Uncategorized

ஒரு சீனியர் சிடிசனின் பிரார்த்தனை

ஒரு எளிமையான, அத்தனை புத்திசாலித்தனமில்லாத ஆனால் உண்மையான பிரார்த்தனை.

என் அன்பான இறைவனே!

உனக்குத் தெரியும் நான் முதியவன் ஆகிக் கொண்டிருக்கிறேன் என்று.

என்னைக் காப்பாற்று –

 • அதிகம் பேசுபவனாக ஆகாமல்
 • அடித்த ஜோக்குகளை திரும்ப திரும்ப அடிக்காமல், சொன்ன பழைய நிகழ்ச்சிகளையும் மறுபடி மறுபடி சொல்லாமல்
 • எல்லா விஷயத்தைப் பற்றியும் என் கருத்துக்களை சொல்லும் அயர வைக்கும் பழக்கத்திலிருந்து

என்னை விடுதலை செய்

 • எல்லோருடைய கோணல்களையும் நேராகச் செய்ய வேண்டும் என்கிற அரிப்பிலிருந்து
 • சின்ன சின்ன விஷயங்களையும் முடிவில்லாமல் சொல்வதிலிருந்து

அன்புமிக்க  இறைவனே, மற்றவர்கள் தங்கள் வலிகளையும் நோவுகளையும் சொல்லும்போது அவற்றைக் கேட்பதற்கு உண்டான பெருந்தன்மையைக் கொடு.

என்னுடைய வலிகளும், நோவு நலிவுகளும் எண்ணிக்கையிலும், தீவிரத்திலும் அதிகமாகிக் கொண்டே போவதாலும், அவற்றை மற்றவர்களுடன் பேசுவதில் உள்ள இன்பம் கூடிக் கொண்டே போவதாலும் எனது அலுப்புகளைத் தாங்கிக்கொண்டு வாயை கெட்டியாக மூடிக்கொண்டு உட்கார உதவி செய்.

சில பல சமயங்களில் நானும் தவறு செய்யக் கூடும் என்கிற மகத்தான பாடத்தை கற்றுக்கொடு. கூடியவரை நான் இனிமையானவனாக இருக்க அருள் புரிவாய்.

நான் ஒரு சந்நியாசியாக இருக்க விரும்பவில்லை. சன்னியாசிகளுடன் வாழ்வது கடினம். ஆனால் முசுட்டுக் கிழவன் சாத்தானின் படைப்பு.

சிந்தனை வயப்பட்டவனாக இருக்கலாம் ஆனால் மந்தமாக இருக்க வேண்டாம்.

உதவி செய்பவனாக இருக்கலாம். ஆனால் அடாவடியாக இருக்க வேண்டாம்.

சுதந்திரமானவனாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் எனக்குச் செய்யும் உதவிகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்பவனாக,  நன்றி உள்ளவனாக இருக்கவேண்டும்.

நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதாலேயே என்னை விட வயது குறைந்தவர்களை விட நான் எல்லாம் தெரிந்தவன் என்கிற எண்ணம் வர வேண்டாம்.

நான் வயதானவன் அதனாலேயே  ஞானமுள்ளவன் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்றால் அவற்றை பற்றிக் குறை சொல்லாமல், ‘அந்தக் காலத்தில்……!’ என்று ஆரம்பிக்காமல் வாயை பொத்திக் கொண்டு உட்காரும் நல்லதனத்தைக் கொடு.

கடவுளே!

என் அந்திமக் காலம் வரும்போது எனக்கு ஒன்று அல்லது இரண்டு தோழர்கள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

என் பிரார்த்தனைகளை நீ நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கையுடன்….ஒரு சீனியர் சிடிசன்

Advertisements

9 thoughts on “ஒரு சீனியர் சிடிசனின் பிரார்த்தனை

  1. வாங்க ஸ்ரீராம்!
   எனக்கு இன்னும் ‘அந்த அளவிற்கு வயதாகவில்லை’ என்று சொல்லலாமா? இதற்கு ஒரு சிறப்பு நன்றி!
   வருகைக்கு இன்னொரு நன்றி! 🙂

 1. நல்லதொரு பிரார்த்தனை. ஸ்ரீராம் சொன்னது போல தான் எனக்கும் தோன்றியது.

  சில சமயங்களில் இப்படிப் பட்டவர்களைப் பார்க்கும்போது அவரின் இடத்தில் என்னை வைத்துப் பார்ப்பதுண்டு! நாமும் இப்படித்தான் இருப்போமோ என்று தோன்றும்! 🙂

  1. வாங்க வெங்கட்!
   நாமெல்லோரும் ஓரு பொழுதுபோக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் இப்படி ஆகமாட்டோம் என்றே நினைக்கிறேன்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க ஆண்டிச்சாமி!
   இப்போது சீனியர் சிடிசன்கள் மாறிவிட்டார்கள் என்று சொல்லுகிறீர்களா?
   முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. வாங்க தமிழ் இளங்கோ ஸார்!
  அடுத்த வருடத்திலிருந்து சீனியரா? அப்படியானால் இப்பொழுதே இந்தப் பிரார்த்தனையை ஆரம்பித்துவிடுங்கள்…..!!! (சும்மா தமாஷுக்கு)
  நமக்கெல்லாம் இந்த வலைப்பதிவு எழுதுவது ஒரு நல்ல பொழுதுபோக்கு. அதனால் நாம் இப்படி ஆகமாட்டோம்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s