல்சட்டியும் தனி. அதை வைக்கும் இடமும் தனி. பழையத்துப் பிறை அல்லது பழம்பத்து மூலைனு சொல்லுவாங்க. அதே போல் மாசம் மூணு நாள் விலகும்போதும் தனி அடுப்பு, தனிச் சமையல், உப்போடு மி.வத்தல், புளினு எல்லாமும் அதுக்குனே தனியா வைச்சிருப்பாங்க. ஊறுகாய் உட்பட! :))))))

  1. ஆஹா! பாட்டி அகத்தில் பழையது கல்சட்டி இருக்கும். எங்க ஸ்ரீரங்கத்து அகத்திலும் பழயத்து போரை இருக்கும். என் அம்மா நவீன குளிர்சாதனப் பெட்டியை பழையத்து போரே ன்னுதான் சொல்வாள்!

   உங்களது கருத்துரைகள் எல்லாமே இந்தப் பதிவிற்கு மெருகூட்டுகின்றன கீதா! நன்றி, நன்றி!

 10. எல்லாவற்றையும் வாசித்தோம்…நல்ல சுவாரஸ்யம் மிக்க அனுபவ விவரணம்…..ரசித்தோம்….முற்றமுள்ள வீடு பார்க்க அழகு….என்ன வென்னீருள் தான் கொஞ்சம் அவஸ்தை இல்லையா….

  1. வாங்க துளசிதரன்!
   தில்லை அகத்து என்பது உங்கள் ஊரா? எங்கிருக்கிறது?
   வெந்நீர் உள் கொஞ்சம் அவஸ்தைதான். ஆனால் அவர்களுக்குப் பழகி விட்டது அது.
   முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 11. படங்கள் எல்லாம் அழகு. என் மாமனார் இப்போ வரை பாத்ரூமை வெந்நீர் உள் என்று தான் சொல்வார். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தும் கூட…:)

  அதே போல் 10 மணிக்கு சாப்பாடு, 1.30 மணிக்கு காபி, மூணு மணிக்கு டிபன்…

  இன்னும் ஒரு பகுதி தானா???

 12. முற்றம், தாழ்வாரம், வெந்நீர் உள், ரேழி, தளீப்பண்ற உள், அரங்குள், பத்து, சேஷம், பித்ருசெஷம் , உள் பாத்திரம், சிமெட்டி சொம்பு – இப்படி எல்லாவற்றையும் இழந்து வெற்று வாழ்க்கைப்பின் ஓடிக் கொண்டிருக்கிறோம். சுமார் 20 வருடங்கள் முன்னே அழைத்துச் சென்று விட்டீர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s